Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

இன்று (ஏப்ரல் 23) உலக புத்தக நாளில் சிந்திப்போம்!

$
0
0

புத்தகம் படிப்போம் - பரப்புவோம் என்று உறுதியேற்போம்!!

50 விழுக்காடு தள்ளுபடி பெற்று

நமது வெளியீடுகளைப் பெற்றுக்கொள்ள

முன்பதிவு செய்து கொள்வீர் - பயன்பெறுவீர்!

இன்று (ஏப்ரல் 23) உலக புத்தக நாளில் சிந்திப்போம் - புத்தகம் படிப்போம் - பரப்புவோம் என்று உறுதியேற்போம்! 50 விழுக்காடு தள்ளுபடி பெற்று நமது வெளியீடுகளைப் பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்துகொள்வீர், பயன்பெறுவீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

மனிதர்களைப் பிடித்த மிகப்பெரிய கொடிய நோய்

அறியாமைதான் உலகின் மனிதர்களைப் பிடித்த மிகப்பெரிய கொடிய நோய்.

அதன் விளைவே மனித குலத்தில் - அதிலும் நமது நாட்டில் உலகில் எங்கும் காண முடியாத பிறவி பேதம், ஜாதி, தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கை தொற்று நோய்கள்!

புத்துலகு சமைக்க

புது வழிகாட்டினார்

இவற்றுக்கெல்லாம் பகுத்தறிவு அடிப்படையில் சரியான மாமருந்து - அறிவு வெளிச்சமும், அறியாமை - அறிவுப் போதாமை   ஆகிய இருட்டைப் போக்கும் அறிவொளி - அறிவியல் அடிப்படையில், ஏன், எதற்கு, எப்படி, எங்கு என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அறிவை விரிவு செய்து - அகண்டமாக்கி அவனி யோருக்கு அகவிடுதலை தரும் அரிய வழி - காடு திருத்தி கழனிகளாக்கி, பண்ணையம் நடத்தி, பயிர்களை நட்டுப் பாதுகாத்து, அறுவடை செய்து, அறிவுப் பசிக்கு அறிவார உணவு தரும் அரிய சாதனைக் கருவிகள் ஏடுகளும், புத்தகங்களுமே!

அதைத்தான் அறிவியக்கங் கண்ட நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே செய்து புத்துலகு சமைக்க புது வழிகாட்டினார்!

அறியாமை இருளை விரட்டிய

அறிவுச் சுடர்கள்

அவர் தொடங்கிய ‘குடிஅரசு', ‘விடுதலை', ‘புரட்சி', ‘பகுத்தறிவு', ‘ரிவோல்ட்', ‘ஜஸ்டிசைட்', ‘உண்மை', ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' போன்ற (இரு மொழி) ஏடுகள் அறிவு கொளுத்தி அறியாமை இருளை விரட்டிய அறிவுச் சுடர்களாகும்!

அவற்றில் கட்டுரைகளாக வந்தவை களை - ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவுப் போரில் ஏவுகணைகளாக்கி - சிறு சிறு வெளியீடுகளாக்கி நாடெலாம் - வீடெ லாம் நாளும் பரப்பி, ஒப்பற்ற பகுத்தறிவுப் பிரச்சார அறப்போர்க் களத்தை அறிவுப் போர்க் களமாக்கி, ஓர் ஆயுதம் ஏந்தா காகிதம் மட்டுமே கருத்துக் கட்டுரைகளை உள்ளடக்கியதாக்கி, ஒரு புதுத் திருப்பத்தை உருவாக்கினார்கள்.

இதுவரை உலகம் கண்டிராதது;

கேட்டிராதது

எத்தனை வெளியீடுகள்!

தனது ஒப்பற்ற சுய சிந்தனையில் பூத்த மலர்களும், காய்த்த கனிகளும் மட்டுமல் லாமல், உலகம் முழுவதும் இருந்த ஒப்பற்ற பகுத்தறிவாளர்களின் உயர் சிந்தனைகளை மொழியாக்கம் செய்தும், பகுத்தறிவு உலகத் தையே தமிழ்நாட்டின் மக்கள்தம் சிந்த னைக்கு மருந்தாகவும், அரிய விருந்தாகவும் படைத்த பெருமைக்குரிய இயக்கம் சுயமரி யாதை இயக்கமும், அதன் ஒப்பாரும், மிக்காருமிலாத் தலைவர் பெரியாரும் ஆவார்!

எப்படி பாமர மக்கள் - எளிய மக்கள் மத்தியிலும் அக்கொள்கைகளைக் கொண்டு சேர்ப்பது என்பதற்கான அய்யா பெரியார் அவர்கள் கையாண்ட பாணி, இதுவரை உலகம் கண்டிராதது; கேட்டி ராதது.

தொய்வின்றி நடக்கும்

பரப்புரை பணி

புத்தகங்களைத் தானே அச்சிட்டு வெளியிட்டதோடு, அதைப் படித்துத் தெளிய - படிப்பறிவையும் வற்புறுத்தி, உயர் ஜாதியின் ஏகபோக தனி உடைமையான கல்வியை (மனுதர்மத் தாக்கத்தால்) பொது வாக்கி, கற்றோரின் எண்ணிக்கையை உயர்த்திட, நாளும் போராடி; மறுபுறம் அம்மக்களுக்குக் கற்றலின் கேட்டலே நன்று - நல்வாய்ப்பு என்பதையும் உணர்த் திடும் வகையில், மாலை நேரங்களில் மணிக்கணக்கில் பேசிய பொதுக்கூட்டங் களையே வகுப்பறைகளாக்கியதோடு,  அவ்வகுப்பறைகளுக்குப் பாட நூல் இதோ என்று மலிவு விலையில், அந்நூல்களை அறிமுகப்படுத்துவதையே தனது உரையின் ‘பால காண்டமாக்கிய' தலைவரும், அந்த மூட்டையைச் சுமந்து சென்று, மக்களி டையே பரப்பிய அன்னை ஈ.வெ.ரா.மணி யம்மையார் போன்ற அருந்தொண்டர்களும் படைத்த வரலாறு ஓர் புதுமையான சாதனை அல்லவா?

இன்றும் அப்பணி நமக்குத் தொடர் பணியாக - இல்லை இல்லை தொண்டாகவே தொய்வின்றி நடக்கும் பரப்புரை பணியாக அல்லவா இருக்கிறது?

உலகில் எந்த நாட்டில் - எந்த இயக்கத்தில் இப்படி நடந்துள்ளது?

திருமண நிகழ்வுகள் ஆனாலும், நீத்தார் நினைவு படத்திறப்புகள் போன்றவைகளா னாலும் பருவம் பாராது பரப்பிடும் பணி அன்றோ நம் பெரும்பணி!

பல பதிப்பகத்தாரும், மக்களும் பயனுறச் செய்யும் ஏற்பாடுகளைச் செய்ய இயலாத நிலை!

இன்று (23.4.2020) உலகப் புத்தக நாள்.

சென்னை பெரியார் திடலில், கடந்த ஆண்டுகளில் செய்ததுபோலவே மலிவாக - 50 விழுக்காடு தள்ளுபடிமூலம் பல பதிப்பகத்தாரும், மக்களும் பயனுறச் செய்ய ஏற்பாடுகளைச் செய்ய இயலாத நிலை - கரோனா தொற்று காரணமாக ஊரடங்கால் - கூட்டம் சேரக்கூடாது என்ற ஆணையால்.

என்றாலும், வயிற்றுக்குச் சோறிடுதல் போல - அறிவுப் பசியைத் தீர்க்க - புத்த கங்களை 50 விழுக்காடு தள்ளுபடியுடன் தரும் திட்டங்களை இவ்வாண்டும் நடத்தி டுவதில் நாம் பின்வாங்கவில்லை.

முன் பதிவு மட்டும் இப்போது!

வாசகர்கள் நேரில் வந்து வாங்க முடியாது.

அதற்காக கீழ்க்காணும் அறிவிப்புப்படி,

100 ரூபாய்க்கான புத்தகத் தொகுப்பு,

200 ரூபாய்க்கான புத்தகத் தொகுப்பு,

300 ரூபாய்க்கான புத்தகத் தொகுப்பு,

400 ரூபாய்க்கான புத்தகத் தொகுப்பு,

500 ரூபாய்க்கான புத்தகத் தொகுப்பு

(4 ஆம் பக்கத்தில் முழு விவரம் காண்க) மற்றும் ஆங்கில நூல்கள் உள்பட தனி ஆர்டர்கள் எல்லாம் எவ்வளவு தேவை என்பதை வாட்ஸ்அப் / இணையதளம் மூலம், தேவைப் படுவோர் பதிவு செய்து கொள்ள உடனே முன்வாருங்கள்.

முன் பதிவிடுபவர்களுக்கு முன்னுரிமை அளித்து, ஊரடங்கு முடிந்த பின்னர் (குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து) உங்களிடம் பணம் பெற்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.

நமது இயக்கத் தோழர்கள் மட்டுமல்ல, பகுத்தறிவாளர்கள் மற்றும் நமது ஆதர வாளர்கள், புத்தக நேயர்கள் ஆகிய பலரும் வாட்ஸ்அப் / இணையதளத்தில் இன்று (ஏப்ரல் 23) முதல் ஏப்ரல் 30 வரை பதிவு செய்துகொள்ளலாம்.

இப்போது பணம் அனுப்ப வேண்டாம் -

பதிவு மட்டும் செய்யுங்கள்!

கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் தத்தம் நண்பர்கள், உறவினர்கள், அறி முகமுடையோர் பலருக்கும் ஓரிரு புத்த கங்கள் என்று அன்பளிப்பாக வழங்கி, அவர்களைப் படிக்கத் தூண்டலாமே!

புத்தாக்கம் பெறுவோம் - மனிதம் காப்போம்!

புத்தகப் புரட்சியை புது  உத்திகளோடு செய்துவரும் இயக்கம் - நம் இயக்கம்.

ஏராளமான மின் புத்தகங்களும் ஏற்கெ னவே வெளிவந்துள்ளன. புதியன தயா ரிக்கும் பணி தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளது.

இடையில் கரோனா தொற்று நோய் காரணமாக தவக்கம் ஏற்படினும், பிறகு தொடரும்!

புத்தகம் படிப்போம் - பரப்புவோம்!

புத்தாக்கம் பெறுவோம் - மனிதம் காப்போம்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

23.4.2020


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles