Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் அமைதி ஊர்வலம்

$
0
0

தந்தை பெரியார்  நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

சென்னை,டிச.24 தந்தை பெரியாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2019) திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது.

தந்தை பெரியார் நினைவு நாளான இன்று (24.12.2019) காலை 9.45 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) அமையப்பெற்றுள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க, தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார்  பணிமுடிப்போம் என கழகத் தோழர்களின் முழக்கங்கள் வானைப் பிளந்தன.

அண்ணாசாலை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர் வலம் தொடங்கியது. சிந்தாதிரிப்பேட்டை, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை  வழியே பெரியார் திடலை அமைதி ஊர்வலம் அடைந்தது.

வைகோ - திருமாவளவன் - ஜி.இராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் (சி.பி.எம்.) மரியாதை

பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் அமைந் துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழக மகளிர் தோழர்கள் மாலை அணிவித்தனர்.

பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர தந்தை பெரியார் முழு உருவ சிலைப்பீடத்தில் மலர் மாலை வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கழகத் துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி மகளிர் சார்பில் மலர் வளையம் வைத்தார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் பெரியார் நினை விடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உறுதிமொழி கூற, அனைவரும் தொடர்ந்து கூறி உறுதி யேற்றனர்.

அன்னை மணியம்மையார்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திருமதி மோகனா வீரமணி, சிங்கப் பூர் நா.மாறன், கவிதா, கழகத் துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம்,  பெரியார் பன்னாட்டமைப்பு இயக்குநர் சிகாகோ மருத்துவர் சோம.இளங் கோவன், மயிலை நா.கிருட்டிணன், த.க.நடராசன், சென்னை மண்டலத் தலைவர்  தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீர பத்திரன், திருவள்ளூர் ஜெய.தென்னரசு மற்றும் ஆவடி, கும் மிடிப்பூண்டி,தென்சென்னை, வடசென்னை, தாம் பரம் உள்ளிட்ட சென்னை மண்டல கழகப் பொறுப் பாளர்கள்,  தோழர்கள், மகளிர் தோழர்கள், பெரியார் பிஞ்சுகள் என அனைவரும் தந்தை பெரியார் நினைவு நாளில் அணிதிரண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்று, பெரியார் நினைவிடத்தில் உறுதியேற்றனர்.

மகளிரணி, மகளிர் பாசறை, திராவிட தொழிலாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் மணியம்மை மருத்துவ மனை, திராவிடன் நிதி,  பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மை யார் நினை விடம், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. - மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சென்னை அண்ணா சாலை சிம்மன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், இந்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலங்களவை உறுப்பினர்  டி.கே.ரங்கராஜன், மேனாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.துணை செயலாளர் வீரபாண்டியன், செயற்குழு உறுப் பினர் பெரியசாமி, மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, எம்.எஸ்.மூர்த்தி, ஏ.அய்.ஒய்எஃப் வெங்க டேசன், ஒடுக்கப்பட்டோர் அமைப்பு சிவா, தமிழ்நாடு பழங்குடி மக்கள் தேசிய நிர்வாகக்குழு அய்.உசேன் இருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் செல்வம் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப் பாளர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மதிமுக

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மல்லை சத்யா, ஜீவன் உள்ளிட்ட மதிமுக பொறுப்பாளர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles