இந்தியாவின் மானம் கப்பலேறுகிறதோ!
கலிபோர்னியா, மே 24- அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 6,7ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் இந்தியாவில்நிலவும் ஜாதி வேறுபாடுகள்பற்றி இடம் பெற்று இருப்பதை நீக்கிட இந்துத்துவா சக்திகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கான வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடநூல்களில் இந்தியாவில் நிலவும் ஜாதி பாகுபாடு இடம் பெற்றுள்ளது.
ஜாதி நடைமுறை பற்றிய போத னையை சேர்த்திருப்பதும், தெற்காசியா என்பதற்கு பதிலாக இந்தியா என்ற சொல்லை பயன்படுத்துவதுமான ஒரு பாட திட்டத்துக்கு கலிபோர்னியா கல்வி அதிகாரிகள் மே 19 அன்று ஒப்புதல் அளித்துள்ளனர் என்று நியூ யார்க் டைம்ஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கலிபோர்னியா மாகாண பள்ளி பாடதிட்டம் பற்றி பல மாதங்களாக நடைபெற்று வந்த பொது விவாதங்களுக்குப் பிறகு, 200 பொது மக்கள் சாட்சியம் அளித்த மாகாண கல்விக் கழக பாடபோதனைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
‘தி வையர்’ ஏடு அம்பலப்படுத்தியது
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணப் பள்ளிகளின் 6 மற்றும் 7 ஆவது வகுப்பு வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடநூல்களை மாற்றி எழுதுவதற்காக, இந்துத்துவ சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி ஏப்ரல் மாதத்தில் தி வையர் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்க இந்து பவுன்டேஷன், மதக் கல்விக்கான ஒபராய் பவுன்டேஷன் மற்றும் நாகரிக தர்ம பவுன்டேஷன் ஆகியவை மேற்கொண்ட ஒரு பிரச்சார இயக்கத்தில், இந்தியாவில் ஜாதிபாகுபாடு காட்டப்படுவது பற்றிய நீண்ட வர லாற்றை மாற்றி எழுதுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு கலிபோர்னியா அம்பேத்கர் சங்கம் உள்ளிட்ட எண்ணற்ற மதச்சார்பற்ற குழுக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
சலோனில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார இயக்கத்தைப் பற்றி ஈஷா பண்டிட் கூறுகிறார்.
இந்து இந்தியா என்பதற்குப் பதிலாக தெற்காசியாவாம்
6 மற்றும் 7 ஆவது வகுப்புகளுக்கான வரலாற்று பாடநூல்களில் 30 இடங்களில் இடம் பெற்றுள்ள இந்து மற்றும் இந்தியா என்ற சொற்களுக்கு பதிலாக தெற்காசியா என்ற சொல்லை மாற்றியமைப்பதற்காக அமெரிக்க நாடு முழுவதிலும் இத்தகைய பிற்போக்கு எண்ணம் கொண்ட இந்து குழுக்களால் மேற்கொள்ளப்பட்டதுதான் இந்த பிரச்சார இயக்கம் ஜாதி நடைமுறையின் பெயரால் நீண்ட காலமாகவே இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளைப் பற்றியும், இந்தியாவில் நிலவும் ஆணாதிக்கம் மற்றும் மதசகிப்புத் தன்மையின்மை ஆகியவை பற்றியும் உள்ள குறிப்புகளை பாடநூல்களில் இருந்து நீக்கச் செய்வதுவே அவர்களது இயக்கத்தின் நோக்கமாக இருந்தது. வரலாற்றைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான அவர்களது முயற்சியே இது. இதில் வெற்றி பெற்ற வர்கள், தங்கள் நாட்டைப் பற்றி இந்து மதத்தை மய்யமாகக் கொண்ட உயர் சிறப்பு தோற்றத்தைக் காட்ட விரும்பிய உயர்ஜாதி இந்துக்கள்தான்.
பிரச்சாரம் தோல்வி
மே 19 அன்று பாடதிட்டக்குழு மேற் கொண்ட முடிவுடன், பாடநூல்களில் இருந்து ஜாதி நடைமுறையைப் பற்றிய தகவல்களை நீக்கவேண்டும் என்ற பிரச்சார இயக்கம் தோல்வி அடைந்துவிட்டது.
பாடதிட்டம் ஜாதி நடைமுறையைப் பற்றி மிகைப்பட்ட வழியில் எடுத்துக் காட்டுவதால், உயர்குடி பிறப்பாளர்களால் மாணவர்களுக்கு துன்பங்கள் இழைக் கப்பட வழி ஏற்படுகிறது என்ற வாதத்தை சில இந்து ஆதரவாளர்கள் முன்வைக்கும்போது, ஜாதி நடைமுறையினால் திட்டமிடப்பட்ட முறையில் இழைக்கப்பட்ட அடக்குமுறைகளைப் பற்றிய செய்திகளை மறைப்பது, மாணவர்களைப் பாதுகாக்க எந்த வழியிலும் உதவி செய்யாது என்பதுடன், இந்தியாவைப் பற்றிய ஒரு தவறான தோற்றத்தை எடுத்துக் காட்டுவதாகவும் அது இருக்கும் என்று தலித் வலதுசாரியினர் கூறுகின்றனர்.
“அடக்குமுறை நிலவும் இடத் தில் ஒருவர் தனக்குள்ளாகவே தன் னாட்சி செய்து கொள்வதற்கான வழி யேதுமில்லை” என்று வலதுசாரி தலித் ஆர்வலர் தேன்மொழி சவுந்தரராஜன் கூறுவதாக நியூயார்க் டைம்சின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
“நியாயத்துக்கும், சட்டத்துக்கும் புறம்பான முறையில் எத்தகைய பண்பாட்டு விளக்கத்தையும் அளிப்பதைத் தவிர்க்கவே நாங்கள் முயல்கிறோம், இந்தப் பகுதியின் பல்வேறுபட்ட தன்மைகளைப் பற்றி 6 மற்றும் 7 ஆவது வகுப்பு மாணவர்களுக்குத் தெரிவிக்கவே நாங்கள் முயல்கிறோம். இத்தகைய சமூகங்கள் அளிக்கும் பலத்த பங்களிப்பைப் பற்றி தெரிவிக்க நாங்கள் முயல்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு பொருத்தமான முடிவை மேற்கொண்டதாகவே நாங்கள் கருதுகிறோம்“ என்று பாட திட்டக்குழுவின் தலைவரான பில்ஹோ னிக் கூறுகிறார்.
தகவல்: டாக்டர் சோம இளங்கோவன்