ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை விரட்டியது காவிக் கூட்டமே!
பிரதமரின் மவுனத்துக்குக் காரணம் என்ன?
பொருளாதார பேராசிரியர் சி.பி. சந்திரசேகர் குற்றச்சாட்டு
பின்னணி என்ன?
ரிசர்வ் வங்கி ஆளுநரைக் கண்டிப்பதுபற்றி பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?
சகிப்புத் தன்மையின்மை பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்றார் ராஜன்.
இந்திய வளர்ச்சியை உயர்த்திப் பேசுவது கண் தெரியாதவர்கள் உள்ள நாட்டில் ஒற்றைக் கண்காரன் மகாராஜா என்றார் ராஜன்.
வட்டிவிகிதத்தைக் குறைக்க மறுத்தார்.
சுயாட்சி மிக்க ரிசர்வ் வங்கி நிருவாகத்தில் அரசு தலையிடலாமா - ராஜன் கேள்வி.
பா.ஜ.க.வின் மத அரசியலை ஏற்காதவர் ராஜன்.
புதுடில்லி, ஜுன் 25 -ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் போன்ற பொருளா தார நிபுணர்களை பதவியிலிருந்து வெளி யேற்றும் நோக்கத்துடன் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சாமி திட்டமிட்டு குற்றச்சாட்டு களை முன்வைப்பது சங் பரிவாரத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கே என்று பொரு ளாதார நிபுணர்கள் விமர்சித் துள்ளனர்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகு ராம் ராஜன் மீண்டும் அப்பதவி யில் தொடரக்கூடாது என்ற நோக்கத்துடன் சுப்பிரமணியன் சாமிகுற்றச்சாட்டுக்களை முன் வைத்த பின்னணியில், அவ ருக்கு மோடி அரசு பதவி மறுப்பதற்கு முன்பே, ரகுராம் ராஜன் தானாகவே முன்வந்து இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு விண் ணப்பிக்கப் போவதில்லை என்று கூறி வெளியேறும் முடி வினை அறிவித்திருப்பதை சுட்டிக் காட்டி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரி யரும், பொருளாதார அறிஞரு மான சி.பி.சந்திரசேகர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பின்னணியில் சங்பரிவார்
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் கூறியிருப்பதாவது: ரகுராம் ராஜன் மீதான சுப்பிரமணியன் சாமியின் விமர்சனம் என்பது சங் பரிவாரத்தால் திட்டமிடப் பட்டதே. ரகுராம் ராஜனின் செயல்பாடுகள் இந்தியப் பொரு ளாதாரத்தை வளர்ச்சிப்பாதை யில் கொண்டுசெல்லவில்லை என்றும், அவர் அமெரிக்க குடி யுரிமை பெற்றவர் என்ப தால் ஒரு தேசியவாதியாக இருக்க முடியாது என்றும் சுப்பிர மணியன் சாமி குற்றம்சாட்டி யதை பிரதமர் நரேந்திர மோடி எந்தவிதத்திலும் கண்டு கொள் ளவில்லை.
பிரதமர் மவுனம் ஏன்?
இதன் பொருள், சுப்பிரமணி யன் சாமியின் விமர் சனத்தை ஏற்று ராஜன் வெளியேற வேண் டும் என்று அவர் விரும்பியதே என தெரிகிறது. ரகுராம் ராஜனை விமர்சித்த போது பிரதமர் மவுனமாக இருந்தது, சாமிக்கு கூடுதல் தைரியத்தை கொடுத் திருக்கிறது; அதனால்தான் அவர் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிர மணியனை குறி வைத்தார். ஆனால் அரவிந்த் சுப்பிரமணி யனின் கதை வேறு.
ஆனால் ரகுராம் ராஜனைப் பொருத்த வரை, மோடியின் மவுனம், ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி என்பது தமது அரசாங் கத்தின் ஒரு பிரதான நபரால் மட்டுமே வகிக்கப்பட வேண் டும் என்று அவர் விரும்பியதன் வெளிப்பாடாக இருக்கலாம்; மேலும் தனது அரசாங்கம் என் பது சங்பரிவாரத்தால் நடத்தப் பட வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும் இருக்கலாம்.
ரகுராம் ராஜன் வெறுக்கப்படுவது ஏன்?
ஆனால் இதை கண்டுபிடிப் பது மிகவும் கடினமானது.சங் பரிவாரத்தால் ரகுராம் ராஜன் வெறுக்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது. ஏனென்றால் அவர், இங்கு நிலவும் சகிப் பின்மை பற்றி விரிவாக விவா தித்தார். கருத்துக்களை மறுப் பது, மாற்றுக்கருத்துக்களை பேச விடாமல் செய்வது என்ப தெல்லாம் பொருளாதார வளர்ச்சிக்கான பொருத்தமான சூழலை உருவாக்க தடையாக அமையும் என்றகண்ணோட்டத் தில் ரகுராம் ராஜன் தொடர்ந்து அதை வலியுறுத்தினார்.
பொருளாதார முன்னேற் றத்தை நாம் விரும்பு கிறோம்; எனவே நமக்கு சகிப்புத்தன்மை அவசியம் என்று அவர் தொடர்ந்து பேசி னார். அதை விமர்சனப்பூர்வமாகவும் முன் வைத்தார்.அதுமட்டுமல்ல, மோடியின் ஆட்சியில் இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் திட்டமிட்டு உயர்த்திக் காண்பிக்கப்படுவதை அவர் விமர்சித்தார்.
பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வங்கி ஆகியவற்றின் கூட்டங்களில் பங்கேற்ற போது, மோடிஅரசு ஏற்கெனவே கூறி வருவதைப் போல இந்தியா உலகப்பொருளாதாரத்தின் பிரகாசமிக்க இடமாக இருக் கிறது என்று ராஜன் கூற வில்லை; மாறாக, கண் தெரியாதவர்கள் நிறைந்துள்ள தேசத்தில் ஒரு கண் இருப்பவன் மகாராஜா என்று கடுமையான விமர்சனத்தை ரகுராம் ராஜன் முன்வைத்தார்.மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை மிக அதிகமாக உயர்த்திக் காட்டி மோடி அரசு மாய்மாலம் செய்தது. அதை அப்படி செய்யாதீர்கள் என்று ராஜன் சுட்டிக்காட்டினார்.
மோடியின் தீவிரப் பக்தைக்கு மூக்குமீது கோபம்
அதற்கான காரணங்களை யும் அவர் பட்டியலிட்டார். இதைச் சொன்னபோது மோடி யின் தீவிர பக்தையான வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் ஆளுநரான ராஜனை பகிரங்கமாகவே விமர் சித்தார்.
தங்களது அரசாங்கத் தின் செயல்பாடுகளை திசை திருப்புவதாக அவர் குறை கூறிக்கொண்டார். இப்படியாக ராஜனை வெளியேற்ற வேண்டு மென்று பகிரங்கமாகவே இந்த அரசாங்கத்தில் இருப்பவர்கள், நிதியமைச்சர் அருண்ஜெட்லி உட் பட முயற்சி மேற்கொண்டார்கள்.
வங்கிகளின் வட்டி விகிதங்களை பெருமளவு குறைத்தால் அது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ராஜனை அவர்கள் நிர்ப்பந்தித்தார்கள். ஆனால்கூடுதலான வட்டிவிகிதம் தொடர வேண்டும் என்பதில் ராஜன் உறுதியாக இருந்தார். ஏனென்றால் களத்தில் உண்மையான பணவீக்க விகிதமும் அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும் நிலையில் அரசாங்கம் சொல் வதைப் போல செய்ய முடியாது என்று அவர் கருதினார்.
சு.சாமியின் நோக்கம்
ஆனால் உண்மையில் சுப்பிரமணியன் சாமியின் குற்றச்சாட்டு களில் இந்தப் பிரச்சனையெல்லாம் இல்லை. அவரது பார்வை ஒன்றுதான்; அரவிந்த் சுப்பிர மணியன், நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் ஆதரவாளர்; எனவே அவரை எதிர்க்க வேண்டும் என்பது சாமியின் ஒரு நோக்கம். மற்றொன்று, ரகுராம் ராஜனின் சிந்தனையே இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்பது மற்றொரு காரணம்.இதில் வேடிக்கை என்னவென்றால், இரு தரப்பினருமே நவீன தாராளமய கொள்கைகளை, அது வகுத்துத் தந்துள்ள பணக் கொள்கையை பின்பற்றுபவர்கள்தான். இதில் எப்படி அமலாக்க வேண்டும் என்பது குறித்த ரிசர்வ் வங்கியின் சுயாட்சித் தன்மையை சுப்பிரமணியன் சாமி கேள்விக் குள்ளாக்குகிறார் என்பது ஒரு முக்கியப் பிரச்சினை. அதேபோல வட்டி விகிதங்களை யார் தீர்மானிப்பது என்பது மற்றொரு முக்கியப் பிரச்சினை.
மத ரீதியாக கலாச்சார ரீதியாக....
எனவே இதில் அடிப்படையான பிரச்சினை என்னவென்றால், ஒரு சுயாட்சி மிக்க வங்கி நிர்வாகத்தில் தேவையில்லாமல் அரசாங்கம் தலையிடுவது சரியல்ல என்பது உள்ளிட்ட ஒரு `தாராள சிந்தனை கொண்டவர் ராஜன்; ஆனால் மோடி அரசாங்கத்தைப் பொருத்தவரை அது மதரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முற்றி லும் பிற்போக்கானது. இந்த இரண்டுக்கும் இடையிலான மோதல்தான் தற்போது எழுந்துள்ள பிரச்சினை.
ரகுராம் ராஜனை பொருத்தவரை சர்வதேச அளவில் ஒரு தலைசிறந்த கல்வி யாளர்; பொருளாதார வல்லுநர். அவர் இந்த அரசாங்கத்திற்குப் பணியாற்ற வந்திருக்கிறார்; ஆனால் அவர் தன்னுடைய சிந்தனையின் சுதந்திரத்தை கைவிட வேண்டும் என்று அரசு எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம். 2008ஆம் ஆண்டு மிகப்பெரும் நிதி நெருக்கடி ஏற்படும் என்று முன்கூட்டியே கணித்தவர்களில் ஒருவர் ரகுராம் ராஜன் என்பதும் ஒரு குறிப்பிட்ட பொருளாதார அறிஞர்கள் வட்டத்தில் அவர் அங்கீகரிக்கப்பட்ட நபர் என்பதும் இந்த அரசாங்கத்தால் நம்புவதற்கு கடினமான விசயங்கள்தான்.
பா.ஜ.க.வின் அரசியலை ஏற்காத ராஜன்
பாஜக தலைமையிலான அரசாங்கம் நவீன தாராளமய பொருளா தாரக் கொள்கையை தீவிரமாக பின்பற்றுவதில் உறுதியாகஇருக்கிறது. அதே தத்துவத்தில் ரகுராம் ராஜனும் உறுதியாக இருக்கிறார். ஆனால் பாஜக அரசின் அரசியலை அவர் ஏற்க வில்லை. அந்த அரசியல் தலையீடு இல்லாமல்பொருளாதார நடவடிக்கைகள் சுதந்திரமாக நடக்க வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.நம்மைப் பொருத்தவரை பொருளாதார நிபுணர்களின் சிந்தனைக்கு, கருத்துக்கு சுதந்திரமான இடம் இருக்க வேண்டும் என்பதே. அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவ ராக இருந்தாலும் சரி, அந்த சுதந்திரம் பறிக்கப்படக்கூடாது.இதில் வேதனை என்னவென்றால், ராஜன் நீடிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்த விவாதத்தில், மோடி அரசு அமெரிக்காவுடன் மிக மிக நெருக்கமான கூட்டாளியாக மாறியிருக்கும் அபாயம் மக்களிடம் விவாதிக்காமலேயே விடப்படு கிறது. அதை நாம் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு சி.பி.சந்திரசேகர் கூறியுள்ளார்.