Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

வேலை வாய்ப்பின்மை இளைஞர்களிடம் அபாய எண்ணத்தை உருவாக்கிவிடும்! இந்திய அரசுக்கு உலக வங்கி எச்சரிக்கை

$
0
0

வேலை வாய்ப்பின்மை இளைஞர்களிடம் அபாய எண்ணத்தை உருவாக்கிவிடும்!

பேச்சுக் கச்சேரியை நிறுத்தி வேலை வாய்ப்பை உருவாக்குக!

இந்திய அரசுக்கு உலக வங்கி எச்சரிக்கை

நியூயார்க், பிப்.15 இந்தியாவில் வேலை வாய்ப் பின்மை இளைஞர்களிடம் அபாய எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்துள்ளது உலக வங்கி.

ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைதருவேன் என்று போலியான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடி, அவரது ஆட்சியின் இறுதி கட்டத்தில் நிற்கும் இந்த வேளையில் கூட வெறும் 30 லட்சம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு குறித்து  தொலைக்காட்சி நிகழ்ச்சி யில் பேசிய மோடி, ‘‘இளைஞர்கள் அரசிடம் வேலைவாய்ப்பு எதிர்பார்க்கவேண்டாம், ஒரு பக்கோடா விற்பவர் கூட ரூ200 வருமானம் ஈட்டுவார்'' என்று கூறினார். இதனால் வெகுண்ட பட்டதாரிகள்  நாடுமுழுவதும்  போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் வேலை வாய்ப்பு நிலைப்பாடு குறித்து உலக வங்கி கருத்து தெரிவித்துள்ளது!

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை மற்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதே என்னுடைய முதல் தலையான பணி; இளைஞர்கள் தான் எதிர்கால இந்தியாவின் சிற்பிகள் என்று தான் செல்லும் அனைத்து இடங்களிலும் கூறி மக்களை ஏமாற்றினார்.

அதே போல் மத்தியில் 2014-ஆம் ஆண்டு மே மாதம் முழுமையான பெரும்பான்மையோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்.  அமர்ந்த பிறகு வேலைவாய்ப்பிற்கென்று எந்த ஒரு பணியையும் அவர் செய்யவில்லை, மாறாக மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற ‘மந்திர' வார்த்தைகளைக் கூறி ஏதோ நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துவிடும் என்ற பிரமிப்பை உருவாக்கினார். ஆனால் இந்த திட்டங்கள் அனைத்தும் அறிவிப்போடு நின்றுவிட்டன. முக்கியமாக மேக் இன் இந்தியா என்ற பெயரில் மும்பை, டில்லி, உள்ளிட்ட வடமாநில பெரு நகரங்களில் 7 மிகப்பெரிய கண்காட்சிகள் நடந்தன. ஆனால், அந்தக் கண்காட்சிகள் முடிந்த பிறகு அந்த திட்டங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. அதே நேரத்தில் தொடர்ந்து மோடி ஆட்சியில் வேலையின்மை அதிகரித்திருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

2017- ஆம் ஆண்டு தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பகம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நாடு முழுவதும், 53 விழுக்காடு மக்களுக்கு அடிப்படையான வேலைப் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டுமுழுவதும் 42 விழுக்காடு மக்கள் தொடர் வேலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். குறைவான வருவாய் என்பது மக்களிடையே சலிப்பையும், எரிச்சலையும் உருவாக்கிவிட்டன.

மோடி வந்த 4 ஆண்டுகளில்  நிரந்தர வருவாய் உள்ள குடும்பங்கள் வெறும் 17 விழுக்காட்டோடு நின்றுவிட்டது,  வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்க மோடியிடம் எந்தத் தொலைநோக்கு திட்டமும் இல்லை. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான இளை ஞர்கள் பட்டம் பெற்று கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்றார்கள். இவர்களுக்கான உடனடி வேலைவாய்ப்பு என்பது குறித்து ஒரு நிழல் அறிக்கையைக் கூட இந்த 4 ஆண்டுகளில் மோடி அரசால் கொடுக்க முடியவில்லை.

இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட உலக வங்கி,வளர்ந்து கொண்டு இருக்கும் உலக நாடுகளுக்கு ஈடாக இந்தியாவின் வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது, உலக அளவில் அதிக அளவு இளைஞர்களைக் கொண்டு இருக்கும் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை ஒரு அபாயகரமான வெறுப்புணர்வை இளை ஞர்களிடையேவிதைத்துவிடும்,இந்தியஅரசு உடனடியாக வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என இந்தியாவிற்கு அறிவுறுத்தி யுள்ளது.

2005 --2012 காலக்கட்டத்தின் நிலைகளை கொண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை 13 மில்லியனாக உயர்ந்துள்ளது எனவும், ஆனால் அதே காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 3 மில்லியன் வேலை வாய்ப்புகள் மட்டுமே உரு வாக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பொதுதுறை பணிகளில் இருப்ப வர்களில் சுமார் 5% சதவிதத்தினர் மட்டுமே நல்ல வேலையில் இருப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பானது, எண்ணிக்கையினைப் பொருத்தது மட்டும் அல்ல, அவர்களின் வருமானம் குறித்ததும் ஆகும். இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் குறைந்த ஊதி யத்திற்கே பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் அதிக அளவிலாக ஊதியம் கிடைக்கப்பெறும் அளவிற்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்ட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்!

உலக வங்கியின் தனிப்பட்ட நபர் சார்ந்த நட்பின் காரணமாக சில அறிக்கைகளை விடும்போது பா.ஜ.க.வினரும், அதன் ஆதரவு ஊடகங்களும் மோடியின் பணியினை உலக வங்கி அங்கீகரித்துள்ளது, இது மோடியின் சாதனை என்று மார்தட்டிக் கொள்ளும் நிலையில், சமீபகாலமாக மோடிக்கு எதிராக பட்டதாரிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், வேலை வாய்ப்பு குறித்து வெளிவந்த உலக வங்கியின் எச்சரிக்கை, ஆலோசனை குறித்து எந்த ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles