சென்னை, ஆக. 3 மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்னும் நவீன குலக்கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கடந்த 28 ஆம் தேதி சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஒத்த கருத்துள்ளோரின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை செயல்படுத்தும் வகையில் ஆதரவுகள் குவிகின்றன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வர திட்டமிட்டு வரும் தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள் என்ற ஆவணத்தில் கூறப்பட்டுள்ள கொள்கை முன் மொழிவுகளை இக்கூட்டம் முற்றாக நிராகரிக்கிறது.
இக்கோரிக்கையை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்,அரசைவலியுறுத்திடவும், வரும் 2016 ஆகஸ்டு 8 ஆம் தேதி திங்கள் கிழமை காலை சென்னையில் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் நடைபெறவிருக்கும் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு ஆதரவு தெரிவிப்பதோடு,இவ் வார்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கி னர் திரளாகப் பங்கேற்பது என்று முடிவு செய்யப் படுகிறது.
1976 நெருக்கடி காலத்தில் மாநில பட்டியலை மாற்றி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல் வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
மனிதநேய மக்கள் கட்சி
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கத் திட்ட மிட்டு அதற்காக சில விவாதத் தலைப்புகளை 2015 ஜனவரியில் வெளியிட்டது. நாடு முழு வதும் 2.75 லட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், வலைதளம் மூலம் 29 ஆயி ரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும், அதைத் தொகுத்து அறிக்கை தருவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் அய்ஏஸ் அதிகாரி டிஎஸ்ஆர்சுப்ரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் 43 பக்கங்கள் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இந்தப் புதிய கல்விக் கொள்கை காவிமயமானதாகவே உள்ளது. இந்தப் புதிய கல்விக் கொள்கை சிறுபான்மைக் கல்விநிறு வனங்களின் இறையாண்மைக்கு பங்கம் விளை விக்கும் வகையில் அவற்றின் உரிமைகளைப் பறிக்கும்வகையில்அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தை அனைத்து நிலையிலும் கட்டாயமாக்குவதும் இதன் நோக்கமாகும். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பாசிச சங்பரிவார் சக்திகள் முன்னேடுக்கும் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே கல்வி, ஒரே பண்பாடு என்பதை நடைமுறைப்படுத்தவே இந்தப் புதிய கல்விக் கொள்கை.
குலக்கல்வியை ஊக்குவிப்பது, பன்னாட்டு நிறுவனங்கள் கல்வித் துறையில் முதலீடு செய்வது போன்ற அபாயகரமான முடிவுகளுடன் உள்ள இந்தப் புதிய கல்விக் கொள்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கும் மத்தியஅரசைக்கண்டித்து8.8.2016அன்றுசென் னையில் திராவிடர் கழகம் முன்னெடுக்கும் ஆர்ப் பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதோடுஅப்போராட்டத்திலும்பங்கேற் கும் என தெரிவித்துக் கொள்கிறேன். திரளான எண்ணிக்கையில் இப்போராட்டத்தில் பங்குகொள் ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
மாநில உரிமைகளுக்கும், அடித்தட்டு மக் களுக்கும் எதிராகத்திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் மய்ய அரசின் முயற்சியை ஜனநாயக சக்திகள்அனைவரும் இணைந்துமுறியடிக்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. வரும் ஆகஸ்ட் 8 அன்று மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து திராவிடர்கழகம் முன்னெ டுக்கும் ஆர்ப்பாட்டத்திலும் விடுதலைச்சிறுத்தைகள் பெருந்திரளாகப் பங்கேற்கும்.
- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
கிறித்துவ
நல்லிணக்க இயக்கம்
கிறித்துவ நல்லிணக்க இயக்க ஒருங்கிணைப்பாளர் இனிக்கோ இருதயராஜ் அவர்கள், தமது அமைப்பின் சார்பாக ஆதரவு தெரிவித்துள்ளார். தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமாகப் பங்கேற்பர் என்றும் தெரிவித்துள்ளார்.