மத்திய அரசு தேர்வாணையத்தில் குளறுபடிகள்!
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களிடையே பாரபட்சம் குறித்து விசாரணை தேவை
அகில பாரதிய தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முசுலீம் மகா சங்கம் கோரிக்கை
புதுடில்லி, ஜுன் 5 மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணை யத்தின் நேர்முகத்தேர்வுகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாண வர்களிடையே பாரபட்சமான நட வடிக்கைகள் குறித்து புகார் எழுந்துள்ளது.
அகில பாரதிய தாழ்த்தப்பட் டவர்கள் மற்றும் முசுலீம் மகா சங்கம் (The Akhil Bharatiya Dalit and Muslim Mahasangh-ABDMM)
என்கிற அமைப்பின் சார்பில் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின்மீது (UPSC) இந்த ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வின் நேர்முகத் தேர்வில் முறைகேடாக, தாழ்த்தப்பட்ட வர்கள் மற்றும் பழங் குடியினத் தவர்கள் என்கிற பார பட்சத் துடன் நடந்து கொண்டுள்ளதாக புகார் வெளியாகியுள்ளது.
பாரபட்சம்
இந்த ஆண்டில் பொதுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களைவிட, பாரபட்சத் துடன் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் நேர்காணல் தேர்வில், முடக் கும் விதத்தில் குறைவான மதிப் பெண்கள் பெறும்வண்ணம் நேர்காணல் நடத்தியுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியின மாணவர்கள் எழுத்துத் தேர்வில் அதிக அளவில் மதிப் பெண்கள் பெற்றுள்ள நிலையில் நேர்முகத் தேர்வில் மட்டும் அவர்களுக்கு மிகக்குறைந்த அள விலேயே மதிப் பெண்கள் அளிக் கப்பட்டுள்ளன.
சுரேஷ் கனோஜியா
அகில பாரதிய தாழ்த்தப்பட் டவர்கள் மற்றும் முசுலீம் மகா சங்கத்தின் தேசியத் தலைவர் சுரேஷ் கனோஜியா கூறுகை யில், “அய்.ஏ.எஸ். தேர்வு முடி வில் பொதுப் போட்டியாளர் களுக்கு நெருக்கமான மதிப் பெண்களையே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாண வர்கள் பெற்றுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் எழுத்துத் தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்ற நிலையில் நேர்முகத் தேர்வில் 200க்கும் குறைவாகவே மதிப்பெண்கள் பெற முடிந்துள்ளது என்பதை நம்பவே முடியவில்லை.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்புகளைச் சாராத மற்ற மாணவர்கள் எழுத்துத் தேர்வில் குறைவான அளவில் மதிப்பெண்கள் பெற்று, நேர்முகத் தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்றுள்ளார்கள்.
இட ஒதுக்கீட்டால் பயன் பெறுகிற மாணவர்கள் நேர் முகம் கண்டவர்களால் எந்த அளவுக்கு பாரபட்சமாக நடத் தப்பட்டுள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது’’ என்றார்.
விசாரணை தேவை
அகில பாரதிய தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் முசுலீம் மகா சங்கத்தின் தேசியத் தலை வர் சுரேஷ் கனோஜியா இந்தப் பாரபட்சம் குறித்து விசாரணை வேண்டும் என்று மத்திய பணி யாளர் தேர்வாணையத்திடம் கோரியுள்ளார்.