Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

தேவையான தனித்திறனுடன் அரசு செயல்பட்டால் மட்டும்தான் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்!

$
0
0

தமிழக முதலமைச்சருக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஏப்.12 திறந்த மனதுடன், உண்மையான அக்கறையுடன், கனி வான மனதுடன், அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் உள்வாங்கும் பரந்த உள்ளத்துடன், தேவையான தனித்திறனுடன் அரசு செயல்பட்டால் மட்டும்தான் நாட் டையும், நாட்டு மக்களையும் காப் பாற்ற முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமிக்கு நேற்று (11.4.2-020) கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

‘‘கோவிட்-19'' என்ற கொடிய தொற் றினால் பரவிவரும் நோய்ப் பேரிடரில் இருந்து தமிழக மக்கள் மீள்வதற்கும், தற்போதைய கடும் நெருக்கடியில் இருந்து, ஏழை எளிய, நடுத்தரப் பிரி வினர் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் தேவைப்படும் அன் றாட நடவடிக்கைகளைத் தொடரு வதற்கும், அரசு எடுக்கும் ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளுக்கு தி.மு.க. சார்பில் எனது ஆதரவையும், ஒத்து ழைப்பினையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நாடு முழுவதும் நடை முறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கரோனா நோய்த் தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழு மையான கட்டுப்பாட்டுக்குள் இன் னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளா வோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதும் துயர மளிக்கிறது. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி, ஒரு சில கருத்துகளை தங்கள் கவனத் துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, தமிழ்நாடு 2- ஆவது நிலையில் இருந்து 3- ஆவது நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற அய்யப்பாட் டையும், ஆழ்ந்த கவலையையும் ஏற் படுத்தியுள்ளது. அப்படி ஆகிவிடாமல் தடுத்தாக வேண்டும். மேலும், அதனை எதிர்கொள்ளத் தேவையான முன் னேற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நோய்த் தொற்று குறித்த சோத னையை விரைவுபடுத்துவதுடன் அதை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனை களிலும் இலவசமாகச் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

நோய்த் தாக்கம் அதிகமாகிவிடக் கூடாது என்று பெரிதும் விழைந்திடும் அதே நேரத்தில், ஒருவேளை அரசின் முயற்சிகளை எல்லாம் தாண்டி, தாக் கம் அதிகமாகிவிட்டால், அதனை எதிர்கொள்ள அவசர நிலை ஏற் பாடுகள் முன்கூட்டியே திட்டமிடப் பட்டு தயார் நிலையில் இருந்தாக வேண்டும். படுக்கை எண்ணிக்கைகளை அதிகப்படுத்துதல், செயற்கை சுவாசக் கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் உற்பத்தி அல்லது கொள்முதல் செய்யப்பட்டு வைத்திருத்தல் வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் கூறும் வரைமுறைகளின்படி, மருத்துவப் பணியாளர்களைத் தொற்றில் இருந்து முற்றிலும் பாதுகாக்குமளவுக்குப் போதுமான வரையரைகளின்படி அமைந்திடவில்லை என்றும் அறி யப்படுகிறது. இதில் கவனம் செலுத் துங்கள். தாலுகா மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணியாளர்களுக்கும், கரோனா களப்பணியாளர்களுக்கும் அடிப்படைப் பாதுகாப்பு உப கரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

அரசின் எச்சரிக்கையான முழு மையான நடவடிக்கைகளில்தான், மக்களின் வாழ்க்கையும் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது. திறந்த மன துடன், உண்மையான அக்கறையுடன், கனிவான மனதுடன், அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் உள்வாங்கும் பரந்த உள்ளத்துடன், தேவையான தனித்திறனுடன் அரசு செயல்பட்டால் மட்டும்தான் நாட் டையும், நாட்டு மக்களையும் காப் பாற்ற முடியும்.

‘தனிமனித இடைவெளியுடன், தனித்திருத்தல்’ மட்டும்தான் மக்க ளால் செய்ய முடிந்தது. மற்றவை அனைத்தையும் அரசு தான் ஏற்றுச் செய்து தர வேண்டும். அத்தகைய ஏற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும். அப்படிச் செயல்படும் அர சுக்கு ஆலோசனைகளைச் சொல்ல, ஒத்துழைக்க, உதவிகள் வழங்க தி.மு.க. எப்போதும் தயாராகவே இருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles