Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

‘இந்தியாவின் பிரித்தாளும் மோசமான தலைவர்' மோடி

$
0
0

அமெரிக்க ‘டைம்' ஏடு படப்பிடிப்பு

வாசிங்டன், மே 12-  அமெரிக்க இதழான `டைம்' (20.05.2019) பிரதமர் மோடியின் படத்தை அட்டைப் படமாக வடிவமைத்து ‘இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்' என்ற பெயரில் கட்டுரை வெளியிட்டுள்ளது

‘இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்' என்ற தலைப்புடன் ‘டைம்' இதழின் அட்டைப் படத்தில் பிரதமர் மோடி இடம் பிடித்திருந்தார். அதாவது, ஜனநாயக நாடான இந்தியா, பிரதமர் மோடி அரசாங்கத்தில், மதங்களால் பிரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டு அந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.

ஆதிஷ் தஸீர் என்பவர் எழுதியுள்ள அந்தக் கட்டுரையில், இந்தியாவின் மதச் சார்பின்மை, பத்திரிகைச் சுதந்திரம் ஆகியவை மோடியின் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கட்டுரை குஜராத் கலவரத்தையும், பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன் முறைகளையும் குறிப்பிட்டுள்ளது.

2 கோடிக்கும் அதிகமான வாசகர்களை கொண்டுள்ள ‘டைம்' இதழ், 2014, 2015, 2017 ஆம் ஆண்டுகளில் உலகின் 100 சக்தி வாய்ந்த மனி தர்கள் பட்டியலில் பிரதமர் மோடியை தேர்ந் தெடுத்து கவுரவப்படுத்தியது.

இந்நிலையில் இந்திய தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியை சாடி வெளியாகியுள்ள கட்டு ரையால் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் விரிவாக வெளிப் படுத்தியுள்ளது.

‘டைம்'  இதழில் இந்தக்கட்டுரையை எழுதி யுள்ளவர் ஆதிஷ் தஸீர். இவர் தவ்லின் சிங் என்ற இந்தியப் பத்திரிகையாளருக்கும், பாகிஸ்தானின் தொழிலதிபரான சல்மான் தசீர் என்ற அரசியல் வாதிக்கும் மகனாகப் பிறந்தவர்.

இந்த அமெரிக்க ‘டைம்'  இதழ் அய்ரோப்பிய நாடுகள், ஆசியா, தெற்கு பசிபிக் நாடுகளில் வெளியாகி உள்ளன.

கவர்ச்சியால் வீழ்ச்சி அடைந்த இந்திய ஜனநாயகம்

‘‘பிளவுவாதிகளின் தலைவர் மோடி!'' என்று அட்டைப் படத்திலேயே குறிப்பிடப்பட்டு, ‘‘மோடி யுகம்!'' என்றத் தலைப்பில் ஆதிஷ் தஸீர் எழுதியுள்ள மிக நீண்ட கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

‘‘கவர்ச்சியால் வீழ்ச்சியடைந்த மாபெரும் ஜனநாயகங்களில் முதலாவது இந்தியா'' என்றத் துணைத் தலைப்போடு கட்டுரையைத் தொடங்கி யுள்ளது.

மேற்கு மாநிலமான குஜராத்தில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவரும், இந்து தேசியக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த வருமான நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு, கடந்த 30 ஆண்டுகளில் காணப்பட்ட மாபெரும் மக்கள் தீர்ப்பின் மூலம் பிரதமராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தார்.

அதுவரை இந்தியா, அடிப்படையில் ஒரே கட்சியான காங்கிரஸ் மூலம் சுதந்திரம் பெற்ற 67 ஆண்டுகளில் 54 ஆண்டுகள் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரால் ஆட்சி செய்யப் பட்டு வந்தது.

