Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி

$
0
0

தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும்

சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள்

தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு

கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்!

தஞ்சை, பிப்.20 தஞ்சையில் திலகர் திடலில் பிப்ரவரி 23,24 ஆகிய இரண்டு நாள்கள்  திரா விடர் கழக மாநில மாநாடு, சமுகநீதி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பல்வேறு கட்சி களின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்று கிறார்கள். பேரணி, கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் என்று பல சிறப்பு அம்சங்களுடன் மாநாடுகள் நடக்கவிருக்கின்றன.

முதல் நாள் 23.2.2019

திராவிடர் கழக மாநில மாநாடு

தஞ்சாவூர் திலகர் திடலில் 23.2.2019 சனிக் கிழமை காலை 8.30 மணிக்கு திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம் குழுவினரின்  ‘தரணியெங்கும் தமிழோசை' பகுத்தறிவு இன்னிசையுடன் திரா விடர் கழக மாநில மாநாடு தொடங்குகிறது.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் வரவேற்புரையாற்றுகிறார். திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் கொடியேற்றிவைத்து உரையாற்றுகிறார்.

திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு மாநாட்டைத் திறந்துவைத்து உரையாற்றுகிறார். பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் சமுகநீதி வரலாற்றுக் கண்காட்சியைத் திறந்துவைக்கிறார்.

மண்டலத் தலைவர்கள் சென்னை தி.இரா.இரத்தினசாமி, தருமபுரி வீ.சிவாஜி, காஞ்சிபுரம் பு.எல்லப்பன், வேலூர் வி.சடகோபன், கடலூர் அரங்க.பன்னீர்செல்வம், திருவாரூர் எஸ்.எம்.ஜெகதீசன், மாவட்டத் தலைவர்கள் திருவாரூர் வீ.மோகன், திருத்துறைப்பூண்டி கி.முருகையன், நாகை வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மயிலாடுதுறை ஆ.ச.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் நாகை புபேஷ்குப்தா, திருத்துறைப்பூண்டி ச.பொன்முடி, திருவாரூர் வீர.கோவிந்தராஜ், குடந்தை சு.துரைராஜன் முன்னிலை வகிக்கின்றனர்.

கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், உலகத்தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் குவைத் செல்லபெருமாள் முன்மொழிகிறார்கள். தஞ்சை மண்டலத் தலை வர் நெய்வேலி வெ.ஜெயராமன், மண்டல செயலாளர் மு.அய்யனார், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், குடந்தை மாவட்டத் தலைவர் கு.கவுதமன் வழிமொழிகிறார்கள்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமையேற்று உரையாற்றுகிறார்.

படத்திறப்பு

முற்பகல் 11.30 மணிக்கு தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்  உரையாற்றுகிறார்.

அன்னை நாகம்மையார், அன்னை மணி யம்மையார் படங்களைத் திறந்துவைத்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு உரையாற்றுகிறார்.

சுயமரியாதைச் சுடரொளிகள் படங்களைத் திறந்துவைத்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர்  பொத்தனூர் க.சண்முகம் உரையாற்றுகிறார்.

மத்திய பாசிச ஆட்சி ஒழிய வேண்டும் - ஏன்? கருத்தரங்கம்

பகல் 12 மணிக்கு  திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் ‘மத்திய பாசிச ஆட்சி ஒழிய வேண்டும் - ஏன்?’ தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் வரவேற்புரையாற்றுகிறார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரை யாற்றுகிறார்.

‘கலாச்சாரம்’ எனும் தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகன், ‘பார்ப்பன ஆதிக்கம்’ எனும் தலைப்பில் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், ‘பொருளாதாரம்’ எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன், ‘மதச்சார்பின்மை’ எனும் தலைப்பில் இரா.பெரியார்செல்வன், ‘மாநில உரிமை’ எனும் தலைப்பில் வழக்குரைஞர் பூவை. புலிகேசி, ‘கல்வி’ எனும் தலைப்பில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் இ.இளம்பரிதி, ‘பாசிசம்’ எனும் தலைப்பில் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் சே.மெ.மதிவதனி, ‘மூடநம்பிக்கை’ எனும் தலைப்பில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ச.அஜிதன் உரையாற்றுகிறார்கள்.

தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் நன்றி கூறுகிறார்.

பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகம் ஸ்பார்டகஸ், அய்தராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகம் டேவிட்ராஜ், மருத்துவர் க.இனியன், டிசம்பர் 3 இயக்கத் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா.தீபக் சிறப்புரையாற்றுகிறார்கள்.

தீர்மான அரங்கம்

பிற்பகல் 2 மணிக்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு தலைமையில் தீர்மான அரங்கத்தில் மாநாட்டின் வரலாற்று சிறப்பு வாய்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கை.முகிலன், ப.தேசிங்கு, சு.முருகேசன், வ.ஸ்டாலின், குடந்தை குருசாமி, வீ.வீரமணி, இரா.மணிகண்டன், ஈரோடு தே.காமராஜ், ஆத்தூர் அ.சுரேஷ், மயிலாடுதுறை கி.தளபதிராஜ், பொன் னமராவதி வெ.ஆசைத்தம்பி, சின்னவடவாடி பா.வெற்றிச்செல்வன், வழக்குரைஞர் மு.ராஜா, புதுவை தி.ராசா, புதுக்கோட்டை இரா.குமார், சென்னை நா.பார்த்திபன், மதுரை எ.பிரபாகரன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றுகிறார்கள்.

மாலையில் மாபெரும் பேரணி

மாலை 4 மணிக்கு சமுக பாதுகாப்பு அணி யினரின் அணிவகுப்புடன் திராவிடர் கழகத் தோழர்களின் சீருடை பேரணி  நடைபெறுகிறது. தஞ்சை  இரயில்வே நிலையம் அருகிலிருந்து புறப்படுகிறது.

மாநில அமைப்புச் செயலாளர்கள் மதுரை வே.செல்வம், தருமபுரி ஊமை.ஜெய ராமன், ஈரோடு த.சண்முகம், பொன்னேரி   வி.பன் னீர்செல்வம்ஆகியோர்தலைமையில், மண்டல தலைவர்கள் நெல்லை பால்.இராசேந் திரம், மதுரை மா.பவுன்ராசா, திண்டுக்கல் மு.நாகராசன், சிவகங்கை சாமி.திராவிடமணி, புதுச்சேரிஇர.இராசு,புதுக்கோட்டைபெ.இராவ ணன், விழுப்புரம் க.மு.தாஸ், சேலம் சி.சுப்பிரமணியன், திருச்சி மு.நற்குணன், பட்டுக் கோட்டை  மாவட்டச் செயலாளர் பெ.வீரை யன், பெரியார் வீரவிளையாட்டுக்கழகத் தலைவர் ப.சுப்பிரமணியன், பெரியார் சமுகக் காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் க.கண்ணன், மாணவர் கழக மாநில அமைப் பாளர் இரா.செந்தூர்பாண்டியன், பெரியார் வீர விளையாட்டுக்கழகச் செயலாளர் நா.இராம கிருஷ்ணன், பொதுக்ழு உறுப்பினர்கள் சி.மணி யன், அல்லிராணி, தஞ்சை மண்டல இளைஞ ரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.தனபால், மாநில மாணவர் கழக துணை செயலாளர்கள் கோவை ஆ.பிரபாகரன், தருமபுரி த.யாழ்திலீபன், மதுரை தி.இலக்கியா, தஞ்சை மாவட்ட கழகத் துணைத் தலைவர் முத்து இராஜேந்திரன், தஞ்சை மாவட்டத் துணை செயலாளர்கள் ச.சந்துரு, தீ.வ.ஞானசிகாமணி, தஞ்சை ஒன்றி யத் தலைவர் இரா.சேகர், தஞ்சை ஒன்றியச் செயலாளர் செ.ஏகாம்பரம், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் பா.விஜயக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாநில இளை ஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் பேரணி யைத் தொடங்கிவைக்கிறார்.

தஞ்சை திலகர் திடலில் அன்னை மணி யம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தலில் டாக்டர் பிறைநுதல்செல்வி நினைவு அரங்கில் பேரணி முடிவடைகிறது.

மாலை 5 மணிக்கு இன எழுச்சிப் பாடகர் உறந்தை கருங்குயில் கணேசன் குழுவினரின் 'திக்கெட்டும் பாயட்டும் திராவிடம்' இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னை மணியம்மையார் நூற்றாண்டு முன் னோட்டக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. திரா விடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரை ஞர் அ.அருள்மொழி சிறப்புரையாற்றுகிறார்.

