Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

ஆணும், பெண்ணும் சுய விருப்பத்துடன் செய்து கொள்ளும் திருமணத்தில் தலையிட பஞ்சாயத்தார்- ஜாதி, மத அமைப்பினர்- பெற்றோருக்குக்கூட உரிமையில்லை!

$
0
0

ஆணும், பெண்ணும் சுய விருப்பத்துடன் செய்து கொள்ளும் திருமணத்தில் தலையிட

பஞ்சாயத்தார்- ஜாதி, மத அமைப்பினர்- பெற்றோருக்குக்கூட உரிமையில்லை!

உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க கருத்து

புதுடில்லி, பிப்.6 திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் சுய விருப்பத்துடன் செய்து கொள்ளும் திருமணத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாதி ஆணவக் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்து கூறியுள்ளது.

பெற்றோரே தங்கள் பிள்ளைகளை..

பெற்றோரின்சம்மதம் இல் லாமல் வேறு ஜாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களை திரு மணம் செய்து கொள்பவர்கள் கொலை செய்யப்படுவது, ஊரைவிட்டுஅடித்து விரட் டப்படுவது, ஒதுக்கி வைக்கப் படுவது போன்ற நிகழ்வுகள் இப்போது அதிகரித்துள்ளன. முக்கியமாக,அரியானாஉள் ளிட்ட சில வடமாநிலங் களில்செயல்படும்காப்பு பஞ்சாயத்துகள்போன்ற அமைப் புகள் இதுபோன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. சில இடங்களில் பெற்றோரே தங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், முஸ்லிம் பெண் ஒருவரை காதலித்து வந்த டில்லியைச் சேர்ந்த அங்கித் சக்சேனா (23) என்ற இளைஞர், அந்தப் பெண்ணின் தந்தை, தம்பி மற்றும் உறவினர்களால் கடந்த வாரம் சாலையில் நடந்து சென்றபோது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபோன்ற ஜாதி, மத ஆண வக் கொலைகளைத் தடுத்து நிறுத் தக்கோரியும், காப்பு பஞ்சாயத்துகளுக்குத் தடை விதிக்க வேண்டியும் சக்தி வாஹினி என்ற சமூகநல அமைப்பு சார் பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி தீபக் மிஸ்ரா

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந் திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப் போது நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியதாவது:

திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் சுய விருப்பத்துடன்செய்துகொள் ளும் திருமணத்தில் மூன்றாவது நபர் யாரும் தலையிட உரிமையில்லை. அவர்கள் வாழ் விணையர்களின் பெற்றோராக இருந்தாலும் கூட தலையிட முடியாது. இந்த நிலையில், பஞ்சாயத்து செய்பவர்கள் மற்றும் ஜாதி, மத அமைப்பினருக்கு அதில் தலையிட எவ்வித உரிமையும் கிடையாது. தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டார்கள் என்பதற்காக அவர்களை யாரும் துன்புறுத்த முடியாது. அந்த உரிமை யாருக் கும் இல்லை. மனம் ஒத்த இருவர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்தது கொண்டு அமைதியாக வாழ்க்கை நடத் துவது என்பது அடிப்படை உரிமை ஆகும் என்றார் அவர்.

ஜாதி,மதஆணவக்கொலை களைத்தடுத்துநிறுத்தஎடுக் கப்பட வேண்டிய நடவடிக்கை கள் குறித்து மத்திய அரசு உரிய விதிகளை வகுக்கவேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க மூத்த காவல்துறைஅதிகாரிகள் அடங் கிய உயர்நிலைக் குழுவை அமைப்பது குறித்து விரைவில் உத்தரவிடப்படும் என்று நீதி பதிகள் கூறினர்.

இது தொடர்பாக உரிய பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்பிங்கிஆனந்த்தெரி வித்தார்.இதையடுத்துவழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட் டது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், ‘காப்பு பஞ்சாயத்து குறித்து நீதிமன்றத்துக்கு எந்தக் கவலையும் இல்லை. பாரம்பரியம்,குடும்பப் பெருமை குறித்து கட்டுரை எழுத நாங்கள் இங்கே அமர்ந்திருக்கவில்லை. மன விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் முழு உரிமை இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதைப்பற்றிதான் நாங்கள் கவலைப்படுகிறோம்‘ என்றார்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles