Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

'நீட்டில்' நடக்கும் மோசடிகள் ரூ. 2 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வர்களின் விவரங்களைப் பெறலாம்

$
0
0

புதுடில்லி, ஜூலை 22 -’நீட்’ தேர்வில் குளறுபடிகளும், முறைகேடுகளும் ஒருபுறம் என்றால் ‘நீட்’ தேர்வு எழுதியவர்களின் விவரங்களை பணத்திற்கு விற்கும் கொடுமைகளும் அரங்கேறி உள்ளன. சட்ட ரீதியாக இதுபோன்ற தகவல்கள் கசிவு என்பது தண்டனைக்குரியது. ‘நீட்’ தேர்வர் களின் தகவல்களை விற்பனை செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு அலட்சியம் காட்டி வருகிறது. ‘நீட்’ தேர்வர் களின் தகவல்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பணத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இது குறித்த விவரம் வருமாறு:

‘நீட்’ தேர்வர்களின் பெயர், முகவரி, மெயில் அய்.டி. உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விலைக்கு விற்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, 2018-ஆம் ஆண்டில் ‘நீட்’ தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில், 2 லட்சம் மாணவர்களின் முழு விவரங்களும் தற்போது ஆன்லைனில் கிடைக்கின்றன; ரூ. 2 லட்சம் தந்தால், அந்த 2 லட்சம் மாணவர்களின் முழுவிவரங் களையும் குறிப்பிட்ட இணையத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மய்யங்கள் ஆகியவற்றை குறிவைத்து, இந்த டேட்டாக்கள் விற்கப்பட்டுள்ளன. ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்றும், குறைந்த மதிப் பெண் எடுத்ததால், சீட்கிடைக்காமல் போனவர்களை கண்டுபிடித்து, அவர்களை தங்கள் கல்லூரி களில் சேருமாறு அழைக்கவும், இத்தனை லட்சம் கொடுத்தால் நீங்கள்மருத்துவப் படிப்பில் சேரலாம் என்றுபேரம் பேசவும், தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்களின் தரவுகள் பயன்பட்டிருக்கின்றன.

அதேபோல ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறாத வர்களை தொடர்புகொண்டு, அடுத்தாண்டு ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற நாங்கள் பயிற்சி அளிக் கிறோம்; இவ்வளவு பணம்கட்டினால் போதும், நீங்கள் மருத்துவர் ஆவது உறுதி என்று ஆள்பிடிப்பதற்கு, தனியார் பயிற்சி நிறுவனங்களும் இந்த தகவல்களை விலைக்கு வாங்கியிருக்கின்றன.

தகவல்களை விற்றதன் மூலம் குறிப்பிட்ட இணைய நிறுவனமும் கொள்ளை லாபம் அடைந் திருக்கிறது. தனியார் ஊடக நிறுவனமொன்றுதான் இந்த உண்மைகளை தற்போது வெளிக்கொண்டு வந்துள்ளது.

குறிப்பிட்ட அந்த இணையதள நிறுவனத்திடம், ‘நீட்’ தேர்வர்களின் விவரங்களை விலைக்கு கேட்பதுபோல கேட்டு, தனியார் ஊடகம் நிறுவனம் ஊடாடியுள்ளது. அதற்கு அந்த இணையதளம், ‘நீட்’ தேர்வர்கள் தொடர்பான ‘சாம்பிள் டேட்டா’வை வாட்ஸ் ஆப்பில் ஷேர் செய்துள்ளது.

அதை வைத்து, தனியார் ஊடகம், 'சாம்பிள் டேட்டா'வில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைப்பேசி எண்களைத்  தொடர்புகொண்டு பேசுகையில், தொலைபேசியை எடுத்தவர்கள், தாங்கள் ‘நீட்’ தேர்வு எழுதியவர்கள்தான் என்றும், அவர்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் உண்மைதான் என்றும் கூறியுள்ளனர்.

‘நீட்’ பயிற்சிக்கு வருமாறு,தனியார் பயிற்சி நிறுவனங்கள் பல தங்களைதொடர்பு கொண்டதை யும் தெரிவித்துள்ளனர்.

“நான் ‘நீட்’டில் வெற்றி பெற்று விட்டேன்; இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இந்தக் கல்லூரியில் சேர்ந்து கொள், அந்த படிப்பில் சேர்ந்து கொள் என்று நாளொன்றுக்கு சுமார் அய்ந்து அழைப்புகளாவது வருகின்றது’’ என்று மாணவர் ஒருவர் கூறியுள்ளார். அய்.டி. ஆக்ட் 43கி மற்றும் 72கி ஆகியசட்டங்கள், இதுபோன்ற தகவல்கள் கசிவை தடை செய்கின்றன. எனினும் இந்தச் சட்டங்களால் இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதாக இல்லை என்பது முக்கியமானது.

மாணவி ஒருவர் எழுதிய கடிதத்தை,பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் பகிர்ந்துள்ளார். ஆனால், அந்த மாணவியின் மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண்ணை அவர் மறைக்கவில்லை.  அய்.டி. ஆக்ட் 43கி மற்றும் 72கி அடிப்படையில் இதுவும் குற்றம் எனப்படுகிறது.

எனவே, சட்டங்கள் இவ்வாறெல்லாம் இருக்கும் போது, நீட் தேர்வர்களின் தகவல்களை கசிய விட்டவர்கள் யார்; அவர்களை அரசு கண்டுபிடிக் குமா; தண்டிக்குமா? என்ற கேள்விகள் எழு கின்றன.

ஏற்கெனவே, அதிகமான பாதுகாப்பு வசதிகள் கொண்டிருப்பதாக கூறப்பட்ட ஆதார் தகவல்களும் விலைக்குவிற்கப்பட்டன. ஒருவரின் ஆதார் ரகசியங்களை யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும் என்றநிலையில்தான் பாதுகாப்பு இருக்கிறதா? என்று இப்போதுவரை கேள்விகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், ‘நீட்’ தேர்வர் களின் விவரங்களும் இணையத்தில் கிடைக்கும் என்பது, ஆட்சியாளர்களின் அலட்சியத்தையே காட்டுவதாக அமைந்துள்ளது.

 


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles