Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்து - அரசியல் சாசனத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது!

$
0
0

பொருளாதாரத்தில் பின்தங்கிய - முன்னேறிய பிரிவினருக்கு  இட ஒதுக்கீடா?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்து - அரசியல் சாசனத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது!

தமிழர் தலைவர் ஆசிரியர் சட்ட ரீதியான விளக்க அறிக்கை

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன் னேறிய பிரிவினருக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் தெரிவித்த கருத்துக்கு எதிராக, சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும்  திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள விளக்க அறிக்கை வருமாறு:

அரசு மருத்துவக் கல்லூரிகளில், பொதுப் பிரிவினருக்கான இடங்களை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலர் தொடுத்துள்ள வழக்கை விசாரித்துவரும் நீதிபதி ஒருவர்,

பொதுப் பிரிவில், இதர வகுப்பினர்களும் போட்டியிடுவதால், ‘பெரும்பாலான இடங்கள், இதர பிரிவினருக்குச் சென்று விடுகிறது’ என மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, முன்னேறிய வகுப்பினரில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற ஒரு கேள்வியை உயர்நீதிமன்றத்தில் கேட்டுள்ளார் மரியாதைக்குரிய நீதிபதி அவர்கள்!

அவ்வழக்கைப்பற்றியோ, அதில் உள்ள அம்சங்கள்பற்றியோ நாம் ஏதும் விளக்கவோ, விடையளிக்கவோ விரும்பவில்லை. காரணம், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால்.

‘ஆபத்தான’ கேள்விக்கு

பணிவன்புடனான பதில்!

மாண்புமிகு நீதிபதி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, சமூகநீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் தொண்டன் என்பதாலும், அப்பணியைத் தொடரும் சட்டம் படித்த வழக்குரைஞன் என்ற தகுதியாலும் சில சட்ட முறைகளை, நீதித் தீர்ப்புகளை விடையாக அந்த ‘ஆபத்தான’ கேள்விக்கு மெத்த பணி வுடன் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளோம்!

1. இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையில் (Preamble) ‘‘Justice - Social - Economic - Political’’ என்ற கருத்தாக்கங்களை அரசியல் சட்ட கர்த்தாக்கள் வைத்திருப்பதன்மூலம்,

சமூகநீதி வேறு

பொருளாதார நீதி வேறு

அரசியல் நீதி வேறு

என்ற மூன்றும் தனித்தன்மை கொண்டவை. (அதுவும் மனுநீதி ஆண்ட ஆளும் இம் மண்ணில்). புரிந்துகொள்ளவேண்டும்.

முதல் சட்டத் திருத்தத்தில்

இடம்பெற்ற வாசகம்

2. இட ஒதுக்கீடு சம்பந்தமாக முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் - தந்தை பெரியார் அவர்களது போராட்டத்தினால், 1951 இல் நாடா ளுமன்றத்தில் நிறைவேறியபோது, 15(4) பிரிவில் சேர்க்கப்பட்ட சொற்றொடர்கள் ‘‘Socially and Educationally’’ என்ற இரண்டு மட்டுமே!

இதுபற்றி அரசியல் நிர்ணய சபையில், 340 ஆவது பிரிவுபற்றிய விவாதத்தில், சில உறுப் பினர்கள் (பண்டிட் குன்ஸ் போன்றவர்கள்) இதில், ‘Socially and Educationally’’ என்பதுடன், ‘‘‘Economically’’ என்பதையும் சேர்க்கவேண்டும் என்று வாதிட்டபோது, பிரதமர் பண்டித நேரு வும், சட்ட அமைச்சர் அம்பேத்கரும், ‘‘பொரு ளாதார அளவுகோல் நிலையானதல்ல; கல்வி யில், இட ஒதுக்கீடு என்பது காலங்காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு, பிற்படுத்தப் பட்டவர்களை அடையாளம் காண சரியான அளவு ‘‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்பதுதான் சரியானது’’ என்று விளக்கியதை ஏற்றனர். நாடாளுமன்றத்திலும் அதே பிரிவு 340 இல் உள்ள சொற்றொடரையே முதலாவது அர சியல் சட்டத் திருத்தத்தில் அப்படியே பிற் படுத்தப்பட்டவர்கள் யார் என்பதற்கு அடை யாளப்படுத்தப் பயன்படுத்தினர் என்பதுதான் அரசியல் சட்ட வரலாறு; மாண்புமிகு நீதிபதிகள் இதை நன்கு அறிந்தவர்களே!

பிரதமர் நரசிம்மராவ் காலத்தில் பொருளாதார சிபாரிசும் - உச்சநீதிமன்ற நிராகரிப்பும்!

அரசியல் சட்ட முதல் சட்டத் திருத்தத்தின் போது நாடாளுமன்றத்தில் பொருளாதார அளவுகோல்பற்றி சர்ச்சை எழுந்து, அது தொடர்பான வாக்கெடுப் பில், அதற்கு எதிராக 243 பேர்களும், பொருளாதாரத்திற்கு வெறும் அய்ந்தே பேரும் ஆதரவளித்தனர் என்பது இவ்விடத்தில் முக்கியமாகச் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்.

3. மண்டல் கமிஷன் தொடர்பான - இந்திரா - சகானி வழக்கில், 9 நீதிபதிகள் அளித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் (16.11.1992). நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது, 25.9.1991 இல் 16 ஆவது பிரிவின்கீழ் 10 சதவிகித இட ஒதுக்கீடு (வேலை வாய்ப்பில்) செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கு - செல்லுபடியாகாது. அரசியல் சட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு -  தனியே இட ஒதுக்கீடு செய்ய அரசியல் சட்டத்தில் இடமில்லை என்பதை  9 நீதிபதிகள் கொண்ட ‘‘முழு அரசியல் சட்ட அமர்வு’’ தீர்ப்பளித்துள்ளது.

இதில் பல கருத்துகள் பொருளாதார அளவு கோல் - ஏழ்மை - வறுமைபற்றியவை குறித்து திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

‘‘These backward castes have suffered centuries of discrimination and disadvantage, leading to their backwardness. The expression “backward classes” does not refer to any current characteristic of a backward caste save and except paucity or inadequacies of representation in the apparatus of the Government.’’

‘‘Poverty is not a necessary criterion of backwardness; in is in fact irrelevant. The provision for reservation is really a programme of historical compensation. It is neither a measure of economic reform nor a poverty alleviation programme.’’ (Judgement Para 63)

இதன் தமிழாக்கம்:

‘‘இந்த பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் பாகுபடுத்தப் பட்டும், ஒதுக்கிவைக்கப்பட்டும் சமூக உரி மைகளை அனுபவிக்கும் வாய்ப்பற்றவர்களாக பல  கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளனர்.

‘பிற்படுத்தப்பட்ட ஜாதியினர்’ எனும் சொற் றொடர் நடப்பு நிலையில் பிற்படுத்தப்பட்ட தன்மையினை குறிப்பதாக மட்டுமல்லாமல், அரசாங்கத்தில் அவர்களுடைய பிரதிநிதித் துவம் இல்லாமையை, போதாமையை குறிப்ப தாகவும் உள்ளது. பிற்படுத்தப்பட்ட நிலை மைக்கு வறுமை ஓர் அளவுகோல் அல்ல; சொல்லப்போனால், உண்மையில் வறுமையும், பிற்படுத்தப்பட்ட நிலைமையும் வெவ்வேறு அடிப்படையிலானவை. இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது வரலாற்று ரீதியாக பாகு படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டவர்களுக்கான சமன் செய் ஏற்பாடு ஆகும். இட ஒதுக்கீடு என் பது பொருளாதார சீர்திருத்தம் போன்றதல்ல; வறுமை ஒழிப்புத் திட்டமும் அல்ல.'' (தீர்ப்பு பாரா 63).

உச்சநீதிமன்ற நீதிபதி ஓ.சின்னப்பரெட்டி அவர்களின் கருத்துரை

4. இதே கருத்தை வசந்தகுமார் வழக்கில் கருத்தறிவித்த ஜஸ்டீஸ் ஓ.சின்னப்ப ரெட்டி அவர்கள், ‘‘இது ஒரு வறுமை ஒழிப்புக்கான புனரமைப்புத் திட்டமல்ல. அதற்கு அவர் களுக்கு ஏழ்மைக்காக, உதவித் தொகைகள் வழங்கலாம்; வழங்குகிறவர் இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது'' என்று தெளிவு படுத்தியுள்ளார்.

பிரதமர் நரசிம்மராவ் அரசு கொண்டு வந்த 10 விழுக்காடு ஆணை செல்லாது என்று மண்டல் தீர்ப்பில் வந்ததை நினைவூட்டுகிறோம்.

சமூக அந்தஸ்தில் முன்னேறிய ஜாதியினர் பார்ப்பனர்கள்; கல்வியிலும் முன்னேறியவர்கள். ஆகவே, இந்த இரண்டையும் குழப்பிக் கொள் ளவோ, குழப்பிவிடவோ கூடாது!

வெந்த புண்ணில் வேலைச் செருகவேண்டாமே!

இந்த 27 சதவிகிதமே கூட ‘‘பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு முழுமையாக வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு சரி பகுதிதான் கிடைத்துள்ளது'' என்ற நிலையில், வெந்த புண்ணில் வேலைச் செருகக் கூடாது. அரசியல் சட்டத்தை, தீர்ப்பு களை ஆராய்ந்தால் இது தெளிவாகும்.

 

கி.வீரமணி
தலைவர்,         திராவிடர் கழகம்.

சென்னை 
15.12.2017


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles