Quantcast
Channel: headlines
Viewing all 1437 articles
Browse latest View live

அப்பட்டமான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை ஒழித்திட ஒன்றிணைந்து போராடுவோம்!

$
0
0

அப்பட்டமான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை
ஒழித்திட ஒன்றிணைந்து போராடுவோம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அவசியம் தேவையே! - கி.வீரமணி

வேத புராண, இதிகாசங்களைக் கற்பிக்க அய்.அய்.டி.களில் சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதானது - பச்சையான பார்ப்பனப்  பண்பாட்டுப் படையெடுப்பு தான்; தமிழ்நாட்டில் ஒன்றிணைந்து இந்த ஆரிய சூழ்ச்சியை முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசு அதிரடி உத்தரவு

நான்கு வேதங்களில் இடம்பெற்றுள்ள, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருத்துக்களை படிப்பதற்கு வசதியாக, அய்.அய்.டி.,களில், சமஸ்கிருத மொழியை அறிமுகப்படுத்தும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பண்டைய புராணங்கள் மற்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ள அறிவியல் கருத்துக்களை, மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது தொடர்பாகவும், சமஸ்கிருத மொழியை பாதுகாப்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையிலான குழுவை, மத்திய அரசு அமைத்தது. இக்குழு, ஆய்வு நடத்தி, அளித்த அறிக்கை விவரம்:

வேதங்களிலும், பல்வேறு ஹிந்து புராண நுல்களிலும் இடம்பெற்றுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்துக்களை படிக்க வசதியாக, நாடு முழுவதும், அய்.அய்.டி.,களில் சமஸ்கிருத மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமஸ்கிருத மொழி வாயிலாக, ஹிந்து புராண நூல்களில் உள்ள தொழில்நுட்ப, அறிவியல் விஷயங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், வேதங்கள் மற்றும் புராண நூல்களில் இடம்பெற்றுள்ள விஷயங்களை, பாடவாரியாக போதிக்க வேண்டும்.

நவீனகால படிப்புகளாக விளங்கும், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பாக, வேதங்களில் கூறப்பட்டுள்ளவிஷயங்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக, அய்.அய்.டி., இந்திய அறிவியல் மய்யம், மத்திய பல்கலை.கள், அனைத்து பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில், சமஸ்கிருத பிரிவுகள் துவக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள அய்.அய்.டி., கல்வி மய்யங்களுக்கு அனுப்பிய உத்தரவில், ‘வேதங்களில் கூறப்பட்டுள்ள அறிவியலை, மாணவர்கள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில், சமஸ்கிருத மொழியை பயிற்றுவிக்க, தனி பிரிவு துவக்கப்பட வேண்டும்‘ எனக் கூறப்பட்டுள்ளது. லோக்சபாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்து மூலம் அளித்த பதிலில், இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
தமிழில் ஏன் கூடாது?

அய்.அய்.டி.,களில், சமஸ்கிருத மொழியை போதிப்பதற்கு, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்.,சின் கொள்கையை திணிக்கும் வகையில், மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளதாக, இடதுசாரி மற்றும் காங்., கட்சிகள் கூறியுள்ளன. டில்லி மாநில துணை முதல்வரும், ஆம் ஆத்மி ‘கட்சி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா, சமூக வலைதளமான, ‘டுவிட்டரில் மத்திய அரசின் முயற்சியை, கிண்டலடித்துள்ளார். ‘மத்திய அரசு, கம்ப்யூட்டர் மொழியை, தேசவிரோதமானது என அறிவித்து விடலாம்‘ என, தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., டி.ராஜா கூறுகையில், ‘’சமஸ்கிருதம் மட்டும் ஏன்? தமிழ் மொழியை ஏன் பயன்படுத்தக்கூடாது? ஆர்.எஸ்.எஸ்., கொள்கைப்படி, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட வேண்டும்,’’ என்றார். காங்., மூத்த தலைவர் பிரமோத் திவாரி, ‘’அய்.அய்.டி., இன்ஜினியருக்கு, அவர் தொழிலில், சமஸ்கிருதம் அவசியமாக இருக்காது. இதுபோன்ற விஷயத்தை திணிப்பது சரியல்ல,’’ என்றார்.

மேலே கண்ட செய்தி இன்றைய நாளேடுகளில் குறிப்பாக (‘தினமலர்’  27.4.2016 பக்கம் - 12) வந்துள்ள செய்தியாகும்.

ஆர்.எஸ்.எஸின் ஆணை :

மத்தியில் ஆட்சியிலுள்ள ஆர்.எஸ்.எஸ். ஆணையை தலைமேல் தாங்கி, அவ்வமைப்பின் வழிகாட்டுதலின்படியே செயல்பட்டு வரும் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசின், மத்திய மனித வளத் துறையின் கட்டாயத் திணிப்பாக, முதலில் தங்களின் நேரடி நிர்வாகத்தின்கீழ் இயங்கும் அய்.அய்.டி. என்ற (Indian Institutes of Technology) மத்திய என்ஜினியரிங் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் (இவைகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆகும்) “செத்த மொழியான” - ஆரிய மொழியான நாட்டு மக்களில் ஒரு சதவிகிதம்கூட பேசாத மொழியான சமஸ்கிருதத்தைப் பாடமாக வைக்க வேண்டுமென்று ஆணை பிறப்பித்துள்ளது!

ஒவ்வொரு அய்.அய்.டி. நிர்வாகக் கழகத்திற்கும் (பல்கலைக் கழகங்களில் உள்ளதுபோல) தனி ஆளுமைக் குழு, கல்விக் குழு உள்ளன.  எத்தகைய பாட திட்டங்களை அவர்கள் போதிப்பது என்பதை, மத்திய கல்வி அமைச்சகம் (மனித வளத் துறை) ஆணையிடுவது பல்கலைக் கழகங்களின் கல்விச் சுதந்திரத்தை அறவே பறிப்பதும், தன்னாட்சியைக் கேலிக் கூத்தாக்குவது ஆன செயலாகும்.

இதற்கு வேடிக்கையான காரணம் கூறப்படுகிறது. வேத விஞ்ஞானம் (Vedic Science) படிக்க இது உதவுமாம்! அப்படி ஒரு விஞ்ஞானம் உள்ளதா?

மலத்தில் அரிசி பொறுக்குவதா? :

புராண இதிகாசங்களில் புதைந்துள்ள தொழில் நுட்பங்களையெல்லாம் இந்த சமஸ்கிருத பாஷையை கற்றுக் கொள்வதன் மூலம் அய்.அய்.டி. மாணவர்கள் மிகவும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளுவார்களாம்!

புராணங்களில் விஞ்ஞானத் தத்துவங்கள் இருக்கின்றன என்று சிலர் கூறியபோது தந்தை பெரியார் நறுக்கென்று அரிசிக் கடையில் அரிசி விற்கிறது; அதை வாங்குவதைவிட்டு, மலத்தில் அரிசி பொறுக்கலாமா என்று கேட்டார்.

இது நமது அரசமைப்புச் சட்டம் கூறியுள்ள 51A(h) பிரிவுப்படி “விஞ்ஞான மனப்பான்மையைப் பெருக்குவது, சீர்திருத்தம் அடைவது, கேள்விகேட்டு அறிவை விசாலப்படுத்துதல், மனிதநேயம்“ - இவைகளுக்கு முற்றிலும் எதிரானது இது!

தங்களிடம் ஆட்சி, அதிகாரம் சிக்கிக் கொண்டது என்பதற்காக,  “தேவபாஷை” என்று பீற்றிக் கொண்டு இதனை அய்.அய்.டி.களில் வைப்பதன் மூலம், சமஸ்கிருத பண்டிதர்களான பார்ப்பனர்கள் - பலருக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கலாம்.

பழைய கள் - புதிய மொந்தை :

மேலும் புராணங்களை, பழைய கள், புதிய மொந்தை என்பது போல ஆய்வு என்ற பேரில் உயர் தொழில் நுட்பக் கல்லூரி - பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதத்தைத் திணித்து, ஒரு ஆரியப் பண்பாட்டை நிகழ்த்தலாம் என்று திட்டமிட்டே இதனைச் செய்கின்றனர்!

ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல்  ஆணையர் கோபால்சாமி அய்யங்கார், சமஸ்கிருத பரப்புக்குழுவின் தலைவர் (இவர் நீடாமங்கலத்தை சார்ந்த அய்யங்கார் பார்ப்பனர்) சில வாரங்களுக்கு முன்பு கட்டாயமாக திணிக்க மாட்டோம் என்று கூறியதற்கு நேர்மாறானது  இச்செயல்; இப்படித்தான் முன்பு டாக்டர் பட்டத்திற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை - மனு போடவே - இருந்தது; நீதிக்கட்சி ஆட்சியில், (சமஸ்கிருத எம்.ஏ. படித்த) முதல்வர் பனகல் அரசரே அதனை ஒழித்தார் - தந்தை பெரியார் போன்றவர்களது முயற்சியினால்!

இப்போது பாம்பு நுழைந்து விட்டது; முதலில் அய்.அய்.டி. மூலம்!

அடுத்து CBSE என்ற மத்திய பள்ளிகள் மூலம்; அதற்கடுத்து எல்லா பள்ளிகளிலும் கட்டாயம் என்று ஆணைகளையும் அனுப்பத் தயங்க மாட்டார்கள்.

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு! :

மிகப் பெரிய ஆபத்து இது; ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் முதல் தாக்குதல்; இதனை துவக்கத்திலேயே அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து விரட்டி அடிக்க வேண்டும்!

பார்ப்பன உயர் ஜாதி மாணவர்களுக்கு மேலும் அய்.அய்.டி. கதவு திறக்கவும், அவர்களை வெற்றி பெற வைக்கவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்ற மாணவர்களை அழுத்தி மட்டம் தட்டவும்கூட இச்சமஸ்கிருத திணிப்பு மறைமுகமாகவும், உதவக் கூடும். இது பண்பாட்டுப் படையெடுப்பு மட்டுமல்ல; ஒரு சூழ்ச்சிப் பொறியும்கூட.

எதிர்த்துப் போராடி ஒழிப்போம்! :

இதனை மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் அனைவரும் அணி திரண்டு எழுந்து எதிர்த்து ஒழிக்க வேண்டும்.

‘சமஸ்கிருத நாள்’ கொண்டாடும்படி முன்பு தமிழ்நாட்டில் ஆழம் பார்த்து - எதிர்ப்புக் கிளம்பியவுடன் பின் வாங்கிக் கொண்டது மத்திய மனிதவளத் துறை - நினைவிருக்கிறதா?


மே 16 தேர்தல் முடிந்த பிறகு மிகப் பெரியதொரு எதிர்ப்பினை தமிழ்நாட்டில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து திராவிட  மாணவர்களையும் திரட்டி, அற வழிக் கிளர்ச்சிகளை நடத்தும் என்பதையும் தெரிவிக்கிறோம்.

இந்தி எதிர்ப்பைவிட மிகவும் முன்னுரிமை கொடுத்து எதிர்க்க வேண்டியது இந்த சமஸ்கிருதத் திணிப்பு என்பதை தமிழ்நாட்டுக் கட்சித் தலைவர்கள், மொழிப் பற்றாளர்கள், இன உணர்வாளர்கள் மறந்து விடக் கூடாது!


கி.வீரமணி    
தலைவர்,     திராவிடர் கழகம்


சென்னை
27.4.2016



இந்துக் கோயில்களில் நுழைந்த பெண்கள் தர்காவிலும் நுழையும் போராட்டம்!

$
0
0

ஆர்.எஸ்.எஸ். பெண்களுக்கான உரிமைகளை அங்கீகரிக்கட்டும்!

திருப்தி தேசாய் அறிவிப்பு

மகாராஷ்டிரா கோவில்களில் நுழையும் போராட்டத்தில் சட்டரீதியிலும், போராட்ட வடிவிலும் வெற்றிவாகை சூடிய திருப்தி தேசாய் மும்பை ஹாஜிஅலி தர்காவில் நுழையும் போராட்டத்தை இன்று (ஏப்ரல் 28) துவங்குவதாக அறிவித்தார். அதற்கு முன்பு மும்பை ஆசாத் மைதானத்தில் நூற்றுக் கணக்கான பெண்கள் மத்தியில் பேசிய திருப்தி தேசாய் கூறியதாவது:

கோவில்களில் பெண்கள்


நூற்றாண்டு காலமாக பெண்களை தீட்டுப் பட்டவர்கள் என்று கூறி மகராஷ்டிராவில் 300-க்கும் மேற்பட்ட சிறிய பெரிய கோவில்களில் பெண்கள் நுழைவது தடைசெய்யப்பட்டிருந்தது. இது பெண்ணினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி யாகும்.  கடந்த ஆண்டு சனி சிங்கனாப்பூரில் பெண் நுழைந்தார் என்ப தற்காக கோவிலைக் கழுவி தீட்டுக் கழித்தனர். அதைவிட அந்த கோவில் நிர்வாகி ஒருவர் பெண்கள் தூய்மையுள்ளவர்களா? இல்லையா என்று எப்படித் தெரியும்? இதை ஒன்றும் கேட்டு அறிந்து கொள்ள முடியாது. ஆகவே பெண்களை கோவிலின் உள்ளே நுழைவதை தடைசெய்தது சரியே என்று கூறியதுமல்லாமல் பெண்களை இழிவுபடுத் துவது போல் சில வார்த் தைகளைப் பேசினார். இதுதான் நமது போராட்டம் வெடிக்க காரணமாக இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் போராடி வருகிறோம், தினசரி பல்வேறு தரப்பட்ட மக்களிடமிருந்து ஆதரவு வந்துகொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில் முகம் தெரியாத பல கோழைகள் கேட்கக்கூடாத வார்த்தை களைப் பேசி திட்டினார் கள். இதற்கெல்லாம் நாம் பயப்படவில்லை, வெளிநாட்டு நிதிபெற்று இந்து மதக்கலாச்சாரத்தை அழிக்கும் செயலில் ஈடு படுகிறார் என்று என்மீது குற்றம் சாட்டினர்.  

என்னை காங்கிரஸ் மற்றும்  இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்பின் ஏஜெண்டு என்று கூட பத்திரிகைகள் எழுதின. அத்தனையையும், ஏச்சுக் களையும், பேச்சுக் களையும் தாங்கி சட்ட ரீதியாக வென்று போராட் டத்திலும் வென்று விட்டோம். நாசிக் நகரில் உள்ள திரியம்ப கேஷ்வரர் கோவில் புராணத்தில் பெண்கள் நுழையக்கூடாது என்று சிவன் சொன்னதாக எழுதியுள்ளார்கள்.  

அது எந்த சிவன் என்று அதை எழுதிய வர்களிடம் தான் கேட்க வேண்டும், சிவனின் உடலில் ஒரு பகுதியாக பெண் உள்ளார். அப்படி இருக்க சிவபெருமான் கூறியதாக மக்களை ஏமாற்றுகிறார்கள்.  

சனி சிங்கனாப்பூர் கோவிலில் நமது போராட்டம் காரண மாக அக்கோவில் தலைமை நிர்வாகி, மற்றும் 3 உறுப்பினர் பதவியில் பெண்கள் அமர்ந்துள்ளனர். நான் சனிக்கோவிலில் நுழைந்து பூசை செய்து வெளியே வந்ததும், கோவில் தலைமை நிர்வாகிகள் என்னை மாலையிட்டுப் பாராட்டினர். கடந்த ஜனவரி மாதம் ஆண்களின் மிரட்டல் காரணமாக இவர்களும் நாங்கள் கோவிலில் நுழைவதை தடுத்து எங்களைத் தாக்கினர்.  இன்றோ எங்களுக்கு மாலையிட்டு அவர்கள் வரவேற்பு கொடுத்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.

தர்காவிலும்
நுழையும் பெண்கள்


தலைநகர் மும்பையில் ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழைவதை சில ஆண்டுகளுக்கு முன்பு தடைசெய்துள்ளனர் என்று எனக்குத் தெரிய வந்தது. இந்து மதத் தில் மட்டும் தான் மூட நம்பிக்கைகளின் காரண மாக பெண்களை நுழைய அனுமதி மறுக்கின்றார்கள் என்றால் கல்லறையை வழிபாடு  தர்கா வழிபாட்டில்கூட பெண்களுக்கு தடை செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. ஆகவே வியாழன் அன்று நான் ஹாஜி அலி தர்காவில் நுழைந்து ஹாஜி அலி கல்லறைக்கு மாலை அணிவித்து புனிதப் போர்வையை போர்த்த இருக்கிறேன்,  இதற்கு ஆதரவு தெரிவித்து திரைப்பட நடிகர்கள் சாருக் கான், அமிர்கான், மற்றும் சல்மான் கான் இவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.  

ஆர்.எஸ்.எஸ் ஏமாற்று வேலை

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது பிரமாச்சாரிகளை மாத்திரம் தீவிர உறுப்பினர்களாகக் கொண்ட ஓரு அமைப்பாகும். இந்த அமைப்பில் இணைந்த காரணத்தால் தான் நரேந்திர மோடி தனது மனைவியை விட்டு விட்டு வந்தார்  என்ற ஒரு பேச்சும் எழுகிறது. எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்களுக்கு இடம் ஏன் இல்லை என்ற கேள்வி எழக்கூடாது என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தந்திரமாக  ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவிகா சமிதி என்ற பெண்கள் அமைப்பையும் தனியாக உருவாக்கி வைத்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்கள்  

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்களுக்கும் சரிபங்கு அதிகாரம் வேண்டும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒன்று தனிப்பட்ட சர்வாதிகார அமைப்பு அல்ல. அந்த அமைப்பு இந்திய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது, அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள விதிகளின் படி இந்த நாட்டில் எந்த ஒரு அமைப்பும் இயங்க வேண்டும். அரசமைப்புச் சட்டம் பெண்களுக்கு சரிபாதி  உரிமைகளை வழங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தங்கள் அமைப்பில் பெண்களுக்கு சரிபாதி உரிமைகளை வழங்கவேண்டும். இது குறித்து நான் மோகன் பாகவத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறினார்.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வா? மே7ஆம் தேதி திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

$
0
0

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வா?

மே7ஆம் தேதி திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அவசியம் தேவையே! - கி.வீரமணி

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு - சமூக நீதிக்கு எதிரானது - அது கைவிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழக மாணவரணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை இவ்வாண்டு முதலே செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

இதுகுறித்து ‘விடுதலை’யில் விரிவாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளோம். (12.4.2016).

இதில் மிக முக்கியமாகக் கவனிக்கத் தக்கவைகளும், வினாக்கள் எழுப்பத்தக்கவைகளும் ஏராளம் உள்ளன.

உச்சநீதிமன்றத்தின் அன்றைய தீர்ப்பு என்னாயிற்று?


(1) மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வினை நடத்திட மருத்துவக் கவுன்சிலுக்கு சட்டப்படியான அதிகாரம் கிடையாது என்று இதே உச்சநீதிமன்றம் அறுதியிட்டுத் தீர்ப்புக் கூறியுள்ளதே (18.7.2015) அதற்கு முரணாக அதே உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பது சரியானதுதானா? முரண்பாடு அல்லவா?

(2) மாநில அரசுகள், தம் நிதியில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கும்நிலையில் அதனை அகில இந்தியத் தொகுப்புக்குக் கொண்டு செல்லுவது சரியா?

(3) நெருக்கடி நிலைகாலத்தில் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதால் ஏற்பட்ட தீய விளைவு தானே இது!

+2 தேர்வு மதிப்பெண்ணுக்கு மதிப்பு இல்லையா?

(4) +2 தேர்வு நடத்தி அதில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில்  மாணவர்களை சேர்ப்பதுதான் சரி - அதற்கு மேல் இன்னொரு தேர்வு எதற்காக? அப்படியென்றால் அரசு நடத்திய +2 தேர்வுக்கு என்னதான் மரியாதை?

(5) தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வே சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. அதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியா? மாநில ஆட்சியின் உரிமையில் மத்திய அரசு சவாரி செய்ய உச்சநீதிமன்றம் வழி வகுத்துக் கொடுக்கலாமா?

இந்தியா முழுமையும் ஒரேவகைக்
கல்வி திட்டம்தான் இருக்கிறதா?


(6) இந்தியா முழுவதும் ஒரே வகையான கல்வி திட்டம் இல்லாத நிலையில், எல்லோருக்கும் பொதுவாக ஒரு நுழைவுத் தேர்வை எப்படி நடத்திட முடியும்? இதில் பொது நியாயம் ஏதாவது இருக்கிறதா?

(7) சி.பி.எஸ்.இ. அடிப்படையில்தான் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அப்படியானால் சி.பி.எஸ்.இ. முறையில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிப்பதற்குத்தான் இந்தத் திட்டமா?

(8) உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் இன்னொரு புதிய ஆபத்தும் தலைக்கு மேல் கொடுவாளாகத் தொங்குகிறது. மாநிலத்தில் பெரும்பாலும் நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டி,  பலவகையான பள்ளிகளையும் சி.பி.எஸ்.இ. முறையில் மாற்றிடத் தூண்டும் வேலையல்லவா இது?

ஏற்கெனவே தனியார்ப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. முறைக்கு அதிக எண்ணிக்கையில் மாறிக் கொண்டிருக்கும் பொழுது உச்சநீதிமன்றத்தின் நுழைவுத் தேர்வு உத்தரவால், நாடெங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பெருகுமா பெருகாதா?

சமஸ்கிருதம் - இந்தியைத் திணிக்கத் திட்டமா?


(9) சி.பி.எஸ்.இ. முறை செயல்படுத்தப்பட்டால், இந்தியும், சமஸ்கிருதமும் கொல்லைப்புற வழியில் நுழைவதற்கான ஏற்பாடா?

(10) தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இரு மொழி திட்டத்தை ஒழிப்பதற்கான சூழ்ச்சியா?

(11) நகர்ப்புறப் பள்ளிகளில் உள்ள வசதிகள் கிராமப் புறங்களில் உண்டா?

தனிப் பயிற்சி பெற ஏழை எளியவர்களுக்கு வசதி உண்டா?

(12) நுழைவுத் தேர்வுக்காக தனிப் பயிற்சிகளில் சேர்ந்து படித்திட பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்களுக்கு வாய்ப்பு உண்டா? கிராமப்புறங்களில்அத்தகு பயிற்சி நிறுவனங்கள்தான் இருக்கின்றனவா?

(13) சமூகநீதிக் கொள்கை ஓங்கி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்கள் நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் சேர்ந்து வருவதை ஒழித்துக் கட்டும் பார்ப்பன ஆதிபத்திய சூழ்ச்சி இதன் பின்னணியில் இருக்கிறது என்று ஏன் கருதக் கூடாது?

+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் தகுதியில் குறைந்ததாக ஏதேனும் ஆதாரம் உண்டா?

(14) ஆந்திர மாநிலமும், ஜம்மு காஷ்மீர் மாநிலமும் அகில இந்திய தொகுப்புக்கு இடம் வேண்டாம் என்று கூறித் துண்டித்துக் கொண்டுள்ளன. அந்த நிலையை எடுக்கத் தமிழ்நாடு அரசு யோசிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் இதுபோன்ற அறிவார்ந்த சமூகநீதியை உள்ளடக்கிய நியாயமான வினாக்கள் உண்டு.

பெரியார் பிறந்த மண் ஏற்காது

தந்தை பெரியார் பிறந்த மண், திராவிட இயக்கம் வேரூன்றிய தமிழ் மண்ணுக்கே உரித்தான (Soil Psychology) சமூகநீதி மனப்போக்கு தழைத்தோங்கும் இந்தத் தமிழ்ப் பூமி, சமூகநீதிக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ளாது - ஏற்றுக் கொள்ளவே கொள்ளாது.

முதல் அமைச்சர் கருத்துத் தெரிவிக்காதது ஏன்?

இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு - முதல் அமைச்சர்  ஏன் கருத்துக் கூறவில்லை? மிக முக்கியமான சமூகநீதிப் பிரச்சினையில் அலட்சியம் காட்டலாமா?

மே 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

மேற்கண்ட காரணங்களை வலியுறுத்தவும், மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கவும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை உச்சநீதிமன்றத்திற்கு வெளிப்படுத்தவும் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யவும் வலியுறுத்தி  திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் வரும் 7.5.2016 காலை 11 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் மானமிகு பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மாணவர்களே அணிதிரள்வீர்!

கட்சிகளைக் கடந்து மாணவச் செல்வங்களே, சமூகநீதியாளர்களே, அணி திரள்வீர்! அணி திரள்வீர்!!



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
29.4.2016

புரட்சிக்கவிஞர் 126ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தலைநகரில் பெரியார் விருது, புரட்சிக்கவிஞர் விருதுகளுடன் கருத்து விருந்து

$
0
0

சென்னை, ஏப். 30_ சென்னை சி.அய்டி.காலனி கவிக்கோ அரங்கில் குடும்ப விழா என்று எண்ணத்தக்க வகையில்  புரட்சிக்கவிஞர் 126ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று (29.4.2016) மாலை மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகங்க ளின் சார்பில் 37ஆம் ஆண்டு தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா, புரட்சிக்கவி ஞர் விழா இனமானக் குடும்பத் திருவிழாவாக நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் இரா.தமிழ் செல்வன் தலைமை வகித்தார். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், தென் சென்னை பகுததறிவாளர் கழகத் துணைத் தலைவர் மு.இரா.மாணிக்கம் முன் னிலையில் வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி. கோபால் வரவேற்றார்.  திராவிடர் கழக வெளியு றவு செயலாளர் வீ.குமரே சன் தொடக்க உரையாற் றினார். விழாவின் இணைப் புரையை மாநில மாணவ ரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வழங்கினார்.
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு

Ôபெரியார் விருதுÕ மற் றும் புரட்சிக்கவிஞர் விருது குறித்து அறிமுகப்படுத்தி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் உரையாற்றினார். சென்னையில் பார்ப்பனர் களின் இந்து சமய கலை விழா என்கிற போர் வையில் நடைபெறுவதாக இருந்த பார்ப்பன பண் பாட்டுப் படையெடுப்பை தொடக்கத்திலேயே முறி யடித்திட திராவிடர் கழ கத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் தொலைநோக்குப் பார் வையின்மூலமாக   தமிழர் கலை பண்பாட்டுப்புரட்சி விழாவாக புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடத் தொடங் கியதுகுறித்த வரலாற்றுத் தகவல்களை எடுத்துக் கூறினார்.

புரட்சிக்கவிஞர் மறைந்த நாளான ஏப்ரல் 21 முதல் பிறந்த நாளான ஏப்ரல் 29 முடிய எட்டு நாள்கள் தலை நகர் சென் னையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவாக புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா தொடர்ந்து கொண்டா டப்பட்டு வந்தது, அவ்விழாக்களில் திமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட ஏராளமானவர் கள் பங்கேற்றதுடன், திரைத் துறை, கலைத்துறையில் சாதனைகளை படைத்த தமிழர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு செய்து விருதுகள் வழங்கப் பட்டு வந்ததையும் குறிப் பிட்டார்.

29.4.1989 அன்று நடை பெற்ற புரட்சிக்கவிஞர் விழாவில் தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என அறி விக்கக் கோரியதையும், தை பிறந்தால் வழிபிறக்கும் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதையும், பல ஆண்டுகள் கழித்து தை முதல் நாள் தமிழ்ப்புத் தாண்டு என்று அறிவிக்கப் பட்டதையும், இன்று அதற்கு ஏற்பட்டுள்ள தடை குறித்தும் சுட்டிக்காட்டி னார்.

புரட்சிக்கவிஞர் விருது

இவ்விழாவில் முதன் முறையாக Ôபுரட்சிக்கவிஞர் விருதுÕ அளிக்க முடிவெ டுத்து, முதல் விருது பெறு பவராக பாவலர் அறிவுமதி தேர்வு செய்யப்பட்டார். பகுத்தறிவா ளர் கழகத்தின் புரவலர்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாவ லர் அறிவுமதிக்கு சிறிய உருவிலான தந்தை பெரி யார் முழு உருவ சிலை, இயக்க வெளியீடுகள் வழங்கி பயனாடை அணிவித்து புரட்சிக்கவிஞர் விருது வழங்கி பாராட்டினார்.

