Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு நாடெங்கும் எதிர்ப்பு! எதிர்ப்பு!!

$
0
0

துணை இராணுவம் விரைகிறது அசாமிற்கு!

புதுடில்லி, டிச.12  குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி லங்களில் போராட்டம் தீவிரம் அடைந் துள்ள நிலையில் திரிபுராவில் 5 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள னர். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா  நேற்று (டிச.11) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பாதுகாப்பு தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் அளித்துள்ள தகவலின்படி கஞ்சான்பூர் மற்றும் மனு ஆகிய பகுதிகளில் 2 கம்பெனிப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அசாமின் பொங்கைகானிலும் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

அசாமில் திப்ருகர் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படையினர் பதற்றம் நிறைந்த இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இருப் பினும், ஊரடங்கு உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.  ஏறக்குறைய 5 ஆயிரம் துணை ராணுவத்தினர் வடகிழக்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். பல்வேறு இடங்களில் குடியுரிமைச் சட்ட மசோதாவை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

முஸ்லிம்கள் அல்லாத ஆப்கன், வங்க தேசம், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு, அவர்கள் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டிருந்தார்கள் என்றால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமையை குடி யுரிமைச் சட்ட திருத்த மசோதா வழங்கு கிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரா னது என்று கூறி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வாரம் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை அறிமுகம் செய்தார். நீண்ட விவாதத்திற்கு பின்னர் நேற்று முன்தினம் மசோதா மக்களவையில் நிறைவேறியது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து வடகிழக்கு மாநில அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்களை சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் மசோதா நேற்று மாநி லங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கையாக திருத்தப்பட்ட மசோதாவிலிருந்து அசாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அங்கு போராட்டங்கள் தீவிரம் அடைந் துள்ளன.

மாநிலம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு கைப்பேசி, இணையம் மற்றும்குறுஞ்செய்தி சேவைகளுக்குத் திரிபுரா அரசு நேற்று தடை விதித்தது. செபாஜலா என்ற பகுதியில் போராட்டம் நடைபெற்றதால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 2 மாத குழந்தை உயிரிழந்தது.

தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று போராட்டக் காரர்கள் அரசை வலியுறுத்தினர். இதை யடுத்து தொலைத் தொடர்புகள் துண்டிக் கப்பட்டன. முன்னதாக, ப்ழங்குடியினர் அல்லாத கடைகளுக்கு தலாய் மாவட் டத்தில் தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலத்திலும் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கி யுள்ளதால் அங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொந்தளித்த வன்முறையாளர்கள் சாலைகளில் டயர் களை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ரயில் தண்டவாளங்களில் போராட்டங்கள் நடந்ததால், சில ரயில் களின் இயக்கமும் ரத்து செய்யப்பட்டிருக் கிறது.

கல்வி நிலையங்கள், வங்கிகள், வர்த்தக மய்யங்கள், சந்தைகள் உள்ளிட்டவை அரு ணாசல பிரதேசத்தில் மூடப்பட்டிருந்தன. வாகன இயக்கமும் மிகக் குறைவாக காணப்பட்டது.

சுமார் 7 மணி நேர விவாதத்திற்குப் பின்னர் திங்களன்று இரவு மக்களவையில் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 334 வாக்குகளும், எதிராக 106 வாக்குகளும் விழுந்தன.

இதனைத் தொடர்ந்து நேற்று மாநிலங் களவையிலும் இந்த மசோதா நிறை வேறியுள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles