Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

அமெரிக்காவில் பிரதமர் மோடி அமெரிக்காவிலிருந்து ‘வாஷிங்டன் போஸ்ட்' ஏட்டின் கண்டனத் தலையங்கம்!

$
0
0

 

வாஷிங்டன், ஜூன் 28 சுதந்திரத்திற்குப் பிறகு மீண்டும் அதிகரித்திருக்கும் இஸ்லாமிய வெறுப்பு, சிறு வனைக் கொலை செய்யும் அளவிற்கு வெறிகொண்ட கூட்டத்தை வழிநடத்துவது யார்? என்ற வினாவை எழுப்பியுள்ளது பிரபல ‘‘வாஷிங்டன் போஸ்ட்’’ ஏடு. அதன் தலையங்கம் வருமாறு:

தலைநகர் டில்லிக்கு அருகில் உள்ள பல்லப்கர் நகரத்தைச் சேர்ந்த ஜூனைத் என்ற சிறுவன் டில் லிக்கு வந்து ஈகைத்திருநாளைக் கொண்டாட புத் தாடைகள் மற்றும் திருநாளை அலங்கரிக்கும்வித மாக அலங்காரப் பொருள்களை வாங்கிக் கொண்டு தனது நண்பர்களுடன் மீண்டும் தனது ஊரை நோக்கி ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் ஈகைத் திருநாளில் தனது சகோதரர்களுக்கு கொடுக்க பையில் 1,500 ரூபாய் வைத்திருந்தார்.

அவர் செய்த தவறு என்ன?

ஜுனைத் ஈகை நோன்பிருந்ததால் பாரம்பரிய இஸ்லாமியஆடையும்,தொப்பியும் அணிந்திருந்தார். இதுதான் அவர் செய்த மாபெரும் தவறு.

ரயிலில் ஏறிய சில இளைஞர்கள், ‘‘இதோ இவன் மாட்டிறைச்சி சாப்பிட்டிருக்கிறான், இந்த முல்லா (இஸ்லாமிய மதத்தலைவர் பெயர்) நமது கடவுளை இழிவுபடுத்துகிறான். இவன் பாகிஸ் தானுக்குச் செல்லவேண்டும். இவனுக்கு இங்கே என்ன வேலை’’ என்று கூறி ஜுனைத்தை அடித்து உதைத்து கத்தியால் குத்தி ரயிலில் இருந்து வீசியுள்ளனர். உடன் வந்த ஜுனைத்தின் நண்பர்களுக்கும் அடி உதை கத்திக் குத்து நடந்துள்ளது.

ரயில் நிலைய நடைமேடையில் ஜுனைத்தின் உயிரில்லாத உடலுக்கு அருகில் அமர்ந்திருந்த அவரின் நண்பர்கள் தொலைக்காட்சி ஒன்றுக்குக் கூறியபோது,

‘‘நாங்கள் பேசிக்கொண்டு வந்த போது சிலர் எங்களை எழுந்திருக்கச் சொன்னார்கள். நாங்கள் மறுத்தோம்; உடனே ஒருவன் ஜுனைத்தின் குல் லாயைப் பிடுங்கி எறிந்தான். மற்றொருவன் அவரது தாடியைப் பிடித்து இழுத்தான், வலித் தாங்காமல் ஜுனைத் கத்தவே, அவரது வாயில் குத்தினர்; இதில் அவரது வாயிலிருந்து ரத்தம் வந்தது. நாங்கள் தடுக்கச் செல்லவே அவர்கள் கத்தியை எடுத்து எங்களை மிரட்டினார்கள், மாட்டிறைச்சி சாப்பிட்டு விட்டு ரயிலில் பயணம் செய்கிறீர்களா என்று கூறிக் கொண்டே ஜுனைத்தை கத்தியால் குத்தினார்கள். தடுக்கச் சென்ற எங்களுக்கும் கத்திக்குத்து விழுந்தது’’ என்று அவர்கள் கூறினர்.

ஜுனைத்தின் தந்தை கூறும்போது: ‘‘ஜுனைத் 16 வயது சிறுவன்; அவனுக்கு இறைச்சி சாப்பிடப் பிடிக்காது. நாங்கள் அனைவரும் இறைச்சி சாப்பிடு பவர்கள் தான். ஆனால், அவன் இறைச்சி சாப்பிடு வதை அவ்வளவாக விரும்பமாட்டான். அவன் இன்னும் குழந்தைதான்; ஒரு குழந்தையை அடித்துக் கொல்ல எப்படி மனம் வந்தது. நான் இந்தச் சம்பவம் கேட்டு ரயில் நிலையம் ஓடிச்சென்ற போது எனது மகன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந் தான். இனி எந்த ஒரு தந்தைக்கும் இப்படி ஒரு நிகழ்வு நடக்கக் கூடாது’’ என்று குறிப்பிட்டார்.

ஜுனைத்தின் உடன் சென்ற மற்றொரு இளைஞர் கூறும் போது, ‘‘மூன்று பேர் கத்தியால் ஜுனைத் தையும், என்னையும் குத்தினார்கள். நாங்கள் கதறி னோம்; ஆனால், ரயிலில் கடுமையான கூட்டம் இருந்தும், அனைவரும் வேடிக்கைத்தான் பார்த்தார் கள், ஒருவர்கூட எங்களைக் காப்பற்ற முன்வர வில்லை. எனது சகோதரன் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்தார்; ஆனால், அந்தக் கும்பல் அவரை தள்ளிவிட்டு விட்டது’’ என்று ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்தார்.

சில இஸ்லாமிய இளைஞர்கள் எங்களைக் காப்பாற்ற வரும்போது, ‘‘யாராவது கிட்ட வந்தால் மாட்டிறைச்சி கடத்துகிறீர்கள் என்று கூறி, அடித்தே கொன்றுவிடுவோம்‘’ என்று மிரட்டினார்கள். இத னால் யாரும் எங்கள் அருகில்கூட வரவில்லை.

ஆனால், காவல்துறை, ‘‘இதுபோன்ற கூட்ட மான நேரங்களில் இடம்பிடிப்பது தொடர்பான சண்டைகள் வரத்தான் செய்யும்; இம்முறை கத்திக் குத்தில் முடிந்துவிட்டது’’ என்று சாதாரணமாகக் கூறிவிட்டது. அந்த சிறுவனை மதப் பிரச்சினை தொடர்பாக பேசி, கத்தியால் குத்தினார்களே என்று ஊடகவியலாளர் கேட்டதற்கு, ‘‘ஆமாம், ஒரு சில வார்த்தைகள் வந்து விழத்தான் செய்யும்‘’ என்று காவல்துறையினர் பதில் அளித்தார்கள்.

2014- ஆம் ஆண்டு மே மாதம் பாஜ கட்சி மோடி தலைமையில் ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து விட்டன. 2015-ஆம் ஆண்டு அக்லக் என்ற முதியவர் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை பல பேர் சேர்ந்து குடும்பத்தார் முன்னிலையில் அடித்துக் கொலை செய்தனர்.

பசு ரக்ஷா என்ற பெயரில் பசுப்பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் மாடுகளை அழைத்துச் செல்லும் இஸ்லாமியர்களைத் தொடர்ந்து அடித்தே கொலை செய்து வருகின்றனர். இப்படி கொலை செய்பவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவதற்கு என்றே மத்திய பா.ஜ.க. அரசு  சமீபத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது மாடுகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என்ற சட்டம், அப்படி விற்றால் அது சட்ட விரோத மென்று கூறி கடுமையான தண்டனைக்கு ஆளா வர்கள் என்றும் கூறப்பட்டுவிட்டது. இது பசு ரக்ஷகர்கள் எனப்படும் பசுப் பாதுகாவலர்களுக்கு மேலும் ஊக்கம் தந்தது போல் அமைந்துவிட்டது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது; ஆனால், வழக்கம்போல் எதிர்க்கட்சியினர் தங்கள் தலைகவிழ்ந்து உட்கார்ந்துவிட்டனர். தனிப்பட்ட முறையில் சிலர் இந்த சட்டத்திற்கு எதிராகப் போராடினர். அவர்களும் அரசாங்கத்தால் மிரட்டப்பட்டவுடன் அமைதி காத்துவிட்டனர்.

மோடியின் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு ஆகும். இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீண்டகாலமாகவே இந்தியாவில் இந்துத் துவக் கலாச்சாரத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த அமைப்பின் அரசியல் பிரிவே ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களின் அராஜகம் அதிகரித்துள்ளது. தலித் எனப்படும் தீண்டத்தகாதவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மிகவும் அதிக அளவு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

பிரதமர் மோடி பொதுவான மனிதரா?

மோடி தன்னை ஒரு பொதுவான மனிதராகக் காட்டிக்கொள்ள இந்தத் தாக்குதல்களுக்கும், தங் களுக்கும் தொடர்பில்லை என்று கூறிக்கொண்டு, தன்னை ஒரு பொதுவான மனிதராக காட்டிக்கொள்ள முயல்கிறார். உதாரணமாக, அவர் 2016- ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, ‘‘இப்படி தாக்குதல் நடத்துபவர்கள் சமூக விரோதிகள் என்று கூறினார். அவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார். ஆனால், அந்த பேச்சு ஒரு மேம்போக்கானது என்று தெரியவந்தது. காரணம் அவர் பேசிய மறுநாளே ஆந்திராவில் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற தலித் சிறுவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஈகைத் திருநாள் இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். மாதம் முழுவதும் உண்ணாநோன்பிருக்கும்  இவர்கள், ஈகைத் திருநாள் அன்று மிகவும்  மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விழாவாகவும் இதைக் கொண்டாடுவார்கள். ஈகைத் திருநாள் முடியவிருக்கும் ஒரு நாள் முன்பாகவே இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது. பலியிடுவதென்பது இந்துமதத்திலும் உள்ளது. கடவுளருக்கு மாடு, ஆடு, கோழி, பன்றி உள்ளிட்ட விலங்குகளை இந்து கடவுள்களுக்காக பலிகொடுத்து அதை பங்கிட்டு உண்டு மகிழ்வார்கள்.

1947 இல் நடந்த மதக்கலவரம் மீண்டும்!

இஸ்லாம் இந்தியாவில் இரண்டவது பெரிய மதமாகும். மொத்த மக்கள் தொகையில் 14.2 விழுக்காடு இஸ்லாமியர்கள் இங்கு வாழ்கின்றனர். இந்தியாவில் 1947- ஆம் ஆண்டிற்கு முன்பு இந்து - முஸ்லீம் கலவரம் பெரிதாக நடந்தது. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதேபோல் ஒரு சூழ்நிலை இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக் கிறது.

இரண்டு நாள்களுக்கு முன்பு ஜம்முவில் உள்ள ஜமியா மசூதியின் முன்பாக ஒரு காவல் துறை அதிகாரியை 40 பேருக்கும் மேற்பட்டோர் அடங்கிய கூட்டம் அடித்துக் கொலை செய்தது. இந்தச் சம்ப வம் குறித்த உண்மையான தகவல்கள் இன்னும் வரவில்லை.

ஜுனைத்தின் அன்னை சாயிரா பேசும்போது, ‘‘முதல் நாள் இரவு வரவேண்டிய மகன் ஏன் இன் னும் வரவில்லை என்று அனைவரிடமும் கேட் டேன்; ஆனால், யாரும் ஒன்றும் பதில் சொல் லாமல் இருந்தனர். மறுநாள் காலை எனது மகனின் பிணத்தைத் தான் கண்ணில் காட்டி னார்கள். அவன் கொல்லப்பட்டுவிட்டான் என்பதை இரவு முழு வதும் என்னிடம் சொல்லாமல் ஏமாற்றிவிட்டனர்’’ என்று கண்ணீர் விட்டுக் கதறினார்.

‘‘நான் இனி ஈத் விழாவைக் கொண்டாடமாட் டேன்; எனது மகன் இஸ்லாமிய மத போதனை குருவாக (ஹஃபிஸ்) வரவேண்டும் என்று என் னிடம் அடிக்கடி தெரிவிப்பான்; அதற்கேற்றாற் போல் குரானின்படி நடப்பான். பொய் பேச மாட்டான். எந்த தீயபழக்கமும் கிடையாது. யார் மீதும் கோபப்படமாட்டான். ஆனால், அவன் கொல் லப்பட்டு விட்டான் என்பதை என்னால் இன்றுவரை நம்பமுடியவில்லை. ஏன் அவனைக் கொன்றார்கள் என்று நான் யாரிடம் கேட்க?’’ என்று செய்தி யாளர்களைப் பார்த்து கதறிக்கொண்டிருந்தார்.

மோடி ஆட்சிக்கு வந்தது முதல் சிறுபான் மையினர் குறிப்பாக இஸ்லாமியர்கள் தொடர்ந்து மதவெறிக் கும்பல்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்ப்டுகின்றனர். 2015- ஆம் ஆண்டு மாட்டி றைச்சி வதந்தி தொடர்பாகக் கொலை செய்யப்ப்ட்ட அக்லாக் முதல் கடந்த வெள்ளியன்று கொலை செய்யப்பட்ட ஜுனைத் வரை இஸ்லாமிய வெறுப் புப் பிரச்சாரத்தின் வெளிப்பாடே, தற்போதுள்ள மத்திய அமைச் சர்கள் நேரடியாகவே இஸ்லாமி யர்களைத் தாக் கிப் பேசியுள்ளனர். ஒரு படிமேலே போய் தற் போதைய உபி முதல்வரும் சாமியாருமான ஆதித்யநாத், ஒரு இந்து உயிரிழந்தால் நூறு இஸ்லாமியர்கள் உயிரிழக்கவேண்டும், ஆனால் இங்கே நடப்பது என்ன என்று முசாபர் நகர் கலவரத்தின் போது பேசியுள்ளார். 2015-ஆம் ஆண்டு இந்தியா வந்த அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய பேச்சில் இந்தியா மதச்சார்பின்மை என்னும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது, அந்த பிணைப்பை அறுக்க வேண்டாம் என்று மோடியை அருகில் வைத்தே குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் வாசிங்டன் போஸ்ட் டிரம்ப் மற்றும் மோடி என்ற இரண்டு இஸ்லாமிய எதிர்மன நிலைகள் கொண்டவர்கள் சந்திக்கும் போது வெளியிட்ட இத்தலையங்கம் அமெரிக்க மக்களிடையே இரண்டு தலைவர்களைப்பற்றியும் நன்கு அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles