மனுதர்மத்தை எதிர்ப்பது தேச விரோதமாம்!
பேராசிரியர்மீது ஆர்.எஸ்.எஸ். அவதூறு : காவல் நிலையத்தில் பேராசிரியர் புகார்
அய்தராபாத், ஜன.1 தெலங்கானா மாநிலத்தில் மனித உரிமை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக் காக செயற்பட்டுவருபவர் பேராசிரியர் சுஜாதா சுரபள்ளி. தாழ்த்தப்பட்ட வகுப் பினரின் முன்னேற்றம், விழிப்புணர்வுக் காக மாணவர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் செயல்பட்டுவருகிறார்.
தெலங்கானா மாநிலத்தில் சதவா கனா பல்கலைக் கழக மாணவர்கள் 25.12.2017 அன்று மனுதர்ம நூல் எரிப்பு நாளையொட்டி, மனுதர்ம நூல் எரிப் புப் போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது பாஜக இந்துத்துவாவாதிகள் மாணவர்கள்மீது கல்வீச்சு, தாக்குதல் களை நடத்தி னார்கள்.
மனுதர்ம நூல் ஜாதியை உருவாக்கி மக்களை பிரிக்கிறது என்று அடை யாளப்படுத்தி, மனுதர்மத்துக்கு எதி ரான போராட்டத்தை 1927ஆம் ஆண்டில் டிசம்பர் 25 அன்று பாபாசாகெப் அம் பேத்கர் மனுதர்ம நூல் எரிப்புப் போராட்டம் நடத்தினார். டிசம்பர் 25ஆம் நாளை மனுதர்ம எரிப்பு நாளாக சதவாகனா பல்கலைக்கழக மாண வர்கள் ஆண்டுதோறும் பின்பற்றி மனு ஸ்மிரிதியின் நகல்களை எரித்து வரு கிறார்கள்.
இதுபோல் மாணவர்களின் எழுச் சிக்கு உந்து சக்தியாக பேராசிரியர் சுஜாதா இருக்கிறார் என்பதால், அவரை தேச விரோதி என்று பாஜகவினர் குற்றம் சுமத்துகின்றனர்.
சமூக ஊடகங்களில்
அவதூறு, அச்சுறுத்தல்
பேராசிரியர் சுஜாதா பேசுவது போன்ற படத்தை இணைத்து, அவர் மாணவர்களை பாரத மாதா படத்தை எரிப்பதற்கு தூண்டினார். அவர் பாடம் நடத்தும்போது நக்சலிசத்தை போதிக் கிறார். மாணவர்களின் வாழ்வை அழிக் கிறார் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங் களில் பதிவேற்றி பரப்பிவருகின்றனர்.
“இந்தியர்கள் அனைவரும் அவர் குறித்து கருத்தை பதிவு செய்ய வேண் டும் அல்லது செத்துப்போகவேண்டும். சூர்ப்பனகையின் மூக்கை, லட்சுமணன் (ராமாயண ராமனின் தம்பி) அறுத்தான். இந்த பெண்ணை நாம் என்ன செய்யப் போகிறோம்?” என்ற கேள்வியுடன் சமூக ஊடகங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ இணைய பதி வர்கள் பதிவிட்டு, பரப்பி வருகின்றனர்.
காவல்நிலையத்தில் புகார்
பேராசிரியர் சுஜாதா நக்சலிசத்தை பரப்புகிறார் என்றும், அவரை தேச விரோதி என்றும் முத்திரைகுத்தி, அவர் குறித்து மிகவும் மோசமாக தாக்கியும், தரக்குறைவாகவும் சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்துத்துவ வலதுசாரிகள் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து கரீம் நகர் பாஜக தலைவரும், செய்தித் தொடர்பாள ருமாகிய பண்டி சஞ்சய்மீது கரீம் நகர் காவல்நிலையத்தில் பேராசிரியர் சுஜாதா புகார் கொடுத்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், இந்துத் துவ வலதுசாரிகள் பொய்யான பிரச் சாரத்தை திட்டமிட்டு செய்து வருகி றார்கள் என்றும், டிசம்பர் 25 அன்றுதான் அய்தராபாத்தில் இருந்தாகவும் கூறி யுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது,
“அபங்காப்பட்டினத்தில் பாஜக தலைவர் பரத் ரெட்டி என்பவர் தாழ்த் தப்பட்ட வகுப்பினர் இருவரை தாக் கினார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட வகுப்பின் பிரதிநிதிகள், மாணவர்கள் போராட்டங் களை நடத்தி வந்தார்கள். அதற்கு பழி வாங்கும்வகையிலேயே, என்மீது பாஜக குறிவைத்துள்ளது. எங்கள் மக்கள் மீதே நான் கனத்த இதயத்துடனேயே புகார் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. பாஜக தாழ்த்தப்பட்ட வகுப்பினரை தாழ்த்தப்பட்டவர்களுககு எதிராக திருப்பிவிட்டு, பிரித்து கையாள்கிறது. எங்கள் சகோதரர், சகோதரிகளுடனே போராட வேண்டிய கட்டாயத்துக்கு என்னை பாஜக தள்ளிவிட்டது’’ என்றார்.
பாஜக ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிராக பேசுவதே தேசவிரோதமாம்
பாஜக பண்டி சஞ்சய் கூறும்போது, “பாஜக, ஆர்.எஸ்.எஸ். நாட்டின் மக்க ளுக்காக பணியாற்றி வருகின்ற நிலை யில், பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதி ராக பேசுவது என்பது நாட்டுக்கு எதி ராக பேசுவதாகும். அவர்களுக்கு எதி ராக எப்படி அவர் பேசலாம்? பல் கலைக்கழகத்தின் தாழ்த்தப்பட்ட, பகுஜன் மாணவர்கள் பாரத மாதாவின் படங்களை எரித்தார்கள். கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு காவல் துறையினர் அதை சரிபார்க்கலாம்’’ என்றார்.
மாநிலம் முழுவதும் கண்டனப் போராட்டம் ஆனந்த் மரிகந்தி
பெண் பேராசிரியர் சுஜாதாமீதான பாலியல் பாகுபாடு, ஜாதிய பாகுபாடு களுடன் கூடிய இதுபோன்ற அச்சுறுத் தல்களைக் கண்டித்து மாநிலம் முழுவ தும் கண்டனக் கூட்டங்கள் நடத்த உள் ளதாக அய்தராபாத் நகர் ஆய்வகத்தைச் சேர்ந்தவரான ஆனந்த் மரிகந்தி கூறி யுள்ளார்.