பிஜேபி, மக்கள் நலக் கூட்டணி படுதோல்வி!
சென்னை, மே 19- தமிழ் நாடு சட்டப் பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது. தி.மு.க. கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் வாக்குகள் வித்தியாயம் வெறும் 1.6 சதவீதம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையில்தான் பலத்த போட்டி நிலவி உள்ளது. மற்றவர்களை வாக்காளர்கள் பெரிதாக பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
சென்னை தொகுதி களின் வாக்கு எண்ணிக் கையில் தொடக்கம் முதலே திமுக 12 தொகு திகளில் முன் னிலையில் இருந்து வந்துள்ளது. அதிமுக 4 இடங்களில் முன்னிலையில் இருந் துள்ளது.
இறுதியாக திமுக கூட்டணி 101 இடங்களிலும், அதிமுக கூட்டணி 130 இடங்களிலும் முன் னணியில் இருந்துள்ளன.
திமுக கூட்டணியில் திமுக 174, காங்கிரஸ் 41, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 5, மனிதநேய மக்கள் கட்சி 4, புதிய தமிழகம் கட்சி 4, மக்கள் தேமுதிக 3, சமூக சமத்துவ படை 1, தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி 1, பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டன. மக்கள் தேமுதிக, சமூக சமத்துவ படை, தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டனர்.
அதிமுக கூட்டணியில் அதிமுக 227, மனிதநேய ஜனநாயக கட்சி 2, முக்குலத்தோர் புலிப் படை 1, சமத்துவ மக்கள் கட்சி 1, குடியரசுக் கட்சி 1, கொங்கு இளைஞர் பேரவை 1, தமிழ் மாநில முஸ்லிம் லீக் 1 ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டன. கூட்டணி கட் சிகளில் உள்ள 7 வேட் பாளர்களும் அதிமுக சின்னமான இரட்டை இலையில் போட்டியிட்டனர்.
தேமுதிக - ம.ந.கூ. - த.மா.கா. கூட்டணியில் தேமுதிக 104, மதிமுக 29, த.மா.கா. 26, சிபிஅய் 25, சிபிஅய் (எம்) 26, விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 ஆகிய தொகுதி களில் போட்டியிட்டன.
பாஜக கூட்டணியில் பாஜக 163, இந்திய ஜனநாயக கட்சி 45, இ.ம.க.மு.கழகம் 24, கொ.ஜனநாயக கட்சி 2 ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டன.
232 தொகுதிகளிலும் பாமக தனித்துப் போட்டியிட்டது. தேர்தலுக்கு முன்பே 3 வேட்பாளர்கள் கட்சி மாறிவிட்டனர். (இரண்டு பேர் அதிமுக வுக்கும், ஒருவர் திமுக வுக்கும் மாறினார்). பாமக முதல் அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட் டியிட்டு தோல்விய டைந்தார்.
232 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். தனியே போட்டியிட்ட பாமக ஓரிடத்திலும், தனியே போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியும், அதி முகவின் பி அணி என்று பலராலும் வருணிக் கப்பட்ட தேமுதிக, மக்கள்நலக் கூட்டணியினர் ஓரிடத்தில்கூட முன்னிலையில் வரவில்லை.
வாக்கு வித்தியாசம்
இதுவரை வெளியாகி யுள்ள நிலவரப்படி அதிமுகவுக்கு கிடைத் துள்ள வாக்குகள் 41.5 சதவீதமாகும். திமுக அணிக்கு கிடைத்துள்ள வாக்குகள் 39.9 சதவீதம் திமுக- 31% காங்கிரஸ்- 6.5% இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1.1% மனிதநேய மக்கள் கட்சிக- 0.7% புதிய தமிழகம்- 0.5% அதிமுக, திமுக கூட்டணி வாக்கு வித்தியாசம்- 1.6 சதவீதமாகவே உள்ளது. அதேசமயம் 2.2 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றுள்ளது.
தோல்வியடைந்த தமிழக அமைச்சர்
பழனியப்பன், வைத்தியலிங்கம், வளர்மதி, கோகுல இந்திரா, நத்தம் விசுவநாதன், மோகன்.
மதிமுகவிலிருந்து விலகினார் மணிமாறன்
கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ எடுக் கும் முடிவுகள் ஏற்கும்படி இல்லாததால், மதிமுகவி லிருந்து விலகுவதாக அறிவித்து, அக்கட்சியில் இருந்து விலகினார் தென் சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் மணிமாறன்.
13வது முறையாக
வென்ற கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் இதுவரை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றதே இல்லை என்ற சாதனையை தக்க வைத்துள்ளார். திருவாரூர் தொகுதியில் அவர் 2வது முறையாகவும், சட்டசபைத் தேர்தலில் 13வது முறையாகவும் அவர் வெற்றி பெற்றுள்ளார். கலைஞர் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அதில் ஒன்று 12 முறை சட்டசபைத் தேர்தல்களில் தொடர்ந்து வென்றது. தற்போது 13வது முறையாக தேர்தல் களம் கண்டுள்ள கலைஞர் அதிலும் வென்றுள்ளார். 1957ம் ஆண்டு தனது முதல் தேர்தலை குளித்தலையில் சந்தித்தார், அன்று முதல் அதன் பிறகு அவர் சந்தித்த ஒவ்வொரு தேர்தலையும் அவர் வென்று வந்துள்ளார்.
இம்முறை திருவாரூரில் 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.