அய்க்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பாகவும், மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்தும் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெற்ற இன்றைய கலந்தாய்வுக் கூட்டத்தில் இடதுசாரிகள் உட்பட, எடுத்துள்ள ஒருமித்த முடிவின்படி, மக்களவை முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், 5 முறை நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவருமான *திருமதி மீராகுமார் அய்.எஃப்.எஸ். அவர்களை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக தேர்வு செய்தது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கதே!
மதச்சார்பற்ற, சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள - தகுதியுள்ள வேட்பாளரை எதிர்க்கட்சி அணியினர் தங்கள் வேட்பாளராக நிறுத்தியுள்ளது மிகவும் "சரியான முடிவு ஆகும்!".
காங்கிரசைப் பொறுத்தவரை இதற்கு முன்பு கே.ஆர்.நாராயணன் அவர்களை குடியரசுத் தலைவராக நிறுத்தி வெற்றி பெற வைத்த ஒரு கட்சி என்பதால், இது ஒரு வாக்கு வங்கிக்கான தேடிப் பிடிக்கப்பட்டுள்ள வேட்பாளர் என்று கருத முடியாது.
மற்றும் *50 விழுக்காடு மக்கள் தொகையாக உள்ள மகளிரின் பிரதிநிதியாகவும்* அவரைப் பார்க்க வேண்டும். அந்தக் கோணத்திலும் வரவேற்கத்தக்கதே!
- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை, 22.06.2017