அன்னை மணியம்மையார் பற்றிய ஒளி, ஒலி காட்சிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன.

தமிழர் தலைவர் நிறைவுரை

இரவு 8 மணி முதல் இரவு 9.30 மணி வரை மாநாட்டு நிறைவு அரங்கத்தில் திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் மாநாட்டு தலைமையுரையாற்றுகிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து கருத்துரையாற் றுகிறார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றுகிறார்.

தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் நன்றி கூறுகிறார்.

வீதி நாடகம்

இரவு 9.30 மணிக்கு தெற்குநத்தம் ச.சித் தார்த்தன்-பி.பெரியார்நேசன்  வழங்கும் ‘அசு ரப் பேரரசு’ வீதி நாடகம் நடைபெறுகிறது.

இரண்டாம் நாள் 24.2.2019 சமுகநீதி மாநாடு

காலை 8.30 மணிக்கு புரட்சிக்கவிஞர் கலைக்குழு பாவலர் பொ.இராஜூ-இராம.அன் பழகன், சு.சிங்காரவேலர், இரா.வீரத்தமிழன் குழுவினர் வழங்கும் ‘அறிவை விரிவு செய்’ பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் வரவேற்பு ரையாற்றுகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் தலைமையில் சமுகநீதி மாநாடு நடைபெறுகிறது.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலாளர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், புதுவை மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, தென்மாவட்டப்பிரச்சாரக்குழுத் தலைவர் தே.எடிசன்ராஜா ஆகியோர் முன்மொழி கிறார்கள். கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிடர் விவசாயத் தொழிலா ளரணி மாநில செயலாளர் இரா.கோபால், மாநில தொழிலாளரணி செயலாளர் திரு வெறும்பூர் மு.சேகர், திராவிட தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர் அ.மோகன், கரு நாடக மாநில கழகத் தலைவர் மு.ஜானகிராமன், அரியலூர் மண்டலத் தலைவர் சி.காமராசு, ஈரோடு மண்டலத் தலைவர் பெ.பிரகலாதன், கோவை மண்டலத் தலைவர் ஆ.கருணாகரன், குடந்தை மாவட்டபகுத்தறிவாளர் கழகத் தலை வர் ஆடிட்டர் சண்முகம் ஆகியோர் வழி மொழிகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் மாநாட் டைத் திறந்துவைத்து உரையாற்றுகிறார்.

படத்திறப்பு-தலைவர்கள் உரை

‘புரட்சியாளர் அம்பேத்கர்’ படத்தைத் திறந்துவைத்து பேராசிரியர் முனைவர் ப.காளி முத்து  உரையாற்றுகிறார். ‘அறிஞர் அண்ணா’ படத்தைத் திறந்து வைத்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான்  உரையாற்றுகிறார். ‘கல்வி வள்ளல் காமராசர்’ படத்தைத் திறந்துவைத்து இந்திய சமுகநீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் உரையாற்றுகிறார்.

கலைஞர் படத்திறப்பு

‘முத்தமிழ்அறிஞர் கலைஞர்’ படத்தைத் திறந்துவைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் உரையாற்றுகிறார். கருநாடக மாநில பிற் படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் எச்.காந்தராஜா சிறப்புரை ஆற்றுகிறார்.

தீர்மான அரங்கம்

பகல் 12 மணிக்கு திராவிடர் கழக வெளி யுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி தலைமை யில் தீர்மான அரங்கில் வரலாறு படைக்கின்ற, சமுகநீதி வலியுறுத்துகின்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட உள்ளன. இரா.தமிழ்செல்வன், கா.நல்லதம்பி, அண்ணா.சரவணன், தரும.வீரமணி, துறையூர் ச.மணிவண்ணன், அ.தா.சண்முகசுந்தரம், திருச்சி இரா.கலைச் செல்வன், பேராசிரியர் எஸ்.அருள்செல்வன், சி.இமேஷ், கரூர் ப.குமாரசாமி, கோபு.பழனி வேல், ந.காமராஜ், ச.அழகிரி ஆகியோர் தீர் மானங்களை முன்மொழிந்து உரையாற்று கிறார்கள்.

பறையின் முழக்கம்

பிற்பகல் 2 மணிக்கு கோவை நிமிர்வு கலைக்குழு வழங்கும் ‘பாரெங்கும் பறையின் முழக்கம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிற்பகல் 3 மணிக்கு ‘புரட்சிப் பூபாளம் படைப்போம்’ மகளிர் கருத்தரங்கம் திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி தலைமையில் நடைபெறுகிறது.

திராவிடர் கழகத் துணைப்பொதுச் செயலா ளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்புரை யாற்றுகிறார். தஞ்சை மாவட்ட மகளிரணித் தலைவர் மு.செல்வமணி, தஞ்சை மாவட்ட மகளிரணிச் செயலாளர்  ந.கலைச்செல்வி, தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மகளிர்  பாசறை தலைவர் ச.அஞ்சுகம், தஞ்சை மாவட்ட திரா விடர் கழக மகளிர்  பாசறை செயலாளர்  மல்லிகா ராஜமாணிக்கம் முன்னிலை வகிக்கின்றனர்.

மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி தொடக்க உரையாற்றுகிறார்.

‘திராவிடர் இயக்க மகளிர் தீரம்’ தலைப்பில் புதிய குரல் நிறுவனர் எழுத்தாளர் ஓவியா, ‘மனுதர்மத்தை எரித்தது-ஏன்?’ தலைப்பில் தகடூர் தமிழ்செல்வி, ‘33 விழுக்காடு இடஒதுக் கீட்டின் நிலை’ வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, ‘பெண்ணடிமைக்குத் தீர்வு பெரியாரியலே!’ தலைப்பில் பேராசிரியர் மு.சு.கண்மணி ஆகியோர் கருத்தரங்க உரையாற்றுகிறார்கள்.

தலைவர்கள் சிறப்புரை

மாலை 4 மணிக்கு  தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய யூனியன் முசுலீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் இரா.முத்தர சன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகி யோர்  உரையைத் தொடர்ந்து தமிழக எதிர்க் கட்சித் தலைவர், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

திருப்பத்தூர் அகிலா, பேராசிரியர் பெரியார் செல்வி, பெரியார் களம் இறைவி, வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, பொன்னேரி செல்வி ஆகி யோர் இணைப்புரை வழங்குகிறார்கள். தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி நன்றி கூறுகிறார்.

மாநாட்டின் சிறப்புகள்

தமிழகம் முழுவதுமிருந்தும் புதுவை, கருநாடகம், மராட்டிய மாநிலம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் கழகத்தின் பல்வேறு அணிப் பொறுப்பாளர்கள், திராவிடர் கழகத் தின்  பல்வேறு அணிகளைச் சேர்ந்த பொறுப் பாளர்கள், பெரியாரியப் பற்றாளர்கள் பெருந் திரளாக கலந்துகொள்கின்றனர்.

தஞ்சை நகரில் இரண்டு நாள் மாநாடு நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் சுவர் எழுத்துகள், சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரங்கள் மக்களை பெரிதும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டந் தோறும் பொதுமக்களிடம் மாநாடு குறித்து துண்டறிக்கைகள் அளிக்கப்பட்டு ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது

சமுகநீதி வரலாற்றை விளக்கும் கண்காட்சி, பெரியார் பிஞ்சுகளுக்கான சிறப்பு அரங்கு, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய அரங்கு, பெரியார் மருத்துவக் குழுமத்தின் சிறப்பு மருத்துவ முகாம், பெரியார் தொண்டறம், உடல் உறுப்பு கொடை, குருதிக்கொடைக் கழகத்தின் சிறப்பு அரங்குகள் மாநாட்டில் பார்வையாளர்களின் நலனில் அக்கறையுடன் சிறப்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பேரணியில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பீடு நடை, இளைஞரணியின் சீருடை அணிவகுப்பு, மாவட்ட வாரியாக திராவிடர் கழகத் தோழர்களின் கருஞ்சட்டைப் படைவரிசை, திராவிடர் கழக சாதனை விளக்க வாகனங்கள் அணிவகுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள், கொள்கை முழக்கங்கள், காலக்குரலாம் தீர்மானங்கள் என மாநாட்டின் சிறப்புகள் அளவிடற்கரியதாக உள்ளன.

தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு, சமுக நீதி மாநாடு இரண்டு நாள் மாநாடு அரசி யல், சமுக மாற்றங்களுக்கான திருப்புமுனை மாநாடுகளாக விளங்கி வரலாற்றில் மைல் கல்லாக அமையும் என்பதில் அய்யமில்லை.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles