ஜனநாயக அடிப்படை கட்டமைப்பின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தாக்குதல்
பதவி விலகிய மூன்றாவது அய்.ஏ.எஸ். அதிகாரி குமுறல்!
பெங்களூரு,செப்.7 ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பின்மீது முன்னெப்போதும் இல்லாத அள வுக்கு தளர்வு ஏற்பட்டுள்ளது. சமர சங்கள் அதிகரித்துள்ள இந்த கால சூழ்நிலையில், நான் பொதுப்பணியில் இருப்பது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. வருங்காலங்களில் நமது நாட்டின் ஜனநாயகத்தின் அடிப் படை தன்மைக்கு இன்னும் சிரமமான காலகட்டங்கள் வரக் கூடும் என்று கருநாடகாவில் தென் கன்னட மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தமிழர் அய்ஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளார்.
அச்செய்தியின் விவரம் வருமாறு:
சென்னையைச் சேர்ந்த சசி காந்த் செந்தில் கடந்த 2009ஆ-ம் ஆண்டு நடந்த யூபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் முதல் இடத்தையும், தேசிய அளவில் 9 ஆ-வது இடத்தையும் பெற்று அய்ஏஎஸ் அதிகாரி ஆனார். கருநாடகாவின் பெல்லாரியில் உதவி ஆட்சியராக பொறுப் பேற்ற இவர், 2012ஆ-ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார்.
பின்னர் சிமோகா மாவட்ட பஞ்சாயத்து, தலைமை செயல் அதி காரியாக நியமிக்கப்பட்டார். 2015-ஆம் ஆண்டு சித்ரதுர்கா மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்றார். அதன் பின் 2016ஆ-ம் ஆண்டு சுரங்கத் துறையின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட இவர், கடந்த 2017ஆ-ம் ஆண்டு ஜூன் மாதம் தென் கன்னட மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தனது பதவிக் காலத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக சுறுசுறுப்புட னும், நேர்மையுடனும் பணியாற்றிய தால் மக்கள் மத்தியிலும் அதிகாரிகள் மத்தியிலும் நற்பெயரை பெற்றார்.
பதவி விலகல் கடிதம்
அண்மையில் மங்களூரு அருகே தற்கொலை செய்துகொண்ட காபி டே நிறுவன உரிமையாளர் சித் தார்த்தாவின் உடல் மீட்புப் பணி யின்போது சசிகாந்த் செந்தில் செயல்பட்ட விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று திடீரென தனது மாவட்ட ஆட்சியர் பணியில் இருந்து விலகுவதாக பதவி விலகல் கடிதம் அளித்துள்ளார்.
இவரது இந்த முடிவுக்கு மத்திய அரசின் அணுகுமுறையும், அண்மைக் கால நெருக்கடியும் தான் காரணம் என கூறப்படுகிறது.
அறிக்கை
இந்நிலையில் சசிகாந்த் செந்தில் விடுத்துள்ள அறிக்கையில்,
எனது சொந்த விருப்பத்தின் பேரில் எனது பதவி விலகியுள்ளேன். இதில் யாருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இத்தனை காலம் என் னுடன் அன்பாக பழகி, முழு ஒத்து ழைப்பு வழங்கிய தென் கன்னட மாவட்ட மக்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது பணியில் இருந்து பாதியில் விலகியதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.
பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டின் ஜனநாயகம் பெரும் சவால் களை சந்தித்து வருகிறது. ஜனநாய கத்தின் அடிப்படை கட்டமைப் பின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தளர்வு ஏற்பட்டுள்ளது. சமரசங்கள் அதிகரித்துள்ள இந்த கால சூழ்நிலையில், நான் பொதுப் பணியில் இருப்பது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. வருங்காலங்களில் நமது நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படை தன்மைக்கு இன்னும் சிரமமான காலகட்டங்கள் வரக் கூடும் என நினைக்கிறேன். எனவே, அய்ஏஎஸ் பதவியிலிருந்து நான் விலகி இருப்பது நல்லது என்று கருதுகிறேன். இனிமேலும் இந்த பணி வழக்கமான பணியாக இருக் காது என்பதை உணர்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2 ஆ-வது முறையாக அமைந்த பிறகு டையூ டாமன் செயலாளராக இருந்த தமிழ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியிலிருந்து விலகினார். ஜம்மு - காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படு வதைக் கண்டித்து இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து பதவி விலகும் அய்.ஏ.எஸ். அதிகாரிகள்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருநாடகாவில் பணியாற்றிய தமிழ ரான அண்ணாமலை அய்பிஎஸ் அதிகாரி பதவி விலகினார். தற்போது சசிகாந்த் செந்தில் பதவி விலகியிருப்பது அதிகாரிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.