தற்போது நடைபெறுவது ஒரு மாபெரும் ஏழு கட்டத் தேர்தலாகும். அய்ந்தரை வாரங்கள் நீண்டதாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய தேர்தலான இதில் 900 மில்லியன் (90 கோடி) வாக்காளர்கள் பங் கேற்கிறார்கள்.இந்தத் தேர்தலின் முக்கியத்து வத்தை உணர்ந்து கொள்ள மோடி கதையின்முதல் பாகத்திற்கு நாம் செல்லவேண்டும். அப்போது தான் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாததாக இருந்த மோடி ஆட்சி இந்தியாவின் பேரழிவாக ஏன் தோன்றுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மோடியின் வெற்றியானது அவநம்பிக்கையின் வெளிப்பாடு!

‘‘தாங்கள் ஒருவர் கருத்தை ஒருவர் ஒப்புக் கொள்ளாமல் இருந்ததாக நினைத்திராத மக்களி டையே தீர்வுகாண முடியாத பிளவுகள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. உண்மையில், ஏற்கெ னவே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. ஆனால், மோடியின் தேர்வு ஒரு கலாச்சார மாற்றம் என்று கூறப்பட்டது. அது இடதோ, வலதோ இல்லை; அது ஒருவகையான அடிப் படைவாதமாகும். மோடியின் வெற்றி ஒரு அவநம்பிக்கையின் வெளிப்பாடு.

அவர், ஒரு காலத்தில் அசைக்க முடியாத வர்களாக இருந்த நேரு போன்ற தேசத்தின் நிறுவனத் தலைவர்களையும், நேருவின் மதச்சார்பின்மை, சோசலிசம் போன்ற தேசத்தின் புனிதமானக் கொள்கைகளையும் கடுமையாகத் தாக்கினார். ‘‘காங்கிரஸ் இல்லாத இந்தியா'' என்று கூட பேசினார். இந்துக்களுக்கும், முஸ்லிம் களுக்கும் இடையே சகோதரத்துவ உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் நினைக்க வில்லை.

சமீப காலத்திய கொடூர நிகழ்ச்சிகளான ஆயிரத்துக்கு மேற்பட்டமக்கள் - பெரும்பாலும் முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் குறித்து தாம் செவி கேளாதவர் போல் மவுனம் சாதித்தார். அதன் மூலம் அவர் வன்முறைக் கும்பல்களின் நண்பர் என்பது நிரூபணமானது. 2019இல் இதுபற்றி சுட்டுரையில் குறிப்பிட்ட மோடி, ‘‘இவர்கள் தொடர்பாக என்னுடைய குற்றம் என்ன? ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் இஸ்லாமிய ஆட் சியை (சுல்தானேட்) எதிர்த்தது தவறா?'' என்று குறிப்பிட்டுள்ளார்.

2014 இல் மோடி கலாச்சாரக் கோபத்தை பொருளாதார வாக்குறுதிகளாக மாற்றினார். அவர் வேலைவாய்ப்புகளையும், வளர்ச்சியை யும்பற்றிப் பேசினார். சோசலிச நாடு என்றக் கருத்தைத் தாக்கிய மோடி, ‘‘அரசாங்கத்திற்கு வர்த்தகத்தில் எந்த வேலையும் இல்லை!'' என்று கூறினார்.

விஷத்தன்மையுடன் கூடிய மதவாத தேசியத்தை உருவாக்கினார்

இந்த மாதம் இந்தியா வாக்களித்துக் கொண் டிருக்கும் வேளையில், அந்தச் சொற்கள் எல்லாம் மறைந்துவிட்டன. மோடியின் பொருளாதார அற்புதங்கள் எல்லாம் செயல்படாமல் தோல்வி யடைந்து விட்ட நிலையில், அவர் விஷத்தன்மை கொண்ட மதவாத தேசியத்தை உருவாக்குவதற் கான சூழ்நிலையை ஏற்படுத்த உதவி செய்தார். அவருடைய கட்சியைச் சேர்ந்த இளைஞரான தேஜேஸ்விசூர்யா 2019 மார்ச்சில் ‘‘நீங்கள் மோடி யுடன் இருந்தால் நீங்கள் இந்தியாவில் இருக் கிறீர்கள், நீங்கள் மோடியுடன் இல்லாவிட்டால் இந்தியாவிற்கு எதிரான சக்திகளை வலுப் படுத்துகிறீர்கள்'' என்று பேசியுள்ளார்.

மோடி அரசின் மிக மோசமான முகம் - முகமது நயிம் என்பவர் ரத்தம் சொட்டசொட்ட தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியபோதும் விடாமல் அடித்தே கொல்லப்பட்டார். 2017 இல் நடந்த இந்தச் சம்பவம் இனிமேலும் மோடியால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாது என்ப தைக் காட்டியது.

முஸ்லிம்களைத் தாக்க வேண்டும் என்று விரும்புகிற அதே மக்கள் கூட்டம் தான், தாழ்ந்த ஜாதி இந்துக்களையும் தாக்க விரும்பியது. அந்தக் கட்சி தாழ்ந்த ஜாதி மக்களின் வாக்குகளை இழக்க விரும்பாது. ஆனால், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 2016 ஜூலை மாதம் பசுவின் தோலை உரித்ததாகக் கூறி தாழ்ந்த ஜாதி இந்துக்கள் நால்வரின் ஆடைகளை அகற்றி உயர்ஜாதி இந்துக்களால் தெருக்களில் ஊர்வல மாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பெண்கள் வாழ முடியாத அபாயகரமான நாடு

பெண்களைப் பற்றி மோடியின் ‘சாதனைகள்' குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் குறிப் பிட்டார். ஆனால் 2018 இல் வெளியான ஒரு அறிக்கை ‘பெண்கள் வாழ்வதற்கு அபாயகரமான நாடு இந்தியா' என்று குறிப்பிட்டது. எனினும் மோடி பாதுகாப்புத் துறை அமைச்சராக ஒரு பெண்ணை நியமித்தார்.

காவி உடை அணிந்த சாமியாரை முதலமைச்சராக்கினார்

2017ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை மிகுந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெற்றி பெற்றபிறகு, முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள அந்த மாநிலத்தின் வெறுப்பை விதைக்கும் காவி  உடை அணிந்த சாமியாரான யோகி ஆதித்யா நாத்தை முதலமைச்சராக்கினார். அவர் கொல்லப்படும், ஒவ்வொரு இந்துக்கும் 100 முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என்று பேசியவர். முஸ்லிம் பெண்களைக் கற்பழித்து புதைக்க வேண்டும் என்று பேசியவருடன் மேடையில் காட்சியளித்தார்.

ஒன்றை மோடி நினைவில் கொள்ளவேண்டும். 2014 ஆம்ஆண்டு அவர் அளித்த உறுதிமொழி கள் எதையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் அவர் இரண்டாம் முறையாக மக்கள வைக்கான தேர்தலை எதிர்கொள்கிறார். தன்னு டைய தவறுதல்களால் இந்த உலகை எவ்வாறு தண்டிக்கப் போகிறார் என்பதை நடுக்கத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறு ‘டைம்'  இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வராக 2012 ஆம் ஆண்டில் மோடி பதவி ஏற்றபோது இதே ‘டைம்'  வார இதழ் அவர் படத்தை அட்டைப் படத்தில் வெளியிட்டதுடன், மோடி மிகப்பெரும் சக்தியாக உருவாகிக்கொண்டு வருவதாக கட்டுரை வெளியிட்டது.

2015ஆம் ஆண்டு மோடியிடம் நேர்காணல் நடத்தி அதை வெளியிட்டிருந்தது இதே ‘டைம்'  இதழ். தற்போது அதே இதழ்தான் இந்தியாவின் பிரித்தாள்பவர்களின் தலைவர் என்று அட்டையிலேயே குறிப்பிட்டு, மோடியின் உருவ வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மக்களவைக்கான தேர்தல் - ஏற்கெனவே சில கட்டங்கள் முடிந்துவிட்டாலும் இன்னும் நடைபெற உள்ளநிலையில் ‘டைம்'  இதழ் இந்தக் கட்டுரையை வெளியிட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles