Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

பாதிப்பில்கூட வட நாடு - தென்னாடு என்ற பேதமா?

$
0
0

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தமிழர் தலைவர் ஆறுதல்

‘‘தேசியப் பேரிடராக'' மத்திய அரசு அறிவிக்கவேண்டும்

பாதிப்பில்கூட  வட நாடு - தென்னாடு என்ற பேதமா?

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

நாகர்கோவில், டிச.8 ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசி ரியர் கி.வீரமணி அவர்கள், நேற்றும், இன்றும் பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தப் பாதிப்பை ‘‘தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவேண்டும்‘’ என்றும் வலியுறுத்தினார்.

மழைவெள்ளத்தால்பாதிக்கப்பட்டமக்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று (8.12.2017) நாகர்கோவி லுக்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

தாய்மார்களை

வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது

இதுவரை குமரி மாவட்டம் சுனாமிக்கு அடுத்தபடி யாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஒரு சூழல் இந்த ஒக்கி புயலால் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இயற்கையின் சீற்றத்தில், மிகப்பெரிய துன்பமும், துயரமும் தரக்கூடியது, ஏராளமான மரங்கள் விழுந்தன என்பதெல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும், பல்லா யிரக்கணக்கில்இருக்கக்கூடியமீனவர்களுடையகுடும் பங்கள் நிலைகுலைந்து இருக்கக்கூடிய அளவிற்கு  அந்த மீனவ சகோதரர்கள் பலர் இன்னமும் தேடப் படக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். மீன்பிடிக்கச் சென்றவர்கள், மீண்டார்களா? அல்லது உயிரோடு இருக்கிறார்களா? என்கிற சந்தேகமும், துன்பமும், துயரமும் அந்தத் தாய்மார்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.

மத்திய- மாநில அரசுகள் மாறி மாறி கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன

குறிப்பாக சொல்லவேண்டுமானால், தமிழக அரசு, இதுவரையில் இரண்டு மீனவர்கள்தான் மரணமடைந்து இருக்கிறார்கள் என்று கொடுத்த புள்ளிவிவரம் சரி யில்லை. இதில், மத்திய- மாநில அரசுகள் மாறி மாறி கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழல் இருக்கக்கூடாது.

அதுமட்டுமல்ல, முதலமைச்சர் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஓரளவுக்கு நிதியை அறிவித்திருக்கிறார் என் றாலும், அது வழக்கமாக அறிவிக்கக்கூடிய ஒரு நிதி நிவாரணம்தான். ஆனால், நிதியைவிட, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவேண்டும். மும்பை போன்ற கடற்கரை பகுதியில் ஒதுங்கிய மீனவர்கள் தமிழகம் திரும்புவதற்கு வசதிகள் இல்லை என்று சில நாள்களுக்குமுன் செய்திகள் வெளியாயின.

300, 400 பேர் மலை கிராமங்களில் மீட்கப்படவேண்டியவர்களாக இருக்கிறார்கள்

அதேபோல, நேற்றுகூட மிகப்பெரிய அளவிற்கு பல் லாயிரக்கணக்கானோர் ரயில் மறியல் செய்யவேண்டிய அவசியத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது ஒரு பக்கத்தில் இருந்தாலும், நேற்று நாங்கள் புயல் பாதித்த பகுதிகளை பார்த்ததில், மிகப்பெரிய அளவிற்கு வாழைத் தோட்டங்கள் பாதிப்பு; இன்னொரு பக்கத்தில் ரப்பர் மரங்கள் வீழ்த்தப்பட்டிருக்கிற பாதிப்பு. இன்னும் மலை கிராமங்களுக்குச் சென்று, வெளியிலிருந்து வந்து ரப்பர் பால் எடுப்பது, கிளைகளை வெட்டுவது போன்ற பணிகளில்  ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 300, 400 பேர் மலை கிராமங்களில் மீட்கப்படவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

எப்படி ஹெலிகாப்டர்களை வைத்து மீனவர்களைக் கடலில் தேடினார்களோ, அதுபோல, மற்ற உபகரணங் களைக் கொண்டு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து பணியாற்றக் கூடியவர்களாக இருக்கிறவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். எத்தனைப் பேர் என்றால், 300, 400 பேர்களுக்கு மேல் இருக்கிறார்கள் என்று அங்கே இருக்கக்கூடிய விவசாயிகள் வருத்தத் தோடு சொன்னார்கள்.

இன்னமும் அந்தப் பகுதியைப் போன்று கிராமங் களில் உள் பகுதிக்குச் சென்று பார்த்தபொழுது, வீடு கள் எல்லாம் இடிந்து காணப்படுகின்றன. எத்தனை நாள்களுக்கு நாங்கள் மண்டபத்தில் பாதுகாப்பில்லாமல் இருப்பது என்று தாய்மார்கள் எல்லாம் குமுறி அழுது சொன்னார்கள்.

ஒக்கி புயலினால் டிசம்பர் மாதம் மீன்பிடி தொழிலை செய்ய இயலாத நிலையைக் கருத்தில் கொண்டு, வாழ்வாதாரம் இழந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து மீனவர் குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவியாக தலா ரூபாய் 2,500 வழங்கப்படும். மேலும் காணாமல் போன மீனவ குடும்பங்களுக்கு சிறப் பினமாக, வாழ்வாதார உதவித்தொகை ரூபாய் 5,000 வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

நிவாரணத் தொகையைப்பற்றி மறுபரிசீலனை செய்க!

ஆகவேதான், இந்த நிவாரணத் தொகையைப்பற்றி மறுபரிசீலனையை அரசும், அமைச்சர்களும், அதிகாரி களும் செய்யவேண்டும் என்று அந்த மக்கள் கேட் டுக்கொண்டிருக்கிறார்கள்.எனவே,போர்க்கால நடவடிக்கைகளைப்போல இதனை உடனடியாக செய்யவேண்டும்.

‘‘தேசியப் பேரிடராக’’

அறிவிக்கவேண்டும்

எல்லாவற்றிற்கும் மேலாக, குமரி மாவட்டம் இவ் வளவு பெரிய வேதனையை சந்தித்ததில்லை என்று சொல்கிறபொழுது, இந்தப் பாதிப்பை ‘‘தேசியப் பேரிடராக’’ மத்திய அரசு அறிவிக்கவேண்டும். அதுதான் மிக முக்கியம்.

தேசியப் பேரிடர் நிதியிலிருந்து மத்திய அரசாங்கம் உரிய நிவாரணம் செய்யக்கூடிய அளவிற்கு அளிக்க வேண்டும்.

அதோடு இதில், இரண்டு வகையான திட்டங்களை செய்யவேண்டும்.

ஒன்று, அவ்வப்பொழுது புயல், மழை, வெள்ளம் வருகிறபொழுது பேசுவது, அப்பொழுது ஏதோ உணவு கொடுப்பது அல்லது பாதுகாப்பு கொடுப்பது என்பதோடு நிற்காமல், அதிலிருந்து படிப்பினையைப் பெறவேண்டும்.

நீர் வளத்தைப் பாதுகாப்பதற்கு போதுமான அளவிற்கு தடுப்பணைகளையோ மற்ற வாய்ப்புகளையோ அறி ஞர்களைக் கொண்டு, வல்லுநர்களைக் கொண்டு ஆலோசித்து செய்யவேண்டியதும் அவசரமானதாகும்.

நிரந்தர பாதுகாப்புத் தேவை!

அதேநேரத்தில், நிரந்தரமாகவே அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு செய்யவேண்டியதும் மிகமிக முக்கிய மானதாகும்.

குறிப்பாக, வாழைப் பயிர்களை எடுத்துக்கொண் டால், அதற்காக ஏராளமான பணத்தை செலவழித் ததால், அவர்களுக்குக் கிடைக்கக்கூடியது, பொது வாகவே புயல் இல்லாத நேரத்தில்கூட 7 ஆயிரம் ரூபாய் மானியம் என்ற அளவில் கொடுப்பது நிச்சய மாக எங்களுக்குப் பயன்படாது என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, மறுபரிசீலனை செய்து அவர்களுக்குரிய நிவாரணத் தொகை அல்லது மானியத் தொகைகளை கொடுக்கவேண்டும். இது அவசர காலத்தில் நடை பெறவேண்டிய ஒன்றாகும்.

ஆளுநர் பார்த்திருக்கிறார், அமைச்சர்கள் சிலர் பார்த்திருக்கிறார்கள். மின்சார விநியோகம் ஆங்காங்கே இப்பொழுதுதான் வந்துகொண்டிருக்கிறது, அது பாராட் டத்தகுந்தது. கிராமப்புறங்களில் இன்னமும் மின்சாரம் இல்லாமல் இருட்டில் அவர்கள் இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அது சில நாள்களில் நீக்கப்படவேண்டும். வெளியில் இருந்து வந்தவர்கள் தொண்டு மனப்பான் மையோடு பணியாற்றுகிறார்கள்; அரசு ஊழியர்களும் உற்சாகத்தோடு பணியாற்றுகிறார்கள் என்பது பாராட் டுக்குரியது.

தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி...

இன்றைக்குக் குளச்சல் போன்ற கடற்கரை பகுதி களுக்குச் செல்லவிருக்கிறோம். மீனவர்களுக்கு நிதி உதவியைவிட, அவர்களுக்கு உயிர்ப் பாதுகாப்பு என்று சொல்வது மிகமிக முக்கியமானது. அந்த மீனவ சமுதாய தாய்மார்கள் கதறி அழுவது மிகவும் சங்கடமாக இருக்கிறது. காணாமல் போன மீனவர்களின் நிலைப்பாடு என்ன? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதை உடனடியாக தாமதிக் காமல் தெரிவிக்கவேண்டும். தகவல் தொடர்பு சாதனங்கள் வசதியாக இருக்கும் காலம் இது. எங்கே இருந்தாலும் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது, அதனை முழுமையாகப் பயன்படுத்தி இந்தப் பணிகளை செய்யவேண்டும்.

கேரள மாநில அரசு அதிகாரிகளிடம் நம் மீனவர்கள் உணவு வாங்கிச் சாப்பிடுகிறார்களே!

செய்தியாளர்: மராட்டியத்திலும், குஜராத்திலும் கரைஒதுங்கியமீனவர்களுக்குகேரளமாநில அதிகாரிகள் உணவு மற்றும் நிவாரண நிதிகளை யெல்லாம் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்திலி ருந்து ஒரு அதிகாரிகூட இதுவரையில் செல்ல வில்லை. தமிழ்நாட்டு மீனவர்களும், கேரள மாநில அதிகாரிகளிடம் இருந்து வாங்கி சாப்பிடுகின்ற நிலை இருக்கிறதே, இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தேசிய ஒருமைப்பாட்டினுடைய வெளிப்பாடு. தமிழக அரசினுடைய திறமை. இது வேதனையான ஒன்று. ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, இந்தியாவிற்கே ஒருகாலத்தில் வழிகாட்டும் மாநில மாக, எடுத்துக்காட்டான மாநிலமாக இருந்தது. இப் பொழுதும் எடுத்துக்காட்டான மாநிலமாகத்தான் இருக்கிறது. எப்படி செய்யக்கூடாது? எப்படி செய லிழக்கலாம்? என்பதில்.

பொன்.ராதாகிருஷ்ணனைக்

காணவில்லையே!

செய்தியாளர்: மத்திய அமைச்சராக இருக்கக் கூடிய பொன்.ராதாகிருஷ்ணன் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தானே?

தமிழர் தலைவர்: இருக்கிறாரா? என்னை பொறுத்த வரையில், எல்லாவற்றிற்கும் அவர் அடிக்கடி பேட்டி கொடுப்பவர். விமான நிலையத்திற்குப் போகும் போது பேட்டி கொடுப்பார்; வரும்பொழுதும் பேட்டி கொடுப்பார். மதிப்பிற்குரியவர்தான். ஆனால், திடீ ரென்று இந்தப் புயலில் அவரும் காணாமல் போய், இப்பொழுதுதான் இரண்டு நாட்களுக்குமுன் வந்திருப்பதுபோல் தெரிகிறது. என்ன காரணமோ தெரியவில்லை.

மத்திய ராணுவ அமைச்சர், மற்றவர்கள் வந்த பொழுதுகூட, அவர்கள் கட்சித் தலைவிகூட வந்தார் கள். ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை தொலைக்காட்சியில் தேடித் தேடிப் பார்த்தேன், காணவில்லை. அவரும் மீட்கப்பட்டு இருக்கிறார் என்று தெரிகிறது.

எண்ணிக்கையை மாற்றி மாற்றி சொல்கிறார்களே?

செய்தியாளர்: மத்திய - மாநில அரசுகள் மீனவர் களைக் காணவில்லை என்கிற பிரச்சினையில் எண்ணிக்கையை மாற்றி மாற்றி சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: காணாமல் போன மீனவர் களைத் தேடிக் கண்டுபிடிக்கக் கூடிய வசதிகள் இப்பொழுது நிறைய இருக்கின்றன. ஏற்கெனவே மும்பை கடற்கரையில் ஒதுங்கிய மீனவர்கள் என்ன சொன்னார்கள்? ‘‘எங்களை தமிழக அரசு அதிகாரிகள் வந்து யாரும் பார்க்கக்கூட இல்லை’’ என்று சொன்னார்கள்.

இப்பொழுது இருக்கிற தகவல் தொடர்பு சாத னங்களைக் கொண்டு நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ளலாம். அதனை செய்யவேண்டும். நாங்கள் அதற்குக் குழு அமைத்திருக்கிறோம், அதிகாரிகளை நியமித்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்களுக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்களா? என்பதைப் பார்க்கவேண்டும்.

அதேநேரத்தில்,தமிழகஆட்சியாளர்கள்எப்படி தேர்தலில்வெற்றிபெறுவது?யாரைநீக்குவது? முதலில் சின்னத்தைப் பற்றி கவலைப் பட்டார்கள்; இப்பொழுது கட்சியில் ஏற்பட்டிருக்கிற பின்னத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான்அவர்களுடையகவலையாகஇருக்கிறதே தவிர,இதுபோன்ற பிரச்சினைகளில், செலுத்த வேண்டிய அக்கறையை ஒரு அரசு, செயல்படக் கூடிய அரசாக, துடிப்புள்ள அரசாக இல்லை என்பது வேதனையான ஒன்றாகும்.

தமிழகத்தை கேரளாவோடு இணைக்கவேண்டும் என்கிறார்களே?

செய்தியாளர்: மீனவர்கள் நேற்று போராட் டத்தில்ஈடுபடும்பொழுது,தமிழகத்தைகேரளா வோடு இணைக்கவேண்டும் என்று சொல்லியிருக் கிறார்களே?

தமிழர் தலைவர்: அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏதோ கோபத்தில் அவர்கள் சொல்லியி ருக்கிறார்களே தவிர வேறொன்றுமில்லை. நிச்சயமாக அந்த நிலை வரக்கூடாது. இன்னுங்கேட்டால், தமி ழகம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.

அர்ச்சகர்பிரச்சினையில்கூட,நாம்தான்முத லில்அதனைத்தொடங்கினோம்.இங்கேஎல்லாப் பிரச்சினைகளும் முடிந்த நிலையில், ஆட்சியா ளர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், கேரள மாநில அரசு முந்திக்கொண்டு அதனை செயல்படுத்தி விட்டார்கள்.

அதற்காக தமிழகத்தில் சில குறைபாடுகள், சங் கடங்கள் இருக்கிறது என்றால், தமிழக அரசை செயல்படுத்த வைக்கவேண்டுமே தவிர, வேறு மாதிரியாக சிந்திக்கக் கூடாது. கேரளா மிகச் சிறப்பாக செய்கிறார்கள் என்றால், தமிழகமே காணாமல் போய்விடும். அதுதான் மிக முக்கியம்.

அவர்களுக்கு வந்திருக்கிற கோபத்தினால்தான் இதுபோன்றுசொல்லிஇருக்கிறார்களேதவிர, இணைப்பை அவர்கள் முழுமையாக விரும்ப வில்லை. வேறு வழியில்லாமல், இதனையாவது செய்யக்கூடாதா? என்ற கோபமும், ஆத்திரமும் இருக்கிறது.அவர்களுடையகோபத்தினை,ஆத் திரத்தினைப் புரிந்துகொண்டு, அதற்குத் தகுந்தாற் போல் நடந்துகொள்ளவேண்டும் தமிழக அரசு.

தமிழக முதலமைச்சர்

பார்வையிடவில்லையே?

செய்தியாளர்: இவ்வளவு பாதிப்பு ஏற்பட்ட பொழுதும், தமிழக முதலமைச்சர் வந்து பார்வை யிடவில்லையே?

தமிழர்தலைவர்:ஒருவேளைசோதிடர்இப் பொழுது போகவேண்டாம் என்று சொல்லியி ருக்கலாம்; அல்லது இதைவிட முக்கியமான பணிகள் இருக்கலாம். நேற்றுகூட ஆர்.கே.நகர் தொகுதிக்குச் சென்று வாக்கு கேட்டிருக்கிறார்.

மாற்றாந்தாய் மனப்பான்மை

செய்தியாளர்:புயலால்பாதிக்கப்பட்டமாவட்டங் களுக்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறார்களே? இதில் எப்படி நிவாரணங்களை சரியாக செய்ய முடியும்?

தமிழர் தலைவர்: நிதி ஆதாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. அதற்குத் தாராளமாக நிதியை ஒதுக்கவேண்டும் என்பதற்காகத்தான் தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும் என்கி றோம். இந்நேரம் மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்திருக்கவேண்டும்.

வட மாநிலங்கள் மற்ற பகுதிகளுக்கெல்லாம் வேகவேகமாக மத்திய குழுவினர் போகிறார்கள். தமிழ்நாடு என்றால், மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கிறது. இங்கே இருக்கிற ஓர் ஆட்சி காட்சியாக இருக்கிறதே தவிர, ஆட்சியாக இல்லை.

மாநில அரசின்மீது பழியைப் போட்டு மத்திய அரசு தப்பித்துக் கொள்ளக்கூடாது!

செய்தியாளர்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பூத்துறை, நீரோடி கிராமங்களிலிருந்து மீன்பிடிக் கச் சென்ற மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்களைக் காணவில்லை. ஆனால், அரசு தரப்பில் இரண்டு உடல்கள்தான் கிடைத்திருக்கிறது, ஆகவே இரண்டு பேர்தான் மரணம் என்றும், மற்றவர்களை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார்கள். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கே வரும்பொழுது என்ன சொன்னார்கள் என்றால், தமிழக அரசின் அறிக்கையின்படி 95 மீனவர்களைக் காணவில்லை என்பதன் அடிப்படையில்தான் நாங்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டோம். ஆனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் வராததினால், தற்பொழுது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் காலையிலிருந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரே கிராமத்திலேயே 450 மீனவர்களைக் காண வில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா அல்லது வேறு எங்கேயாவது தத்தளித்துக் கொண்டி ருக்கிறார்களா? என்பது சந்தேகமாக இருக்கிறது. இதுதான் உண்மை நிலவரம். இதுகுறித்து உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில், மீனவர்கள் பிரச்சினை என்பது ஒரு நிரந்தரமாக இருக்கக்கூடிய மிகப்பெரிய வாழ்வாதாரப் பேராட்டப் பிரச்சினை.

எப்பொழுதெல்லாம்கடல்சீற்றம்கொள்கி றதோ,அப்பொழுதெல்லாம்பாதிப்புஒருபக்கம் அவர்களுக்கு. இன்னொரு பக்கம் கடலோரத்தில் இருக்கக்கூடிய ராணுவமே, பல நேரங்களில் அத்து மீறக்கூடிய ஒரு நிலை. இன்னொரு பக்கத்தில், ஈழத்தில் இருக்கக்கூடிய இலங்கை பிரச்சினையொட்டி, அதில் இலங்கைக் கடற்படையும் நம் மீனவர்களை சங்கடப்படுத்துவது என்பது அவ்வப்பொழுது இருக்கக்கூடிய பிரச்சினைகளாகும்.

இவை எல்லாவற்றையும்விட, இந்தப் புயல் கார ணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை என்பதுதான், அந்தத் தாய்மார்களுக்கும், குடும்பத்த வர்களுக்கும், இந்தப் பகுதி மக்களுக்கும் மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது.

மத்தியராணுவஅமைச்சரைப்பொறுத்தவரை யில், தமிழக அரசு குறைவான எண்ணிக்கையைத் தான் கொடுத்திருக்கிறார்கள் என்று குற்றம் சொல்லி யிருக்கிறார்கள்.

ஆனால், இங்கே இருக்கக்கூடிய மக்களின் கொந்தளிப்பு என்பது, ரயில் மறியல், அறவழிப் போராட்டங்களை வெளிப்படுத்துகின்றார்கள்.

இதற்கு என்ன ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள் என்பதைஅரசாங்கம்தெரிவிக்கவேண்டும்.நிறைய மீனவர்கள் வீடு திரும்பவில்லை என்ற அந்தக் கவலை, நம் மீனவ சமுதாய சகோதரர்கள் குடும்பத்தில்மிகப்பெரியகேள்விக்குறியாக, வருத் தத்திற்குரியதாகவும், துன்பத்திற்குரியதாகவும் இருக் கிறது.

இதற்கான வேண்டிய பணிகளை உடனடியாக செய்யவேண்டும். உண்மைகளை மறைக்கக்கூடாது. உண்மையாக அவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கி றார்கள் என்று சொன்னால், அந்தப் பாதிப்புக்குத் தேவையான பரிகாரங்களை மத்திய - மாநில அரசுகள் சிறப்பாகச் செய்யவேண்டும்.

மாநில அரசு எங்களுக்குச் சரியான தகவல் களைக் கொடுக்கவில்லை என்று சொல்லி, பழியை மாநில அரசின்மீது போட்டு மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முயலக்கூடாது.

பல நேரங்களில், மத்திய அரசுக்கு இருக்கின்ற வசதிகள், மாநில அரசுக்கு இருப்பதில்லை. என்றா லும், மாநில அரசு தன்னுடைய கடமைகளில் இருந்து தவறக்கூடாது.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

================

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4

/* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;}

தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாதாம்!

 

செய்தியாளர்: குமரிமாவட்டம்பேரழிவை சந்தித் துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். தேசியப் பேரிடராக அறிவிப்பதற்கு என் னென்ன இருக்கவேண்டும். ஏன் அப்படி அறிவிக்க முடியாது?

முதன்முதலில் இந்த ஒக்கி புயல் வேகமாக வருகிறது என்று அறிவிக்கப்பட்டு, செய்திகள் வந்தவுடன், தேசியப் பேரிடர் என்கிற ஒரு குழு இருக்கிறது அரக்கோணத்தில். அந்தக் குழுவினர் இங்கே அனுப்பப்பட்டனர் என்று செய்திகள் வந்தன. அந்தக் குழுவினர் இங்கே வந்து என்ன செய்தார்கள் என்பது வேறு கேள்வி!

எனவே, தேசியப் பேரிடர் குழு வரவேண்டிய சூழல் இருந்தது என்பது அன்று ஏற்றுக்கொண்ட ஒன்று.

பிறகு ஏன் இவர்களுக்குக் குழப்பம்? மத்திய அரசு உதவுவதில் என்ன குழப்பம்?

தமிழ்நாட்டில்காலூன்றலாம் என்று நினைக்கக் கூடியவர்கள்,யாரைமுன்னிலைப்படுத்தலாம்என்று நினைக்கிறார்களோ, அவர்களே இப்படி சொல் கிறார்கள் என்றால், பா... தமிழ்நாட்டைப்பற்றி என்ன நினைக்கிறது? அல்லது மத்திய அரசு எவ் வளவு அலட்சியப்படுத்துகிறது என்பதற்கு அந்த வாக்கியம்தான், அந்தக் கருத்துதான் ஆதாரமானது. அது வன்மையான கண்டனத்திற்குரியது.

 

 

தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாதாம்!


செய்தியாளர்:குமரிமாவட்டம்பேரழிவை சந்தித் துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். தேசியப் பேரிடராக அறிவிப்பதற்கு என் னென்ன இருக்கவேண்டும். ஏன் அப்படி அறிவிக்க முடியாது?

முதன்முதலில் இந்த ஒக்கி புயல் வேகமாக வருகிறது என்று அறிவிக்கப்பட்டு, செய்திகள் வந்தவுடன், தேசியப் பேரிடர் என்கிற ஒரு குழு இருக்கிறது அரக்கோணத்தில். அந்தக் குழுவினர் இங்கே அனுப்பப்பட்டனர் என்று செய்திகள் வந்தன. அந்தக் குழுவினர் இங்கே வந்து என்ன செய்தார்கள் என்பது வேறு கேள்வி!

எனவே, தேசியப் பேரிடர் குழு வரவேண்டிய சூழல் இருந்தது என்பது அன்று ஏற்றுக்கொண்ட ஒன்று.
பிறகு ஏன் இவர்களுக்குக் குழப்பம்? மத்திய அரசு உதவுவதில் என்ன குழப்பம்?

தமிழ்நாட்டில்காலூன்றலாம் என்று நினைக்கக் கூடியவர்கள்,யாரைமுன்னிலைப்படுத்தலாம்என்று நினைக்கிறார்களோ, அவர்களே இப்படி சொல் கிறார்கள் என்றால், பா.ஜ.க. தமிழ்நாட்டைப்பற்றி என்ன நினைக்கிறது? அல்லது மத்திய அரசு எவ் வளவு அலட்சியப்படுத்துகிறது என்பதற்கு அந்த வாக்கியம்தான், அந்தக் கருத்துதான் ஆதாரமானது. அது வன்மையான கண்டனத்திற்குரியது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles