விடுவிக்கப்பட்ட இந்துத்துவ தீவிரவாதிகள்மீது குற்றச்சாட்டுப் பதிவு
விசாரணை நீதிமன்றம் உத்தரவு
மும்பை, அக்.31 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சங் பரிவார்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்மீது நேற்று (30.10.2018) குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது - இவ்வழக்கில் இது புதிய திருப்பமாகும்.
மகாராட்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் மாலேகான் என்ற இடத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி மசூதி அருகில் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தில் வைக் கப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிக மானோர் காயமடைந்தனர். இது தொடர் பான வழக்கை மகாராட்டிரா தீவிரவாத தடுப்புப் படை ஆரம்பத்தில் விசாரித்தது.
இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக ராணுவ அதிகாரி பிரசாத் புரோஹித், பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய், அஜய் ரஹிர்கர், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி, சமீர் குல்கர்னி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். புரோஹித் கைது செய்யப்படும்போது ராணுவ அதிகாரியாக இருந்ததால் அவர் மீது வழக்கு தொடர மாநில தலைமைச் செயலாளர் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம்தேதி அனுமதி வழங்கினார்.
ஆரம்பத்தில் இவர்கள்மீது மகாராட்டிரா குற்றத்தடுப்பு (மொக்கா) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மகாராட்டிரா தீவிரவாத தடுப்புப்படை விசாரித்து வந்தது. பின்னர் இவ்வழக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.அய்.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள என்.அய்.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதோடு இவ்வழக்கில் இருந்து பிரக்?யாசிங் தாக்கூர், ஷியாம் சாஹு, பிரவீன், சிவ்நாராயண் ஆகியோ ருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தால் அவர்களை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்று தேசிய புல னாய்வு ஏஜென்சி கேட்டுக்கொண்டது. ஆனால், பிரக்யா சிங் தாக்கூர் தவிர மற்ற மூன்று பேரையும் இவ்வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. அதோடு மட்டுமல்லாது குற் றம் சாட்டப்பட்ட அனைவரையும் மொக்கா சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்த சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தது. இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் பல்வேறு நீதி மன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட் டன(30.10.2018)இவ்வழக்கில்குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது குற்றச்சாட்டுக் களைப் பதிவு செய்தது. இதனால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதி மன்றத்தில் ஆஜராகினர். வழக்கில் குற்றம் நிரூபணமானால் அதிகப்பட்சம் ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.