‘குளிப்பதற்கும் பாதுகாப்பற்றது' கங்கை நீர் என்று
மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாகக் கூறிவிட்டதே!
இதற்குப் பின்னும் கங்கையைச் சுத்தப்படுத்த மக்கள் பணத்தை மத்திய அரசு
கோடிக் கோடியாக கொட்டி அழலாமா?
‘பக்தி வந்தால் புத்தி போகும்' என்ற தந்தை பெரியாரின் கூற்று உண்மைதானே!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிவியல் அறிக்கை
குளிப்பதற்கும்பாதுகாப்பற்றதுஎன்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறுதியிட்டுக் கூறியபின்னரும்புராணமூடத்தனத்தின் அடிப்படையில்,கங்கையைத்தூய்மைப் படுத்தப்போவதாகக்கூறி கோடிக்கணக் கில் மக்கள் பணத்தைமத்தியஅரசுகொட்டி யழலாமா என்ற வினாவைத் தொடுத்துள் ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி பதவியேற்று, மூன்றாண் டுகள் ஆகின்றன. பிரதமரின் நாடாளுமன்றத் தொகுதி ‘புனித கங்கை’ ஓடும் வாரணாசி தொகுதியாகும்.
அதன் முக்கியத்துவமே காசி - கங்கை தான்! ‘பாவங்களை ... கரைக்கும் புனித கங் கையை, சுத்தப்படுத்துவதே’ தனது அரசின் முன்னுரிமைப் பணி என்று கூறி, அதற்கென ஒரு தனி அமைச்சரையே - செல்வி உமாபாரதி அமர்த்தப்பட்டுள்ளார் - (நீர் வளத்துறை) இரண்டு ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை - கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணியின் வெற்றியைக் காட்டுவோம் என்றார்!
ஏற்கெனவே, Ganga Action Plan (GAP) என்ற ‘கங்கை செயலாற்றும் திட்டம்‘ என்ற திட்டத்திற்குக் கடந்த 30 ஆண்டுகளில் 1800 கோடி ரூபாய் முந்தைய பா.ஜ.க., அய்க்கிய முன்னணி ஆட்சிகளின்போதே கூட செலவழிக் கப்பட்டும் பயன் ஏற்படவில்லை.
அன்று பிரான்சு எதிர்ப்பு
பிரான்சின் தலைநகர் பாரீசில் உள்ள செயின் (Seine) நதியில், இந்தியா - பிரெஞ்சு கலாச்சார உறவினைப் பலப்படுத்தும் அடையாளமாக, இந்தியாவின் கங்கை நதிநீரை அந்த நதியில் ஊற்றும் ஒரு முயற்சியை அறிவித்தபோது, (இந்திய கலாச்சார அமைப்பு - மத்திய அரசு - இராஜீவ் அப்போது பிரதமர்) பிரெஞ்சு மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ‘‘கங்கை தூய்மையற்ற மாசுபட்ட நீர் உடைய நதி, அதனை ‘செயின்’ (ஷிமீவீஸீமீ) நதியில் கொண்டு வந்து கலக்கவிட்டால், தொற்றுநோய் பரவக்கூடும்‘’ என்று கூறி, அதனை நிறுத்தி விட்டனர்; அதன் பிறகே கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டம் வேகப்படுத்தப்பட்டது; என்றாலும், பயனில்லை.
பிரதமர் மோடி அத்தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், தனது ஹிந்துத்துவா கொள் கைக்கும், அந்த நதிகளைக் கடவுளாக்கிப் பார்க்கும் ‘தெய்வீகப் பிரச்சாரத்திற்கும்‘ உதவும் என்பதால், சுற்றுச்சூழல் - மாசுபடுதலை நீக்கி தூய்மைத் திட்டத்தில் வெற்றி கண்ட சாதனையைக் காட்டிட விழைந்து, மோடி அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கி அப்பணியை மேற்கொண்டு மூன்றாண்டுகளில் கண்ட பலன் என்ன?
‘’குளிப்பதற்கும் பாதுகாப்பற்றது கங்கை!’’
இதோ இன்றைய ‘தினமலர்’ ஏட்டில் 12 ஆம் பக்கத்தில் உள்ள செய்தியை அப்படியே தருகிறோம் படியுங்கள்!
‘‘குளிப்பதற்கும் பாதுகாப்பற்றது கங்கை நீர்’’
மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
டேராடூன், மே 19 ‘ஹரித்துவாரில் ஓடும் கங்கை நதி, குளிப்பதற்கு கூட லாயக் கில்லாத அளவு மாசடைந்து உள்ளது’ என, தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தேவப் பிரயாகையில் உற்பத்தியாகும் கங்கை நதி, ஹரித்துவார் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக ஓடுகிறது.கங்கையில் குளித்தால்பாவங்கள் அகலும் என்பதால், லட்சக் கணக்கானோர், கங்கையில்புனித நீராடுகின்றனர்.
ஹரித்துவார்மாவட்டத்தில்,தொழிற் சாலைகள் மற்றும் சுற்றுலா பயணி யரின்வருகை அதிகரித்துள்ளது.முறையானகழிவுநீர்சுத்திகரிப்புநிலை யங்கள் அமைக்கப்படாததால், தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு, கங்கையில் கலக்கி றது. இதனால், கங்கைநதி மாசடைந்துஉள்ளது.
இந்நிலையில்,தகவல்அறியும்உரி மைசட்டத்தின்கீழ்,கங்கைநதிநீரின் மாசுத் தன்மை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அளித்துள்ள பதில்:
உத்தரகண்டில், கங்கோத்ரி முதல், ஹரித்துவார் வரை, 11 இடங்களில் கங்கை நதிநீர் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. தண்ணீரின் வெப்ப நிலை,
ஆக்சிஜனின் அளவு மற்றும் பாக் டீரியாக்கள் ஆகியவற்றை வைத்து, சோதனை நடத்தப்பட்டது. இதில், கங்கை நதிநீர், குடிப்பதற்கும், குளிப்ப தற்கும் பாதுகாப்பற்றது என்பது தெரிய வந்துள்ளது.’’
- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது!
(‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏடும் இன்று தலையங்கமே தீட்டியுள்ளது இதுபற்றி!).
இதில் மிதக்கும் பிணங்களும், மற்ற கழிவு நீரும் ஏராளம். இதனைப் புனிதம் என்று கூறுவதைவிட இமாலயப் புரட்டு, வெட்கக்கேடு வேறு ஏதாவது உண்டா?
இதற்குப் பிறகும் கோடிக் கோடியாக மக்கள் பணத்தை கங்கையைப் புனிதப்படுத்த கொட்டியழலாமா?
‘‘புனித கங்கா ஜலம்‘’ - கோவில் கும்பாபி ஷேகம் முதல் வீட்டு சடங்குகள்வரை - பார்ப்பனர் ‘கங்கா ஜலம்‘ என்று கூறுவது; தீபாவளி நேரத்தில் ‘கங்கா ஸ்நானம் ஆச்சோ’ என்று அர்த்தமில்லாமல் கேட்பது பக்தி வியாபாரத்திற்கு மூலப்பொருள்; மற்றபடி வெட்கக்கேடான விஷயங்கள் அல்லவா?
இம்மாதிரிப் புராணப் புளுகளுக்கு தெய் வீகத்தை எப்படி பரப்பி மூடநம்பிக்கையை, பக்தி போதை மாத்திரைகளால் பரப்புகின்றனர். இன்றும் அந்தப் புராணங்கள் எல்லாம் ஏதோ விஞ்ஞான உண்மைகள்போல ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்ற சில மூடநம்பிக்கை முகவர்கள் செய்து வருவது எவ்வளவு கேலிக்கூத்து! ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன!
பரமசிவன் தலையில் கங்கை இருக்கிறாள் என்று நதியைப் பெண்ணாக உருவகப்படுத்திக் கூறி, தொடர் பிரச்சாரத்தைச் செய்து வருகின் றனர் - இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் செவ்வாய்க் கோளில் இடம் தேடும் காலத்திலும்!
கங்கையைப்பற்றி
புராண அளப்புகள்!
‘‘கங்கா மகாத்மியம்‘’ என்ற தலைப்பில் ‘அபிதான சிந்தாமணி’ பக்கம் 379 இல் - புராணங்கள் கூறுகிறபடி -
‘‘இது பூமிக்கு மத்தியில் செல்வதால் பூமியைச் சுத்தப்படுவது. ஆயிரம் சந்திராயண விரதஞ்செய்த பலன் இதனிடம் உள்ள ஜலத்தைப் பானஞ் செய்வதற்கு உண்டாம். ஒரு மாதம் கங்கா தீரத்தில் ஒருவன் வசிப்பானேல் அவன் சர்வயஞ்ஞபலத்தையும் அடைவான். இதில் எவ்வளவு காலம் ஒருவனுடைய அஸ்தி விழுந்து கிடக்கிறதோ அவ்வளவு காலம் அவன் சுவர்க்கத்தில் இருப்பன். இதில் உள்ள மண் சோகம் முதலியவற்றை நீக்கும். இதை தரிசனஞ்செய்வதாலும், பரிசிப்பதாலும், பானஞ் செய்வதாலும் எல்லாப் பாவங்களும் நீங்கும்.’’
- இதுதான் புராண அளப்பு!
எப்படிப்பட்ட புரட்டு பார்த்தீர்களா?
விவசாயிகள் தற்கொலைப்பற்றி சிறிதும் கவலைப்படாது, கடன் தள்ளுபடிபற்றி யோசிக்காது, இந்த நதியைத் தூய்மைப்படுத்த 20 ஆயிரம் கோடி ரூபாய், இன்னும் இது எத்தனை ஆயிரம் கோடி விழுங்குமோ! எத்தனை லட்சம் கோடி ரூபாய் செலவழித்தாலும் இவர்களால் சாதிக்க முடியுமா? என்றால், முடியாது.
ஓராண்டுக்கு முன்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகளே இந்தக் கேள்வியைக் கேட்டனர், அதன்பிறகுமா இந்தக் கூத்துகள்?
‘‘பக்தி வந்தால் புத்தி போகும்!’’
பெரியார் கூற்று உண்மைதானே!
‘‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்‘’ என்ற தந்தை பெரியாரின் அறிவுரைக்குத்தான் எத்தனை மதிப்புப் பார்த்தீர்களா?
மூடத்தனத்தினை இப்படி ‘‘புனித கங்கை’’ - ‘புனிதப் பசு’ என்று பரப்பி, மனிதர்கள் வாழ்வை - வறுமையும், நோயும் வாட்டும் வாழ்வாக உருக்குலைக்கும் வகையில் - தற்கொலைகள் பரவும் கொடுமையை வளர விடலாமா?
இதுதான் நமது புராதன பாரதக் கலாச்சார பெருமை என்று அறிந்தால், பகுத்தறிவுள்ள எவர் ஒப்புவர்?
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
19.5.2017