Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மேற்கு வங்கத்தில் வெளிமாநிலங்களிலிருந்து ஆட்களை இறக்கி - "பண மழையைக்'' கொட்டச் செய்து வெற்றி பெற பி.ஜே.பி. தீவிரம்!

$
0
0

மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் கட்சியினரும், பொதுமக்களும் இவர்கள் முயற்சிகளை முறியடிப்பர்!

மேற்கு வங்க மாநிலத்தில் காலூன்ற மோடியும், அமித்ஷாவும் பல்வேறு வித்தைகளைக் காட்டி வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் ஆட்களைக் கொண்டுவந்தும், வன்முறைகளைக் கட்டவிழ்த்தும், பண மழையைக் கொட்டியும் பல்வேறு வித்தைகளில் ஈடுபட்டாலும், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் கட்சியினரும், பொதுமக்களும் இவற்றையெல்லாம் முறியடித்து பி.ஜே.பி.க்குத் தோல்வியை பெருமள வில் கொடுப்பதே உறுதி  என்று  திராவிடர்  கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

2019 பொதுத் தேர்தலில் நன்கு அறிந்தே பிரதமர் மோடி இரண்டாவது முறை தாம் ஆட்சிக்கு வருவது எளிதானதல்ல 2014 ஆண்டுப் போல் என்பதாலேயே -  தேர்தல் நடத்துவதிலேயே ஏழு கட்டமாகப் பிரித்துள் ளாரோ என்ற அய்யம் எவருக்கும் வரவே செய்கிறது.

தேர்தல் ஆணையம் முழு சுதந்திரத்துடன் இயங்கவில்லை என்பது நாடறிந்த உண்மையல்லவா?

தமிழ்நாட்டைப் போலவே, மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காலூன்றிட முடியவில்லை. பல்வேறு உணர்வுபூர்வமான - மொழிப் பிரச்சினை - கலாச்சாரப் பாதுகாப்பு, இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு - கூட்டாட்சித் தத்துவம் இவைகளில் தமிழ்நாடு போல மேற்கு வங்கமும் இரு இணைகோடுகளாகவே பல ஆண்டுகளாகத் தொடருகிறது.

பா.ஜ.க. அங்கு கணக்குத் திறப்பதோடு, எப்படியும் ஆட்சிக்கு வந்துவிட துடியாய்த் துடித்து சாம, பேத, தான, தண்டம்' என அத்துணை உத்திகளையும் தயக்கமில்லாமல் கையாளுகிறது!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு வீராங்கனையாகவே எழுந்து நின்று எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ்., ராம பூஜைமூலம் ஆயுதம் ஏந்திடும் ஊர்வலத்தையே தடை செய்தார்!

பக்தி மாத்திரைப் போதை

பக்தி மாத்திரை என்ற போதை மாத்திரையை ராமன்மூலம் செய்ததைத் தடுத்து நிறுத்தியதோடு, இதுபற்றிப் பேசிய பிரதமர் மோடியைப் பார்த்து, இராமன் என்ன உங்கள் எலெக்ஷன் ஏஜெண்ட்டா?'' என்று கேட்டு, மூக்கை உடைத்தார்.

இங்கே சாதாரண விஷயங்களுக்குச் சலசலப்பு - இங்கு ஒரு கொத்தடிமை ஆட்சி இருக்கிற காரணத் தால், தங்கள் இஷ்டம்போல பேசுவது எல்லாம் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காலிகளாலும், கூலிகளாலும் அரங்கேறுகிறது! மிரட்டல்கள் தொடர்கின்றன. ஆனால், மேற்கு வங்கத்தில் உறுதியோடு, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூலம் வலிமையாக உள்ளதால், இவர்கள் ஜம்பம் அங்கே பலிக்கவில்லை!

கடைசி கட்டத் தேர்தல் (7 ஆவது கட்டம்) வரும் மே 19 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது; கொல்கத்தா பெருநகரப் பகுதிகளை எப்படியும் தாங்கள் கைப்பற்றிட வேண்டும் என்பதற்காக மிக அதீதமான - எல்லை மீறிய வேலைகளில் பா.ஜ.க.வும், அமித்ஷாவும், மோடியும் ஈடுபட்டு வருவதை இன்றைய எகனாமிக் டைம்ஸ்' நாளேடு தெளிவாக விவரித்துள்ளது. அமித்ஷாவால் பேரணி நடத்த முடியாத நிலை அங்கே!

வெளிமாநிலத்திலிருந்து ஆட்கள் இறக்குமதி

கொல்கத்தா சாலை வழி பேரணி - வெளி மாநிலத் திலிருந்து வந்துள்ள (அசாம், ஒரிசா, திரிபுரா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து) ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. முக்கிய பொறுப்பாளர்கள் கூடாரம் அடித்துள் ளனர். குண்டர்கள், கோடிக்கணக்கான பணம் வாக்காளர் களுக்குத் தர என எல்லா ஏற்பாடுகளுடன் வந்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவிற்கு கொல்கத்தா பல்கலைக் கழக மாணவர்கள் கருப்புக்கொடி காட்டி, தமது கண்டனத்தைத் தெரிவித்து, திரும்பிப் போ!'' என்று முழக்கமிட்டதைக் கண்டு ஆத்திரமடைந்த அவர்களுடைய ஆட்கள், பல்கலைக் கழக மாணவர் விடுதிக்குள்ளே நுழைந்து, அடித்துத் துவைத்து வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளனர். அங்கே இருந்த ஈஸ்வர சந்திர வித்தியாசாகரின் சிலையைக்கூட அடித்து நொறுக்கியுள்ளனர்! இதை மேற்கு வங்க கல்வி அமைச்சர் கூறியதோடு, முதல மைச்சர் மம்தா தொடர்ந்து கூறி வருகிறார். இங்கே கலவரம், வன்முறைமூலம் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர் என்பதால், கடைசி கட்டத்தில் கொல்கத்தா பெருநகரப் பகுதிகளில் இப்படி திட்ட மிட்டே செய்கின்றனர்!

அத்தனை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மூத்த பொறுப் பாளர்கள், மூத்த அமைச்சர்களை மேற்கு வங்கத்தில் இறக்குமதி செய்துள்ளனர்!

இராணுவ உடையில்கூட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்

சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மத்திய துணை இராணுவப் படையினர் போன்று உடை அணிந்து சில காரியங்களில் ஈடுபட்டனர். இவை குறித்து ஏற்கெனவே சில செய்திகள் வெளியாகியுள்ளன!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், எங்கள் தொண்டர்கள் இராணுவ வீரர்களைவிட விரைந்து செயல்படுபவர்கள்'' என்று கூறி, இராணுவத்திற்கே சவால் விடவில்லையா? எந்த அளவுக்கு இவர்களது தண்ட'' வன்முறை வெறியாட்டங்கள் அவர்களுக்குப் பயன் தரும் என்பது 23 ஆம் தேதி - தேர்தல் முடிவுகளுக்குப் பின் தெரியும்!

தங்களது தோல்வி உறுதி என்பதால் விரக்தியின் விளிம்புக்கே சென்று வித்தைகளின் உச்சத்தைக் காட்டி வருகிறார்கள் இந்த இருபெரும் தலைவர்களும்!

எந்த முயற்சியும் எடுபடாது!

நாளும் பொய் மூட்டை அவிழ்த்துக் கொட்டப்படு கின்றது - பண மூட்டைகளைப்போலவே; தேர்தலில் வருமான வரித் துறை, அமலாக்கப் பிரிவு பெரிதும் ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டதுபோன்று, எதிர்க்கட்சி வேட்பாளர்களைத் தானே குறி வைத்துச் செயல்பட்டது - தங்கள் அணிக்கு வந்த திமிங்கலங்கள்' எல்லாம் தங்கு தடையின்றி பண மழையைக் கொட்டினாலும், கண்டு கொள்ளப்படாதது நாடறிந்த நடைமுறைதானே!

இதையும் மீறி, எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே தெரிகிறது!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

15.5.2019


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles