சமூகப் புரட்சியாளர் அறிவுப் பீடத்திற்கு சொந்தக்காரர் அம்பேத்கர்!
கூறுபோடும் ஜாதியை ஒழிப்பவர்களே உண்மையான தேசியவாதி!
லண்டனில் நோபல் அறிஞர் அமர்த்தியாசென் ஆய்வுரை
லண்டன், ஜூன் 25 -ஜாதிய அமைப்புதான் தேச விரோதம்; ஏனென்றால் அது என் இந்திய தேசத்தை பல கூறுகளாக பிளவுபடுத்துகிறது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கூறியுள்ளார்.
நடைமுறையில், ஆளும் பாஜகவினர் வகுத்துள்ள கொள் கைகளுக்கு எதிராக யாரெல் லாம் பேசுகிறார்களோ, அவர்கள் மீது தேச விரோத முத்திரை குத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி யாகவும் விளங்கிய புரட்சியா ளர் அம்பேத்கர் அவர்களின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி, லண்டன் நகரில் உள்ள உலக புகழ் பெற்ற லண்டன் ஸ்கூல்ஆப் எக்னா மிக்ஸ் (எல்எஸ்இ) கல்வி நிறு வனம் சிறப்பு சொற் பொழிவு நிகழ்ச்சியை நடத்தியது. இந் நிகழ்ச்சியில் சிறந்த பொருளா தார மேதையும், நோபல் பரிசு பெற்ற பேராசிரியருமான டாக்டர் அமர்த்தியா சென் சொற்பொழிவாற்றினார்.
ஜாதியின் பெயரால் இந்தியாவைக் கூறுபோடுவோர் யார்?
தனது உரையில் அவர், ஜாதியின் பெயரால் இந்திய தேசத்தைக் கூறுபோடுபவர்கள் தான் தேச விரோதிகள்; மாறாக, ஜாதிய அமைப்பை விமர்சிப் பவர்கள், அதை உடைத்தெறிய முயல்பவர்களே உண்மையான தேசியவாதிகள் என்றார்.அறி ஞர் அம்பேத்கர், லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்சின் முன்னாள் மாணவர்; அவர் மிகச் சிறந்த சமூக புரட்சியாள ராகவும் அறிவுப்பீடமாகவும் திகழ்ந்தவர்; நாம் கல்வியை பெறுவதன் மூலமாகவும், அதைப் பற்றிக் கொள்வதன் மூலமாகவும்தான் இந்த உல கத்தை மாற்ற முடியும் என்ற பார்வையை இந்திய நாட்டிற்கு தந்தவர்; டாக்டர் அம்பேத்கர் இப்போதும் தேவைப்படு கிறார்; எதிர்காலத்திற்கும் அவ ரின் தேவை இன்றியமையாதது என்றும் அமர்த்தியாசென் குறிப் பிட்டார். அதேபோல, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியை யொட்டி, லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் மய்யமானது, அம்பேத்கரிய அமைப்பு - புத்த மத அமைப்பு மற்றும் மானுட வியல்துறையுடன் இணைந்து, சமத்துவமின்மை மற்றும் வறுமை குறித்த ஆய்வு மய்யத்தை இந் தியாவில் துவங்கிட உள்ளதாக வும், மிகச் சிறந்த கல்வியாளர் களையும், பொருளாதார அறிஞர் களையும், சமத்துவத்துக்கான தலைவர்களையும், அரசியல் வாதிகள் மற்றும் பெண் தலை வர்களையும் உருவாக்குவதே அம்பேத்கரின் நோக்கமாக இருந்தது என்றும் பேராசிரியர் ஹென்றி குறிப்பிட்டார்.
லண்டன், அம்பேத்கரின் இல்லம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவரது வாழ்க்கை யில் மிகமுக்கியமான இடத்தை பெற்றிருந்ததாகவும், சமூகநீதிக் கான அவரது பங்களிப்பை போற்றும் நோக்கத்திலேயே சிறப்பு சொற்பொழிவு நடத்தப் படுகிறது என்றும் ஹென்றி தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கான இந்தி யத் துணைத் தூதர் டாக்டர் விரேந்தர்பவுல் பேசும்போது, டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளராகவும், அறி வார்ந்த நீதியாளராகவும், மனித உரிமை போராளியாகவும் திகழ்ந்தார் என்றும், அனைத்து விதமான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடினார்; இந்தியாவை கட்டமைத்ததில் பெரும் பங்காற்றினார் என்றும் புகழாரம் சூட்டினார்.
அவருடைய சிந்தனைகள் இந்தியசமூகத்திற்கு எப்போ தும் தேவையாகவே இருக்கும்; அந்த சிந்தனைகளின் பின்னால் இளைஞர்கள் திரளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
லண்டனுக்கு
வந்த நூறாண்டு
லண்டன் ஸ்கூல் ஆப் எக் னாமிக்ஸ் நிறுவனத்தில் முது கலை படிப்புகளை பயின்றார் அம்பேத்கர். புவியியல் மற்றும் அரசி யல் தத்துவம் அத்தோடு இணைந்து சமூக பரிணாமம், சமூகவியல் கொள்கை உள் ளிட்ட பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்பை (பிஎச்டி) லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் நிறு வனத்தில் மேற்கொண்டார்.
டாக்டர் அம்பேத்கர் 1916-ஆம்ஆண்டு முதன்முறையாக லண்டன் ஸ்கூல் ஆப் எக்னா மிக்ஸ் நிறுவனத்திற்கு வந்தார். 2016ஆ-ம் ஆண்டோடு, அவர் லண்டன் வந்ததன் நூறாண்டு நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.