Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

வேதத்திலேயே (நியூட்டன்) புவிஈர்ப்புப் பற்றி கூறப்பட்டுள்ளதாம்! வாஸ்து சாஸ்திரம் அடிப்படையில் கட்டடங்கள் கட்டப்பட வேண்டுமாம்

$
0
0

அரசமைப்புச் சட்டத்துக்கு (51கி(லீ)) விரோதமாக மத்திய அமைச்சர் பேசலாமா?
இதற்கெல்லாம் விடிவு 2019ஆம் ஆண்டுதானா?

தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவியல் பூர்வ அறிக்கை

மத்திய இணை அமைச்சராக இருக்கக் கூடியவர் வேதத்தில் விஞ்ஞானம் இருக்கிறது என்றும், வாஸ்து சாஸ்திரப்படி தான் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்றும் கூறுவது -விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும்; அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் என்று சுட்டிக் காட்டிக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் இயங்கும் அரசின் - கல்வி அமைச்சகம் - மனிதவள மேம்பாட்டுத் துறையும், அதன் அமைச்சர்கள், இணை அமைச்சர்களின் நாளொரு ஆணை, பொழுதொரு பேச்சுகள் அறிவியலைக் கொச்சைப்படுத்தி, விஞ்ஞான உலகம் - குறிப்பாக வெளி நாட்டவர் எள்ளி நகையாடும் நிலையை உருவாக்கி வருவது வேதனையையும், வெட்கத்தையும் பெருக்குவதாக உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் முரண்பட்ட கருத்துகள்

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நீட் தேர்வு குறித்து முன்னுக்குப் பின் முரணாகக் கூறி வருகிறார்.

மத்தியக் கல்வி முறை (CBSE), மாநிலக் கல்வி செகண்டரிமுறை என்ற இரண்டு முறைகளும் நமது அரசியல் சட்டத்தில் ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) கல்வி இருப்பதால், நமக்கு (மாநிலங்களுக்கு) இருக்கும் உரிமையை அங்கீகரித்து நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் தமிழக சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உதவிட வேண்டும்.

98 சதவிகித மாணவர்களுக்கு ஒன்றரை சதவிகித மாணவர்கள் படிக்கும் மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வா?

அதைச் செய்யாததோடு 98 சதகிவிதம் மாநிலக் கல்வி (செகண்டரி பாடத் திட்டம்), 1.6 சதவிகித சிஙிஷிணி என்ற மத்திய கல்விப் பள்ளிகள் உள்ள நம் நாட்டில் சுமார் எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர்.
இந்த பாடத்திலிருந்து நீட் தேர்வுக்கு கேள்விகள் வராமல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலிருந்துதான் கேள்விகள் இருக்கும் என்ற நிலை நியாயமானதா? சட்டப் பூர்வமானதா? பிறகு மாநிலப் பாடத் திட்டத்திலும் கேள்வி இருக்கும் என்கிறார். 3 நாட்களுக்குப் பிறகு வேறு ஒரு அறிவிப்பு வருகிறது!

விஞ்ஞான கண்ணோட்டமின்றிப்
பேசும் மத்திய அமைச்சர்

இப்படி பிள்ளைகளையும், பெற்றோர்களையும் அலைக்கழித்து கார்ப்பரேட் பயிற்சிக் கூடங்களை நடத்தும் பன்னாட்டு முதலாளிகளுக்கு வருவாயை உருவாக்கிட உதவிடும் போக்கைக் கடைப்பிடிக்கலாமா?

அவருக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு 'விஞ்ஞான மேதை' இணை அமைச்சர் சத்தியபால் சிங், டார்வின் சித்தாந்தமே தவறு என்று கூறி, எதிர்ப்பு புயல் கிளம்பிய பின் மவுனமாக்கப்பட்டார்.

அவரே இப்போது மீண்டும் வாய் திறந்து வக்கணைப் பேச்சுப் பேசுகிறார்.

நியூட்டன் புவிஈர்ப்பு விதிகளைக் கண்டறியும் முன்பே, வேத மந்திரங்களில் வேதம் எழுதியோர் கண்டறிந்து விட்டார்களாம்! எனவே சர் அய்சக் நியூட்டனுக்கு இந்தப் பெருமை சேர முடியாதாம். அதெல்லாம் வேத மந்திரங்களிலேயே உள்ளதாம்!

வாஸ்து சாஸ்திரப்படி கட்டடங்களைக்
கட்ட வேண்டுமாம்!

அதோடு, கல்விக் கூடங்கள், கல்லூரி, பல்கலைக் கழகக் கட்டடங்களைக் கட்டுவோர், வாஸ்து சாஸ்திர முறைப்படிதான் அக்கட்டடங்களைக் கட்ட வேண்டுமாம்!

அட அறிவுக்கொழுந்துகளே, தாஜ்மஹால் வாஸ்து சாஸ்திரப்படியா கட்டப்பட்டது? பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் வாஸ்து சாஸ்திரப்படியா கட்டப்பட்டது?

நியூயார்க்கின் எம்பையர் ஸ்டேட் பில்டிங்ஸ் என்ற 86 மாடிக் கட்டடம், சிகாகோவின் 105 மாடிகள் உள்ள கட்டடம், கோலா லம்பூரின் பெட்ரோஸ் டவர் என்ற 105க்கு மேற்பட்ட மாடிகள் உள்ள கட்டடம், துபாயின் 150க்கு மேற்பட்ட மாடிகள் கொண்ட  கட்டடம் எல்லாம் வாஸ்து சாஸ்திரப்படியா கட்டப்பட்டன?

சோதிடம் ஒரு போலி விஞ்ஞானம்

Pseudo Science என்ற போலி விஞ்ஞானத்தை, உண்மைபோல் இணைத்து மாணவர் மூளையில் மூட நம்பிக்கை இருளையும், அபத்த அழுக்குகளையும் ஏற்றுவது?

ஜோதிடம் ஒரு போலி விஞ்ஞானம், அதைச் சொல்லிக் கொடுக்கச் செய்வதே அபத்தம். அபத்தம் மட்டுமல்ல; அரசியல் சட்ட அடிப்படைக் கடமைகளுக்கு முரணான நடைமுறை.

அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம்

51A(h)  பிரிவில் உள்ள Fundamental duties என்பதில்"It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform  என்ற சட்டப் பிரிவிற்கு விரோதமான ஒன்று அல்லவா?

"அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்கும் உணர்வைப் பெருக்குதல், மனித நேயம், சீர்த்திருத்தம் இவைகளை வளர்த்தல் இவை எல்லாம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை கடமை" என்று கூறுகிறதே!

அறிவியலைக் கேலிக் கூத்தாக்குவதுபோல், புராணக் கற்பனைகளுக்கு அறிவியல் முன்னோட்டப் பெருமைகளை அள்ளித் தெளிக்கலாமா? புராணங்களையே 'வரலாறுகளாக' சித்தரித்து வைதீகபுரிக்குப் புதிய தலைமுறையினரை அழைத்துச் செல்லுதல் -இவை அசல் பிற்போக்குத்தனத்தின் சதிராட்டம் அல்லவா?

பிரதமரே விஞ்ஞானிகள் மாநாட்டில் சிவபெருமான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார் என்று பேசினாரே! இதைவிட கேலிக் கூத்து வேறு உண்டா?

அதுவும் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்த  "பாரத ரத்னா" சி.என்.ஆர். ராவ் (சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்) பிரதமர் அறிவியல் ஆலோசகரைப் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதுண்டே!

2019தான் விடிவா?

48 மாத ஆட்சியில் இத்தனைக் கேலிக் கூத்துக்களும் - நாளும் பெருகிய வண்ணம்  உலக அரங்கில் தலைக் குனிவையல்லவா ஏற்படுத்துகின்றன! 2019இல் தான் இதற்கு விடிவா என்று பல தரப்பட்ட மக்கள், ஏமாந்த இளைஞர்கள் உட்பட பலரும் வேதனைத் தீயில் வெந்து கருகிய வண்ணம் உள்ளனர்.

நாடு எங்கே போகிறது? நோபல் பரிசு பெற்ற இலக்கிய எழுத்தாளர் வி.எஸ். நைப்பால்(V.S. Naipaul)  நம் நாட்டைப் பற்றி, சில ஆண்டுகளுக்கு முன் 'An Area of Darkness' என்று எழுதியிருந்தார். இது இப்போது மேலும் அதற்குச் சான்று பகரும் நிலை - இப்பேச்சுகள் - அபத்தங்கள் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

அந்தோ கொடுமை!

சென்னை                                                                      தலைவர்
2.3.2018                                                                  திராவிடர் கழகம்


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles