தமிழ்நாடு பெரியார் மண் - திராவிட பூமி என்பது நிரூபணம்!
சென்னையில் தமிழர் தலைவர் பேட்டி
சென்னை, மே 25 மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குக் காரணமானவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாடு பெரியார் மண் - திராவிட மண் என்பது மீண்டும் நிரூபணம்! இன்றைய ஆட்சியாளர் களால் மத்திய அரசிடம் அடமானம் வைக் கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்; அதற்கான 2 ஆம் கட்டப் பணியும் முக்கியம்; எனவே, உங்களுக்கு ஓய்வில்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (25.5.2019) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு:
தமிழகம் பெரியார் மண் - திராவிட பூமி!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், இந்தியாவினுடைய மற்ற பகுதிகளிலிருந்து தமிழ்நாடு மாறுபட்ட ஒன்று. அதிலும் குறிப்பாக இது பெரியார் மண் - திராவிட பூமி. இந்த பூமியில் வேறு எந்த விதையையும் விதைக்க முடியாது; விதைத்தாலும் அவை முளைக்காது, மலராது என்பதை மிகத் தெளிவாகக் காட்டிய தமிழக வாக் காளர்ப் பெருமக்களுக்கு நன்றி!
தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வெற்றி பெற்றவுடன் தந்தை பெரியாரு டைய நினைவிடத்திற்கு அவர்கள் வந்து மரியாதை செலுத்தினர். ஏற் கெனவே அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் நினைவிடங் களுக்குச் சென்று மரியாதை செலுத் தினர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் இன்றைக்கு வாழ்ந்து கொ ண்டிருக்கிறார்கள் என்பதற்கு அடை யாளம்தான் 38 தொகுதிகளிலும் அவர்கள் பெற்றிருக்கின்ற மிகப்பெரிய வெற்றியாகும்.
தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்!
அதுபோலவே, மாற்றங்கள் வர வேண்டும்என்பதற்காகத்தான், பொருந்தாக் கூட்டணி - தமிழகத்தினு டைய உரிமைகள் - இன்னமும் இந்த வெற்றியைப் பெற்ற பிறகும்கூட மிகப் பெரிய பணி இருக்கிறது. ஏனென்றால், தமிழகத்தினுடைய உரிமைகள் அத்த னையும் இன்றைய தமிழக அரசால், மத்திய அரசுக்கு, டில்லிக்கு அடமானம் வைக்கப்பட்டு இருக்கின்றன. அதனை மீட்கவேண்டும்.
பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராகிறார்; ஓட்டுப் போட்டவர் களுக்கும் அவர் பிரதமர்; ஓட்டுப் போடாதவர்களுக்கும் அவர் பிரதமர் என்கிற முறையிலே, தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருந்த நிலையை அவர் கள் மாற்றியாகவேண்டும்.
வெற்றிக்குக் காரணமானவர்
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்!
தமிழகம் எல்லாத் துறைகளிலும், விவசாய பூமியாக இருந்தாலும் வஞ்சிக்கப்படுகிறது; வேலை வாய்ப்பாக இருந்தாலும் வஞ்சிக்கப்படுகிறது. அது போலவே இன்னும் பல உரிமைகள் நீட்' தேர்வு போன்ற பிரச்சினையில், தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட இரண்டு மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக் காமல், மூன்று ஆண்டுகளாக ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கொண்டிருக்கிறது என்கிற நிலை மைகளையெல்லாம் மாற்ற, தி.மு.க.வின் பலம் நிச்சயமாக நாடாளுமன்றத்தில் எடுபடும்.
இந்த முழு வெற்றிக்குக் காரணமாக அமைந்தவர் நம்முடைய ஒப்பற்ற தளபதி, திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைவர் அருமைத் தளபதி ஸ்டாலின் அவர்களாவார்கள்.
சகோதரர் ஸ்டாலின் அவர்கள், பெரிய வியூகத்தை வகுத்து, அதில் முதல் கட்ட வெற்றியைப் பெற்றிருக் கிறார். இரண்டாவது கட்ட வெற்றிதான் மிகமிக முக்கியமானது. அந்த வகையில், அவருடைய பணி என்பது இப்பொழுது தொடங்கி யிருக்கிறதே தவிர, அது முடியவில்லை.
தேர்தலோடு கடமை முடிந்து விடவில்லை - இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறது!
அதுபோலவே, திராவிட இயக்கத் தோழர்கள், திராவிட இயக்கப் பற்றா ளர்கள், திராவிட இயக்கக் கொள்கையாளர் களின் முன் இப்பொழுது இருக் கக்கூடிய மிகப்பெரிய கடமை தேர்த லோடு முடிந்து விட வில்லை. தேர்தல் வெற்றியின் மூலம் தொடங்கியிருக்கிறது என்பதுதான் அடை யாளம்.
மாற்றம் - மன மாற்றம் - சிலருக்கு ஏமாற்றம்!
செய்தியாளர்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
தமிழர் தலைவர்: தாராளமாக. ஜனநாயக முறையிலேயே மாற்றங்கள் வரு வதற்கு வாய்ப்புகள் இருக் கின்றன. மாற்றம், மன மாற்றம், சில பேருக்கு ஏமாற்றம் என்ற அளவில் வரும். அதற்குரிய நாள் தொலைவில் இல்லை. வெகு விரைவில் வரும் - நெருங்கிக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசில் அங்கம் வகிக்காத சூழலில்...
செய்தியாளர்: அதிக அளவில் நாடாளுமன்ற உறுப் பினர்களைப் பெற்றிருந்தாலும், மத்திய அரசில் அங்கம் வகிக் காத ஒரு சூழலில், தமிழகத்தின் குரலுக்கு அங்கே செவி சாய்க்கப்படும் என்று நினைக் கிறீர்களா?
தமிழர் தலைவர்: செவி சாய்க்காமல் இருந்தால், அது ஜனநாயகம் இல்லை என்று பொருள். மூன்றில் ஒரு பகுதி எதிர்க்கட்சிகளின் உறுப்பி னர்கள் இன்னமும்.
இப்பொழுது ஏற்பட்டிருப் பது, பா.ஜ.க.வைப் பொறுத்த வரையில் வளர்ச்சி என்று அவர்கள் கருதினாலும், இது வீக்கம், பெருமளவிற்கு வீக்கம்.
திடீரென்று அதிகமான எடை வந்தால், அது நல்லதல்ல என்பதை ஆரோக்கிய அரசி யலில் தெரிந்துகொள்ளலாம்.
ஜனநாயகக் களத்தை சிப்பாய்களைப் போல் காப்பார்கள்!
அந்த வகையில், எல்லா மாநிலங்களுக்கும் அவர் பிரதமர். ஏற்கெனவே இருந்த தைப்போல, தமிழகத்தினுடைய குரலைக் கேட்காமல், நெரிக்க ஆரம்பித்தால், தமிழகம் - புதுவை சேர்த்து 39 உறுப்பினர்கள் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களில் வந்திருக் கின்ற எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் எல்லாம் சேர்ந்து ஜன நாயகக் களத்தை சிப்பாய் களைப் போல் காப்பார்கள்.
நிச்சயமாக இப்பொழுது தான் உண்மையான எதிர்க் கட்சிகள் தங்களுடைய பணி களை செய்தால், ஜனநாயகத் தினுடைய மாண்பும், பரிமா ணமும் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதை இந்தியா இனி கண்டுகொள்ளும்.
ஓட்டு இயந்திரம்பற்றிய சந்தேகம் இருக்கிறதே!
செய்தியாளர்: ஓட்டு இயந் திரம்பற்றிய சந்தேகம் இன்ன மும் உலா வந்துகொண்டிருக் கின்றனவே, அதில் உங்களு டைய பார்வை எப்படி இருக் கிறது?
தமிழர் தலைவர்: சந்தே கத்தை நாம் இப்பொழுதும் வைத்துக் கொள்ளலாம். சந் தேகம் சந்தேகமாக இருக்கட் டும்; உறுதிகள் தெளிவாகட்டும். கொள்கைகள் மாறட்டும். மக்கள் தெளிவடையட்டும்.
தமிழ்நாட்டிலே, பெரியார் பூமியிலே இருந்த கொள்கைத் தெளிவு, சமுகநீதி, மாநில உரிமைகள் அதுபோலவே மதச்சார்பின்மை கொள் கை கள், இந்தத் தெளிவு மற்ற பகுதி களுக்குப் போய் எட்ட வில்லை. அதற்கு எதிர்க் கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்.
பொது எதிரியை பார்க்காததால் அதற்குக் கடுமையான விலையைக் கொடுத்திருக்கிறோம்!
ஏனென்றால், பொது எதிரி யார் என்பதை எதிர்க்கட்சியினர் பார்க்காமல், அது காங்கிரசானாலும், மற்ற மற்ற கட்சித் தலைவர்களானாலும், உத்தரப்பிரதேசத்தில் இருப்ப வர்களானாலும், தங்களை முன்னிலைப்படுத்தப் பார்த்துக் கொண்டார்களே தவிர, பொது எதிரியை, பொது ஆபத்தை அவர்கள் பார்க்கவில்லை. அதற்குக் கடுமையான விலை யைக் கொடுத்திருக்கிறோம்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியா ளர்களிடம் கூறினார்.