தந்தை பெரியாரின் தன்மான சீடர் தமிழர் தலைவர் வாழ்க, வாழ்கவே!
ஈரோடு மண் குலுங்க தமிழர் தலைவருக்கு வாழ்த்துகள்!!
சாரை சாரையாக தோழர்கள், பிரமுகர்கள் நேரில் வாழ்த்துகள், நன்கொடை அளிப்பு
ஈரோடு, டிச.2 இன்று (2.12.2017) காலை ஏற்காடு எக்ஸ்பிரஸ்மூலம் ஈரோடு வந்த தமிழர் தலைவருக்கு தாரைதப்பட்டை முழங்க எழுச்சியாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கழகத் தோழர்கள் புடைசூழ பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் பயனாடை அணிவித்து வரவேற்றார்.
மங்கள மகாலில் தமிழர் தலைவர்
காலை 9 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஈரோடு மங்கள மகாலுக்கு வருகை தந்தார். ஆயிரக்கணக்கான கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டிருந்தார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைக் கண்டதும் உற்சாக மிகுதியில் தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! முழக்கங்களுடன் வரவேற்றார்கள்.
மேடைக்கு வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிறந்தநாள் கேக்கை வெட்டினார். அப்போது கழகத் தோழர் களின் வாழ்த்தொலிகளால் அரங்கமே அதிர்ந்தது. பொத்தனூர் க.சண்முகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கழகத் தலைவர் அவர்களின் வாழ்விணையர் மோகனா அம்மையார் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கேக்கை ஊட்டினார். பின்னர் பிறந்த நாள் வாழ்த்து கூறி அவர்கள் அனைவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கேக்கை ஊட்டினார்கள்.
அதன்பின்னர், வரிசை வரிசையாக இரண்டு மணி நேரம் தோழர்கள் மேடைக்கு வந்து தமிழர் தலைவருக்கு வாழ்த்துக்களைக் கூறி நன்கொடைகளை வாரி வழங்கினர். சால்வைகள் அணிவித்து, பழங்களைக் குவித்து, சந்தாக்களை வழங்கினர்.
இரண்டு மணிநேரமும் தமிழர் தலைவர் நின்றபடியே அனைவரின் வாழ்த்துகளையும் பெற்று, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழர் தலைவர் ஆசிரியர்அவர்களை சந்தித்தபோது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றியெல்லாம் விசாரித்தார்.
எழுந்து நின்று கரவொலியுடன் வாழ்த்து முழக்கங்கள்!
வாழ்த்து நிகழ்ச்சி நிறைவடைந்தபோது, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஒரு முக்கிய அறிவிப்பைக் கொடுத்தார்.
கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டி ருக்கின்றனர். நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள், இங்கு கூடியிருந்த மக்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இன உணர்வாளர்கள், பகுத்தறிவாளர்கள், மனித உரிமையாளர்கள், சமதர்ம, சமத்துவ முற்போக்கு எண்ணம் கொண்டவர்களின்
எண்ணமெல்லாம் ஈரோட்டு மண்ணை இந்த நாளில் நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் நேரம் இது. அவர்களின் அனைவரின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். அதனால் தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி, தலைவருக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும் என்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கேட்டுக் கொண்டார். அனைவரும் எழுந்து பலத்த கரவொலிகளுடன் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றனின் உரத்த முழக்கத்தை தொடர்ந்து அரங்கத்திலிருந்த பெருமக்கள் முழக்கமிட்டனர்.
தந்தை பெரியார் வாழ்க!
அன்னை மணியம்மையார் வாழ்க!!
தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி வாழ்க!!
பணிமுடிப்போம், பணிமுடிப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
தந்தை பெரியார் பணி முடிப்போம்!
வாழ்க வாழ்க வாழ்கவே தமிழர் தலைவர் வாழ்கவே!!
நூறாண்டுகளும் கடந்து வாழ்கவே!!!
என்று அனைவரும் வாழ்த்தொலி முழங்கினர்.
பின்னர், புதிய நூல்களை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகப்படுத்தினார்.
கருத்தரங்கம் தொடங்குமுன்பாக ஈரோடு இராவணன், எழிலன் பெரியார் பிஞ்சுகள் *நறுக்குகள்Õ என்ற ஓரங்க உரையாடல் நிக்ழச்சி இடம் பெற்றது. தொடர்ந்து கருத்தரங்கம் தொடங்கியது.
*திராவிடர் இனம் தலைநிமிரÕ எனும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
*சமஸ்கிருத, இந்தி திணிப்பை எதிர்ப்போம்Õ எனும் தலைப்பில் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, *தமிழக உரிமைகளை மீட்போம்Õ எனும் தலைப்பில் தலைமைக் கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன், *பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்போம்Õ எனும் தலைப்பில் தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், *பெண்ணுரிமை காப்போம்Õ எனும் தலைப்பில் மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் உரையாற்றினர்.
ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் மா.மணிமாறன் நன்றி கூறினார்.
தொலைப்பேசி மூலம் வாழ்த்துகள்
திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் மேனாள் ஆ.இராசா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தொலைப்பேசிமூலமாக தெரிவித்துள்ளார்கள்.
நேரில் வாழ்த்து
மேனாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு முத்துசாமி, திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் நாகை மேகநாதன், திமுக மேனாள் எம்.பி. சண்முகசுந்தரம், மதமுக பொருளாளர் ஈரோடு கணேசமூர்த்தி, உரத்தநாடு மேனாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயபால் அமெரிக்காவில் உள் தன் மகன் கமலக்கண்ணன் ரூ.25 ஆயிரம் தொகை நன்கொடை தமிழர் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்டது.
கோவை கு.இராமகிருஷ்ணன் நேரில் வாழ்த்து
கோவை கு.இராமகிருஷ்ணன் தோழர்களுடன் தலைவரை சந்தித்து சால்வை அணிவித்து விடுதலை சந்தாக்களையும் அளித்தார்.
அவரைப்பற்றி செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த கருத்து: திராவிட இயக்கம் பலகீனப்பட்டது என்று யாரும் கருத வேண்டாம். நீரடித்து நீர் விலகாது. கத்தரிக்கோலில் இரண்டு பிளேடுகள் இருக்கும். இதில் யாராவது வாலாட்ட நினைத்தால் அவர்கள் வால்கள் நறுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தந்தை பெரியாரைவிட, நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தோழர் இராமகிருஷ்ணன் சொன்னபோது, எவ்வளவு காலத்திற்கு வாழவேண்டும் என்பதைவிட, தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை விரைந்து முடிப்பதுதான் முக்கியம் என்று கூறினார்.
முப்பெரும் விழாவில் பங்கேற்க ஈரோட்டுக்கு வருகை தந்த
தமிழர் தலைவருக்கு பறை இசை முழங்க உற்சாக, ஆரவார வரவேற்பு!
ஈரோடு,டிச.2 -முப்பெரும் விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க ஈரோட்டுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பறை இசை முழங்க உற்சாக, ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர்,தமிழர் தலைவர்,விடுதலை நாளேட்டின் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா, “விடுதலை” சந்தா வழங்கும் விழா, ஜாதி ஒழிப்பு (சட்ட எரிப்பு)போராட்டத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு-நினைவு நிகழ்வு ஆகிய வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கிய முப்பெரும் விழா ஈரோடு மண்டல திராவிடர் கழகம் சார்பில் “பகுத்தறிவு பகலவன்” தந்தை பெரியார் பிறந்த ஊரான ஈரோடு மாநகரில் இன்று (2.12.2017) கோலாகலமாக நடைபெறுகிறது.
இவ்விழா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சரியாக 7.37 மணியளவில் சென்னையிலிருந்து ஈரோடு தொடர்வண்டி நிலையத்தில் தன்னுடைய இணையர் மோகனா அவர்களுடன் வந்திறங்கிய தமிழர் தலைவரை ஈரோடு மண்டல திராவிடர் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் நூல்கள் வழங்கியும், பறை இசை முழங்க பயனாடைகள் அணிவித்தும் உற்சாகமாக, ஆரவாரத்தோடு வரவேற்றனர்.
இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், பேராசிரியர் ப.காளிமுத்து, மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி, கடலூர் மண்டலமகளிர் பாசறை செயலாளர் ரமாபிரபா, பெரியார் விளையாட்டுக் கழக தலைவர் ப.சுப்பிரமணியம், மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், என்னாரெசு பிராட்லா, மாநில பக ஆசிரியரணி அமைப்பாளர் ரமேஷ், ஈரோடு மண்டல தலைவர் ப.பிரகலாதன், கோவை மண்டலத் தலைவர் கருணாகரன், மாவட்டத் தலைவர் இரா.நற்குணன், செயலாளர் கு.சிற்றரசு, கழக பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன், விஜயராணி பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் செ.பிரகாசன், துணைச் செயலாளர் மா.மணிமாறன், ஈரோடு மாநகரச் செயலாளர் தேவராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ், கோபி கழக மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன், மண்டல இளைஞரணிச் செயலாளர் ஜெபராஜ் செல்லத்துரை,கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் வெள்ளகோவில் ச.மணிகண்டன், மாவட்ட மாணவரணி தலைவர் பெ.மதிவாணன், பெரியார் படிப்பக புரவலர் பி.என்.எம். நடேசன்,பெரியார் படிப்பக வாசகர் வட்டத் தலைவர் பி.என்.எம்.பெரியசாமி,மாலதி பெரியசாமி மற்றும் தாம்பரம், தஞ்சை, திருச்சி, திருவாரூர், காரைக்குடி, கிருஷ்ணகிரி, கோபி, மதுரை கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.