பெரியார் விருது

Ôபெரியார் விருதுÕ பெறு பவராக சிங்கப்பூர் எழுத்தா ளர் இரத்தின வெங்கடே சன் தேர்வு செய்யப்பட் டார். அவருக்கான விரு தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமி ருந்து பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

புத்தகர் விருது

நாளிதழ், பருவ இதழ் களை பாதுகாத்து பரப்பி வருவதை வாழ்நாள்தொண் டாக செய்து வரும் திருச்சி பொறியாளர் பட்டாபிரா மனுக்கு சென்னை புத்தகச் சங்கமத்தில் புத்தகர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி, பொறியாளர் பட்டா பிராமனுக்கு பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறு வன செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பய னாடை அணிவித்து, பெரி யார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவன வெளியீடுகளை வழங்கி  புரட்சிக்கவிஞர் விழாவில் சிறப்பு செய்தார்.

தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் விருதுகளை வழங்கி விழாப் பேருரையை காலத்தின் அருமை கருதி ரத்தினச்சுருக்கமாக உரை யாற்றினார்.

விருதுகளைப் பெற்றுக் கொண்டு பொறியாளர் பட்டாபிராமன், பாவலர் அறிவுமதி ஆகியோர் ஏற் புரை ஆற்றினார்கள்.

புரட்சிக்கவிஞர் விழா வில் சிறப்புரை ஆற்றிய கவிஞர் ஈரோடுதமிழன்பன் புரட்சிக்கவிஞருடன் ஏற் பட்ட பல்வேறு அனுபவங் களை பகிர்ந்துகொண்டார்.  தந்தை பெரியார் அவர்கள் புரட்சிக்கவிஞர்குறித்து எழுதும்போது சுயமரியா தைக் கவிஞர் என்று பாராட்டியதையும், அதனாலேயே அவருக்குக் கிட்ட வேண்டி யவை கிட்டாமல் போக லாம் என்று குறிப்பிட்ட தையும் எடுத்துக்காட்டிப் பேசினார். புரட்சிக்கவிஞர் குறித்த கருத்துகள் பல தரப்பினரிடமும்  சென்ற டைய வேண்டும் என்றும் தம்முடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

புரட்சிக்கவிஞர் விடு தலைப் போராட்டத்துக் கான கவிஞர், தமிழ்க்கவி, மகாகவி, உலகக்கவி என்ப தற்கான தகுந்த ஆதாரங் களை எடுத்துக்காட்டி பேராசிரியர் ய.மணி கண்டன் உரையாற் றினார். மேலும், புரட்சிக் கவிஞரால் பாராட்டப் பட்ட தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் என்பதை இளமை வளமையை விரும்பும் என் பர். இளமை எளிமையை விரும்பிய புதுமையை. வீர மணியிடம் நேரில் கண்டு உள்ளேன்Õ எனும் புரட்சிக் கவிஞர் வரிகளை எடுத் துக்காட்டி சிறப்புரையாற் றினார்.

விழா முடிவில் தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பேராசிரியர் சிறீ.அருள்செல்வன் நன்றி கூறினார்.

தேர்தலில் நிற்காத திராவிடர் கழகம் ஏன் தி.மு.க.வை ஆதரிக்கிறது?

$
0
0

தி.மு.க. ஒன்றுதான் சமுதாய கொள்கை உடைய அரசியல் கட்சி சொல்வதை

செய்யக்கூடியது - ஆதரித்து வெற்றி பெறச் செய்வீர்!

பாலக்கோட்டில் தமிழர் தலைவர் வேண்டுகோள்

பாலக்கோடு, மே 2- தி.மு.க. ஒன்றுதான் சமுதாயக் கொள்கை உடைய அரசியல் கட்சி - சொன்னதைச் செய்யக்கூடிய தி.மு.க.வை ஆதரித்து வெற்றி பெறச் செய்வீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நேற்று (1.5.2016) மாலை  தி.மு.க. வேட்பாளர் பி.சி.முருகன் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் உரை யாற்றியதாவது:

தருமபுரி - திராவிட இயக்கத்தின்
தாலாட்டும் தொட்டில்


சிறந்த ஒரு இளைஞராக, வழக்குரைஞராக, தொகுதிக்குப் பயன்படக் கூடியவராக உள்ள பி.கே.முருகன் அவர்களை ஆதரித்து, நமது ஒப்பற்ற தமிழினத்தின் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஒரு சிறந்த பண்பாளர்.

இந்த பாலக்கோடு நகரத்திற்கு நான் அண்மையில் தான் வந்து சென்றேன். இப்போது ஒரு நல்ல பணிக்காக மீண்டும் வந்திருக்கிறேன். இன்றுதான் எங்களின் பிரச்சாரம் தொடங்குகிறது என்று வேட்பாளர் சொன் னார். உங்களை மீண்டும், மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

சென்ற முறை,  ஜீவா கிருஷ்ணன் அவர்களால் ஏற் பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு நான் விடைபெற்றுச் செல்லும்போது, இஸ்லாமிய நண்பர்கள் நிறைய பேர் வந்து, நீங்கள் அடிக்கடி வரவேண்டும் என்றார்கள். இந்த மாதிரி ஒரு வாய்ப்பு விரைவில் அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

எங்களின் பிரச்சாரமே தருமபுரி மாவட்டத்திலிருந் துதான் தொடங்குகிறது. தருமபுரி மாவட்டம் என்பது திராவிட இயக்கத்தின் தாலாட்டும் தொட்டில்! எது உண்மையான திராவிட இயக்கமோ அதன் தொட்டில் இந்தப் பாலக்கோடு; அப்படிப்பட்ட மக்களுக்கு நிறைய சொல்லவேண்டியதில்லை. நீங்கள் ஏற்கெனவே தயாராக இருக்கிறீர்கள், முடிவு செய்துவிட்டீர்கள். உங்களுக்கு நினைவுபடுத்தி விட்டுப் போகத்தான் வந்திருக்கிறோம்.
நான் ஒரு சமுதாயப் பார்வையாளன்; மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்கப்படவேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு இயக்கத்தின் தொண்டன், தோழன்.

வேட்பாளர் சொன்னார் பாருங்கள்,

தந்தை பெரியாரால்தான் வழக்குரைஞராக, வேட் பாளராக உங்கள்முன் நிற்கிறேன் என்று குறிப்பிட்டாரே - உண்மைதானே? இந்த இயக்கத்தின் மூலம்தான் நான் வந்திருக்கிறேன். இந்த இயக்கம் இல்லையென்றால், நாம் துண்டை தோளில் போட முடியுமா? முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டியிருக்க முடியுமா? இன்றைக்கு எவ்வளவு பெரிய மாற்றம்! அதைத்தான் நீதிக்கட்சி செய்தது. வரலாற்றை உருவாக்கிய இயக்கம், பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, கலைஞரால் காக்கப் பட்டு, தளபதி ஸ்டாலினால் முன் எடுத்துக்கொண்டு வரும் இயக்கம் தி.மு.க. இதை ஒவ்வொருவரும் பற்றிக் கொள்ளவேண்டும்.

திராவிடர் கழகத்தின் அக்கறை

திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காத அமைப்பு, அப்படி இருக்கும்போது தேர்தலில் ஏன் இவர்களுக்கு  இவ்வளவு  அக்கறை என்று கேட்பார்கள். திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காததுதான். தேர்தலில் நிற்கிறவர் களில் யார் யோக்கியமானவர்கள், இனமானம் உள்ளவர்கள் யார்? சமூகநீதியாளர்கள் யார்? என்று மக்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க, மக்களுக்கு நல்லவர்களை அறிமுகப்படுத்த அக்கறை எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள். அந்த அடிப்படையிலேயே, திராவிடர் கழகம் பணியை இன்று தொடங்கி இருக்கிறது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், இந்தத் தள்ளாத வயதிலும் உடல் உபாதைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு, இன்றைக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். உங்களுக்கு எல்லாம் தெரியும். தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள். அவர்கள் உரையாற்றியபோது ஒரு கருத்தை பல ஊர்களில் மய் யப்படுத்தினார்கள். அதுதான் எங்களுடைய கருத்து. மாறுபட்ட கருத்து கிடையாது. திமுகவுக்கும், மற்ற அர சியல் கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு என்று அவர்கள் சிறப்பாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

‘‘தி.மு.க. அடிப்படையிலே
ஒரு சமுதாய இயக்கம்!’’


திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சி என்பது மாத்திரமல்ல. பத்தோடு பதினொன்று போல் அரசியல் கட்சி அல்ல. அடிப்படையில் இது ஒரு சமு தாய இயக்கம் என்று டாக்டர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். அதுதான் எங்களை இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறது.


நம்முடைய குழந்தை தமிழரசன் சொன்னாரே, தி.மு.க. - தி.க. இரட்டைக் குழல் துப்பாக்கி என்று. திராவிடர் கழகம் செய்வது சமுதாயப் பணி. தாய்க் கழகத்தின் கொள்கைகளை அரசியல் ரீதியாக செயல்படுத்தும் அமைப்புதான், திராவிட முன்னேற்றக் கழகம். இந்த மாதிரி ஒரு அமைப்பு இந்தியாவில் எங்கும் கிடையாது.


திராவிடர் கழகத்திற்கு இருக்கிற அக்கறையெல்லாம், பொதுமக்களாகிய நீங்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதுதான். ஏனென்றால், ‘‘ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன், புலி வேசம் போட்டு ஆடுகிறான்’’ என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்.

புலியைவிட - புலி வேசம் போடுபவர்கள் ஆபத்தானவர்கள்!

தந்தை பெரியார் அவர்கள், எல்லாவற்றையும் நிதா னமாகச் சொன்னார்கள். ஒருமுறை சொன்னார். புலியை விட மிகவும் ஆபத்தானது,  புலி வேசம் போடுகிறவன் என்பார். நெருப்பு போட்டீர்கள் என்றால் புலி ஓடிவிடும். ஆனால், புலிவேசம் போட்டவனுக்கு அது நெருப்பு என்று தெரியும். அதுமாதிரி, இன்றைக்கு அரசியலில் நிறைய பேர் புலிவேசம் போட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். உங்களின் வாக்குகளை பறிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்டவேண்டும் என்பது, எங்களின் பணி. அதற் காகத்தான் நாங்கள் வந்து இருக்கிறோம். எங்களுக்கு வாக்கு கேட்க வேண்டும் என்பதற்காக அல்ல. எங்களு டைய சகோதரர்கள் அங்கு போகவேண்டும் என்று ஏன் நினைக்கிறோம்? மற்றவர்கள் என்ன, எங்களுக்கு விரோ திகளா? மற்றவர்கள் போனால் செய்ய மாட்டார்களா? என்று சிலர் கேட்கலாம். மற்றவர்கள் செய்யமாட்டார்கள். செய்ய அவர்களின் அமைப்பிலே இடம் கிடையாது. இது ஒரு தன்மான இயக்கம். இது குடும்ப உறவை உண்டாக்கும். அய்யா என்றால், தந்தை பெரியார், அண்ணா என்றால், அண்ணன். இன்றைக்கும் நமது கலைஞரிடம் அண்ணன் - தம்பி உறவுகள் இருக்கிறதே!

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உள்ள பெருமை என்னவென்றால், சொன்னதை செய்வதும், செய்வதையே சொல்லுவதுமாக கொண்ட ஓர் இயக்கம். ஒரு தலைமை ஒரு ஆட்சி உண்டு என்றால் அது திமுக தான் என்று பெருமையை நிலை நாட்டி இருக்கிறார்கள்

எத்தனை காரியத்தை செய்திருக்கிறார்கள். இன்றைக்கு வீம்பிற்காக சொல்பவர்களை போல் அல்ல. சொல்லாததையும் செய்தவர்கள் என்று அம்மையார் கூட, முதல்வர் கூட சொல்லிக் கொண்டு இருக்கிறார். இப்பொழுது கூட நான் வரும் போது தொலைக்காட்சியை பார்த்துவிட்டுதான் வந்தேன். அந்த அம்மையார் கோயம்புத்தூரில் பேசுவதை கேட்டு விட்டுத்தான் வந்தேன்.

திமுகவின் தேர்தல் அறிக்கை இந்தியாவிற்கே முன் மாதிரி

இதோ என் கையில் இருப்பது திமுகவின் 2016 தேர்தல் அறிக்கை. இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இது மாதிரியான தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்பட்ட மக்களிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கியிருக்கும் தேர்தல் அறிக்கை. பல திட்டங்களை வகுத்து கொடுத்துள்ள ஒரு சிறப்பான இயக்கம் திமுக, திமுகவைத் தவிர வேறு இருக்க முடியுமா? என்று வியக்கும் வகையில் உள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை இரண்டு பாகமாக வந்திருக்கிறது. அதில் சட்டபேரவைத் தேர்தல் 2016 மாவட்டங்களுக்கான திட்டம் என்று தனித்தனியே இரு ஆவணங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். வேட்பாளர் இங்கே சொன்னார். இந்த பகுதி மக்களுக்கு என்ன என்ன திட்டம் உள்ளது என்பதை கூறினார். நான் அதை பின்னால் விளக்குகிறேன்.

தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களின் திட்டங்களை குறிப்பிட்டுள்ளார்கள். வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தோடு பார்த்தால் , இது போல் முறையாக செய்யும் ஒரு இயக்கம் வேறு இல்லை. இந்த தேர்தலில் வேறு யாராவது அவர்களைப் போன்றோர் இருக்கிறார்களா? என்று கேட்கிறோம். யாராவது பதில் சொல்லி இருக்கிறார்களா? நடுநிலையாளர்கள், பொது வானவர்கள் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறதோ, அத்தனை மாவட்டத்திற்கும் திட்டங்கள் வகுத்து தந்து இருக்கிறார்கள். முதலில் தேர்தல் அறிக்கையில் தருமபுரி மாவட்டத்திலிருந்து தான் ஆரம்பித்து இருக்கிறார்கள். நாங்களும் இங்கிருந்து தான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறோம். ஆரம்பிக்கிறோம் அதுதான் முக்கியம்.

மாவட்டம் வாரியாக திட்டம்

பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே அமையவுள்ள புறக்கால்வாய் திட்டம், விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரம்பிக்கிறார்கள். அடுத்து தருமபுரி - அரூர் சாலை, மொரப்பூர் பகுதியில் பால் குளிரூட்டி நிலையம் அமைக்கப் படும் என வரிசையாக நிறைவாக சொல்லியுள்ளார்கள்.

பாலக்கோடு மக்களுக்கு தண்ணீர் தேவையை நிறைவேற்ற நிறைய தடுப்பனைகள் திட்டம் கொடுத்துள்ளார்கள். மழைக்காலங்களில் தண்ணீர் வெள்ளமாக வீண்போவதை தடுத்து தடுப்பணைகள் இருந்தால் போதும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வளமையை உண்டாக்கக் கூடிய பாதுகாப்பு ஏற்படும் என்பதில், எவ்வளவு பெரிய பொருளாதார வளர்ச்சி திட்டங்களையெல்லாம் அறிவித்திருக்கிறார்கள்.

ஒகேனக்கல் நீர் மின் திட்டம் கொண்டு வரப்படும் என்று தெளிவாக அறிவித்திருக்கிறார்கள். மொத்தம் 21 திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு அறிவித்திருக்கிறார்கள். இங்கு வேட் பாளர் சொன்னது, உங்கள் ஆசைக்காக அல்ல வாங்கு வாங்கு வதற்காக சொன்னார் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

பாலக்கோட்டில் பெண்களுக்கான மகளிர் கல்லூரி தொடங்கப்படும் என்று ஒரு தொகுதி வாரியாக உள்ள திட்டங்களை வகுத்து கொடுக்கும், இந்த இயக்கம் போன்று வேறு உண்டா? இதே இயக்கத்தை போய், ஊழல் மற்றவை மூலம் மக்களை திசை திருப்பலாம் என்று நினைக்கிறீர்களே! அது நடக்குமா? போலி குற்றச்சாட்டுகளை வைத்து மக்கள் மனதில் குற்றம் சாட்ட நினைக்கிறீர்களே அது என்ன நியாயம்? பொது நிலையானவர்கள் நாங்கள் கேட்கிறோம்.

திராவிடர் என்பது அய்எஸ்அய்
முத்திரை பதிக்கும் இயக்கம்

திராவிடர் கழகத்தின் வேலை என்பது அழுகின சரக்கு, நல்ல சரக்கு எது? என அக்மார்க் முத்திரை, அய்எஸ்அய் முத்திரை குத்துபவர்கள் நாங்கள். மக்களிடம் தெளிவாக எடுத்து காட்டுபவர்கள்.

தேர்தல் உங்களுக்கு நல்லது, கேட்கவில்லையென்றால் எனக்கென்ன, கேட்காவிட்டால் நீங்கள் நாசமாக போய் விடுவீர்கள் என்பார்

அவரின் வயதிற்கு அனுபவத்திற்கு அது மாதிரி சொல்வார். அவர் சொல்வது போலதான், அப்போது தெளிவான ஆட்சிகள் வந்தன.

பாலக்கோட்டின் பாதாள சாக்கடை திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்கள். ஏன்? திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் ஏன்? மற்றவர்களுக்கு அளிக்கக் கூடாது என்று நீங்கள் நினைக்கலாம். இதைவிட மற்றவர்கள் அதிகமாக செய்யலாமே! சொல்லலாமே! இதைவிட மலையை தூக்கி வைப்போம் என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் இல்லையா?

தேர்தலில் அடையாளத்திற்காக நிற்கிறார்கள்

இந்த தேர்தலில் போட்டி என்பது ஆளுங்கட்சிக்கும், திமுகவுக்கும் தான். வேறுயாருக்கும் போட்டி கிடையாது. அதனால் மற்றவர்களை பற்றி பேசி நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. சிலபேர் அடையாளத்திற்காக விற்கிறார்கள். சில பேர் தன் சின்னம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற் காகவும், தன் கட்சிக்கு அங்கீகாரம் வேண்டுமென்பதற்காக நிற்கிறார்கள். போட்டி போடுகிறார்கள் ஏன். அவர்களுக்கே தெரியும் ஆட்சியை பிடிக்கப் போவதில்லை என தெளிவாக புரிந்து வைத்திருப்பார்கள்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் பல திட்டங்கள் சொல்லியிருக்கிறார்கள். அதில் இப்பொழுது ஒன்றை மட்டும் கூறுகிறேன். மதுவிலக்கு நாங்கள் கூட்டத்தில் பேசும்பொழுது, திராவிடப் பெருங்குடி மக்களே! பெருங்குடி மக்களே என்று சொல்வதுண்டு. இலக்கிய ரீதியாக புலவர்கள் சொல்லிக் கொடுத்ததனால் சொன்னோம். ஆனால் இன்றைக்கு நிறுத்தாமல் குடிக்கிறான். பெருங்குடி என்றால் நிறுத்தாமல் குடிக்கிறான் என்று பொருள் அந்த மாதிரி மக்களை ஆக்கி விட்டார்களே! என்று வருத்தப்படுகிறோம். இன்றைக்கு நல்லோரும் கேட்கிறார்கள், சசிபெருமாள் மரணம் பற்றியும் கேட்கிறார்கள். சசிபெருமாள் மரணம் எதற்காக? மதுவிலக் காகத் தானே! எல்லோருடைய கோரிக்கையும் அதுதானே!

110 விதியை பயன் படுத்தியாவது செய்தாரா?

டாஸ்மாக் - மதுபானக் கடையை மூடவேண்டும் என்று போராடிய நேரத்தில் ஏன்? பெண்களே போராடினார்களே! அப்போது கூட அதிமுக அரசு அசைந்ததா? அதைப்பற்றி எதாவது சொன்னார்களா? எதற்கெடுத்தாலும் 110 விதி, 110 விதி என்று அவசரமாக எடுத்துக்கொண்டு படிப்பாரே இந்த அம்மையார் 110 விதியைப் பயன்படுத்தி ஏதாவது உருப்படியாக செய்தாரா? மதுவிலக்கை பற்றி கூறினாரா? தேர்தல் அறிவிக்கும் முன், கடைசி சட்டமன்ற கூட்டத்திலாவது கூறினாரா? மாறாக அவர்களின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் என்ன சொன்னார்? மிகவும் புகழ்வாய்ந்தவர், பத்திரிகையில் நல்ல விளம்பரமானவர்.

அவரிடம் இந்த அம்மையார் என்ன சொல்லிக் கொடுத்தார்கள்-? மதுபானக் கடையை மூடமுடியாது. கள்ளச்சாராயம் போன்று எங்கும் வந்துவிடும் என்றாரே! காவல்துறை என்ன செய்கிறதாம்? ஆகவே மது விலக்கு கொள்கையை நாங்கள் கொண்டு வர முடியாது என்றாரே! இப்படி திட்டவட்டமாக சட்டமன்றத்தில் சொன்னார்கள்.  தேர்தல் வந்த பிறகு எல்லோரும் மதுவிலக்கு பற்றி அழுத்த மாகப் பேசி கொண்டுவரும் நிலையில் முதல் அமைச்சர் எதையாவது செணீய்ய வேண்டிய நிலைக்கு ஆளானதால் வாய் திறந்தார்.

படிப்படியாக குறைப்போம்! கொண்டு வருவோம் என்கிறார்களே! இப்பொழுது மட்டும் எப்படி முடியும்? இப்பொழுது திமுக ஆட்சிக்கு வரும் ஒரு வாய்ப்பு எல்லோருக்கும் தெரியும். இந்த அம்மையார் அவர்களுக்கு இப்பதான் ஞானோதயம் வந்திருக்கிறது. மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என இப்போதுதான் நினைக்கிறார் சொல்கிறார்.

------------------

மதுவை கொண்டு வந்த கலைஞர் தானே மூடுவிழா நடத்தினார்?


மீண்டும் மதுவைக் கொண்டு வந்தது  அதிமுக அரசுதான்


நாங்கள் மது விலக்கை படிப்படியாக கொண்டு வருவோம் என்கிறார்கள்.  அதென்ன படிப்படியாக என்று தெரியவில்லை கிலோ கிலோவாக கொண்டுவராமல், படிப்படியாக கொண்டு வருவோம் என்கிறார் இது எதனால்? முதல் காரணம், தாங்கள் வெற்றிப் பெற போவதில்லை என்ற அச்சம் வந்ததினால் கூறியுள்ளார்கள். அவர்கள் ஏற்கனவே எடுத்த நிலையிலிருந்து தலைகீழான ஒரு நிலை. இதை சொன்னால்தான் பிழைக்க முடியும் என்ற கணக்கு. நாம் திரும்ப ஆட்சிக்கு வரமுடியாது. வெள்ளத்தில் அடித்து போகிறவர்கள். ஒரு துரும்பு கிடைத்தால் போதும் என்று நினைப்பதைப் போல என்று நினைக்கிறார்கள் போலதான் அவர்களின் இன்றைய நிலை.


எனவே திராவிட முன்னேற்ற கழகம் மதுவிலக்கை சொல்கிறது. அதிமுகவும் மதுவிலக்கை சொல்கிறதே! படிப் படியாக என்று சொல்கிறார்களே என நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு மயக்கம் வரும். ஆனால் திராவிட முன்னேற்றக்கழகம் இதை சொல்கிறது என்று சொன்னால் அது கொள்கையாகச் சொல்கிறது. அது திமுக வின் பாலிசி. ஆனால் முதல் அமைச்சர் அம்மையார் சொல்வது தேர்தல் உத்தி. தேர்தல் உத்திக்கும், கொள்கைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

நேற்று வரை அஇஅதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இலக்கியவாதி தோழர் பழ.கருப்பையா அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்ர் இன்று வெளிவந்துள்ளது.

தலைப்பு பச்சையான பித்தலாட்டம்

பொதுவானவர்களின் கருத்து நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் சொன்னால் கலைஞருக்கு வேண்டியவர், திராவிடர் கழகம் தாய்க்கழகம், அவர்களுக்காக வாக்கு சேகரிப்பவர்கள், அதற்காக சொல்கிறார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது பொதுவானவர்களின் கருத்து.

இன்றைய தேர்தலில் முக்கிய பிரச்சினையாக பேசுவது மதுவிலக்கு அதனால் அதை தெளிவாக சொல்கிறோம். ..ஒரு கருத்தை எழுதியுள்ளார்.

முதல் அமைச்சர் அதிகார மாற்றம் என்ற எண்ணமே கசப்பானது அந்த கசப்பு கருணாநிதி மீது சீற்றமாக மாறுகிறது. யார் வேண்டுமானாலும் பேசட்டும் மது விலக்கைப் பற்றி பேச கருணாநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது? என்று கொதிக்கிறார் ஜெயலலிதா. கேட்கிறார் பழ.கருப்பையா.

மதுவை நடைமுறை படுத்தியது யார்?

மது அறியா தமிழகத்திற்கு மதுவை அறிமுகப்படுத்தியவரே கருணாநிதிதான் என வரலாறு பேச துவங்கினார் ஜெயலலிதா அது உண்மைதான்.

1971இல் மதுவை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான் உண்மை தான். அது பிழையாக போய்விட்டது என உணர்ந்து 1974இல் அதை மூடியவரும் கலைஞர்தான். திறந்ததை சொல்ல ஜெயலலிதா மூடியதை சொல்ல முடிய வில்லையே ஏன்?

தான் இதுவரை செய்ய முடியாததை கருணாநிதி ஏற்கனவே ஒரு முறை செய்து காட்டியிருக்கிறார் என்பதைத் தானே வெளிப்படுத்திவிட்டால் சரி அவரே ஆளட்டும் என்று மக்கள் சொல்லி விடுவார்களே என்னும் அச்சம் தான் ஜெயலலிதா பாதி உண்மைக்கும் பாதி பொய்க்கும் காரணம்

நடிப்பதற்கு கூட மதுக் குடிக்காதவர் என்னும் பிம்பத்தை பெற்றிருந்த எம்.ஜி.ஆர் தானே மதுக்கடைகளை திறந்தார். இந்த உண்மையும் கசக்கிறதா? எம்.ஜி.ஆர் திறந்து விட்ட மதுக்குதிரை நிற்காமல் இன்றுவரை தொடர்ந்து ஆடிக் கொண்டுள்ளதே அதைப் பஞ்ச கல்யாணி குதிரை ஆக்கியவர் ஜெயலலிதாதானே என்று எழுத்தாளர் பழ.கருப்பையா எழுதியுள்ளார்.

அரசியல் போதை, ஓட்டுப் போதையால் சில பேர் மயக்க மூட்டுகிறார்கள். பதவி போதையினால் சில பேருக்கு மயக்கம் வரும். அந்த மயக்கத்தை எங்களால் தான் தெளிவிக்க முடியும். அதற்காகத் தான் நாங்கள் வந்திருக்கிறோம்.

டாஸ்மாக் எப்பொழுது வந்தது? மிடாஸ் தொழிற்சாலை யார் உண்டாக்கியது? அதிலிருந்து 70 சதவிகிதம் பயன் படுத்தப்பட வேண்டும் என்ற எழுதப்படாத ஒப்பந்தம் எப்படி வந்தது. இந்த அம்மையாருக்கு பேச்சு எழுதிக் கொடுக்கிற வர்கள் புத்திசாலியாக எழுதிக் கொடுக்க வேண்டாமா?

பூரண மதுவிலக்கு என்று சொல்லிவிட்டாரே! என்ற வாதம் பூரணம் என்றாலே முழுவதும் தான். கலைஞர் தான் கேட்கிறாரே! படியாவது? மரக்காலாவது?

திமுக தேர்தல் அறிக்கையிலே, தமிழ்நாட்டில் மது விலக்கு என்ற தலைப்பில் அழகாக கருத்தை கூறியிருக்கிறார்கள். இதுதான் நாளைக்கு செயல்படும் ஆதாரம். இந்தியாவிலே, இதே மாதிரியான தேர்தல் அறிக்கை எங்கும் கிடையாது. என் கையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் இருக்கிறது. நாங்கள் சொல்வதை, நீங்கள் திண்ணை பிரச்சாரமாக கொண்டு செல்ல வேண்டும்.

தேனை நாங்கள் சேகரித்து, உங்களுக்கு அடையாக தருகிறோம். அதை நீங்கள் தேன்பாட்டில்மாதிரி, ஒவ்வொரு வீடாக கொண்டு செல்ல வேண்டும். கலைஞருக்காக அல்ல, வேட்பாளர் முருகனுக்காக அல்ல. தளபதி ஸ்டாலினுக்காக அல்ல! எங்களுக்காக அல்ல, உங்களுக்காக, உங்களின் பிள்ளைகளுக்காக! அவர்களின்எதிர்காலத்திற்காக! உங்கள் சந்ததியினரின் நல்வாழ்வுக்காக! இதை நீங்கள் தெளிவாக எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். இதுதான் சரியான முறை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மது விலக்கிற்கு என தனிச்சட்டம் வந்து விடும். ஆணை கூட அல்ல. அரசாணை வேறு, சட்டம் வேறு! இரண்டுக்கும் அந்த அம்மாவுக்கே வித்தியாசம் தெரியும். ஏனென்றால், நாங்கள் ஏற்கெனவே சொல்லிக் கொடுத்து உள்ளோம். இடஒதுக்கீடு அரசாணையாகத்தான் இருந்து, நாங்கள் சொல்லிதான் சட்டம் கொண்டு வந்து, அவர்களை காப்பாற்றி இருக்கிறோம்.

பீகாரில் வெற்றி பெற்ற நிதீஷ்குமார் என்னிடம் கூறினாரே! மது விலக்கை அமல்படுத்தி விட்டோம் என்றாரே! நான் நேரில் சந்தித்த போது சொன்னரே! தமிழ்நாட்டில் இருந்துதான், நான் அந்த கருத்தை எடுத்துக் கொண்டேன் என்றாரே.

திமுகவுக்கு ஆட்சிக்கு வரப் போகிறோம் என்ற கவலையும், பொறுப்பும் இருக்கின்ற காரணத்தினால், திமுக இந்த தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை குறிப்பிட்டுள் ளார்கள். மது விலக்கினால் அரசிற்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட உரியதிட்டங்கள் செயல்படுத்தப்படும். இதுதான் ஆக்கப் பூர்வமான சிந்தனை.

உடனே டாஸ்மாக்கில் வேலை பார்ப்பவர்களை தூண்டிவிட்டு உங்களுக்கெல்லாம் வேலை போய்விடும் என்றார்கள். கலைஞர் பெரியாரிடத்தில் பயிற்சி பெற்றதால், உடனே அறிவித்தார். தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம், டாஸ்மாக் கலைக்கப்பட்டு இந்த விற்பனை கழகத்தின் மூலம் தற்போது செயல்பட்டு வரும் மதுபானக்கடை முற்றிலும் நிறுத்தப்படும். தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை விற்பனை நிலையம் என்று புதிதாக உருவாக்கப்படும். எனவே டாஸ்மாக்கில் பணியாற்றும் பணியாளர்கள் புதிய நிறுவனத்தில், பதவி மூப்பினை இழக்காமல் பணி ஏற்க வழிவகை செய்யப்படும். சீனியாரிட்டி போய்விட்டதோ என்ற கவலை வந்து விடக்கூடாது என பதவி உயர்வு தருவோம் என்றி ருக்கிறார்.

மதுபான விற்பனை செய்வதிலிருந்து அரசு முற்றிலும் விலகி, புதிதாக அமைக்கப்படும் வாரியத்தின் மூலம் மாவட்டங்கள் தோறும், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட கழக ஆட்சியில் காய்கறிகளை மட்டும் விற்பதற்காக உழவர் சந்தையை போல், புதிய விரிவுப்படுத்தப்பட்ட சந்தைகள் உருவாக்கப்பட்டு நெல், வாழை, கடலை, தேங்காய் பயறு வகைகள், வேளாண் விளை பொருள்கள், கைத்தறி துணிகள், கைவினைப் பொருட்கள் முதலிய கிராம உற்பத்தி பொருட் களை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.

குடிக்கவில்லை என்றால் என்னால் முடியாது என்பவர்களுக்கு தலை ஆடும், நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அவர்களின் உடல் கூறு அவர்களுக்கு மனித நேயத்தின் அடிப்படையில் சொல்லியிருக்கிறார்.
மது பழக்கத்திலிருந்து விடுபட, மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் ஓர் அமைப்பு உருவாக்கப்படும். அதன் மூலம் மாவட்டந்தோறும் மறுவாழ்வு மய்யங்கள் அமைத்து மது பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு உரிய மனநல பயிற்சியும், சிகிச்சையும் வழங்கப்படும். இதற்கு பெயர்தான் தாயுள்ளம்.

தாயுள்ளம் என்பது இதுதான். இதற்காக நீங்கள் இந்த வேட்பாளரை / உதய சூரியனை ஆதரிக்க வேண்டும் என கூறி தமிழர் தலைவர் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.

 

 

------------------

குனிந்தவர்களை நிமிர வைப்பதுதான் இந்த இயக்கம்!

ஒரு பெரிய கொள்கை குடும்பப் பாசம் இருக்கிறதே, இதில்தான் தன்மான உணர்வை விட்டுவிலகாதவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். இங்கு நம்முடைய வேட்பாளர் முருகன் அவர்களுக்குப் பயனாடை அணிவிக்கும்போது, குனிந்தார். இரண்டு தடவை குனிந்தார். அவரை நிமிர்த்தி நிற்க வைத்துதான் சால்வை போட்டேன். ஏனென்றால், குனிந்தவர்களை நிமிர்த்தியதுதான் இந்த இயக்கம். இப்பொழுது  பார்க்கிறோம் - நிமிர்ந்து நின்றவர்கள் எல்லாம் குனிய விட்டுவிட்டார்கள் - அதுதான் மிகவும் ஆபத்து.

ஆகையால், இப்பொழுது நடக்கும் போராட்டம், தேர்தல் என்பது குனிந்தவர்களை நிமிர்த்தி வைக்கும் இயக்கத்திற்கும், நிமிர்ந்து நிற்பவர்களை குனிய வைக்கும் இயக்கத்திற்கும்தான் போராட்டம். ஹெலிகாப்டர் வரும்போதே, இப்பொழுது கீழே விழுந்து விடுகிறான். இது மாதிரி எந்த நாட்டிலாவது உண்டா? கிடையாது. ஹெலிகாப்டர் வரும்போது, தரையை முத்தமிட்டு கீழே குனிந்தவன், போகும் வரையில் எழுந்திருப்பது இல்லை.
தந்தை பெரியார் நமக்கெல்லாம் முதுகெலும்பு கொடுத்தார். நிமிர்ந்து நில் என்று சொன்னார். காங்கிரஸ்காரராக இருந்த நாமக்கல்லாரே பாடினாரே,

‘தமிழன் என்று சொல்லடா!
தலைநிமிர்ந்து நில்லடா’ என்றார்.


நம் நாட்டில் இப்படி ஓர் அமைச்சரவை வருமோ என்று அவர்களுக்கு - அப்பொழுதே தெரிந்திருக்கும்போல.

தலையைக் குனிந்தால்கூட பரவாயில்லை. உட லையே வளைத்து தன்மான சிந்தனையே இல்லாத அளவிற்கு இருக்கிறார்கள். ஆனால், இங்குள்ள இயக்கம் தன்மான இயக்கம். இனமான இயக்கம். சமூகநீதியில் நம்பிக்கையுடைய இயக்கம். இங்கே பன்மதத்தவர்கள் வாழ்கிறார்கள். மதவெறிக்கு இடமில்லாமல் சகோதரர் என்ற உணர்வோடு அனை வரும் வாழ்கிறார்கள். மனிதநேயத்திற்குத்தான் இடம் உண்டு என்று வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். அதை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் இருக்கிறதென்றால், அதுதான் தி.மு.க. அதை சமு தாயத்தில் கட்டிக் காத்துக் கொண்டிருக்கின்ற இயக் கம்தான் திராவிடர் கழகம். எனவேதான், நாங்கள் இந்தப் பணியை செய்கிறோம். ஆறாவது முறையாக, 19 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்ற நேரத்தில், ஆட்சி பீடத்தில் அமரப் போகிறவர் நம்முடைய கலைஞர்தான். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

பல பேர் சொல்லிக் கொண்டிருப்பார்கள், நாற்காலி போட்டாகி விட்டது; அலை அடிக்கிறது என்பார்கள்; தலையை எண்ணிவிட்டோம் என்பார்கள். நாங்கள் மக்களோடு மக்களாக இருப்பவர்கள். தேர்தல் நேரத் தில் மட்டுமல்ல, எந்நேரத்திலும் மக்களோடு இருப்ப வர்கள். எல்லாத் தரப்பு மக்களிடமும் பழகுகிறவர்கள். மக்கள் இன்றைக்குத் தெளிவான முடிவொடு இருக் கிறார்கள். எவ்வளவுதான் ஊடகங் கள் வித்தை கள் காட்டினாலும்கூட, மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

- பாலக்கோட்டில் தமிழர் தலைவரின்
தேர்தல் பிரச்சார உரையிலிருந்து....

தாயுள்ளம் யாருக்கு? மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை கொடுத்த கலைஞருக்கா? அவர்களை வீட்டுக்கு அனுப்பிய அம்மையாருக்கா?

$
0
0


வாக்காளர்களே எண்ணிப் பாரீர்!

அரூரில் தமிழர் தலைவர் தேர்தல் பிரச்சாரம்

அரூர், மே 3 - மக்கள் நலப் பணியாளர்கள்  13 ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுத்த கலைஞருக்குத் தாயுள்ளமா? அவர்களை வீட்டுக்கு அனுப்பிய ஜெயலலிதாவுக்குத் தாயுள்ளமா? சிந்தித்து வாக்களிப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர்
கி. வீரமணி அவர்கள்.

அரூரில் நேற்று (2.5.2016) மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் கூறியதாவது:

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரூர் மாநகரில் பேசக்கூடிய சிறப்பான வாய்ப்பை தேர்தல் மூலம் அளித்து இருக்கிறீர்கள். இந்த அரூருக்கு நான் புதியவன் அல்ல. குறிப்பாக நான் என் மாணவப் பருவத்திலிருந்து வந்து கொண்டு இருக்கக் கூடியவன். இங்கு வரும்போது, எச்.எல்.முருகேசன் அவர்களை நினைத்துக் கொண்டு வந்தேன். அவர் பழைய மாவட்டக்கழக செயலாளர், எங்களுக்கு எப்போதும் வரவேற்பளிக்கக் கூடியவர். அப்போது இருந்த உணர்வை இப்போது மேடையில் நிற்கும் இளைஞர்களின் உள்ளத்தில் அந்த எழுச்சிமிகு உணர்வை கண்டேன் வியந்தேன்!

திராவிடன் - தமிழன் உணர்வு

இங்கு அந்த காலத்தில் பேரறிஞர் அண்ணாவால் நிறுத்தப்பட்டு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெற்றவர், சுயமரியாதை வீரர், சுயமரியாதைச் சுடரொளி முத்து என்பவர் பெரியாருடைய கொள்கையாளர். அண்ணாவின் வழி நடந்தவர். கலைஞரால் மதிக்கப்பட்டவர். திமுகவும் திராவிடர் கழகமும் இரட்டைக் குழலாக இருந்தன என்பதற்கு எடுத்துக் காட்டானவர்.

அரூர் பகுதியில் திராவிடர் கழகம் என்றால், மிசா காலத்தில் எங்களோடு சிறைச்சாலைக்கு வந்த அரூர் தேசாய் வேணுகோபால், செல்லன், அவர்களுக்குப் பிறகு வீராசாமி என்று ஏராளமான தோழர்கள் இருந்தார்கள் என்ற நீண்ட பட்டியல் இருக்கிறது. அவர்களின் உழைப்புதான் இன்றைக்கும் கழகத்தை கட்டிக்காக்கிறது. இந்த இயக்கம் வெறும் பதவிக்காக வந்த இயக்கம் அல்ல. இதுவொரு  சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தும் புரட்சிகரமான இயக்கம். சமுதாயப் புரட்சி இயக்கம் என்பதனால் தான், நாம் அனைவரும் ஒரே மேடையில் இருக்கிறோம். நமக்கு ஜாதி தெரியாது, நமக்கு வேறு பிரிவுகள் தெரியாது. நாம் அனைவருக்கும் ஒரே உணர்வுதான் உண்டு. அதுதான் திராவிடன் - தமிழன் என்ற உணர்வு

உருவத்தால் மாறினாலும்
உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள்


திராவிட இயக்கமும், புலவர்கள் வட்டமும் அரூரிலே மிகச்சிறப்பாக இருக்கும். எங்கள் இயக்கத்தின் பெரியார் பெருந்தொண்டர் இராமசாமி அவர்களின் மகன் கண்ணிமை அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் பாவலர் மணிவேலன். பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர். அவர் இரண்டொரு நாட்களுக்கு முன்னால் மறைந்த செய்தி கேட்ட நேரத்தில் மிகுந்த வேதனைப் பட்டோம். துயருற்றோம். அவர்களின் குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு சோகமான நிலையில் தான் இங்கு வந்தோம்.
திராவிடர் கழகம் என்றைக்கும் பற்றோடு இருக்கக்கூடிய ஓர் இயக்கம். உருவத்தில் வேறு பட்டவர்களாக இருந்தாலும், உள்ளத்தால் ஒன்று பட்டவர்கள்.

கள்ளத்தால் நெருங் கொணாதே என புரட்சிக் கவிஞர் அவர்கள் சொல்வார். அப்படிப்பட்ட அற்புதமான இயக்கம்!

மீண்டும் சாதனை படைப்பது திமுகவே!

இந்த தொகுதியில் ஒரு சிறந்த இளைஞரை தகுதி வாய்ந்தவரை அடையாளம் கண்டு கலைஞர் அவர்கள் நிறுத்தியிருக்கிறார்கள். மக்களாகிய நீங்கள் இங்கு காட்டும் உணர்வை வரும் 16 ஆம் தேதி அதிகாலை வரை எடுத்துச்செல்லவும். அப்போது தான் இவர் போன்றோர் வெற்றி பெறுவர். நீங்கள் வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. திமுக தோழர்கள் பலரும் போட்டியிடுவார்கள். ஆனால், போட்டி முடிந்து தலைவர் சொல்லி விட்டார் என்றால், யாரை அடையாளம் காட்டினாரோ, நாங்கள்தான் இருக்கிறோம் என்ற அளவில் பணியாற்றுவார்கள். அந்த உறவு முறைதான் திமுகவில் இருக்கும்.

கீரை விசுவநாதன் ஆனாலும், முல்லை செழியனானாலும் ஒரே தோட்டத்தில்தான் இருப்பார்கள். கீரையும், முல்லையும் திமுக என்ற ஒரே தோட்டத்தில் தான் இருப்பார்கள். ஒரு பக்கம் கீரை இருக்கிறது. இன்னொரு பக்கம் முல்லை இருக்கிறது. நாம் அனைவரும் சேர்ந்து இந்த தேர்தலில்  மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க வேண்டும்.

புதிய வாக்காளரே! இளைஞர்களே! சிந்தியுங்கள்!

தேர்தல் வருகிறது என்றால், யாரோ 5 ஆண்டுகள் வந்து போகட்டும் என்று அலட்சியமாக இருக்கலாமா? நன்றாக நினைத்துப் பாருங்கள். கடந்த தேர்தலில் மக்கள் காட்டிய அலட்சியத்தால் கடந்த 5 ஆண்டு காலம் எவ்வளவு பெரிய விலை கொடுக்க நேரிட்டது. திராவிடர் கழகத்தினர் தேர்தலுக்கு நிற்கிறார்களா? அல்ல. நாங்கள் ஒரு போதும் நிற்க மாட்டோம். அதே போன்று யார் வேண்டுமானாலும் வரட்டும் என்ற அலட்சிய போக்கு பெரியார் காலத்திலிருந்தே எங்களுக்குக் கிடையாது.

நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன். யார் வேண்டுமானாலும் திறந்த வீட்டில் நுழைவது போன்று வந்து விடக் கூடாது என்பதற்காக நாங்கள் காவலுக்கு நிற்கிறோம். நாங்கள் உங்கள் மத்தியில் எங்களுக்கு ஓட்டு கேட்டு வரவில்லை. வாக்காளர் பெரு மக்களே, புதிய இளைஞர்களே! சிங்கக் குட்டிகளே! நீங்கள் எல்லோரும் சிந்தித்து செயலாற்றும் தருணம் இது.

திராவிடர் கழகம், தி.மு.க. இருக்கின்ற காரணத்தினால்தான் இந்த இனத்தை, மொழியை காப்பாற்ற முடியாது. எப்போதும் காப்பாற்றிக் கொண்டு இருக்கக் கூடியவர்கள் நாங்கள்.

இங்கு மற்ற கூட்டங்களைவிட தாய்மார்கள் அதிக அளவில் வந்திருக்கின்றீர்கள் மகிழ்ச்சி! இங்கு பேசிய  மகளிர் புத்தமணி, வேலம்மாள் போன்றோர் சிறப்பாக இந்த கூட்டுக் குடும்பத்தின் உறவுக் குரல், உரிமைக் குரலை வெளிக் காட்டியது சிறப்பான தொன்று.

ஆணவ நாயகமா? ஜனநாயகமா?

நீங்கள் 5 ஆண்டுகளாக எத்தனை முறை முதலமைச்சரை சந்தித்து இருக்கிறீர்கள்? சந்தித்திருந்தால் காணொலிக் காட்சி மூலம் சந்தித்து இருப்பீர்கள். அதுவும் ஒரு 5 நிமிடம் கட்டடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வுகளில் பார்த்திருப்பீர்கள். கட்டடங்களில் அந்த அம்மையார் பெயர் மட்டும்தான் இருக்க வேண்டும். ஆனால், கலைஞர் அவர்கள் திறந்து வைக்கும் பணிமனைகள், மருத்துவமனைகள் போன்ற கட்டடங்களில், அந்த துறைக்கான அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் எல்லாம் இடம் பெற்றிருக்கும். அவர்களையெல்லாம் அழைத்து, உட்கார வைத்து நிகழ்ச்சியை நடத்துவார்கள். ஆனால் அம்மையார் திறந்த கல்வெட்டில் பார்த்தீர்கள் என்றால், அவர் பெயரைத் தவிர வேறு எவர் பெயரேனும் உண்டா? இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா? ஆணவ நாயகமா? நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆணவக் கொலை நடக்கின்ற மாதிரி, இப்பொழுது ஜனநாயகப் படுகொலை நடக்கிறது.

ஜாதி அடுக்குமுறையும் - அதிமுக மேடை அடுக்கும்

ஜாதிய அடுக்குமுறை போல் அம்மையார் பேசும் மேடையும் அடுக்கு முறையில் இருக்கிறது. தளபதி ஸ்டாலின் போன்றோர் கேட்ட பிறகு, அந்த அடுக்குகள் குறைந்து இருக்கின்றன. காரணம் நாளாக, நாளாக பயம் வந்து விட்டது.  தாங்கள் வெற்றி பெறப் போவதில்லை என்ற உணர்வை உளவுத் துறையின் மூலம் கேட்கும் அவல நிலை அவர்களுக்கு வந்துவிட்டது. அதனால்தான் அவர்களின் போக்கு மாறிக் கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டு வாக்காளர் என்றால்
தனித் தன்மை உண்டு


தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்கள், எல்லாக் கட்சிகாரர்களை விட, தலைவர்களைவிட, வேட்பாளர்களைவிட புத்திசாலியானவர்கள் தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்களுக்கு ஒரு தனித் தன்மை உண்டு. என்ன தெரியுமா? யாரை ஆட்சிக்குக் கொண்டு வந்தாலும், பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், தோசையை திருப்பிப் போடுகின்ற மாதிரி தாய்மார்களுக்கு தெரியும். அதுபோல் ஆட்சியை மாற்றினால்கூட, அப்படியே மாற்றித்தான் பழக்கமே தவிர, இங்கொன்று, அங்கொன்று என்று ஒட்டுப் போடும் வேலையை செய்ய மாட்டார்கள். ஒட்டுப் போடும் வாய்ப்பும் வராது. எனவே நமக்கு வேண்டிதெல்லாம் நீதியான ஆட்சி, நியாயமான ஆட்சி. அந்தநீதியான ஆட்சியை தி.மு.க.தான் கொடுக்கும் என்பதற்கு அவர்களின் தேர்தல் அறிக்கையே சான்று.

கலையட்டும் காணொலி ஆட்சி


தி.மு.க. ஆட்சியில் நான்கு வழிச் சாலைகள் போட்டார்கள். அவர்கள் மட்டும் கடந்து  செல்லவா? கூட்டணி கட்சியினரும், பொது மக்களும் போக வேண்டிதானே. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் எல்லாவற்றிலும் காணொலிக் காட்சியை செய்து வைத்தார்கள். இப்போது அவர் நடத்தும் தேர்தல் பொதுக் கூட்டத்திலும் வைத்திருந்தால் 5,6, உயிரையாவது காப்பாற்றி இருக்க முடியும். சமுதாய மாற்றத்திற்கான பணிகளை தி.முக செய்யும் செய்தது.

மாற்றம் வேண்டுமா? ஏமாற்றம் வேண்டுமா?

நீங்கள் உதயசூரியன் சின்னத்தை எண்ணி வாக்களித்தால், அரசியல் மாற்றம் மட்டுமல்ல. சமுதாய மாற்றத்தையே திமுக ஆட்சி கொண்டு வரும். எல்லோருக்கும் எல்லாம், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி. எனவே நீங்கள் மாற்றத்தை உருவாக்க வேண்டும். மாற்றம் மாற்றம் என்று பல பேர் சொல்லுவார்கள். மாற்றம் வேண்டும் என்று சொல்லி டில்லிக்குப் போனவர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. இந்த மாற்றம்  ஏமாற்றமாக இல்லாமல் இருக்க அதற்கு ஒரே வழிதான் டாக்டர் கலைஞர் தலைமையிலான 6ஆம் தடவையாக அமையப் போகும் ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான்.

நாங்கள் பிரச்சாரம் செய்வதன் நோக்கம், ஜாதியற்ற சமுதாயம் அமையவும், காட்சியில் மட்டும் வரும் அம்மையாரின் ஆட்சியை மாற்றி இந்த இனத்தின் மீட்சியை  உருவாக்கத்தான். காட்சி ஆட்சிமாறி  நல்லாட்சியாக வேண்டும் என்ற உணர்வுடன் தான் சொல்லுகிறோம். காட்சி ஆட்சி மாறவில்லையென்றால் நமக்கு வீழ்ச்சிதான் ஏற்படும் மறவாதீர்!
இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்பட திமுக வை ஆதரிப்பீர்!

ஆளுங்கட்சி அம்மையார் சொன்னதையும் செய்தோம்! சொல்லாததையும் செய்தோம் என்கிறார்களே! செய்தார்களா?

அவர்களின்  கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னார்களே! தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக ஆக்குவோம் என்றார்களே! தமிழ்நாடு இப்போது மின்மிகை மாநிலமாகவா இருக்கிறது? ஒரு நாளாவது மின் வெட்டு இல்லாமல் இருக்கிறதா? ஏன் தலைநகர் சென்னையிலே மின்வெட்டு இருக்கிறதே!

ஒரு யூனிட் மின்சாரமாவது, இந்த ஆட்சியில் தயாரித்து இருப்பார்களா? தளபதி ஸ்டாலின் போன்றோர் கேட்கிறார்களே! இப்போதுதான் கூடுதல் மின்சாரத் தேவை ஏற்பட்டுள்ளது.   தனியாரிடம்  மின்சாரம் வாங்கி இருக்கிறார்கள்.  தனியாரிடம்  7 ரூபாய்க்கும் அதிகமாக வாங்குகிறார்கள்.

தாய்மார்களுக்கு தெரியுமே! கடைக்கு போய் ஒரு சாமானை 4 ரூபாய்க்கு வாங்குவார்களா? அல்லது 7 ரூபாய்க்கு வாங்குவார்களா? அவர்களுக்கு தெரியுமே! அது போல் மின்சாரத்தை குறைத்து வாங்க வேண்டியதுதானே. ஏன் 7 ரூபாய்க்கு வாங்க வேண்டும்?

மின்சாரத்தில் நல்ல மின்சாரம், கெட்ட மின்சாரம் உண்டோ!

அந்த 4 ரூபாயிலிருந்து 7 ரூபாய்க்கு வாங்குவதில் கமிஷன் (ஊழல்) இருக்கிறது. எல்லா இடத்திலும் இந்த வெட்டுகள் இருக்கின்றன. அதன் விளைவாகத்தான் இன்று அமைச்சர்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். ஏன் அமைச்சர்களுக்கு முதலாவதாக டிக்கெட் கொடுக்கவில்லை? ஏன் தனியாக விசாரிக்க வேண்டும்? இன்றைக்கு அமைச்சர்களின் நிலை என்ன? முதலில் இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் திமுக தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.

அதிமுக தேர்தல் அறிக்கை - சிதம்பர ரகசியமா?

அதிமுகவில் தேர்தல் அறிக்கை  இன்னும் வெளியிடபடவில்லை. ஏன் தேர்தல் அறிக்கை வரவில்லை? அது ஏன் சிதம்பர ரகசியமாக இருக்கிறது? நமக்குப் புரியவில்லை. தேர்தல் அறிக்கையை வைத்து சொன்னீர்களே, செய்தீர்களா? என்று கேட்போம் என்ற பயத்தால் கூட இருக்கலாம். அவர்கள் வெளியிடாமல் இருப்பது தேர்தல் உத்தியா? மின் திருட்டை ஒழித்தாரா? இந்த ஆட்சியில் மின்சாரம் வரவில்லை. மாறாக மெழுகுவர்த்திதான், டிமான்ட் பற்றாக்குறை வந்தது.

சொன்னதை செய்தாரா? அம்மையார்?

2012க்குள் 151 நகராட்சி, மாநகராட்சி, கழிவுகளைக் கொண்டு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதனால் தமிழக நகரங்கள் தூய கார்பன் நியூட்ரல் நகரங்களாக மாற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றார்கள்.

நான் தருமபுரியிலிருந்து காரில் வரும்போது வரும் வழியில் பெரிய அளவில் தீப் பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.  என்னவென்று உடனிருந்தவர்களை கேட்ட பொழுது நகராட்சிக் குப்பைகள் என்றார்கள். அதை சுவாசித்தால் நம் பிள்ளைகளின் நிலை என்னாவது? தூய கார்பன் நியூட்ரல் நகரமாக மாற்றப்படும் என்றாரே! மாற்றினாரா? அம்மையாரின் பேச்சு நீரில் எழுதிய எழுத்துக்களைப் போன்று அல்லவா இருக்கிறது!

டாக்டர் கலைஞர் ஆட்சியில் 2006 - 2011 இல் செய்த சாதனைகள் சாதாரணமானவை அல்ல; ரூபாய் 1200 கோடிக்கு சட்டமன்ற கட்டடம் கட்டினார். இந்த அம்மையார் சென்னாரே! மழை பெய்தால் கட்டடம் ஒழுகுகிறது என்றாரே! நிற்க முடியவில்லை என்றாரே! அதற்காகத் தானே சட்டமன்ற கட்டடத்தை கலைஞர் கட்டினர். ஆட்சி மாற்றம் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி வரும் ஆனால், அரசாங்கம் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கும். கலைஞர் கட்டினார் என்பதற்காக கட்டடத்தை மாற்றலாமா?

அண்ணா பெயரில் கட்சி - அண்ணா நூலகம் மாற்றமா?

அண்ணா பெயரில் கட்சி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம். ஆசியாவிலே மிகப்பெரிய அளவிலான நூலகம் ரூபாய் 130 கோடிக்கு மேல் செலவழித்து கட்டியிருக்கிறார்கள். அந்த நூலகத்தை மாற்ற வேண்டுமெனச் சொன்னார்.

நீதிமன்றம் தடை கொடுத்து காப்பாற்றியது. அந்த நூலகத்திற்குப் புத்தகம் வாங்கவில்லை. அதில் எல்லா ஜாதியினரும், பிரிவினரும் படிக்கிறார்கள். நூலகம் அண்ணா பெயரில் இருக்கிறது.

இந்த லட்சணத்தில் கூட்டம் முடியும்போது அம்மையார் அண்ணா நாமம் வாழ்க! எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க! என்கிறார். அண்ணாவுக்குப் போட்ட நாமம் இதோடு இருக்கட்டும். மறுபடியும் இன்னும் 5 ஆண்டு நாமம் போடவேண்டாம். உண்மையாகவே அண்ணாவைப் பற்றி சிந்திப்பவர்கள் யார்? அண்ணா பெயரில் உள்ள கட்சி அல்ல, அண்ணாவால் உருவாக்கப்பட்டது திமுகதான்; அதைத்தான் கலைஞர் செய்து கெண்டு இருக்கிறார். வளர்ச்சி என்பது கல்வித் துறையில் இருக்கவேண்டுமே தவிர, மதுபான உற்பத்தியில் அல்ல. ஜெயலலிதா ஆட்சி என்றால் டாஸ்மாக் மயம். எல்லோருக்கும் துன்ப மயம், கலைஞர் ஆட்சி என்றால் அனைவருக்கும் இன்ப மயம்!

தாயுள்ளம் யாருக்கு?

தாயுள்ளம் யாருக்கு இருக்கிறது? கலைஞர் ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை கொடுத்தார். அது தாயுள்ளமா? உச்சநீதிமன்றம் சொல்லியும் கூட மக்கள் நலப்பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பியது தாயுள்ளமா? இதுவரை 200க்கும் அதிகமானவர்கள் இறந்து இருக்கிறார்களே. அவர்களுடைய நிலை என்ன? அவருக்கு இருப்பது தாயுள்ளமா? இல்லை, அது வேறுவகை உள்ளம்.

இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

------------------------------

உதயசூரியன் பொத்தானை அழுத்துங்கள்
ஒளி கிடைக்கும் - இருளுக்கு விடை கிடைக்கும்


திமுக, அதிமுக  இரண்டு பேரும் மோசம் என்று சொல் கிறார்கள். மற்றவர்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார்களே! வெண்ணெயும், சுண்ணாம்பும் ஒன்று என்று சொன்னால் அவர்களின் பார்வையில் ஏற்பட்ட பழுதே தவிர, தன்மையில் ஏற்பட்ட கோளாறு அல்ல. இந்த தேர்தல் என்பது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தானே ஒழிய, வேறு கட்சிகளுக்கு இடம் கிடையாது. நீங்கள் மாற்றம் வேண்டும் என்று எண்ணி, மாற்று அணிக்கு போடும் ஓட்டு என்பது செல்லாத ஓட்டே! ஒவ்வொரு நாளும் ஜெயலலிதா அம்மையார், தோல்வி பயத்தால் திணறிக் கொண்டு இருக்கிறார். ஆளுங்கட்சி அமைச்சர்களை ஊருக்குள் நுழைய விடாமல் பொதுமக்கள் விரட்டி அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அரூர் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் இராஜேந்திரன் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடையாது. எங்கு பார்த்தாலும் பணம் பறிமுதல் நடக்கிறது. அதிமுகவினர் நோட்டுக் கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கிறார்கள். அதற்கு மக்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம். கோடி கோடியாக பணம் எடுக்கிறார்கள். இதற்கு முன்பெல்லாம் ஆள் கடத்தல் தான் உண்டு. இந்த தேர்தலில் புதிதாக பணம் கடத்தல் நடைபெற்று வருகிறது. ரூபாய் நோட்டுக் கடத்தல் நடக்கிறது. இதுவரை ஆம்புலன்சில் நோயாளிகள் தான் இருந்தார்கள் இப்போது நோட்டு பணம் இருக்கிறது. திமுக ஏழைகளின் நண்பன், அவர்கள் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கவில்லை. அவர்கள் உங்கள் குணத்தை நம்பி நிற்கிறார்கள் நீங்கள் அவர்களின் குணத்தை நம்பி ஓட்டு போடுங்கள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு சிறுபான்மை மக்களுக்கு நல்ல ஆட்சியாக, இனத்தின் மான மீட்பு ஆட்சியாக திமுகதான் இருக்கும். எனவே நீங்கள் 16ஆம் தேதி வாக்குச் சாவடிக்கு சென்று உதயசூரியன் என்று சின்னம் இருக்கும். அதில் பொத்தானை அழுத்தினால் விளக்கு எரியும். இருண்ட ஆட்சிக்கு விடை கொடுத்து விடியல் வரும். விடிவு சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என முடிக் கிறேன் நன்றி வணக்கம்.

- அரூர் கூட்டத்தில் தமிழர் தலைவர் 2.5.2016

தேர்தல் பிரச்சாரத்தில் தனித்தன்மை தலைநகரில் தமிழர்தலைவரின் தர்க்கங்கள்-வாதங்கள்!

$
0
0

 

சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர்  மா. சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்து  திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்: உடன்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்,  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், மாவட்ட தலைவர் வில்வநாதன்,  பெரியார் பெருந் தொண்டர் எம்.பி. பாலு, சைதை மகேஷ்வரன், கிருஷ்ணமூர்த்தி, சைதை அன்பு மற்றும் திராவிடர் கழக, தி.மு.க. பொறுப்பாளர்கள் உள்ளனர். (3.5.2016)



வட சென்னையில் துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சேகர்பாபு அவர்களை ஆதரித்தும், தென் சென்னையில் சைதாப்பேட்டைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் மா. சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேற்று (3.5.2016) மாலை தேர்தல் பரப்புரை செய்தார்.


இரு நிகழ்ச்சிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். பெண்கள் கூட்டத்தைக் கண்ட கழகத் தலைவர், பெண்கள் பெரும் அளவில் கூடியுள்ளதால் தி.மு.க.வின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றே என்று எடுத்த எடுப்பிலேயே சொன்னபோது, பெருத்த ஆரவாரம் தொடக்கத்திலேயே களை கட்டி விட்டது.

சென்னையில் இந்தப் பிரச்சாரம் என்பதால் சென்னை தொடர்பான பிரச்சினைகளை முக்கியமாகக் கையில் எடுத்துக் கொண்டார்.

1. சென்னை துறைமுகம் -
மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டம்

சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டம் மத்திய அரசின் உதவியோடு தி.மு.க. ஆட்சியில் தீட்டப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் நேரில் வந்து தொடங்கி வைக்கப்பட்ட  திட்டம் (8.1.2009).

மத்திய அரசு இதற்காக ரூ.1885 கோடி நிதியையும் ஒதுக்கியது. 900 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மூன்றில் ஒரு பகுதி பணிகள் முடிந்து விட்ட நிலையில், ஆங்காங்கே தூண்களும் நிறுவப்பட்ட கால கட்டத்தில், இந்தப் பாலம் கட்டப்பட்டால் திமுக ஆட்சிக்கு அந்தப் பெருமை போய்ச் சேர்ந்து விடும் என்ற ஒரே காரணத்தால் திட்டத்தையே முடக்கி விட்டது - செல்வி ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசு. பணியை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்ட காரணமாக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனம் 900 கோடி ரூபாய் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வழக்குக் கூடத் தொடுத்து விட்டது. இந்த நட்ட ஈடு யார் தலையில் விடியப் போகிறது என்பது முக்கியமான கேள்வியாகும்.

இந்தத் திட்டத்தின் சிறப்புக் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்குரைஞர் வில்சன் எடுத்து வைத்த விவரங்கள் மிக முக்கியமானவை.

“மதுரவாயல் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்துக்கு, தமிழக அரசு விதித்த தடை தொடர்ந்து நீடித்தால், திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெறும். மத்திய அரசு திட்டத்தைக் கை விட்டால் தமிழகத்துக்கு இழப்பு ஏற்படும். சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்குகளில் 80 சதவிகிதம் சாலை மார்க்கமாகத்தான் வருகின்றன.

மெட்ரோ ரெயில் திட்டம் நடப்பதால், இப்போது சென்னை துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்கூட வருவதில் சிக்கல் உள்ளது. தென் பகுதி வழியாக இரவில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. துறைமுகத்துக்கு வரும் சுமார் 70 சதவிகித சரக்குகள் தென் பகுதியிலிருந்து வருகின்றன. இந்தச் சாலை அமைக்கப்பட்டால், துறைமுகம் மேலும் வளர்ச்சி அடையும். இந்தச் சாலையை நம்பி திருப்பெரும்புதூரில் ரூ.3000 கோடி செலவில் கண்டெய்னர் டெர்மினல் அமைக்க 121 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக 235 கோடி ரூபாய் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை - பெங்களூரு சாலையில் உள்ள மப்பேட்டில் உலர் துறைமுகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலைப் பணிகளைத் தொடருமாறு உத்தரவிட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கடல், ஆறுகள், ஏரிகள் மீது பல்வேறு இடங்களில் பாலம் அமைத்து சாலைகள் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கூவம் ஆற்றில் மட்டும் பாலம் கட்டி ஏன் சாலை அமைக்கக் கூடாது? இந்தத் திட்டத்தில் 1800 கோடி ரூபாய்ச் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 900 கோடி ரூபாய் வரை இதுவரை செலவிடப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலை திட்டம் பொது மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. தனி நபரின் நலனுக்காக அல்ல. எனவே இந்தத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும். தற்போது சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இந்தத் திட்டம் வந்த பிறகு துறைமுகத்தில் இருந்து பறக்கும் சாலை வழியாக 25 நிமிடத்தில் மதுரவாயல் சென்று விடலாம்“ என்றெல்லாம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவு முக்கியமான தமிழ்நாட்டு வளர்ச்சியில் சிறப்பான பங்கு வகிக்கும் ஒரு திட்டத்தை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசு முடக்கியிருப்பது - நாட்டு வளர்ச்சியை விட - கலைஞர் மீதான வன்மம், காழ்ப்புணர்வுதான் தலைதூக்கி நிற்கிறது என்பதைத் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறியபோது கட்சிக்கு அப்பாற்பட்ட பொது மக்களைக்கூட சிந்திக்க வைத்தது.

இந்தத் திட்டத்தை முடக்கியதால் ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு மிகவும்  சாமர்த்தியமாக புதிய துறைமுகம் ஒன்றை உருவாக்குவதையும் தமிழர் தலைவர் சுட்டிக் காட்டினார்.

2. அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம்

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.172 கோடி செலவில் கலைஞர் தலைமையிலான திமுக அரசால் ஒன்பது தளங்களைக் கொண்ட நூலகம் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரில் பெருமையாகப் பேசப்படும் நூலகத்தை ஒத்தது அது. ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து படிக்கலாம். ஏழை - எளிய வீட்டில் பாடங்களைப் படிக்க முடியாத நிலையில் உள்ள பிள்ளைகள்கூட தங்கள் நூல்களை எடுத்து வந்து இந்நூலகத்தில் அமர்ந்து படிக்க வசதி செய்யப்பட்டது.  தாயுள்ளத்தோடு இத்தகு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12 லட்சம் நூல்கள் வரை இடம் பெற முடியும். குழந்தைகள் படிக்கவும், கண் பார்வையற்றோர் படிக்கவும் தனி ஏற்பாடுகள் உண்டு. தலைநகரம் மட்டுமல்ல; தமிழ்நாடே பெருமைப்படும் நூலகம் இது.
அண்ணா பெயரில் கட்சி - ஆட்சியை வைத்துள்ள அண்ணா திமுக ஆட்சி என்ன செய்தது? அதிகாரத்துக்கு வந்ததும் வராததுமாக அந்த நூலகத்தைக் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றிட முடிவெடுத்தது. நீதிமன்றம் தலையில் குட்டித் தடுத்தது. மருத்துவமனை கட்ட வேறு இடம் கிடைக்கவில்லையா என்று நாக்கைப் பிடுங்கக் கேட்டது நீதிமன்றம்.

தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட சட்டமன்றமும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மருத்துவமனையாக மாற்றப் பட்டு விட்டது.

இதனைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆசிரியர் அவர்கள் அழகாகப் படம் பிடித்துக் காட்டி நடுநிலையாளர் களை நல்ல முறையில் சிந்திக்க வைத்தார்.

3) தொல் காப்பியப் பூங்கா

சென்னை - அடையாறு பகுதியில் தி.மு.க. ஆட்சியில் மேயராக மா. சுப்பிரமணியன் அவர்கள் இருந்த போது உருவாக்கப்பட்டது. தொல் காப்பியப் பூங்கா என்றும் பெயர் சூட்டப்பட்டது. திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதற்காக அதனைக் கடைசி வரை பொது மக்களுக்குப் பயன்படாதவாறு பார்த்துக் கொண்டனர்.  358 ஏக்கரில் ரூபாய் நூறு கோடி செலவில் நிர்மானிக்கப்பட்டது. முதல் அமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார். பாதிக்கு மேற்பட்ட பகுதிகள் நீர் நிலையால் சூழப்பட்டதால் வெளிநாட்டுப் பறவைகள் சிறகடித்துப் பறந்து வர வாய்ப்புண்டு - சுற்றுலா மய்யமாகவும், நடை பயில்வோர்க்கு நந்தவனமாகவும் காட்சி அளித்தது. மனம் பொறுக்குமா மதோன்மத்தர்களுக்கு? தொல்காப்பியப் பூங்கா என்ற பெயரையும் நீக்கி அடையாறு பூங்கா என்று புதுப் பெயர் சூட்டியது அதிமுக அரசு. தொல்காப்பியர் என்ன திமுககாரரா? என்று தமிழர் தலைவர் வினா எழுப்பியபோது வெட்கத்தால் மக்கள் தலை குனியும் நிலைதான்.

4) மக்கள் நலப் பணியாளர்கள்

“மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம்பேர் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டனர் என்பதற்காக பணி நீக்கம் செய்தது அ.இ.அ.தி.மு.க. அரசு. அதன் காரணமாக 13 ஆயிரம் குடும்பங்கள் வீதியில் நிறுத்தப்பட்டன.

இதில் யாருக்குத் தாயுள்ளம் இருக்கிறது? பணி நியமனம் செய்த கலைஞருக்கா? அவர்களை ஒரே வரியில் வேலையிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பிய ஜெயலலிதாவுக்கா?” என்ற வினாவையும் எழுப்பினார் விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்கள்.

(5) சமச்சீர்க்கல்வி

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக சமச்சீர் கல்வியை செயல்படுத்தாமல் நூறு நாட்கள் இழுத்தடித்து, பிள்ளைகளின் படிப்பைப் பாழ்படுத்தியதும் அஇஅதிமுக அரசே! நீதிமன்றம் தலையில் அடித்துச் சொன்னதற்குப் பிறகுதானே வழிக்கு வந்தது ஜெயலலிதா தலைமையிலான அரசு? கலைஞர் மீதுள்ள ஆத்திரத்தால் திருவள்ளுவர் படத்தைக்கூட புத்தகத்திலிருந்து நீக்க வில்லையா? ஆத்திரம் அறிவை மழுங்கச் செய்கிறது. இதனையும் மக்கள் மத்தியில் வைத்தார் கழகத் தலைவர்.

(6) மதுவிலக்கு


இந்தத் தேர்தலில் மதுவிலக்கு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய திராவிடர் கழகத் தலைவர், திமுக ஆட்சிக்கு வரும் நிலையில் முதல் கையொப்பம் மதுவிலக்கு என்று கலைஞர் அவர்கள் கூறி இருப்பதைச் சுட்டிக் காட்டினார். கலைஞர் அவர்கள் ஒன்றைச் சொன்னால், அதனை நிறைவேற்றுவதிலும் நாணயம் தவறாதவர் என்பதால் கலைஞர் அவர்கள் கூற்றுக்கு முக்கியத்துவம் உண்டு என்றார்.

அதே நேரத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? இந்தப் பிரச்சினை மக்கள் மத்தியில் பேருரு எடுத்து விட்டது என்ற நிலையில்  வேறு வழியின்றி படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என்று முதல் அமைச்சர் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.

மதுவிலக்கு என்பது அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை முடிவாக இருக்குமேயானால் அதனை சட்ட மன்றத்தில் தானே அறிவித்திருக்க வேண்டும்? அதை ஏன் செய்ய வில்லை?


மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் மதுவிலக்கை செயல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக சட்டப் பேரவையில் அறிவித்தாரா இல்லையா? இப்பொழுது முதல் அமைச்சர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொல்லுவது தேர்தல் யுத்தியே தவிர - கொள்கை முடிவல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் சொன்னது தான் தர்க்க ரீதியாக சரியானதாகும்.

தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான இடம் அளித்துள்ளது.


தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல் படுத்த சட்டம் இயற்றப்படும். மதுவிலக்கை அமல்படுத்தும் நடைமுறையை மேற் கொள்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் (TASMAC) கலைக்கப்படும், இந்த விற்பனைக் கழகத்தின் மூலம் தற்போது  செய்யப்பட்டுவரும் மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும். தமிழ்நாடு மாநில ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை விற்பனை வாரியம்   (TAMILNADU INTEGRATED REGULATED MARKETING CORPORATION)      புதிதாக உருவாக்கப்படும். ஏற்கெனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்கள் புதிய நிறுவனத்தில் தங்கள் பதவி மூப்பினை இழக்காமல், பணியாற்ற வழிவகை செய்யப்படும்.

மதுபான விற்பனை செய்வதிலிருந்து அரசு முற்றிலும் விலகி, புதிதாக அமைக்கப்படும் வாரியத்தின் மூலம், மாவட்டங்கள் தோறும் ஏற்கெனவே, கழக ஆட்சி காலங்களில் உருவாக்கப்பட்ட, காய்கறிகளை மட்டும் விற்பதற்கான உழவர் சந்தையைப் போல், புதிய விரிவு படுத்தப்பட்ட சந்தைகள் உருவாக்கப்பட்டு, நெல், வாழை, மஞ்சள், கடலை, மிளகாய், பயறு வகைகள்,  வேளாண் விளை பொருள்கள், கைத்தறித் துணிகள், கைவினைப் பொருள்கள் முதலிய கிராம உற்பத்திப் பொருள்களைப் பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மதுவுக்கு அடிமையானவர்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு; அதன் மூலம் மாவட்டங்கள்தோறும் மறுவாழ்வு மய்யங்கள் (De Addiction Centres)   அமைத்து; மது பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு உரிய மனநலப் பயிற்சியும் சிகிச்சைகளும் வழங்கப்படும்.

மதுவிலக்கு பற்றி உறுதிமொழி கொடுக்கும் மற்றவர்கள் எவராவது இவ்வளவு தெளிவாக திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்தது உண்டா? என்ற வினாவையும் எழுப்பத் தவறவில்லை தமிழர் தலைவர்.

தி.மு.க. தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்பதை மக்களும் திட்டவட்ட மாக தெரிந்து வைத்துள்ளதால் மதுவிலக்கை தி.மு.க. ஆட்சிதான் கொண்டு வரும் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரையில் சட்டமன்றத்தில் விதி 110இன் கீழ் முதலமைச்சரே அதிகாரப் பூர்வமாக அறிவித்தாலும் செயலுக்கு வருவதில்லை. விதி எண் 110, ஆனால் மக்களுக்கோ 111. (கைதட்டல்)

டாஸ்மாக்கில் பணியாற்றுபவர்களுக் கான வேலை உத்தரவாதம் மட்டும் அல்லாமல் மதுவிலக்கால், ஏற்கெனவே அந்தப் பழக்கத்தில் இருந்தவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ ரீதியான ஏற்பாடுகள் வரை செய்யப்பட உள்ளது. இந்தப் பிரச்சினையில் திமுகவுக்குத் தானே தொலைநோக்குப் பார்வை உள்ளது என்றும் அழுத்தமாகவே பதிவு செய்தார்.
மதுவை திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் தானே கொண்டு வந்தார் - அப்படி இருக்கும்பொழுது அதுபற்றி கலைஞர் பேச அருகதை இல்லை என்கிறார் முதல்அமைச்சர் ஜெயலலிதா!

ஒன்றை இந்த இடத்தில் திட்டமிட்டு மறைக்கிறார்கள் 1971இல் மதுவைக் கொண்டு வந்த முதல் அமைச்சர் கலைஞர் தான் 1974ஆம் ஆண்டில் மதுக்கடைகளை இழுத்து மூடி மதுவிலக்கை கொண்டு வந்தார். அதனை ஏன் மறைக்கிறார் முதல் அமைச்சர்?

மறுபடியும் மதுவைக் கொண்டு வந்தவர் யார்? அதிமுக ஆட்சியில் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். தானே மீண்டும் மதுக்கடைகளைத் திறந்தார். இந்த உண்மையை மறைப்பானேன்? என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. மக்களும் பலத்த கரஒலி மூலம் வரவேற்கவும் செய்தனர்.

7. தேர்தல் அறிக்கை

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றன. ஆனால் திமுக வெளி யிட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது ஓர் ஆவணமாகும். அரசமைப்புச் சட்டம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமாக இந்த ஆவணம் தயாரிக்கப் பட்டுள்ளது.

மக்களிடத்தில் சென்று மக்கள் பிரச்சினைகளை நேரில் அறிந்து, விவாதித்து தயாரிக்கப்பட்ட மக்களுக்கான தேர்தல் ஆவணம் இது. திமுகவினுடைய பொதுவான தேர்தல் அறிக்கை ஒன்று; மாவட்ட வாரியாக அம்மாவட்ட பிரச்சினைகள், தேவைகளைக் கருத்திலும் கணக்கிலும் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேர்தல் அறிக்கை என்பது இதுவரை எவரும் கேள்விப்படாதது - எவராலும் செய்யப்படாததுமாகும் என்று பாராட்டிய திராவிடர் கழகத் தலைவர் ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை இதுவரை வெளியிடப்படாததைச் சுட்டிக் காட்டியபோது கேலியாக மக்கள் நகைத்ததைக் காண முடிகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தலைநகரில் தமிழர் தலைவரின் தேர்தல் பிரச்சாரம் வித்தியாசமானது  - விவேகமானது - ஆணித்தரமானது - ஆதாரங்களின் அடிப்படையிலானது - அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைக் கூர்மையாகக் கொண்டது; மக்களைச் சிந்திக்கவும் சிந்தித்த வழி செயல்படுத்தவும், தூண்டக் கூடியதாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

- மின்சாரம்



வாடகைக் கேட்பாளர்கள்

வாடகைத் தாய் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இப்பொழுதெல்லாம் இன்னொன்றையும் கேள்விப்படுகிறோம் - ஏன் நேரிலும் பார்க்கத்தான் செய்கிறோம். அதுதான் வாடகைக் கேட்பாளர்கள் என்பது!  பொதுக் கூட்டங்களில் கேட்பதற்காகப் பணம் கொடுத்துமக்கள் அழைத்து வரப்படுவதுதான் அது; அதனை வாடகைக் கேட்பாளர்கள் என்று சொல்லலாம் அல்லவா!

தலைக்கு 200 ரூபாய் 300 ரூபாய் 500 ரூபாய் வரை கொடுத்து வாடகைக்குக் கொண்டு வரப்படுகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்  இப்படி வரக்கூடிய அதே மக்கள் மற்ற கட்சிகள் கூலி கொடுத்தாலும் வரத் தயாராகத்தான் இருக்கிறார்கள். அனைத்துக் கட்சிகளின் கொடிகளையும் தயாராகவே வைத்துள்ளனர். மக்களின் வறுமையையும், அறியாமையையும் இப்படி எல்லாம் விலைப் பேசுவது வெட்கப்படத்தக்கது. மக்களைக் கூலிகளாக மாற்றும் இந்தக் கேவலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று மானுட நேயத்தோடும் - மனித உரிமை உணர்வோடும் அழுத்திச் சொன்னார் ஆசிரியர்.

- சென்னை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 3.5.2016

திராவிட கட்சிகள்மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தும் அமித்ஷாக்களின் பார்வைக்கு....

$
0
0

திராவிட கட்சிகள்மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தும் அமித்ஷாக்களின் பார்வைக்கு....

வாஜ்பேயி காலம் முதல் மோடி காலம் வரையிலான ஊழல் பட்டியல் இதோ!

“வைத்தியரே,முதலில்உங்கள்நோயைக் குணப்படுத்திக்கொள்வீர்!”

தமிழர் தலைவர் ஆசிரியர்
விடுத்துள்ள ஆதாரபூர்வ அறிக்கை

வாக்காளப் பெருமக்களே ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றிட அனுமதியாதீர்! - கி.வீரமணி


திராவிடக் கட்சிகள் ஊழல் கட்சிகள் என்று தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பிஜேபி தலைவர் அமித்ஷா குறிப்பிட்டு வருகின்றார். ஊழலைப் பற்றிப் பேசும் பிஜேபியின் தகுதி என்ன? வாஜ்பேயி காலம் முதல் மோடி வரை பிஜேபி சம்பந்தப்பட்டு இருக்கும் ஊழல் பட்டியலை வெளியிட்டு ‘வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்வீர்!’ என்று ஆதாரபூர்வமாக அறிக்கையினை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர்

கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்துள்ள பிஜேபியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா, தி.மு.க.வும் - அ.தி.மு.க.வும் ஊழல் கட்சிகள் என்றும், இந்த இரண்டிற்கும் இடையே எந்த வேறுபாடுமில்லை என்றும் ‘அ’ என்ற ஒரு எழுத்தைத் தவிர! மற்றபடி இருவரும் தமிழகத்தைப் போட்டிப் போட்டுக் கொண்டு சுரண்டியவர்கள் என்றும் சகட்டுமேனிக்குப் பேசியுள்ளார்.

தி.மு.க.,வையும், அதிமுகவையும் சம அளவில் நிறுத்திப் பேசுவதே அடிப்படைத் தவறும் குற்றமும் ஆகும். பல வகைகளிலும் பிஜேபியின் இந்துத்துவா கொள்கைக்கு வெகு அருகில் இருப்பதுதான் அதிமுக.

தொடக்கத்திலேயே ஒரு கேள்வியை நாம் எழுப்பினால் இவர்கள் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்?

நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவோடு கூட்டணி வைத்துக் கொள்ள கெஜக் குட்டிக் கரணம் போட்டவர்கள் தாம் இந்த பிஜேபியினர்: அதற்கு முந்தைய தேர்தல்களில் தி.மு.க.வுடனும்கூட கூட்டணி வைத்திருந்தவர்கள்தான் இந்த பிஜேபியினர்!

இந்தத் திராவிட கட்சிகளோடு ஒருக்கால் கூட்டணி வைத்திருந்தால் ஆகா சுத்தம் சுயபிரகாசம் என்று பேசியிருப்பார்கள். கூட்டணி முறிந்தது என்றவுடன் வேறு மொழியில் பேசுவது தான் பிஜேபியின் அறிவு நாணயம்.

தந்தை பெரியார் மண்ணால்
நிராகரிக்கப்பட்ட பிஜேபி

என்ன வேடிக்கை என்றால், தமிழ்நாட்டில் எந்த முக்கிய கட்சியும் பிஜேபியோடு கூட்டணி வைத்துக் கொள்ளத் தயாராக இல்லை என்பதிலிருந்தே மதவாத இந்துத்துவா கட்சிக்கு தந்தை பெரியார் மண்ணில் இடமில்லை - ஒட்டு மொத்தமாக தந்தை பெரியாரின் தமிழ் மண் நிராகரித்து விட்டது என்ற ஆத்திரத்தில் அமித்ஷாக்கள் ஓலமிடுகிறார்கள்.

பிஜேபியும் அதன் ஆட்சியும் ஊழலுக்கு அப்பாற்பட்டது, ‘பரிசுத்த ஆவியில்’ பொரித்து எடுக்கப்பட்டதுபோலப் பசப்புகிறார்களே, இவர்களைப் பற்றிய கந்தாயத்தை அவிழ்த்துக் கொட்ட ஆரம்பித்தால் வெலவெலத்துப் போய் விடுவார்களே!

1) வாஜ்பேயி காலத்திலிருந்தே தொடங்க முடியுமே! அமெரிக்க பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட மோசடி நிறுவனமான ‘என்ரான்’ என்ற மின்சார நிறுவனத்துக்கு - அது மோசடியான நிறுவனம் என்று தெரிந்திருந்தும் மின்சார தயாரிப்பு பிளாண்ட் அமைக்க இடம் கொடுத்ததன் மூலம் பிஜேபி, சிவசேனாவின் முக்கிய பிரமுகர்கள் ரூ.200 கோடி ரூபாய் வரை கையூட்டு பெற்றனர் என்பதை அமெரிக்க நீதிமன்றமும் உறுதி செய்யவில்லையா?
சவப்பெட்டி ஊழல் - மறந்து போச்சோ!

2) 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின்போது உயிரிழந்தவர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் நடை பெற்றது; இராணுவ வீரர்களுக்கு வாங்கப்பட்ட காலணிகள், ராக்கெட் ஆகியவற்றில் ஊழல் நடைபெறவில்லையா?

3)  கேத்தன் தேசாய்  பெயர் நினைவிருக்கிறதா? மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்து, கொள்ளையில் பெரும் ‘சாதனை’ படைத்தவர். திருப்பதி ஏழுமலையானோடு போட்டிப் போடும் அளவுக்கு தங்கக் கட்டிகளை வீட்டில் குவித்து வைத்தவர். ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாகக் குவிக்கப்பட்டுக் கிடந்தன; வருமான வரித்துறை உள்ளே புகுந்து கைப்பற்றியதே - அவர்மீதான வழக்கின் இன்றைய நிலை என்ன? மோடி அரசு அன்றும் இன்றும் அவரைக் காப்பாற்றிக் கொண்டுதானே இருக்கிறது?
எடியூரப்பா கதை என்ன?

4) கருநாடக மாநிலத்தில் லோக் அயுக்தா அமைப்பால் சுமார் 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ஊழல் குற்றஞ் சாட்டப்பட்டு, அன்றைய பிஜேபி முதல் அமைச்சர் எடியூரப்பா சிறைக்குச் செல்லவில்லையா?  முதல் அமைச்சர் பதவியையும் இழக்க நேரிடவில்லையா? அந்த ஊழல் குற்றவாளியை, இந்துத்துவ ‘கங்கா ஜலம்‘ தெளித்து பிஜேபியில் மீண்டும் இணைத்துக் கொண்டு கருநாடக மாநில பிஜேபியின் தலைவராக இப்பொழுது வாரி அணைத்து வரித்துக் கொள்ளவில்லையா? இதுதான் ஊழலை வெறுக்கும் இலட்சணமா?

5) பிஜேபி தலைவராக இருந்த நிதின்கட்காரியின் ஊழல் புராணம் என்ன சாதாரணமா?

அவர் நடத்தி வந்த பூர்த்திசுகர் அண்ட் பவர் என்ற நிறுவனத்தில் போலியான கம்பெனிகள் பெயரில் முதலீடுகள் செய்யப்பட்டது அம்பலத்திற்கு வரவில்லையா? குறிப்பிட்ட கம்பெனிகளின் இயக்குநர்கள் யார் யார் தெரியுமா? பாதுகாவலர்கள், சாதாரண ஊழியர்கள், ஜோதிடர்கள் தான் இயக்குநர்களாக இருந்தார்கள் என்ற கதை சிரிப்பாய் சிரித்ததே!

6) பிஜேபி ஆளும் சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சர் ராமன் சிங் முதல் குடும்ப உறுப்பினர்கள் வீட்டு சமையல்காரர்கள் வரை பொது விநியோகத்தில் ரூ.36,000 கோடி வரை ஊழல் புரிந்தனர் என்பது சாதாரணமானது தானா?


7) லலித்மோடி விவகாரம் - உலகம் முழுவதும் நாறியதே!

கிரிக்கெட் சூதாட்ட பிதாமகன் லலித்மோடி என்ற பெயர் சாதாரண மக்கள் மத்தியிலும்கூட பிரபலமாகி விட்டதே.

அய்.பி.எல். கிரிக்கெட்டில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு, ஹவாலா பரிவர்த்தனத்தில் ரூ.12000 கோடி ஊழலுக்குச் சொந்தக்காரரான இவருக்கு வழக்குரைஞர்கள் யார் யார் தெரியுமா? இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கணவர் மற்றும் அவரது மகள்தானே!

இந்தியாவிலிருந்து தப்பி லண்டனில் குடியேறியிருக்கும் லலித்மோடி தேடப்பட்ட குற்றவாளியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டு, அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.
இத்தகைய குற்றவாளிக்கு லண்டனிலிருந்து வெளிநாடு செல்ல இந்தியத் தூதரகத்தின் மூலம் தம் செல்வாக்கைப் பயன்படுத்தியவர் சுஷ்மா சுவராஜ்தானே!  இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்தில் பெரிய அளவுக்குப் பூகம்பமாக வெடித்து நாடாளுமன்றமே முடக்கப்பட்டதா இல்லையா?

பிஜேபியைச் சேர்ந்த ராஜஸ்தான் முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே, அவரது மகன் ஆகியோர் இந்த லலித் மோடியுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்களே. மத்திய அரசுக்குச் சொந்தமான ராஜ்காட் அரண்மனையை தனக்குச் சொந்தமானதாக மாற்றி, அதன் பத்திரங்களில், பல்வேறு இடங்களில் திருத்தம் செய்து, அந்த அரண்மனையை, பிரபல மோசடிப் பேர் வழி லலித் மோடி, முதல் அமைச்சர் வசுந் தரா ராஜே, அவரது மகன்  கூட்டாக சேர்ந்து மத்திய அரசுக்குச் சொந்தமான அரண்மனையை அய்ந்து நட்சத்திர விடுதியாக மாற்றியது மகா மகா மோசடியும், ஊழலும் அல்லவா!

8. மோடியின் மெகா ஊழல்

நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற 19,716 கோடி ரூபாய் அளவிலான ஊழல் ஒன்றை  CAG யின் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குஜராத் மாநில பெட்ரோலியம் கார்பொரேஷன் 1979 ல் தொடங்கப்பட்டது. மார்ச் 31, 2007 வரை அது எந்தக் கடனையும் பெறவில்லை. ஆனால் 2008 லிருந்து 2015 க்குள் 19,716 கோடி ரூபாயை 13 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்றுள்ளது.

மாநில அரசின் பெட்ரோலிய நிறுவனம் எந்த ஒரு பணியையும் செய்யாமல் பொதுத்துறை வங்கியிடமிருந்து வாங்கிய ரூ 19716-கோடி முறைகேடாக பயன்படுத்தப்பட்டது.  மோடி, தற்போதைய பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மாநில முதல்வர் அனந்திபென் படேல் போன்றோர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சி.ஏ.ஜி அறிக்கையின் முழு விபரமும் கிடைத்த பிறகு குஜராத் காங்கிரஸ் இவ்விவகாரத்தை உச்சநீதிமன்றம் கொண்டு செல்லவிருக்கிறது.

9. மலைக்க வைக்கும் ‘வியாபம்‘

எல்லாவற்றையும் புறமுதுகிட்டு ஓடச் செய்யும் மகா மகா ஊழல் என்பது பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தின் ‘வியாபம் ஊழல்!’

வியாபம் முறைகேடு (Vyapam scam) என்பது, இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையிலும், அரசு பணிடங்களை நிரப்புவதிலும் நடந்த முறைகேட்டினைக் குறிக்கும். மத்தியப்பிரதேசத்தில் மருத்துவம், உயர் தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் மற்றும் அரசுத் துறை பணியாளர்கள் தேர்வு நடத்துவது மத்திய பிரதேச தொழில்முறைத் தேர்வாணையம் ஆகும்[1]  (Madhya Pradesh Professional Examination Board – MPPEB).  இவ்வாணையத்தின் பெயர்ச் சுருக்கம் இந்தியில் வியாபம் என்பதால் இம்முறைகேடு வியாபம் முறைகேடு என அழைக் கப்படுகிறது. (VYAPAM- VYAVSAYIK PAREEKSHA MANDAL).

இம்முறைகேடு ‘வியாபம்‘ நடத்தும் போட்டித் தேர்வுகளின் மூலம் முறைகேடான வழியில் தகுதியற்றவர்கள் பணம் கொடுத்தோ அல்லது வேறு குறுக்கு வழிகளில், அரசுப் பணி, பொறியாளர் பணி, அல்லது மருத்துவப் பணிகளில் இடம் பிடித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை பற்றியதாகும்.

வியாபம் முறைகேடுகள் குறித்து 2007-ஆம் ஆண்டில் மேற்கொண்ட விசாரணையில் நுழைவுத் தேர்வுகளிலும், நியமனங்களிலும் நடைபெற்ற முறைகேடுகளில், மாநில ஆளுநர் அலுவலகம், அரசுத் துறைகள் மற்றும் இதர அமைப்புகளும் ‘வியாபம்‘ முறைகேட்டில் துணை நின்று 2,000 கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக காவல் துறை கண்டறிந்துள்ளது.

2013ஆம் ஆண்டு முதல் மாநில சிறப்புக் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் இது வரை 2100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 491 பேர் தலைமறைவாக உள்ளனர். 47 பேர் இதுவரை மர்ம முறையில் இறந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இது தற்கொலையா என்பது இன்றளவும் விசாரணை நடந்து வருகிறது.  காவல்துறை அதிகாரி  மரணம், தண்டவாளத்தில் பிணம் - மர்மக் கதைகள் ஏராளம்!

கைது செய்யப்பட்டவர்கள்

‘வியாபம்‘ முறைகேட்டில் கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, இந்திய காவல் பணி அதிகாரி ஆர்.கே ஷிவாரே, ஜெகதீஷ் சாகர், மருத்துவர் வினோத் பண்டாரி மற்றும் சுரங்க அதிபர் சுதீர் சர்மா ஆகியோர் முக்கியமானவர்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள்

‘வியாபம்‘  ஊழல் முறைகேட்டில் மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனா, உமா பாரதி தொடர்புடையவர்கள், இவர்கள் மீது விசாரணை நடத்த கோரிய மனுவை ஏற்று விசாரணை ஆணையமும்  அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள்மீது நடவடிக்கை இல்லாதது ஏன்?

‘வியாபம்‘ தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.அய்.,யிடம் ஒப்படைக்கும்படியும், உச்சநீதிமன்றமே இவ்வழக்கை விசாரிக்கும் என்பதால், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தொடர்ந்து விசாரணை நடத்ததேவையில்லை என்றும் 9.7.2015 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

‘வியாபம்‘ வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட் டுள்ள ஜெகதீஷ் சாகர் என்பவரின் 4.8 ஏக்கர் நிலம், ரூ.3.3 கோடி ரொக்கம், நகைகள், 4 சொகுசு கார்கள் உள்ளிட்ட சாகரின் 14 சொத்துகளை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஜெகதீஷ் சாகர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

‘வியாபம்‘ முறைகேடு தொடர்பான அனைத்துப் புகார் மனுக்களை உச்சநீதிமன்ற உத்தரவின் படி சிபிஅய் விசாரணை செய்துவருகிறது.  முதன்மைக் குற்றவாளிப் பட்டியலில் ம.பி. ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் பெயர் இருந்த போதிலும் அவர் இன்றுவரை பதவியில் நீடிக்கிறார். இந்த ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட ஆளுநரின் மகன் சைலேஷ் யாதவ் உத்திரப்பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுவும் சந்தேக மரணத்தில் சேர்த்து விசாரணை நடந்து வருகிறது.

போதுமா பிஜேபியின் ஊத்தை நாற்றமெடுக்கும் ஊழல் புராணங்களின் பட்டியல்? தன் முதுகில் இவ்வளவு அழுக்குகளை வைத்துக் கொண்டு மற்றவர்கள்மீது அபாண்டம் பேசுவது சரியானதுதானா?

வைத்தியரே, முதலில் உங்கள் வியாதியை குணப்படுத்திக் கொள்ளுங்கள்!

திராவிட இயக்கத்தின் மீது சேற்றைவாரி இறைக்கும்போது மற்றவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம்  - ஊழல் ஒழிப்பு என்ற பெயரால் இந்துத்துவா கட்சியைத் தமிழ்நாட்டில் கால் ஊன்றச் செய்யும் தந்திரத்தை முறியடிப்பது மிகவும் அவசியமாகும்.


கி.வீர்மணி   
தலைவர்,     திராவிடர் கழகம்


சென்னை
5.5.2016


அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை: மக்களின் வாக்குகளைப் பறிக்கும் அ.தி.மு.க.வின் மயக்க பிஸ்கெட்டுகள்!

$
0
0


கோவையில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அளித்த பேட்டி



கோவை, மே 6- அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை என்பது மக்களின் வாக்குகளைப் பறிக்க அவர்கள் கொடுக்கும் மயக்க பிஸ்கெட்டுகள் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.


கோவையில் இன்று (6.5.2016) திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
பேட்டி விவரம் வருமாறு:


செய்தியாளர்: அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதே அதுபற்றி..?


தமிழர் தலைவர்: வழக்கமாக அ.தி.மு.க. இதற்கு முந்தைய பல ஆண்டுகள் முதலில் தேர்தல் அறிக்கை கொடுப்பவர்கள் அவர்கள்தான். அப்படிப்பட்ட ஒரு கட்சி, இன்னும் 10 நாள்கள்கூட இல்லாத நிலையில், தேர்தல் வரவிருக்கின்ற நிலையில், கடைசியாக தேர்தல் அறிக்கை கொடுத்த ஒரு கட்சி என்ற பெருமையுடன் இந்தத் தேர்தல் அறிக்கையைக் கொடுத்திருக்கிறது.


இதில் பல அறிவிப்புகள், ஏற்கெனவே பல தேர்தல் அறிக்கைகளில், குறிப்பாக அதனுடைய முக்கிய போட்டியாளராக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையினை மய்யப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது நேற்று அந்த தேர்தல் அறிக்கையை முழுமையாகப் படித்ததிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.


அதோடு, அண்மையில் இதற்கு முன்பாக சட்டப்படி ஒரு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பின்படி, தேர்தலுக்கு முன்பாக தேர்தலில் போட்டியிடக்கூடிய அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கைகள் கொடுத்தால், இலவசங்களை அதில் அறிவித்தால், அந்த இலவசங்களை அவர்கள் கொடுப்பதற்குரிய வாய்ப்பை,  தங்களுடைய வரவு - செலவு திட்டத்தில், தங்களுடைய நிதிநிலை அறிக்கையில் - தங்களுடைய நிதி மேலாண்மையில் எப்படி அதனை  கொடுப்பார்கள் என்ற விவரத்தை விளக்கவேண்டும் என்று மிகத் தெளிவாக அந்தத் தீர்ப்பில் இருக்கிறது.


அப்படி விளக்கியிருந்தால்தான், அந்தத் தேர்தல் அறிக்கையேகூட செல்லுபடியாகும். இல்லையெனில், இந்தக் கட்சியையே கூட அவர்கள் தகுதிக் குறைவாக ஆக்கக்கூட அளவிற்குக்கூட அதனுடைய சட்ட வலிமை உண்டு.


அது ஒருபுறம் இருந்தாலும்கூட, நிச்சயமாக தங்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதை அ.தி.மு.க. உணர்ந்திருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தல் அறிக்கைதான் ஒரு சான்று.


ஏனென்றால், இதுவரைக்கும் காத்திருந்து, மற்றவர்கள் யாரும் இலவசங்களை அறிவிக்க முன்வராத ஒரு நல்ல சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ள நேரத்தில், தங்களுடைய தேர்தல் அறிக்கையில் செல் போன் கொடுப்போம், அதைக் கொடுப்போம், இதைக் கொடுப்போம் என்று சொல்கிறார்கள்; ஏற்கெனவே மின்சார வாரியம் கடனில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. இதிலே 100 யூனிட் ஒரு குடும்பத்திற்கு இலவசம் என்று சொன்னால், பல குடும்பங்கள் 100 யூனிட்டாகவே ஆகிவிடுவார்கள். கூட்டுக் குடும்பங்கள் எல்லாம், தனித்தனி குடும்பமாகக் கணக்குக் காட்டிவிடுவார்கள். அதையெல்லாம் மின்சார வாரியம் எப்படி தாங்கப் போகிறது? மின்சார வாரியத்தையே தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருக்கின்ற அரசாங்கம் எப்படி தாங்கப் போகிறது என்பதெல்லாம் பொருளாதார நிபுணர்கள் சிந்திக்கவேண்டிய ஒரு செய்தி.


அவர்கள் தாராளமாக அறிவித்திருப்பதற்கு என்ன காரணம் என்றால், தாங்கள் பதவிக்கு வரப்போவதில்லை. ஆகவே, சொல்லும்பொழுது தாராளமாகச் சொல்லிவிடலாம். இதில் மக்கள் ஏமாறவேண்டும் என்று மயக்க பிஸ்கட்டுகளைத்தான் கொடுத்திருக்கிறார்கள். மயக்க பிஸ்கெட்டுகள் சாப்பிடும்பொழுது நன்றாக இருக்கும். பிறகுதான் அதனுடைய விளைவு தெரியும். மக்களின் கைகளில் இருக்கும் வாக்குகளைப் பறிப்பதற்கான மயக்க பிஸ்கெட்டே இந்தத் தேர்தல் அறிக்கை.
அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி அத்தியாயம்


செய்தியாளர்: நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பினர்மீது  காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதினால், நான்கு பேர் படுகாயமடைந்திருக்கிறார்களே, அதுபற்றி...?


தமிழர் தலைவர்: அடக்குமுறையின் உச்சகட்டம். கோவன் அவர்கள் பாட்டுப் பாடிய நேரத்தில், அவர்மீது மிகப்பெரிய அளவிற்குத் தேசத் துரோக வழக்கு போடப்பட்டதே - அதுவே மிகத் தவறானது என்று அனைவருமே குரல் கொடுத்தனர் உச்சநீதிமன்றமும் குட்டியது.


ஒரு பக்கம் மதுவிலக்கினைக் கொண்டு வருவேன் என்று சொல்லிக்கொண்டு, இன்னொரு புறம் மக்களுடைய உணர்வுகளை, எளிய மக்கள், பாதிக்கப்பட்ட மக்களுடைய உணர்வுகளை நசுக்கலாமா? அந்தத் தாய்மார்களும், தோழர்களும், ஏழை, எளிய பாட்டாளிகளும், விவசாயிகளும் வெளிப்படுத்துகின்ற ஒரு எதிர்ப்புதானே அது.


ஆகவே,  கடிதோச்சி மெல்லயெறிய வேண்டுமே தவிர, அவர்கள்மீது வேண்டுமென்றே தடியடி மற்றவையெல்லாம் செய்திருப்பது, மனிதாபிமானமற்ற செயல். இந்த ஆட்சிக்கு கடைசி அத்தியாயம் எழுதப்படப் போகிறது என்பதில் அய்யமில்லை.

நுழைவுத் தேர்வை எதிர்த்து கொளுத்தும் வெயிலில் சென்னையில் திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

$
0
0

“மத்திய அரசே அவசர சட்டம் கொண்டு வா, கொண்டு வா!”

நுழைவுத் தேர்வை எதிர்த்து கொளுத்தும் வெயிலில்
சென்னையில் திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

நீதித்துறையிலும் இடஒதுக்கீடு வந்தால்தான் சமூகநீதிக்குப் பாதுகாப்பு கிடைக்கும் - தோழர்கள் முழக்கம்

சென்னை, மே7_ மருத்துவக் கல்லூரியில் சேருவ தற்கு நுழைவுத் தேர்வு கொண்டு வருவதை எதிர்த்து திராவிடர் மாணவர் கழகம் சார்பில் - கொளுத்தும் வெயிலில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நீதித்துறையிலும் இடஒதுக்கீடு வந்தால் சமூகநீதிக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று தோழர்கள் வலியுறுத்தினர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (7.5.2016) காலை 11 மணியளவில் மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வை திணிப்பதைக் கண்டித்தும், பொதுநுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் மாணவர் கழகம் மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்தார். திராவிடர் மாணவர் கழக சென்னை மண்டல செய லாளர் பா.மணியம்மை வரவேற்றார்.

திராவிடர் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் நா.பார்த்திபன், சென்னை மண்டல, மாவட்டங்களின் இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள் ச.மகேந்திரன், சு.அன்புச்செல்வன், பா.தளபதி பாண்டியன், மங்களபுரம் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி தொடக்கவுரை ஆற்றினார்.

கண்டன உரையாற்றியோர்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை  பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, புதிய குரல் எழுத்தாளர் ஓவியா, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்க நிர்வாகி நா.வீரபெருமாள், அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் மாணவர் சங்க பொறுப்பாளர் சாக்கிய சக்தி, கிராமப்புற மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் அமுதரசன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்கள்.

துணைத் தலைவர் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையில் குறிப்பிடும்போது,

தந்தை பெரியார் அவர்கள் கூறும்போது, வருங்காலத்தில் ஆட்சி அதிகாரம் என்பது தாழ்த்ப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் கையில் வரும். அந்த நேரத்தில் ஆட்சி நிர்வாகத்துக்கு மேலாக  நீதி மன்றம் என்பது பார்ப்பனீய அமைப்பாக இருந்து கொண்டு அரசுகள் கொண்டுவரும் சட்டங்களை முடக்கும் என்று சொல்வார். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு பிரச்சினையில் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில்கூட கூறிவிடுவார்கள். ஆனால், நீதிமன்றத்தில் பிரச்சினை இருக்கும்போது, நுழைவுத் தேர்வு நடத்த நீதிபதிகள் தீர்ப்பு அளிப்பது எப்படி?

சமூக நீதிக்கான நம்முடைய போராட்டம் அடுத்த கட்டமாக நீதிமன்றங்களிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தும் போராட்டமாக இருக்கும்.  அரசமைப்பு சட்டம் முதல்முறையாகத் திருத்தப் பட்டதும்  நம்முடைய போராட்டத்தால்தான்.

முதல்வராக இருந்தபோது குஜராத்தில் மோடி நுழைவுத் தேர்வு குறித்து கூறும்போது, நுழைவுத் தேர்வு என்பது மாநில அரசின்மீது திணிப்பதாகும் என்றார். கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது என்றார். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பேச்சு. அவரே இப்போது பிரதமராக இருக்கும்போது செயல்படுவது வேறாக இருக்கிறது. நேற்று தமிழ்நாட்டுக்கு வந்த மோடி  நுழைவுத் தேர்வு பிரச்சினைகுறித்து,   அறிவு நாணயத்துடன் பேசியிருக்க வேண்டாமா? நுழைவுத் தேர்வு ஒழிக்கப்படும்வரை போராட்டம் ஓயாது.
_இவ்வாறு துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி

முன்னதாக ஆர்ப்பாட்ட தொடக்க உரையில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி பேசும்போது,
இந்த நாட்டில் பல்வேறு கல்வி முறைகள் உள்ளன. பல்வேறு தாய்மொழிகளைக் கொண்டுள்ள மாணவர்களிடையே இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் மட்டும் ஒரே மாதிரியான  நுழைவுத் தேர்வு நடத்துவதில் என்ன அடிப்படை உள்ளது? ஏன் இந்த அவசரம்?

2006ஆம் ஆண்டில் திமுக தலைவர் கலைஞர் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று சட்டம் கொண்டுவந்தார். கலைஞர் கொண்டு வந்த சட்டத்தின்மூலமாக தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல் 1200 பேர் பொதுப்பட்டியலில் தேர்வானார்கள். அவர்களில் 430பேர் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் 85 பேர் பொதுப்பட்டியலில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். இப்படி தமிழ்நாட்டில் அருமையாக இருந்தமுறையை ஒழித்துக்கட்ட மோடி அரசு நினைக்கிறது. 2013ஆம் ஆண்டு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

ஒரே மாதிரியான தேர்வு சாத்தியமில்லை என்று    - அப்பொழுது தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தகுதி வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நகர்ப்புறங்களில் இருந்து மட்டுமே மாணவர்கள் மருத்துவர்களாக தேர்வானால், கிராமப்புறங்களில் சேவையாற்ற முன்வரமாட்டார்கள். மக்களுக்கு சேவை ஆற்றும் மருத்துவர்கள் வேண்டும் என்றால், கிராமப்புற மாணவர்கள் வரவேண்டும் என்று நீதிபதி 2013இல் குறிப்பிட்டிருந்தார். இப்பொழுது நடைபெறும் வழக்கில் செய்யலாம் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் மே முதல் நாள் அன்றே தேர்வு நடத்த உத்தரவிட்டது ஏன்?

மூன்று நீதிபதிகளுக்கு மேலாக 5 நீதிபதிகள் உத்தரவு உண்டு என்றாலும், தீர்ப்பை மே 9ஆம் தேதி அளிப்பதாகக்கூறி, மே ஒன்றாம் தேதி தேர்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன?


இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளில் மட்டும், அதுவும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்படி  நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதில் ஆழமான சதி உள்ளது.

தமிழ்நாட்டைப்போன்றே வட கிழக்கு மாநிலத்தில் நுழைவுத் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திலேயே நுழைவுத்தேர்வுகுறித்து பிரச்சினை எழுப்பியுள்ளார். அசாம் மாநிலத்தில் மருத்துவர்கள் குறைவாக இருக்கிறார்கள். இந்நிலையில் நுழைவுத்தேர்வின்மூலமாக வேறு மாநிலத்தவர் படித்துவிட்டு சென்று விடுவார்கள். அசாம் மாநிலத்தில் மாணவர்களுக்கு மருத்துவர் வாய்ப்பு கிட்டாது. மேலும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு நுழைவுத்தேர்வு எதிரானது என்று கூறியுள்ளார்.
தென் இந்தியாவில் திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எச்சரிக்கையால்தான், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மட்டும் கலந்தாய்வு என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்திட அனைவரும் முன்வரவேண்டும்
_இவ்வாறு கோ.கருணாநிதி தொடக்க உரையில் குறிப்பிட்டார்.

பிரின்சு கஜேந்திரபாபு உரை


பொதுப்பள்ளிக்கான மாநில மேடை  பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது குறிப்பிட்டதாவது:


இந்திய உச்சநீதிமன்றம் இதுவரை செய்திராத கொடும் தவறை செய்திருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். ஆளுகின்ற பாஜகவின் வழக்குரைஞர்  நீதிமன்றத்துக்கு சென்று, இந்திய மருத்துவக்கவுன்சில், இந்திய அரசு இந்த நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று தயாராக இருக்கின்றது என்று கூறுகிறார். அப்போதுதான் இதில் உச்சநீதிமன்றம் தானாக தீர்க்க கூடியதா? மோடியின் தலைமையில் இருக்கக்கூடிய பாஜகவின் மத்திய அரசாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கிறது. அதைத்தான் நாம் உணரவேண்டும். கல்வித்திட்டம், பாடத்திட்டம் என்று வந்தால், நிபுணர் குழு அமைத்து கருத்து கேட்காமல், மத்திய அரசின் வழக்குரைஞர் கருத்தைக் கேட்டுக்கொண்டு, நீதிபதி தீர்ப்பு வெளியாகிறது. சென்னை அய்.அய்.டி 50 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. அங்கே 800 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், தமிழர்கள்தான் என்றில்லாவிட்டாலும், தமிழ்நாட்டிலிருந்து வெறும் 10 விழுக்காட்டினர் மட்டுமே படிக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் யார் என்றால் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதற்கு காரணம் அகில இந்திய அடிப்படையில் சிபிஎஸ்இ அடிப்படையிலான நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. காரணம். கோவையில்  தனியார் கல்லூரிக்கு 80 இலட்சம் கேட்டபோது, அரசு சார்பில் கல்லூரி அமைத்தால்தான் ஏழை மாணவர்கள் படிக்க முடியும் என்று மருத்துவக் கல்லூரியைத் திறந்தார் காமராசர்.


தஞ்சையிலே தொடங்கி, தருமபுரி, கன்னியாதகுமரியில் இருந்த மருத்துவக்கல்லூரி,  சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை பொது மருத்துவக் கல்லூரி இவையெல்லாம் தமிழ்நாட்டில் தமிழர்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்.  காமராசரை உயிரோடு இருந்த போது கொளுத்தி கொல்ல முயன்று, இப்போது காமராசர் கொள்கைக்கு சமாதி கட்ட பாஜக முயற்சிக்கிறது.


உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நவோதயா பள்ளி கட்டமைப்பையும், ஆதிதிராவிடர் நலப்பள்ளியின் கட்டமைப்பையும் பார்க்க வேண்டாமா? இரண்டும் ஒரே கட்டமைப்பு கொண்டுள்ளதா? அப்படி இல்லாதபோது சம வாய்ப்பு கொடுக்காமல் போட்டி போடச் செய்கிறது மோடி அரசு, உச்சநீதிமன்றம் துணைபோகின்றது.
_இவ்வாறு பிரின்சு கஜேந்திரபாபு பேசினார்.

புதிய குரல் எழுத்தாளர் ஓவியா உரை


இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கும் ஒற்றைச்சாளர முறையில் என்று நுழைவுத் தேர்வு என்கிற சதித்திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது. நம்முடைய எதிர்ப்பால் இந்த ஆண்டு கிடையாது என்கிறார்கள். மாணவர்களிடையே தேர்வு முறையிலேயே மாற்றம் வரவேண்டும் என்கிற இந்த காலத்தில், 12ஆம் வகுப்புரை படித்தது மட்டுமல்லாமல் நுழைவுத் தேர்வும் கொண்டு வந்து சித்திரவதைக் கூடமாக ஆக்க வேண்டுமா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கலாச்சாரமா? ஒரே உடையா? பழக்கங்கள் ஒரே மாதியாக உண்டா? பலதரப்பட்ட மக்களுக்கு ஒரே நுழைவுத் தேர்வு ஏன்?


நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்  தமிழ்நாடு, கேரளா இந்தியாவுடன் இல்லாமல் இருந்தால் மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற நாடுகளாக இருந்திருக்கும் என்றார்.


கலப்பு பொருளாதாரம்குறித்து தந்தை பெரியார்  மட்டும்தான் சொன்னார்கள். அவர் கூறும்போது,  கலப்பு பொருளதாரம் என்று சொல்வது எதற்கு என்றால், இன்னும் போதிய அளவுக்கு இவர்கள் ரயில்வே நடத்தும் அளவுக்கு, போஸ்டல் நறடத்தும் அளவுக்கு வளரவில்லை. தனியாரிடம் விட்டுவிடுவார்கள் என்றார். இன்று அது நடக்கிறதா இல்லையா? அதேமாதிரிதான் இன்று நம்முடைய மக்கள் பகுத்தறிவு பெற்று, வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் இவர்கள் சொல்கின்ற எந்த தகுதி திறமை என்று எதுவும் மற்றவர்களிடம் கிடையாது.  இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ள திராவிடர் கழகத்துக்கு நன்றி.
_இவ்வாறு எழுத்தாளர் ஓவியா பேசியபோது குறிப்பிட்டார்.

பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்


ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசும்போது குறிப்பிட்டதாவது:


இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பம்தான். அண்மையில் வந்துள்ள  டைம்ஸ் ஆப் இந்தியாவில்   அய்.அய்.டி.யில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்கு 45 நாள்களுக்கு ரூபாய் 22ஆயிரத்து 500 என்று  கூறுகிறது. அதாவது ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 1,500 என்று நிர்ணயித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. நினைத்துப்பாருங்கள் இதில் கிராமப்புறத்தில் இருப்பவர்கள் பயன்பெற முடியுமா?  இது யாருக்காக செய்யப்படுகின்ற சூழ்ச்சி? சாதாரண மாணவர்கள் இதில் நுழைய முடியுமா?  நுழைவுத் தேர்வு கொண்டுவருகின்ற மோடியரசின் சூழ்ச்சியை முறியடிப்போம். இவ்வாறு  பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசினார்.
ஆர்ப்பாட்ட முடிவில் சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி நன்றி கூறினார்.

 

கலந்து கொண்டவர்கள்

வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் செ.உதயகுமார், வட சென்னை  மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், தென் சென்னை  மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலாளர் புழல் த.ஆனந்தன், மாநில திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் கெ.விஜயகுமார்

தென் சென்னை: இரா.பிரபாகரன், கோ.மஞ்சநாதன், டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், மயிலை பாலு, க.வெற்றிவீரன், ச.மகேந்திரன், சி.செங்குட்டுவன், கு.சோம சுந்தரம், வீ.வளர்மதி, பி.அஜந்தா, மு.பவானி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, வி.நிலா, மு.ஈழமுகிலன், கு.செல்வேந்திரன், க.எழில், அ.அருண், மு.சண்முகப்பிரியன், ந.மணித்துரை, ச.அருண், ச.மாரியப்பன்.
பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள்: சென் னையில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி கல்வி பயிலும் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சக்திவேல், வெங்கடேசன், சின்னராஜா, சென்னை பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் ஆறுமுகம், வேந்தன், ராணிமேரி கல்லூரி ஆராய்ச்சி மாணவி கண்மணி, கிருத்துவ கல்லூரி மாணவி பிரியா ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

வட சென்னை: தே. ஒளிவண்ணன், த. மரகதமணி, பசும்பொன் செந்தில்குமாரி, சீர்த்தி, கலைமதி,  பெரியார் திடல் சுரேஷ், சா.தாமோதரன், தங்க.தனலட்சுமி, பாஸ்கர் மங்களபுரம், நதியா, பா.பார்த்திபன்,

வ.கலைச்செல்வன், சிவராமன், க.பார்வதி, பா.வெற்றிச் செல்வி, ஜெ.கோபி, இரா.சரவணன், இராஜேந்திரன், பெரியார் பிஞ்சு ஆ.கிஷோர், மோ.யாழினி, தளபதி பாண்டியன், பெ.செல்வராசு, பெரு. இளங்கோ, கா.எழில் (அமைந்தகரை), புரூனோ, தமிழ்மணி.

தாம்பரம்: மா.ராசு, சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், கடப்பேரி சோமசுந்தரம், மேடவாக்கம் விஜயஆனந்த், ஆர்.டி.வீரபத்திரன், தே.சுரேஷ், தாம்பரம் மு.மணிமாறன், அர்ச்சுனன்,
கே.எம்.சிகாமணி, ராமாபுரம் ஜனார்த்தனன், ராஜன், நடராஜன், நாகரத்தினம், விஜயகுமார், கீழ்க்கட்டளை த.பாண்டியன்

கும்மிடிப்பூண்டி:  விசயகுமார், சு. நாகராஜ், க.ச.க. இரணியன், ராஜ்குமார், மு. சுதாகர், க. சுதன், பழனி. சோ. பாலு, ஏ. முரளி, புழல் ஏழுமலை, வ. இரவி, கோ. முருகன், ந. கசேந்திரன், காந்திநகர் இராசேந்திரன், வி. கனிமொழி, இரா. சோமு.

ஆவடி: உ. கார்த்திக், அருண், கி. ஏழுமலை, மோகன ப்ரியா, க. கலைமணி, கனகசபை, பெரியார் மாணாக்கன், தொண்டறம், செல்வி, நந்தகோபால், வெ. கார்வேந்தன், உடுமலை வடிவேல், கொரட்டூர் கோபால், வை.கலையரசன்.

திருவள்ளூர்: டில்லிபாபு, ஸ்டாலின்.

வேலூர்: வேலூர் மண்டல தலைவர் வி. சடகோபன், மகளிரணி பொறுப்பாளர்; ஈஸ்வரி, போளூர் பன்னீர் செல்வம்.

செங்கல்பட்டு: பூ. சுந்தரம், செல்வமணி.

வேழவேந்தன், அம்பேத், ஆறுமுகம், வெங்கடேசன், கண்மணி, சின்னராஜா, பிரியா உள்ளிட்ட தோழர்கள்.

தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்க மாவட்ட செயலாளர் ஜமாலுதீன், சீனிவாசன், கிராமப்புற மாணவர்கள் சங்கம் அருள், புதிய குரல் முனைவர் பரிமளா, இதயச் சிற்பி, அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்கள்


போராட்டம் போராட்டம்
சமூகநீதிப் போராட்டம்

போராட்டம் போராட்டம்
மருத்துவக் கல்விக்கு
நுழைவுத் தேர்வா
நுழைவுத் தேர்வா?
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
நுழைவுத் தேர்வை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
நுழைவுத் தேர்வா
நுழைவுத் தேர்வா?
உயர் ஜாதிக் கூட்டம்
உள்ளே நுழைய
தந்திரத் திட்டமா
தந்திரத் திட்டமா?
)    நுழைவுத் தேர்வா நுழைவுத் தேர்வா?
கிராமப்புற மக்களை
கிராமப்புற மக்களை
உள்ளே நுழையவிடாமல்
உள்ளே நுழையவிடாமல்
தடுத்திடும்
சூழ்ச்சித் திட்டமா சூழ்ச்சித் திட்டமா?

பொதுப்பட்டியலிலிருந்து
கல்வியை கல்வியை
மாநிலப் பட்டியலுக்கு
கொண்டுவா, கொண்டுவா!
மத்திய அரசே மத்திய அரசே!
பறிக்காதே, பறிக்காதே!
மாநில உரிமையை
பறிக்காதே, பறிக்காதே!
திணிப்பா திணிப்பா?
நுழைவுத் தேர்வு  
திணிப்பா - திணிப்பா
பறிப்பா - பறிப்பா?
இட ஒதுக்கீடு
பறிப்பா - பறிப்பா?
தேவை தேவை     அவசர சட்டம்  
தேவை தேவை  
நுழைவுத் தேர்வை நீக்கி
அவசர சட்டம்
தேவை தேவை
மத்திய அரசே மத்திய அரசே!
கொண்டுவா, கொண்டு வா!
அவசர சட்டம்  
கொண்டுவா, கொண்டு வா!
போராட்டம் போராட்டம்
சமூகநீதி சமூகநீதி
போராட்டம், போராட்டம்!
அனுமதியோம், அனுமதியோம்
நுழைவுத் தேர்வை,  
அனுமதியோம், அனுமதியோம்
போராடுவோம் போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் போராடுவோம்
உயரட்டும் உயரட்டும்!
கோரிக்கை நிறைவேற
கோடிக்கைகள்
உயரட்டும் - உயரட்டும்!
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
மாணவர் போராட்டம்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
ஒடுக்கப்பட்டோர்
போராட்டம்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
கிராம மக்கள்
போராட்டம்  
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
பணி முடிப்போம், பணி முடிப்போம்
தமிழர் தலைவர் வீரமணி
தலைமையிலே
பணி முடிப்போம், பணி முடிப்போம்
தந்தை பெரியார்
பணி முடிப்போம், பணி முடிப்போம்
ஒன்றிடுவோம், ஒன்றிடுவோம்
வென்றிடுவோம், வென்றிடுவோம்!
வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க, வெல்க வெல்கவே!
சமூகநீதி சமூகநீதி
வெல்க வெல்கவே!

- திராவிடர் மாணவர் கழகம்

என்.டி. டிவி படம் பிடித்துக் காட்டியுள்ளதே பார்த்தீர்களா? கடந்த முறை கொடுத்த இலவசங்கள் பயன்பட்டனவா? இம்முறையும் ஏமாறாதீர்கள்!

$
0
0


குன்னூரில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை


குன்னூர், மே 8- கடந்தமுறை அதிமுகவால் கொடுக் கப்பட்ட இலவச பொருள்கள் ஒரு  சில நாள்களிலேயே பழுதாகி விட்டன. என்.டி. டி.வி. நேரிடையாகப் படம் பிடித்து காட்டியுள்ளதே - மறவாதீர் - ஏமாறாதீர் என்று குன்னூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி உரையாற்றினார்.

குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் பா.மு.முபாரக் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேற்று (7.5.2016)  மாலை குன்னூர் பேருந்து நிலையத்தில் தேர்தல் பரப்புரை செய்தார்.
அவரது உரை வருமாறு:

இந்த குன்னூருக்கு நான் புதியவன் அல்லன். பல முறை வந்திருக்கிறேன். திராவிட முன்னேற்ற கழகத்தின் முபாரக், இராமசாமி இருவரும் எப்படி அன்பொழுக வரவேற்கின்றார்களோ, அதே போன்று வரவேற்கக் கூடி யவர் இளித்துறை இராமச்சந்திரன். அவர் இங்கு வருகின்ற சூழ்நிலை இல்லையென்றாலும், எப்போதும், எங்களோடும், திராவிட முன்னேற்ற கழகத்தோடும் இருக்கக் கூடியவர்.

இங்கு, இன்றைக்கு ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். அந்தக் காலத்தில், தன்னந்தனியாக இருந்து, தந்தை பெரியார் போன்ற தலைவர்களையெல்லாம் அழைத்து கூட்டம் நடத்தியவர்கள், அனைத்துக் கட்சிகளின் அன்பை பெற்று திகழ்ந்தவர்கள். மறைந்தும் மறையாத சுயமரியாதைச் சுடரொளிகள் இராமச்சந்திரன், கம்பன், உதகை சாந்தன், குன்னூர் மாணிக்கம் போன்றவர்கள்.

தி.மு.க. வேட்பாளர்(கள்)
மக்களோடு மக்களாக இருப்பவர்(கள்)

பல தோழர்கள், என்னை வரவேற்றாலும், நான் காலியான ஓரிடத்தை பார்க்கிறேன். அந்த காலியான இடத்தில் இருப்பவர்தான், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாதன் அவர்கள். இத்தகை யோரின் நினைவைப் போற்றி உரையைத் தொடங்குகிறேன். அரசியல் புயல் அடித்த நேரத்தில்கூட குன்னூர் மக்களாகிய நீங்கள் மாற்றி ஒட்டுப் போட்டதே கிடையாது. குன்னூர் மக்கள் எப்போதும் சரியானவர்களை, சரியான நேரத்தில் அடையாளம் காணக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.

திமுக மாவட்டச் செயலாளர், வேட்பாளர் முபாரக் அவர்கள் மக்களோடு மக்களாக இருப்பவர். வசனத்தை மட்டும் பேசி விட்டு போகிறவர் அல்லர். மக்களில் ஒருவராக கலந்து இருக்கக் கூடியவர். மக்களின் தொண்டன். அவர் என்னிடம் ஒன்றை கூறினார். அய்யா நீங்கள் டாக்டர் கலைஞரிடம்  (தலைமையிடம்) சொல்லுங்கள்! நீலகிரி மாவட்டத்திலே உள்ள மூன்று தொகுதிகளையும் வென்று காட்ட மக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். நாங்கள் வென்று காட்டுவோம். நீங்கள் சென்று சொல்லுங்கள்! என்றார். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தமிழகத்திற்கு புதிய வாழ்வு தரக் கூடிய மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.

மக்கள் தயாராகி விட்டார்கள்!

மீண்டும் திமுகவை ஆட்சி அரியணையில் ஏற்றுவதற்கு திராவிட முன்னேற்ற கழகத் தோழர்கள் தயாராக இருக்கிறார்களோ, இல்லையோ! மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். எப்படி கடுமையான வெப்பத்தில் இருக்கிறவர்கள், குளிர்ந்த பானத்தை தேவை என்று எடுத்துக் கொள்வார்களோ, அதுபோல கடுமையான வெப்பத்தில், (இருட்டில்) தவித்துக் கொண்டு, நெருக்கப்பட்டு இருக்கிற மக்களுக்கு ஒரு குளிர் தரும் கோடை உண்டு என்றால், அதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. திராவிட இயக்கம், காமராசர் ஆட்சி, அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி இல்லையென்றால், குப்பன் மகன் சுப்பன், முத்தம்மாள் மகன் முனியன் வெளிநாடு சென்று படிக்க முடியுமா? வேலை பார்க்க முடியுமா? இதெல்லாம் திராவிட இயக்கம் வந்ததன் விளைவுதானே. இவற்றை நீங்கள் புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்திற்கான திட்டம்

ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கையை கொடுத்தார்கள். ஆனால், திமுக தேர்தல் அறிக்கைக்கு இருக்கக் கூடிய தனிச் சிறப்பு என்னவென்றால் அவர்கள் சொல்வதைத்தான் செய்வார்கள். செய்வதைத்தான் சொல்வார்கள். இது மட்டுமல்ல; எந்த கட்சியினரும் வெளியிடாத வகையில், இரண்டு புத்தகங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இதில் ஒரு புத்தகம் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கான திட்டம். இன்னொரு புத்தகம் மாவட்டம் வாரியான மக்களுக்குரியது.

திமுக தேர்தல் அறிக்கையின் இரண்டா வது புத்தகத்தில் பக்கம் 51இல் நீலகிரி மாவட் டத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத் துள்ளார்கள். அதில் கூறியிருக்கும் திட்டங்கள் நீலகிரியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக் கப்படும், தேயிலை விவசாயிகளுக்கு மத்திய  அரசு வழங்குகின்ற உதவியை  சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க ஆவன செய்யப்படும்.

சேரன்பாடி அரசு தேயிலை தோட்டத்தில் அமைந்துள்ள கோட்ட மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நட வடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் நீண்ட காலமாக பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவது பற்றி பரிசீலித்து புதிய நடவடிக்கை எடுக்கப்படும். கூடலூர் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். இது போன்ற ஏராளமான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வழங்கியிருக்கிறார்கள். இப்படி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், யாரும் சொல்லாத திட்டங்களை சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு இளைஞர்கள் இலவசங்களை விரும்பாதவர்கள்

தமிழ்நாட்டு இளைஞர்கள் இலவசங்களை விரும்பாதவர்கள் தன்னுடைய காலில்தான் நிற்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை கொண்ட வர்கள். அவர்கள் இப்பொழுது விரும்புவது மாற்றத்தைத்தான், இலவசத்தைப் பெற வேண்டும் என்றல்ல; தொலை நோக்கான திட்டங்களைத்தான் விரும்புகிறார்கள். அந்த எண்ணத்தை திராவிட முன்னேற்ற கழகம் நிறைவேற்றும் என்பது உறுதி.

கலைஞரின் முதல் கையொப்பம் -
மது விலக்குக்குத்தான்

டாக்டர் கலைஞர் சென்ற முறை வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து பதவிப் பிரமாணம் செய்து, யாரும் எதிர்பார்க்காத நிலையில், மிகப் பெரிய ஒரு திட்டத்தை தந்தார். அதுதான், விவசாயிகளுக்கான கடன், ரூ.7000 கோடி அடியோடு ரத்து செய்கிறோம் என்று கையொப்பமிட்டார். மீண்டும் அவர் ஆறா வது முறையாக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த வுடன் போடும் முதல் கையொப்பம் என்பது, மதுவிலக்கை செயல் படுத்துவதுதான் இது உறுதியான ஒன்று. யாருக்கும்  இதில் சந்தேகம் வேண்டாம்.

மதுவின் கொடுமையால்
குடும்ப உறவே பாழ்பட்டது!

இப்பொழுது மதுவிலக்கைப்பற்றி அம்மையார் பேசுகின்றாரே! அவர் ஆட்சியில் இருக்கும்போது, மதுவின் கொடுமையால் எண்ணற்ற ஏழைத் தாய்மார்கள், உழைக் கின்ற தாய்மார்கள், எத்தனைப் பேர் விதவை களானார்கள். குழந்தைகளுக்கு வேதனை, பள்ளி செல்லும் மாணவருக்கு வேதனை. குடும்ப உறவே பாழ்பட்டுப் போனதே! மதுவின் கொடுமையை உணர்ந்து, அதை நீக்க வேண்டும் என பலரும் பிரச்சாரம் செய்தார்கள். தேசபக்த தியாகிகளும் பிரச்சாரம் செய்தனரே! சசிபெருமாள் எத்தனை முறை பட்டினிப் போராட்டம் இருந்தார்! கடைசியில் அவரும் வெறுத்துப் போய், ஒரு கம்பத்தின்மீது ஏறி தற்கொலை செய்து கொண்டார். அவரை காவல்துறை காப்பாற்றி இருக்க வேண்டாமா?

அவர் நினைத்திருக்கிறார், கீழே விழுந் தாலாவது, செத்தாலாவது மதுக்கடையை மூட மாட்டார்களா? என்று தன்னுடைய உயிரையே பறி கொடுத்தார், இறந்தார். அப்பொழுது ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக தாய்மார்கள், மாணவர்கள் எந்தவிதமான ஏற்பாடுகள் இன்றி தாங்களாகவே திரண்டார்களே! அந்த நேரத்திலாவது மதுக்கடையை மூடியிருந்தால், அவர்களுக்கு தலை வணங்கலாம், அவர்களின் எண்ணத்தில் தூய்மை இருக்கிறது. உண்மை இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளலாம். பாராட்டலாம். மூடினாரா அம்மையார்?

ஜெயலலிதாவின் இரட்டை வேடம் - இரட்டைக் குரல்!

நேற்று முதல் நாள்கூட டாஸ்மாக்கை மூடக்கோரி, மக்களதிகாரத்தினர் டாஸ்மாக் கடை முன்பு பாட்டு பாடினார்கள் என்ற காரணத்திற்காக, சென்னை மணலி, மதுரவாயலில், பெண்கள், சிறுவர்கள் என்று கூட பார்க்காமல், காட்டுமிராண்டித்தனமாக அவர்களை  காவல்துறையினர் தாக்கலாமா? பெண்கள் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டக் கொட்ட வேனில் ஏற்றி இருக்கிறார்களே! அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? மதுக்கடையை மூடுங்கள் என்று சொன்னார்கள். அம்மையார் அரசு என்ன செய்து இருக்க வேண்டும்? தாயுள்ளம் கொண்டவர்  என்று பேசுபவர் இப்படி நடந்து கொள்ளலாமா? ஒரு தாய்க்குத்தான் தெரியும் என்று சொல்கிறாரே! என்ன செய்து இருக்க வேண்டும்?

தாயுள்ளம் இருந்தால் போராடிய மக்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டாமா? முதலமைச்சர் நேரில் வந்துகூட பேச வேண்டாம். தொலைப்பேசியிலோ, காணொலிக் காட்சியிலாவது பேசி இருக்கலாமே! நீங்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிந்தேன். உடனே நிறுத்துங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மதுவிலக்கை செயல்படுத்துவேன் என்று சொல்லியிருக்கலாமே! சொல்லியிருந்தால், காவல்துறையினருக்கும் சிக்கல் இல்லை. போராடியவர்களுக்கும் பாதிப்பு வந்திருக்காதே! அதுதான் அம்மையாரின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. இரட்டை குரலை காட்டுகிறது.

தேர்தல் அறிக்கையில் மட்டும், நான் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளைக் குறைப்பேன் என்று ஒரு பக்கம் பேசுகிறார், மறுபக்கம் மதுக்கடையை மூடக்கோருபவர்களை காவல்துறையை விட்டு அடித்துத் துன்புறுத்துவது, இதுதான் தாயுள்ளமா? இதுதான் அம்மையாரின் இரட்டை வேடம். நீங்கள் ஏமாந்துவிடக்கூடாது. அவரின் இரட்டைக் குரலை நம்பக்கூடாது.

சட்டமன்றமா? சத்த மன்றமா?

அதிமுக ஆட்சியில் சட்டமன்றம் நடந்ததா? அது ஜால்ரா மன்றமாகத் தான் நடந்தது. சட்டமன்றமாக நடைபெறவில்லை. சத்த மன்றமாகவே நடந்தது. உண்மையான புதிய சட்டமன்றம் நடைபெற வேண்டுமானால், முபாரக் போன்று தமிழகம் முழுவதும் உள்ள திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்போதுதான் கலைஞர் தலைமையில் அமையப்போகும் ஆட்சியில் முதலாவதாக மதுவிலக்கு கொண்டுவர வாய்ப்பு ஏற்படும்.

பணத்திற்கு விலை போகாதீர்!

போனமுறை அம்மையார் ஜெயித்தார்கள் என்றால் எப்படி தெரியுமா? 144 தடை உத்தரவைப் போட்டார்கள். காவல்துறையினர் துணையோடு ரூ. 500/-, ரூ. 1000/-  என்று மக்களிடம் கொடுத்து வெற்றி பெற்றார்கள். இந்த முறையும் அதேபோல, ஆம்புலன்ஸ் மூலம் பணம் கொண்டு போய் பட்டுவாடா செய்யலாம் என்று நினைத்தார்கள். அதுவும் நடைபெற முடியாமல் போய்விட்டது. எனவே நீங்கள், அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு விலை போனீர்களேயானால் அடுத்த 5 ஆண்டுகாலமும் துன்பப்பட வேண்டும். உங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறோம்.

கடைசி நேரத்தில், தாங்கள் வரமாட்டோம் என்று கருதி இலவசங்களை வாரி கொடுத்திருக்கிறார்கள். அந்த இலவசம் என்பது நோயாளி சாகும்போது கொடுக்கும் ஆக்ஸிஜன் மாதிரியே! இலவசம் இலவசம் என்று கொடுத்துள்ளதன் தன்மை இதுதான். ஏற்கெனவே தமிழ்நாடு பல கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. இதில் இலவசம் கொடுப்பது சாத்தியமா? முடியுமா?

பித்தலாட்டக்காரனும் -
அதிமுக தேர்தல் அறிக்கையும்

ஒரு கதை உங்களுக்கெல்லாம் கூட தெரிந்திருக்கலாம்! ஊரின் நடுவே, குறுக்கே இரண்டு மலைகள் இருந்தன. மக்கள் கடந்து போவதற்கு துன்பப்பட்டார்கள். திடீரென ஒரு ஆள் வந்தான். மலைதானே இடைஞ்சலாக இருக்கிறது. நான் தூக்கி வைக்கிறேன் என்றான். உடனே மக்கள் இவர் தூக்குவார் போல் இருக்கிறது என்று நினைத்தார்கள். அவன் சொன்னான் நான் மலையை தூக்க வேண்டுமானால் சில நிபந்தனைகளை நீங்கள் எனக்கு நிறைவேற்ற வேண்டும். அது என்னவென்றால் ஒரு மாதம் எனக்கு சாப்பாடு போட வேண்டும் என்றான். நான் 31ஆம் தேதி மலையை தூக்குகிறேன். ஊரிலிருந்து அனைவரும் வாருங்கள் என்றான். மக்களும் சோறு போட்டார்கள். 31 ஆம் தேதியும் வந்தது. மலையைத் தூக்கும் மகானை காண மக்கள் கூட்டம் அலை மோதியது. அனைத்து மக்களும் வந்து விட்டார்கள். அவன் சொன்னான், நான் குறிப்பிட்ட நாளின்படி தயாராக இருக்கிறேன்!  நீங்கள் எல்லாம் சேர்ந்து என் தோளில் மலையைத் தூக்கி வையுங்கள். நான் அந்தப் பக்கம் நகர்த்தி வைக்கிறேன், தூக்கி வைக்கிறேன் என்றான். பகுத்தறிவு இல்லாத காரணத்தால் பல பேர் ஏமாந்தார்கள்.

இது போன்ற பித்தலாட்டகாரனுக்கும் அதிமுக தேர்தல் அறிக்கைக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. அதைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்!  நம் வரிப்பணத்தை எல்லாம் கொடுத்தால், அவர்கள் இலவசம் என்னும் வாணவேடிக்கை விடுவார்கள்.

ஊழல் சாம்ராஜ்ஜியம் அமைய துணை போகாதீர்!
என்.டி.டி.வி. ஒரு செய்தியை போட்டார்கள்

ஓடாத மிக்ஸி, செயல்படாத கிரைண்டர், இதற்கெல்லாம் இல்லாத கம்பெனியிடம் ஆர்டர் கொடுத்து மாட்டிக் கொண்டார்கள்.

ஓடாத மிக்ஸி, செயல்படாத கிரைண்டர், இல்லாத கம்பெனி அடித்த கொள்ளை, தனித்த கொள்ளை. இது மாதிரி இன்னொரு ஊழல் சாம்ராஜ்ஜியம் அமைவதற்கு நீங்கள் துணை போகலாமா? இப்பொழுது செல்போன் இலவசம் என்று அறிவித்திருக்கிறார். செல்போன் பேசுகிற மாதிரி இருக்காது. ஏற்கெனவே, அம்மையார் ஒரு நம்பர் கொடுத்தார்கள். தொடர்பு கொண்டால், தொடர்பு எல்லைக்கு அப்பால் என்று வந்தது. இப்போது செல்போன் வேறா? இந்த ஆட்சி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தால் தான் நல்லது. ஏமாந்து விடாதீர்!

ஏமாற்றுகிறவர்கள் எப்போதும் உண்டு. எனவே வரவேண்டியது மாற்றமே தவிர ஏமாற்றம் அல்ல. எச்சரிக்கையாக இருங்கள்!

இலவசம் என்ற கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையில் சொரிந்துவிடக் கூடாது. இலவசம் என்ற ஆபத்தை நம்பாதீர்! என்று பேசினார்.

 

குன்னூரில் தேர்தல் பரப்புரை

முன்னதாக குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் பா.மு.முபாரக் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் 7.5.2016 அன்று மாலை 5 மணியளவில் குன்னூர் பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.  பரப்புரை கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் நாகேந்திரன் தலைமை தாங்கினார். திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, பெரியார் மருத்துவ குழும இயக்குநர் டாக்டர் கவுதமன், மண்டல தலைவர் இரா.கருணாகரன், செயலாளர் ம.சந்திர சேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் இராவணன் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். குன்னூர் மக்களிடம் வேட்பாளர் பா.மு.முபாரக் அவர்களுக்கு வாக்கு கேட்டு திராவிடர் கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், பொருளாளர் டாக்டர் பிறை நுதல் செல்வி ஆகியோர் உரையாற்றினர். பின்னர் குன்னூர் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் வாக்கு சேகரித்துவிட்டு மேடைக்கு வந்த வேட்பாளர் பா.மு.முபாரக் அவர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் வாக்களிக்க வேண்டியும், ஆதரிக்கவும் கேட்டு உரையாற்றினார்.

தமிழர் தலைவருக்கு சிறப்பு


தமிழர் தலைவர் அவர்களுக்கு வேட்பாளர் பா.மு.முபாரக், குன்னூர் நகர செயலாளர் எம்.இராமசாமி, துணைச்செயலாளர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் இரவிக்குமார், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திராவிடர் கழக, திமுக கூட்டணிக் கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.
கலந்து கொண்டோர்

கூட்டத்தில் திராவிடர் கழகப்  பொதுச் செயலாளர் இரா.செயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியன், கோவை மண்டல மாணவரணி செயலாளர் பிரபாகரன், வெற்றிச் செல்வன், திமுக குன்னூர் நகர அவைத் தலைவர் தாஸ், ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், முன்னாள் நகர்மன்றத் துணை தலைவர் முபாரக், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் லாரன்ஸ், திமுக பேச்சாளர் ஜாகீர் உசேன், திமுக மாநில சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அன்வர்கான், மேலூர் ஒன்றிய அமைப்பாளர் உதயதேவன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் புகழேந்தி உள்ளிட்ட திராவிடர் கழக, திமுக கூட்டணி கட்சி தோழர்கள் பங்கேற்றனர். முன்னதாக மாவட்டச் செயலாளர் வேணு கோபால் அனைவரையும் வரவேற்றார். முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் சத்தியநாதன் நன்றி கூறினார்.

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பாடத் திட்டத்திலிருந்து நேரு குறித்த பகுதி நீக்கமாம்!

$
0
0


பா.ஜ.க.வின் அற்பத்தனம் - காங்கிரசு கண்டனம்


ஜெய்ப்பூர், மே9_ பாஜக ஆளுகின்ற ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் சமூக அறிவியல் பாடத்திலிருந்து நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருகுறித்த பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்து நேருகுறித்த பகுதியை நீக்குவது என்பது மிகவும் வெட்ககரமான, தரம் தாழ்ந்த செயல் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரசு கட்சி வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் பண்டித ஜவகர்லால் நேரு குறித்த இரண்டு பகுதிகள் இடம் பெற்றிருந்தன. ராஜஸ்தான் மாநில அரசின் பள்ளிக் கல்வி வாரியத்தின் (ஆஜ்மீர் கல்வி வாரியம்) அங்கீ காரத்துடன் பாடத் திட்டத்தில் அந்த பகுதிகள் இருந்து வந்தன. இந்த ஆண்டுக்கான  திருத்தப்பட்டுள்ள பாடத் திட்டத்தில் ஆளும் பாஜக  அரசால் நேரு குறித்த அந்த பகுதிகள் நீக்கப் பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநில காங்கிரசுக் கட்சியின் தலைவரான சச்சின் பைலட் கூறுகையில், ஆளும் பாஜக அரசின் இச்செயலைக் கண்டித்து காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமான போராட்டத்தை நடத்த உள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ். பாஜக  வகையறாக்கள் பாடப் புத்தகங்களில் வேண்டுமானால் நீக்கலாம் ஆனால், வரலாற்றை மாற்றி எழுதிவிட முடி யாது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்னமும் திருத் தப்பட்ட புத்தகங்கள் வெளிவராத நிலையில், மாநில அரசின் பள்ளி களுக்கு பாடநூல்களை அளிக்கின்ற மாநில பாடநூல் வாரியத்தின் இணைய தளத்தில் இவை வெளியிடப்பட்டுள்ளன.

நேருகுறித்த பகுதிகளை நீக்கியுள்ள புதிய பாட நூல்களில் விடுதலை இயக்கத் தலைவர் என்று ஹேமு கலானி பெயர் இடம்பெற்றுள்ளது. காந்தி, வீரசவார்க்கார், பகத்சிங், பாலகங்காதர திலகர், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட பலரின் பெயரும் பாட நூலில் இடம் பெற்றிருந்தபோதிலும், சுதந்திரப் போராட்டக் காலத்திலும்,  சுதந்திரத் துக்குப் பிறகும் முதல் பிரதமர் நேரு குறித்த எந்த பகுதியும் இடம் பெறவில்லை.

உதய்ப்பூரை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்சார்பில் ஏராளமாக திருத்தங்களு டன் பாடநூல்கள்  வெளி யாகி உள்ளன. இதற்கு முன்பாக எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் தாதாபாய் நவரோஜி, பால கங்காதர திலகர், காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தேசிய இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள்குறித்து சுருக்கக் குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.

நேரு குறித்து குறிப்பிடும் போது, “பாரிஸ்டரான பிறகு  தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். அதன்பிறகு காங்கிரசு கட்சியின் தலை வரானார், இடைக்கால அரசின் தலைவராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகவும் இருந்தார்’’  என்று கட்டம் கட்டி தகவலாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திருத்தப்பட்ட பாடப் புத்தகத்தில் அத்தகவல்  நீக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவரான ராமேஸ்வர் தூடி கூறுகையில், “ராஜஸ் தானில் ஆளும் பாஜக அதன் திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கி விட்டது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பெரும் பங்காற்றியவர் மற்றும்  சுதந்திர இந்தியாவை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றியவர்குறித்த குறிப்புகளை நீக்குவதன் மூலம் மாநிலத்தை தரம் தாழ்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது’’ என்றார்.

ராஜஸ்தான் காங்கிரசு கட்சியின் தலைவர் சச்சின்பைலட் இது குறித்து கூறும்போது, “ஆர்.எஸ்.எஸ்., பாஜக வகையறாக்கள் பாடப் புத்தகங்களை மாற்றலாம், ஆனால், நேரு போன்ற முக்கியத்தலைவர்களின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்து வரலாற்றை மாற்றி எழுதிவிட முடி யாது. எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து நேரு குறித்த குறிப்புகளை நீக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வின் அற்பத் தனம் மற்றும் குறுகிய மனப்போக்கையே பிரதி பலிப்பதாக உள்ளது’’ என்றார். ராஜஸ்தான் மாநில காங்கிரசு கட்சியின் மேனாள்  தலைவர் அசோக் கெலாட் கூறுகையில், “ராஜஸ்தானை ஆளு கின்ற பாஜகவின் வெட் கங்கெட்ட நிலையையே இச்செயல் உணர்த்துகிறது. இந்தியாவில் பெருமை கொள்ளும் வரலாற்றை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கொண்டிருக்கவில்லை. ஆகவேதான் நேரு குறித்த பகுதியை நீக்குகிற வேலையைச் செய்து வருகிறது. மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்’’ என்றார்.

நுழைவுத் தேர்வை புகுத்தியவர் எம்.ஜி.ஆர். நுழைவுத் தேர்வு கூடாது என சட்டம் இயற்றியவர் டாக்டர் கலைஞர் யார்ஆட்சிவேண்டும்?

$
0
0

கலைஞர் ஆட்சியா? அம்மையார் ஆட்சியா? சிந்திப்பீர்!
நிலக்கோட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை

நிலக்கோட்டை, மே 10- நுழைவுத் தேர்வை புகுத்தியவர் எம்.ஜி.ஆர்.; நுழைவுத் தேர்வு கூடாது என சட்டம் இயற்றியவர் டாக்டர் கலைஞர். யார் ஆட்சி வேண்டும்? கலைஞர் ஆட்சியா? அம்மையார் ஆட்சியா? சிந்திப்பீர்! என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பரப்புரையாற்றினார்.

நிலக்கோட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.அன்பழகன் அவர்களை ஆதரித்து நேற்று (9.5.2016) மாலை 6 மணியளவில் நிலக்கோட்டை சிறிய பேருந்து நிலையம் அருகே தேர்தல் பரப்புரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அவரது உரை வருமாறு:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிலக்கோட்டை பகுதி மக்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த மண் திராவிட இயக்க உணர்வுள்ள மண். சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பட்டிவீரன் பட்டி டபுள்யூ.பி.சவுந்திரபாண்டியன் காலத்திலே இந்த மண், சுயமரியாதை மண்ணாக இருந்தது. தந்தை பெரியார் அவர்களோடு இங்கு ஒருமுறை நான் உரையாற்றினேன். ஒரு சீரிய பகுத்தறிவாளர், வழக்குரைஞர் கிருஷ்ணன் அவர்களை நினைத்துக் கொண்டுதான் இங்கு எப்போது வந்தாலும் வருவேன். இப்போதும் அவரை நினைத்துக் கொண்டுதான் வந்தேன். இயக்கம் ஒன்றாக இருந்த காலத்தில் திராவிட இயக்க மாநாட்டை இங்கே நடத்தி இருக்கிறோம்.  திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. என பிரிந்த நேரத்திலும், வாடிப்பட்டி போன்ற பகுதிகளில் திராவிட இயக்க மாநாடுகளை நடத்தியிருக்கின்றோம்.

வயதானவர்கள் இன்றைக்கும் நல்ல உணர்ச்சியோடு இருக்கிறார்கள். தாய்மார்கள் அதிகமான அளவில் இங்கு வந்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். தாய்மார்கள் இவ்வளவு பேர் வந்தாலே வெற்றி நமதுதான் (கைதட்டல்).

மறைந்தும் மறையாமலும் நம் நெஞ்சங்களில் இருக்கின்ற மேனாள் சட்டமன்ற உறுப்பினர் முனியாண்டி அவர்கள், இங்கு பல சாதனைகளை செய்துள்ளார். அவருடைய மகன், இந்த மண்ணின் மைந்தன் உங்கள் வீட்டுப் பிள்ளை அன்பழகன் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகம் அடையாளம் கண்டு வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள்.
ஏழை - எளியவர்களுக்கான ஆட்சி தி.மு.க.வே!

நாங்கள் பல ஊர்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து முடித்துவிட்டுத்தான், இங்கு நிலக்கோட்டைக்கு வந்திருக்கின்றோம். சென்னை, தருமபுரி, குன்னூர் போன்ற பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்துவிட்டுத்தான் உங்களை சந்திக்க வந்திருக்கின்றோம்.

தொலைக்காட்சியில் கருத்துக் கணிப்பு என்று போடுகிறார்கள். நாங்கள் அதை வைத்துக்கொண்டு சொல்லவில்லை. நாங்கள் மக்கள் கணிப்பை சொல்லக்கூடியவர்கள். தேர்தல் பிரச்சாரத்திற்கு நாங்கள் சென்ற இடமெல்லாம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்படப் போவது அம்மையாரின் அதிமுக ஆட்சிதான். ஏனென்றால், அவர்களின் ஆட்சியினால், மக்கள் பல சங்கடங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர். இப்போது கோடை காலம், வறண்ட நிலையை சமாளிக்க ஒவ்வொருவரும் நீரை, மோரை தேடி அலைவார்கள். குடிப்பார்கள். அதுவும் ஏழை வீட்டு மோருக்கு சுவை அதிகம். எலுமிச்சை பழம் போட்டு ஜூஸ் அருந்துவார்கள் ஏழை - எளியவர்கள். அதுபோல், இந்த ஆட்சி கலைஞர் தலைமையிலான ஆட்சி ஏழை - எளியவர்களுக்கான ஆட்சி. தளபதி ஸ்டாலின் ஊக்கத்தினால் நிறுத்தப்பட்டிருக்கின்ற வழக்குரைஞர் அன்பழகன் போன்றோரை வெற்றி பெறச் செய்து தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதில் எங்கள் பங்கு, திராவிடர் கழகத்தின் பங்கு இருக்கவேண்டும்!! என்றுதான் நாங்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறோம்.
அம்மையார் ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி உண்டா?

இந்த அய்ந்து ஆண்டு அம்மையாரின் ஆட்சியில், சாதனைகளை விட வேதனைகள்தான் அதிகம். சாதனைகள், சாதகங்கள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. வேதனைகள் தராமல் இருந்திருந்தால் மக்கள் குறைந்தபட்ச நிம்மதியோடு வாழ்ந்து இருப்பார்கள். அம்மையார் மக்களை நிம்மதியாக விட்டாரா? இல்லையே!

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிக்கு எல்லாவிதமான சிகிச்சையும் அளிப்பார்கள். அது போன்று அ.தி.மு.க. ஆட்சி - அரசு மக்களுக்கு இலவசங்கள் என்ற பெயரில், அவர்கள் நோயாளி போல் இலவசம்! இலவசம்! என்று வாரி இறைக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது, அவர்களுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது என்பது உறுதி!

கல்விப் புரட்சி - திராவிட இயக்கத்தாலே!

பலதரப்பட்ட கல்வி முறைகள் இருந்தன. ஏழைகளுக்கு ஒன்று, பணக்காரர்களுக்கு ஒன்று எனவிருந்ததை, எங்களைப் போன்றவர்கள் கலைஞரிடம் பேசி, கேட்டுதான் சமச்சீர் கல்வி முறை வந்தது. ஒவ்வொருவருக்கும் அடிப்படையானது கல்வியே! ஒருவருக்கு கல்வியைக் கொடுத்துவிட்டால், வேறு எதையும் கொடுக்கத் தேவையில்லை. மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை மக்களுக்குக் கொடுப்பதைவிட, கல்வியைக் கொடுத்துவிட்டால் வேறு எதுவும் தேவையில்லை. படிப்பை கொடுத்தாலே போதும். அவரவர்களுக்கு அறிவு வரும். அதை வைத்துக் கொண்டு வெற்றி பெறுவார்கள். முனியாண்டி பிள்ளை இன்று வழக்குரைஞராக இருக்கிறார். நாளை அரசு வழக்குரைஞராக வரும் நிலைக்கு வந்துள்ளார். இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க முடிகிறதா? தி.மு.க. ஆட்சி, திராவிட இயக்க ஆட்சி இருந்ததினாலேதானே - சமச்சீர் கல்வி என்ற வாய்ப்பினாலே, நம் பிள்ளைகளுக்கு நல்ல வாய்ப்புகள், பதவிகள் கிடைக்கின்றன.

கல்விதான் ஒரு நல்ல மனிதனை உருவாக்கும். அந்த கல்வி நீதிக்கட்சி காலத்திலிருந்துதான் நமக்கு கிட்டி வருகின்றது. நிலக்கோட்டை, வத்தலகுண்டு பகுதிகளில் சிறப்பாக இருந்தது. ஜஸ்டீஸ் கட்சி காலம், சுயமரியாதை இயக்கம், டபிள்யூ.பி.சவுந்தரபாண்டியன் காலம் சிறப்பாக இருந்தது. கல்வியில் சம வாய்ப்பு ஏற்பட வழிவகுத்தது. சமதர்மம் கொடுத்தது. அந்த சமத்துவத்தை கொடுப்பதற்குத்தான் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தார்கள்.

அம்மையார் ஆட்சிக்கு வந்தவுடன்  இந்த சமச்சீர் கல்வி திட்டத்தை ஏற்க மாட்டோம் என்றார்கள். பள்ளிக்கூடம் திறந்து இருந்தார்கள். பள்ளிக்குப் போனால், வாத்தியார் இருக்கிறார், மாணவர்கள் இருக்கிறார்கள், வகுப்புகள் இருக்கிறது. என்ன புத்தகம் என்று வாத்தியார்களுக்குத் தெரியாது. எதைச் சொல்லி கொடுப்பது என்று வாத்தியாளர்களுக்குத் தெரி யாது. ஆனால், புத்தகம் எல்லாம் சமச்சீர் கல்வி பாடத் திட்டம்படி தயாராக இருந்தது. சமச்சீர் கல்வியை அம்மையார் நிறுத்திவிட்டார்கள். இதுதான் அம்மையாரின் பழிவாங்கும் உணர்ச்சி! ஜனநாயகத்தில் இருக்கக்கூடாது. கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரும். ஒருமுறை மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்; மற்றொரு முறை அவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், அரசாங்கம் என்பது தொடர்ச்சியாக இருக்கவேண்டும். கட்சியையும், ஆட்சியையும் அம்மையார் குழப்பிக் கொண்டு பார்த்தார்கள். வெறுப்பு வந்தவுடன் சமச்சீர் கல்வியே கூடாது என்று சொன்னார்கள். உடனே உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு வெற்றி கண்டார் கலைஞர். பாடத் திட்டம், பாடப் புத்தகம் அச்சடித்த நிலையில் இருக்கிறது. கலைஞர் கொண்டு வந்தார் என்கிற காரணத்தினால் நிறுத்திவிட்டார் அம்மையார். கலைஞருக்கு யாரும் விளம்பரம் கொடுக்கத் தேவையில்லை. கலைஞருக்குப் பெயர் வந்துவிடுமே என்று எண்ணி இப்படி செய்தார். நிரந்தரமாக வரலாற்றில் பெரியார், அண்ணா, கலைஞர் என்று வரும். யாரும் விளம்பரம் கொடுத்து வரவேண்டியவர்கள் அல்ல.
திருவள்ளுவர் தி.மு.க.காரரா?

திருவள்ளுவர் படம்மீது ஸ்டிக்கர் ஒட்டினார்கள். பொதுவாக அம்மையாரின் ஆட்சியே ஸ்டிக்கர் ஒட்டுகிற ஆட்சிதான்; அதில் சந்தேகமேயில்லை. நமது கல்வி அதிகாரிகளுக்கெல்லாம் பசை கொடுத் தார்கள். பசை மாவை கையில் கொடுத்து ஒட்டச் சொன்னார்கள். திருவள்ளுவர் படம் மீதும் ஸ்டிக்கர் ஒட்டினார்கள். திருவள்ளுவர் என்ன தி.மு.க.காரரா?
சமச்சீர் கல்வியினால், இன்றைக்கு நம் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 95 சதவிகிதம், 100 சதவிகிதம் வெற்றி பெறு கிறார்கள்.
அ.தி.மு.க. ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது?

அம்மையார் சைக்கிள் கொடுத்தார்; அதை நிறுத்தினரா கலைஞர்? இல்லையே! நீதிக்கட்சி ஆட்சியில் தியாகராயர் மூலம் மாணவர்களுக்கு உணவுத் திட்டம் தொடங்கியது. பிறகு காமராசர் பகல் உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். பின்னர் எம்.ஜி.ஆர். மதிய உணவு திட் டத்தைக் கொண்டு வந்தார். அதை கலைஞர் தடுத்தாரா? இல்லையே! சேர்த்துத்தானே கொடுத்தார். மதிய உணவில் முட்டை போட்டார்; முட்டை சாப்பிடாத பிள்ளைகளுக்கு வாழைப்பழம், காய்கறிகள், பயிறு வகைகள் கொடுத்தார். மாற்றவில்லையே, அதுதானே வளர்ச்சி!

பெண்கள் இங்கு ஏராளம் வந்திருக் கிறீர்கள். ஆண்கள் எல்லாம் நிற்கிறார்கள். நீங்கள் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறீர்களே, இது யாரால்? தந்தை பெரியாரால்தானே! இந்தத் துணிச்சல், தைரியத்தை தந்தை பெரியார்தானே கொடுத்தார். திராவிட இயக்கம்தானே கொடுத்தது.

அம்மையார் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்றால், அவர் வன்ம அரசியல் நடத்துகிறார். சென்ற முறை காங்கிரஸ் மத்தியில் திட்டங்கள் வகுத்தது; அதை மோடி அரசு ஒரு சிலவற்றை தவிர மற்றவற்றை செயல்படுத்துகிறதே! ஒத்துப் போகிறார்களே! இதுதானே ஜனநாயகம்! அம்மையார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகாரர்களுக்கு பேச வாய்ப்பு கொடுத்ததுண்டா? தளபதி ஸ்டாலின் தெளிவாக சொல்லுகின்ற எதிர்க்கட்சிக்காரர். இன்னொரு எதிர்க்கட்சிக்காரர் இருக்கிறார். அவரைப்பற்றி உங்களுக்குத் தெரியும். அதிகம் சொல்லவேண்டியதில்லை.

உண்மையான ஜனநாயகம்
மலர, உதயசூரியன்!

தளபதி ஸ்டாலின் மற்றவர்கள் எங்கே வந்து பேசினார்கள். சட்டசபைக்கு வெளியில் வந்துதான் பேச முடிகிறது. காரணம், ஒன்று இவர்கள் வெளியே இருப்பார்கள். இல்லையென்றால், வெளியேற்றப்பட்டு இருப்பார்கள். இதுதான் சட்டசபையா? எதிர்க்கட்சி இல்லாத ஜனநாயகம் என்ன ஜனநாயகம்? மாட்டுக்கு மூக்கணாங்கயிறு தேவை. அதுபோல, நல்லாட்சி மலர வேண்டுமானால், எதிர்க்கட்சி இருக்க வேண்டும். உண்மையான ஜனநாயகம் மலரவேண்டுமானால், அன்பழகன் போன்றவர்களை வெற்றிப் பெறச் செய்து டாக்டர் கலைஞர் அவர்களை ஆட்சியில் அமர வைக்க, புதிய ஆட்சி அமைய வாய்ப்பு கொடுக்கவேண்டும்.

அம்மையார் ஆட்சியில்
வளர்ச்சி - மதுக்கடையே!

மறைந்தும் மறையாமலும் இருக்கின்ற காங்கிரஸ்காரர் ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் நீண்ட காலமாக இருந்த தொகுதி நிலக்கோட்டை, அவர் பல திட்டங்களை முன்னெடுத்தார். மேனாள் அமைச்சர் அய்.பெரியசாமி அவர்களின் அற்புதமான உழைப்பை கொண்டுதான் அரசு பெண்கள் கல்லூரி கொண்டு வரப்பட்டது. தி.மு.க. ஆட்சியின் சாதனை - கலைஞர் ஆட்சியில்தான் 30 ஆண்டுகளுக்கு முன்னாலே நிலக்கோட்டை அணைப்பட்டி குடிநீர் கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டம் இன்று வேட்பாளராக இருக்கும் மு.அன்பழகன் அவர்களின் தந்தையார் முனியாண்டி அவர்களால் எம்.எல்.ஏ.,வாக இருக்கும்போது கொண்டு வரப்பட்டது. எனவே, இவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல. நீங்கள் போடும் ஓட்டு உங்களின் எதிர்காலத்திற்கு, வாழ்வுக்கு இந்த மக்களின் சிறப்புக்காகவுமே!

திண்டுக்கல் மாவட்டத்திற்கென தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே 29 திட்டங்களைக் கொடுத்திருக்கிறார்கள். நிலக்கோட்டை கெழுவன்பட்டி குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு, தரம் உயர்த்தப்படும். இப்படி இந்தப் பகுதிக்குத் தேவையான பல திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்துள்ளது.

தாய்மார்கள் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். எல்லோரும் எதற்காக அவதிப்படுகிறோம் என்றால், மதுப் பிரச்சினை. எங்குப் பார்த்தாலும் மக்களை அம்மையார் ஆட்சியில், குடிகாரர்களாக ஆக்கிவிட்டார்களே! பெரியவர்கள் குடித்ததுபோக, சின்னஞ்சிறு வாண்டுகள், சிறார்களுக்கு ஊற்றுகிறார்கள். ஏதோ பாயசம் ஊற்றுகிற மாதிரி, பால் ஊற்றுகிற மாதிரி ஊற்றுகிறான். என்ன கொடுமை! எங்குப் பார்த்தாலும் அம்மையார் ஆட்சியில் டாஸ்மாக் மயம்.

அம்மையார் ஆட்சியில் வளர்ச்சி என்ற ஒன்று உண்டு என்றால், அது மது விற்பனையைத் தவிர வேறு துறையில் இல்லை. 6,800 மதுக்கடைகள் இருக்கின்றனவே! இன்று மதியம் நான் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். சென்ற மாதத்தைவிட, இந்த மாதம்தான் 37 சதவிகிதம் மது விற்பனை அதிகம். எவ்வளவு பேர் குடிக்கிறார்கள்? நினைத்தால் இரத்தக் கண்ணீர் வருகிறது. இரண்டு லட்சம் விதவைகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அம்மையார் தாலிக்குத் தங்கம் கொடுத்தேன், தங்கம் கொடுத்தேன் என்று தம்பட்டம் அடிக்கிறார். தாலிக்குத் தங்கம் கொடுத்தது சரி; ஆனால், அந்தத் தாலி நிலைக்கிறதா? நாங்கள் தாலியை ஏற்றுக் கொள்கிறவர்கள் அல்ல. நீங்கள் போட்டு இருக்கிறீர்கள். அது உங்கள் நம்பிக்கை. தாய்மார்களுக்குத் தாலி நிலைக்க வேண்டுமானால், டாஸ்மாக்கை மூடவேண்டும்! செய்தாரா, அம்மையார்? அம்மையார் இந்த ஆட்சிபற்றி பெருமையாக சொல்கிறார்!

டாஸ்மாக்கை ஏன் மூடவில்லை என்றால், 30 ஆயிரம் கோடி  ரூபாய் வருமானம் வருகிறது. பிகாரில் நிதிஷ்குமார் மதுவிலக்கைக் கொண்டு வந்துவிட்டாரே! காவல்துறையை முடுக்கிவிட்டால், அவர்களால் செய்ய முடியாத காரியம் உண்டா? காவல்துறையின் கையைக் கட்டாமல், சுதந்திரமாக விட்டாலே செய்து விடுவார்கள். அதையும் மீறி நடந்தால் அதற்குக் காவல்துறைதான் பொறுப்பு என்று சொல்லுங்கள்,  சரியாகி விடும்.

ஆயிரம் என்று இருந்த மதுக்கடைகள் 6,800 ஆகியிருக்கிறதே! 37 சதவிகிதம் மது விற்பனை இந்த மாதம் மட்டும் உயர்ந்திருக்கிறதே! இந்த மாதம் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஏனென்றால், நிறைய பேரை கூட்டத்திற்கு அழைத்து வருகிறார்கள். பாட்டில் விற்பனை மிக அதிகமாக நடக்கிறதே! காலையிலே பெட் காபி மாதிரி குடிக்கிறார்கள். இந்த மாதிரி பழக்கத்தை வளர்த்தது யார்? அம்மையார்தானே!

நுழைவுத் தேர்வு!

கடந்த 7 ஆம் தேதி திராவிடர் மாணவர் கழகம் சார்பில் சென்னையில் நுழைவுத் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதே! எதற்காக? இன்றைக்கு நம் கிராமத்து முதல் தலைமுறைப் பிள்ளைகள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அவர்கள் டாக்டராக வேண்டும். கலைஞர் ஆட்சியில் எல்லா மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்தாரே! நுழைவுத் தேர்வை புகுத்தியவர் எம்.ஜி.ஆர். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்தானே எதிர்த்து 22 ஆண்டுகள் போராடியது! நுழைவுத் தேர்வுமூலம் கிராமத்துப் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் கேள்விக் குறியாக ஆனதால் நுழைவுத் தேர்வை ஒழித்தார். பணக்காரன் நகரத்தான் அவன் பிள்ளையை டாக்டராக படிக்க வைத்து விடு கிறார்கள். கிராமத்தில் உள்ள விவசாயப் பிள்ளைகள் எப்படி படிப்பார்கள்? படிக்க முடியாதே! கலைஞர்தானே அந்த வாய்ப்பைக் கொடுத்தார்? அவர் ஆட்சி இல்லை என்றால், டாக்டராக முடியாமல் போயிருக்குமே! நுழைவுத் தேர்வு கூடாது என்று சட்டம் கொண்டு வந்ததுபோல், கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பது உறுதி!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரை யாற்றினார்.

கலைஞர் கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை ஏற்றிச் செல்லும்- ஜெயலலிதா காலத்தில் அது பணத்தை ஏற்றிச் செல்லும்!

$
0
0


எச்சரிக்கை! எச்சரிக்கை!! இலவசங்களைக் கண்டு ஏமாறாதீர்!

திருவாரூரில் கலைஞரை ஆதரித்து தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை

திருவாரூர், மே 11- கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் அவசர அவசரமாக நோயாளிகளைக் கவனிக்கும் - மருத்துவமனைக்கும் அழைத்துச் செல் லும்; ஜெயலலிதா காலத்தில் அந்த ஆம்புலன்ஸ் வாக் காளர்களுக்குக் கொடுப்பதற்கான பணத்தை ஏற்றிச் செல்லும் என்று கலைஞர் தொகுதியான திருவாரூரில் தேர்தல் பரப்புரை செய்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திருவாரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலைஞர் அவர்களை ஆதரித்து 10.5.2016 அன்று மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவரது உரை வருமாறு:

இந்தியாவே ஆவலுடன்
எதிர்பார்க்கக் கூடிய கலைஞர்

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கக்கூடியஒரு தொகுதி உண்டென்றால், அதுதான் திருவாரூர்.தந்தை பெரியாரால் வளர்க்கப்பட்டு, அறிஞர் அண்ணாவால் ஆளாக்கப்பட்டு, அரசியல் அறிஞராக, இந்தியாவிலேயே ஒரு மூத்த, முதிர்ந்த அரசியல் ஞானி என்ற பெருமை படைத்த டாக்டர் கலைஞர் அவர்கள்தான், இந்தத் திருவாரூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கிறார். கலைஞர் அவர்களை 6 ஆவது முறையாக முதல்வராக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்! தாய்க் கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞருக்கு கடமையாற்ற நாங்கள் வந்திருக்கிறோம்.

மாபெரும் மறுமலர்ச்சியை பெற தி.மு.க.வே!

 

டாக்டர் கலைஞர் அவர்கள் பலமுறை ஆண்டார்கள். அவர் மீண்டும் ஆளப்போவது உறுதி! நீங்கள் 20 ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் எழுச்சியை, மறுமலர்ச்சியை காண இருக்கிறீர்கள். அவர் செய்த சாதனைகள் ஒன்று, இரண்டல்ல. ஏராளம்! இனி ஆட்சி அமைந்தவுடனும் செய்யப் போவது ஏராளம்! ஏராளம்!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், எல்லாக் கூட்டத்திலும் ஒன்றை தெளிவாக சொல்லி வருகிறார்கள். அதுதான், திராவிடர் கழகம் அடிப் படையிலே ஒரு சமுதாய இயக்கம், அதன் சமுதாய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலுக்குச் சென்றது என்று குறிப்பிட்டு வருகிறார்கள். எனவே, நம் நாட்டில் மீண்டும் ஒரு மாறுதல் வரவேண்டுமானால், அது திராவிட முன்னேற்றக் கழகத்தால்தான் கொண்டு வர முடியும். அதற்காகவே நாம் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சிக்குக் கொண்டு வரவேண்டும்.

டாக்டர் கலைஞர் அவர்கள் தன் ஆட்சியில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆளை - நோயாளியை அழைக்கச் சென்றது. ஆனால், அம்மையார் ஆட்சியில் நோயாளி அழைக்கப்படவில்லை. பணத்தை  அழைத்துப் போகிறார்கள். பிணத்தை அல்ல! அம்மையார் ஆட்சியில் ஆம்புலன்சில் நோயாளிக்குப் பதில் பணத்தை அனுப்புகிறார். நோயாளியை கொண்டு போவதற்கு ஆம்புலன்ஸ் இல்லை! மனிதநேயமில்லாமல், மக்களை எல்லாம் வெயிலில் நிற்க வைத்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்க வைத்துக் கொண்டுள்ளார். அம்மையார் நடத்தி வரும் 5 ஆண்டுகால ஆட்சி காட்சியாக, பிரச்சாரமும் காணொலி காட்சியாக இருந்திருந்தால், ஆறு உயிராவது மிஞ்சி இருக்கும். எனவே, இதுவரை நடந்தது காணொலி காட்சி, இனி கலைஞரால் நடக்கப்போவதுதான் மக்களுக்கான ஆட்சி.

அ.தி.மு.க.மீது மக்கள் கொண்டுள்ள கோபம்

இன்றைக்கு ஆளுங்கட்சிமீது மக்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பதைத் தொலைக் காட்சியைப் பார்த்தாலே தெரிகிறதே! அமைச்சர்கள் அவரவர் தொகுதிக்குச் செல்ல முடியவில்லையே! அடித்து விரட்டப்படுகிறார்களே! தஞ்சை மாவட்டத்தில் ஒரு அமைச்சர்மீது செருப்பை தூக்கிப் போட்டார்களே! அதிர்ச்சி அடைந்து பேசாமலே போய்விட்டாரே! அதை நாங்கள் ஏற்கவில்லை என்பது வேறு விஷயம்! தந்தை பெரியார் அவர்கள் மாதிரி இருந்திருந்தால், இன்னொரு செருப்பு வரட்டும் என்று காத்திருப்பார். இவர்கள் பெரியார்போல் காத்திருக்கமாட்டார்கள். அமைச்சர்கள் தொகுதிக்குள்ளே நுழைய முடியவில்லை. ஆளுங்கட்சியினர் நுழைய முடியவில்லையே!

ஜனநாயகம் என்றால் நான்கு அங்கம் உண்டு. ஒன்று நிருவாகத் துறை - சட்டமன்றம் - நீதித்துறை - ஊடகத்துறை, அதாவது ஊடகங்கள். இந்த அம்மையார் ஆட்சியில் இந்த 5 ஆண்டுகள் காலம் நான்கும் நடைபெறவில்லையே! ஊடகங்கள் சரியாக எழுதினால், அவர்கள்மேல் வழக்கு. விகடன் பத்திரிகைமேல் 24 வழக்கு; கலைஞர் பேசினால் கலைஞர்மீது வழக்கு; எதிர்க்கட்சித் தலைவர்மீது வழக்கு; இவர்கள் ஆட்சியில் ஒன்று வழக்கு - இல்லையென்றால் அல்வா! எனவே, ஜனநாயகத்தின் நான்காவது தூணும், ஒழுங்காக இல்லை.


இதை மீண்டும் மாற்றி அமைக்கவேண்டும்; கலைஞர் ஆட்சி அமையவேண்டும்; மாற்றியமைக்க சில காலம்கூட ஆகலாம். ஏனென்றால், இவர்கள் ஆட்சியில் அவ்வளவு அலங்கோலம்!

டாக்டர் கலைஞர், நாங்கள் எல்லாம் வீட்டிற்குள் இருக்கிறவர்கள் அல்ல. அன்றாடம் மக்களை சந்திப்பவர்கள். இந்த 92 வயதில்கூட, நாளைக்கு திருவாரூர் தொகுதியில் இரண்டு நாள் பிரச்சாரத்திற்கு வருகிறார். வேகாத வெயிலில் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறார். நான் நம்முடைய மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனிடம்கூட கூறினேன். தலைவரிடம் சொல்லுங்கள், தலைமையிடம் சொல்லுங்கள். மாலையில் பிரச்சாரத்திற்கு வரச் சொல்லுங்கள் என்றேன். இந்த 92 வயதிலும்கூட, அடுத்த மாதம் 93 வயதாகப் போகிறது. இந்த வயதிலும் உழைக்கிறார் என்றால், அவர் பயிற்சி எடுத்த தலைவர் தந்தை பெரியார். அவர் குருநாதர் தந்தை பெரியார். 95 ஆண்டு காலம் வாழ்ந்தவர். அவரிடம் பயிற்சி பெற்றதனாலே, உழைக்கிறார். அதுபோல நம்முடைய பேராசிரியர் அன்பழகன் போன்றோர்; நாங்கள் ஈரோட்டுப் பாதையில் வந்ததால், பயின்றதால் வயது தெரியவில்லை. நாங்கள் இங்கு வருமுன் வயதானவர்கள்போல் வருவோம். ஆனால், இங்கு வந்துவிட்டுப் போகும்போது, வாலிபர்களாகத்தான் திரும்பிப் போகிறோம்.

டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சியின்போது, கலைஞரைப் பார்த்து செய்தியாளர் ஒரு கேள்வியை கேட்டார். நீங்கள் அவசர முடிவு எடுப்பீர்களாமே! என்று.

கலைஞர் சொன்னார், என்னுடைய முடிவு தீர்க்கமான முடிவு; விரைந்த முடிவு. விரைந்த முடிவு வேறு; அவசர முடிவு என்பது வேறு. தான் அவசர முடிவுகளுக்கு என்றைக்கும் ஆளாகுவதில்லை என்றார்.

ஜெ.வின் தோல்வி பயம்!

அம்மையார் தோல்வி பயத்தால் இலவசம்! இலவசம்! என்று அறிவித்திருக்கிறார். 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுப்பேன் என்கிறார். முதலில் 100 யூனிட் மின்சாரம் எப்படி கொடுக்க முடியும்? அறிவிக்கப்படாத மின்வெட்டு இப்பொழுதும் இருக்கிறதே! எனவே, ஏமாறாதீர்! ஏமாற்றாதீர்!

தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்கள் வருவார்கள். எனவே, ஏமாறமாட்டோம் என்ற சிந்தனையுடன் மக்கள் இருக்கவேண்டும்.
நெருப்பை அணைக்க டாக்டர் கலைஞர் என்ற தீயணைப்பு எந்திரத்தால்தான் முடியும்

அம்மையார் ஆட்சி நெருப்பு பிடித்துக் கொண்டு எரிகிற மாதிரியான ஆட்சி. நெருப்பை அணைக்க வேண்டுமானால், யார் சரியான ஆள்? பயர் சர்வீஸ் ஆள் வரவேண்டும். சின்ன சின்ன ஆள் எல்லாம், நாங்கள் நான்கு பேர் சேர்ந்தோம்! அய்ந்து பேர் சேர்ந்தோம். ஆளுக்கு ஒரு சட்டி மண் வைத்து இருக்கிறோம். அய்ந்து வாளி தண்ணீர் வைத்திருக்கிறோம் என்பவர்கள் நெருப்பை அணைக்க முடியாது. அந்த அக்கிரமங்கள் நிறைந்த ஆட்சியை டாக்டர் கலைஞர் போன்ற தீயணைக்கும் எந்திரங்களால்தான் அணைக்க முடியும். எனவே, நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும்.

முதல் வேட்பாளரும் கலைஞர் - நாளைய முதல்வரும் கலைஞர்

கலைஞர் வேட்பாளராக இருப்பது உங்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு. மீண்டும் ஒரு வாய்ப்பை அவர்களுக்குக் கொடுப்பதன்மூலம், அவர் ஒரு சரித்திரத்தை படைப்பார்; உருவாக்குவார். நீங்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைந்தால், அங்கு முதலில் உதயசூரியன் இருக்கும். அங்கு முதலாவதாக டாக்டர் கலைஞர் இருப்பார். அங்கும் முதலாவதாகத்தான் இருக்கிறார். இனி முடிவு செய்தவுடனும் முதலாவதாக இருப்பார். ஏன் முதல்வராகவும் இருப்பார்.

நீங்கள் உள்ளே சென்று பொத்தானை அழுத்தினால், விளக்கு எரியும்; உதயசூரியன் உதிக்கும்; உங்கள் வீட்டில் விளக்கு எரியும்! மீண்டும் கலைஞர் 6 ஆவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி! அதற்கு உங்களுக்குக் கொடுப்பட்ட தெளிவான வாய்ப்பைப் பயன்படுத்தி, சிந்தித்து இலவசங்களை நம்பி ஏமாறாமல், வெற்றியடையச் செய்யவேண்டும் என்று கூறி, தமிழர் தலைவர் தன் உரையை முடித்தார்.

சொன்னதை செய்யும் கலைஞர் ஆட்சி மலர வேண்டும் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கருத்துரை

$
0
0

நடைமுறைக்கு சாத்தியமானவை திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன
ஆட்சிக்கு வராதவர்கள் நடைமுறை சாத்தியமற்றவற்றை சொல்லியுள்ளார்கள்
!

 

அரியலூர், மே12 நடைமுறைக்குச் சாத்தியமானவற்றை திமுக தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆட்சிக்கு வர முடியாதவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், அந்த முறையில் பலவற்றையும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சொன்னதைச் செய்து காட்டும் கலைஞர் தலைமையிலான ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர திமுக கூட்டணிக்கே வாக்களிப்பீர் என்று செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை செய்துவருகிறார்.

அரியலூர் மற்றும் கண்டியூர் பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேற்று (11.5.2016) செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:

தமிழர் தலைவர்: தங்களுடைய தோல்வியை அதிமுகவினர் எதிர் நோக்குகிறார்கள். அதிலிருந்து மக்களை மாற்றவேண்டுமானால், இனிமேல் இதுபோன்ற இலவசங்களைக் கொடுக்கலாம் என எண்ணுகிறார்கள். ஏற்கெனவே இலவசத்தால் பட்ட பாட்டை மக்கள் நன்றாக நினைவிலே வைத்திருக்கிறார்கள். அவ்வளவு சுலபமாக அவர்கள் இரையாக மாட்டார்கள்.   100யூனிட் மின்சாரம் கொடுப்பேன் என்றெல்லாம் சொல்வது இருக்கிறதே, ஏற்கெனவே மின்சார வாரியமே மூன்று லட்சம் கோடி ரூபாய் கடனிலே மூழ்கி திணறிக்கொண்டிருக்கிறது. ஆகவே, நடைமுறை சாத்தியமில்லை, மக்கள் ஏமாற தயாராக இருக்க மாட்டார்கள். கடைசிக் காலத்திலே முடிந்தவரை பார்ப்போம் என்ற அளவுக்கு அது ஏமாற்று வேலை. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை.

அமையப் போவது திமுக ஆட்சியே!

நாடுதழுவிய அளவிலே நாங்கள் சுற்றிப்பார்க்கிறோம். கருத்துக் கணிப்புகளை வைத்து நாங்கள் சொல்லவில்லை. மக்களைக் கணித்து சொல்கிறோம். 20ஆம் தேதி அமையப் போகின்ற ஆட்சி  திமுக ஆட்சிதான். அதற்கு மக்களுடைய ஆதரவு மிகப்பெரிய அளவிலே இருக்கின்றது.

செய்தியாளர்: திமுகவின் தேர்தல் அறிக்கையைச் சார்ந்தே மற்ற தேர்தல் அறிக்கைகள் இருக்கின்றன. நடைமுறைக்குச் சாத்தியமானவற்றை மட்டுமே திமுக வெளியிட்டு வருகிறது. மற்ற கட்சிகள் நடைமுறைக்குச் சாத்திய மில்லாதவற்றை கூறியுள்ளார்களே? அது சாத்தியமாகுமா? மக்கள் நம்புவார்களா?

தமிழர் தலைவர்: சாத்தியத்தைப்பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இப்போது அசத்தவேண்டும். ஏதாவது மயக்கம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், தாங்கள் வரப்போவதில்லை என்று தெரிந்துபோய்விட்டது. வேறு ஏதாவது செய்தாகவேண்டுமே என்று சொல்கிறார்கள். திமுகவுக்கு உறுதியாகத் தெரியும் தாங்கள்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்பதால் உறுதியாக வரப்போகிறவர்கள் பொறுப்போடு சொல்கிறார்கள்.  வரப்போவதில்லை என்பதனால் எதை வேண்டுமானாலும் சொல்லிவிடலாம் என்பதற்காக சொல்கிறார்கள். வேறு ஒன்றும் இல்லை.

செய்தியாளர்: கலைஞர் சொல்லி உள்ளதில் 100 விழுக்காடு சொல்வதை செய்வார் என்கிறாரே?

தமிழர் தலைவர்: ஏற்கெனவே, 2006ஆம் ஆண்டிலேயே உழவர்களுடைய கடனை, விவசாயிகளுடைய கடனை ரத்து பண்ணுவோம் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்ததும் முதல் மூன்று கோப்புகளில் கையெழுத்து போடும்போது,  என்ன செய்தார்? முதல்  கையெழுத்தே இதற்குதானே போட்டார். ஆகவே, சொன்னதை செய்திருக்கிறார், செய்வதை சொல்லியிருக்கிறார் என்பதிலே வித்தியாசமில்லை. அதுமட்டுமில்லை இந்த மாதிரி திட்டங்களைப்போட்டுத் தயாராக வைத்திருக்கிறார். சமைத்து தயாராக வைக்கப் பட்டிருக்கிறது, பரிமாற வேண்டியதுதான் பாக்கி என்கிற அளவில் இருக்கிறது.
ஆட்சிக்கு யார் வருகிறார்களோ, அவர்கள்தானே நிறை வேற்றுவார்கள். மற்றவர்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லையே, அப்புறம் நிறைவேற்றுவது குறித்த கேள்வி எங்கே வருவது?-

விவசாயிகள் நெஞ்சில் பால்வார்த்த கலைஞர்

செய்தியாளர்: விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று கலைஞர் அறிவிப்பை வரவேற்கிறீர்களா?

தமிழர் தலைவர்: திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தெளிவான ஓர் அறிவிப்பை எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஓர் அறிவிப்பை தந்திருக்கிறார். சிறு குறு விவசாயிகளின் கடனை மட்டும் தள்ளுபடியாக்கவில்லை, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என்று சொல்லி இருக்கிறார். கலைஞர் அவர்கள் நிச்சயம் செய்வார்கள் என்பது விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய செய்தி. காரணம் சென்றமுறை 7000 கோடி ரூபாய் கடனைத் தள்ளிய ஒரு முன்மாதிரி  இருக்கிறது. ஆகவே, அந்த நம்பிக்கை, விவசாயிகளுக்கு மேலும் தெம்பூட்டக்கூடியதாக, தெளிவூட்டக்கூடியதாக இருக்கும்.

ஏற்கெனவே, 2700க்கும் மேல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இனிமேல் தற்கொலைகள் இருக்காது, மகிழ்ச்சி பொங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

கலைஞர் அவர்களுடைய அறிவிப்பை வலுவாக வரவேற்பதோடு, வெகுவாக பாராட்டுகிறோம். அவர் அறிவிப்பு விவசாயிகள் நெஞ்சில் பால்வார்த்த ஒன்றாகும்.

இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் தெரிவித்தார்.


ஊழலை ஒழிக்க பொது ஊழியர் குற்ற நடவடிக்கை சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்- அதனை ஒழித்தது அதிமுக ஆட்சியே!

$
0
0

ஊழலை ஒழிக்க பொது ஊழியர் குற்ற நடவடிக்கை
சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்- அதனை ஒழித்தது அதிமுக ஆட்சியே!

நல்லாட்சி மலர ஆதரிப்பீர் உதயசூரியனை
உரத்தநாடாம் பெரியார் நாட்டில் தமிழர் தலைவர் வேண்டுகோள்

உரத்தநாடு மே 13- ஊழல் ஒழிந்து நல்லாட்சி கலைஞர் தலைமையில் மலர உதயசூரியனுக்கே வாக்களிப்பீர் என்று வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

உரத்தநாடு சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம். இராமச்சந்திரன் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டம் 12.5.2016 இரவு 7 மணியளவில் உரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் எழுச்சியோடு நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார்.

அவரது  உரை வருமாறு:

தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்,
பெரியார் நாடு அதற்கு வழி வகுக்கும்


பெரியார் நாடு என்று எங்களால் வலிமையோடு கூறப்படுகின்ற உரத்த நாட்டிற்கு தேர்தல் கடமையை நிறைவேற்ற வேட்பாளராக நிற்கின்ற இராமச்சந்திரன் அவர்களை உயர்த்துவதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியான தருணம். உழைப்பின் உயரம், சுயமரியாதை சூரியன் டாக்டர் கலைஞர் அவர்கள் மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கான அடிப்படையை பெரியார் நாடு வகுக்க வேண்டும். இங்கே திமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கின்ற, நீங்கள் எல்லாம் எம்.ஆர். என்று அழைக்கக் கூடிய வேட்பாளர் இராமச்சந்திரன் அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் ஒரு புதிய மாறுதல் நாட்டில் ஏற்படும். அதற்காகவும் நான் இங்கு வந்திருக்கின்றேன்.

நான் இன்னும் நாற்பது நிமிடங்கள் பேசுவேன். அதிகமாக பேச முடியாது. நேரம் குறைவாக  இருக்கிறது. ஏனென்றால் கூட்டம் 10 மணிக்குள் முடிக்க வேண்டும். காரணம், சில நேரங்களில் தேர்தல் ஆணையத்தின் கடிகாரமும், நம் கடிகாரமும் ஒத்துப் போகாது. அதனால் முன் கூட்டியே  முடித்துவிடுவேன்.

நீங்கள் இங்கே பெருமளவில் திரண்டிருப்பது, இங்கு நடைபெறும் அத்தனை வேலைகளையும் பார்க்கும்போது, இந்த தொகுதியில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் இராமச்சந்திரன் அவர்களின் வெற்றி தெளிவாகி விட்டது என்பது தெரிகிறது. இந்த தொகுதியில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ஆட்சி அமைக்க போவது டாக்டர் கலைஞர் அவர்கள்தான். இதில் எந்தவிதமான ஊசலாட்டமும் இல்லை. நாங்கள் நாடு முழுவதும் பிரச்சாரம் முடித்து விட்டு இன்று பெரியார் நாட்டிற்கும், இறுதியில் தஞ்சையிலும் பிரச்சாரத்தை முடிக்கிறோம். நாங்கள் நான்கு நாட்களில் பிரச்சாரம் முடிய இருக்கிறதே என்று நினைக்கிறோம். ஆனால் மக்கள் இந்த ஆட்சியில் வெப்ப சலனம் அதிகமாக இருக்கிறது, சீக்கிரம் முடியட்டும் என்று நினைக்கிறார்கள். மக்கள் தானாக முன்வந்து ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.

மாற்றம் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்!


இப்பொழுது அதிமுக ஆட்சிக்கு எதிராக ஒரு பெரிய அலை அடித்துக் கொண்டிருக்கிறது என்பதை தேர்தல் முடிவின் மூலம் நீங்கள் அறியலாம். அதற்கு வேறு உதாரணம் வேண்டாம்!

இங்கு அமைச்சராக இருந்தவர்கள், எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறவர்கள் வாய்ப்புப் பெறாவிட்டாலும், அந்த அந்த தொகுதிக்கு நுழையும்போது, இந்த முறை நீங்கள் தொலைக்காட்சியைப் பார்த்து  இருப்பீர்கள். செய்திகளைப் பார்த்து இருப்பீர்கள். தொகுதிக்கு வெளியே, ஊருக்கு வெளியே விரட்டுகிறார்கள். நீங்கள் என்ன? எங்கள் தொகுதிக்கு செய்து இருக்கிறீர்கள்? திரும்பிப் போங்கள் எனச் சொல்கிறார்கள். இந்த துணிச்சலே அவர்களுக்கு ‘”சுயமரியாதை’ வந்துவிட்டது என்பதற்கு அடையாளம், நான்கூட மிகவும் வருத்தப்பட்டேன். செருப்பைத் தூக்கிப் போட்டு அமைச்சரை வெளியே அனுப்புகிறார்கள் என்றால், இந்த மாதிரியான சங்கடம், அதுவும் இந்த தொகுதியிலே, அந்தநிலை ஏற்பட்டது என்றால், நான் மகிழ்ச்சி அடையவில்லை. வருத்தப்படுகிறேன். ஆனால், அந்த அளவிற்கு மக்களைத் தூண்டி விட்டது யார்? அம்மையாரின் கொடுங்கோல் ஆட்சிதானே! இருண்ட ஆட்சிதானே! மக்களுக்கு அந்த ஆட்சியின் மீதுள்ள கோபம் வேறொன்றுமில்லை. மக்கள் மட்டுமா கேட்கிறார்கள்? சொல்கிறார்கள்? மக்களின் பிரதிபலிப்பாக உள்ள ஊடகங்கள் கேட்கிறார்கள்.

ஆனந்தவிகடன் பத்திரிகையிலே, ஒரு கட்டுரை, அம்மையாரின் ஆட்சியைப்பற்றி, ஆட்சியின் அவல நிலையைப்பற்றி, அதிமுக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களைப்பற்றி, ஒரு நீண்ட கட்டுரையை, ஓர் அரசியல் ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார்கள். அதற்கு தலைப்பு “அமாவாசை அலறல்”

நீங்கள் அவருக்குப் போடலாமா? இவருக்குப் போடலாமா? என்று மாற்றத்தை எண்ணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னால் செய்த தவறை செய்யாமல், அந்த தவறை மீண்டும்  செய்வதற்கு இந்த முறை மக்கள் தயாராக இல்லை என்பதை நாங்கள் காண்கிறோம்.

ஊழலைப்பற்றி பிஜேபி பேசலாமா?
பேச தகுதி உண்டா?


ஊழைப்பற்றி மற்றவர்கள் பேசலாமா? பிஜேபி பேசலாமா? ஊழல் இருக்கிறதே! ஊழல் இருக்கிறதே என்று பல பேருக்கு சந்தேகம் வரலாம்.

மக்கள் பிரதிநிதிகள் அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் என முதலமைச்சர் ஆரம்பித்து (முதலமைச்சர் விதி விலக்கல்ல) அமைச்சர்கள்மீதும் கூறப்படும் புகார்கள்பற்றி விசாரிப்பதற்காக தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காலத்தில் 1973ஆம் ஆண்டில் பொது ஊழியர் குற்ற நடவடிக்கை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆகவே, ஊழலை ஒழிப்பதற்கான சட்டத்தை இந்தியாவில் முதலில் கொடுத்தவர் கலைஞர் அவர்கள். மக்களுக்கு மறதி அதிகம். மக்களின் மறதியை வைத்துதான் அரசியல் நடத்துகிறார்கள். ஆங்கில பழமொழி ஒன்றுகூட உண்டு.‘Public Memory very short’.



ஊழலுக்கு வழிவகுத்தது யார்?

1973 ஆம் ஆண்டில் முதலமைச்சர் அரசு ஊழியர் உட்பட அனைவருக்கும் கொண்டும் வந்த சட்டத்தை ரத்து செய்தது. ரத்து செய்தது யார்? ஊழலுக்கு வழி வகுத்தது யார்? அதை திட்டமாக்கியது யார்? அதிமுக தானே, எம்.ஜி.ஆர் அரசு தானே?

மீண்டும் திமுகழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்க “லோக் ஆயுக்தா” சட்டம் அமைப்பு உருவாக்கப்படும். எவ்வளவு பெரிய உத்தரவாதம் தந்து இருக்கிறார்கள். அதிமுக ஆட்சிகள் செய்தார்களா? இல்லையே! கர்நாடகாவில் எடியூரப்பா எப்படி சிறைக்குப் போனார்? இந்த முறையில் தானே!

அதிமுக - திமுக ஒன்றா?

இன்று பா.ஜ.க. வடக்கே இருந்து வந்து, வடநாட்டு கம்பெனியெல்லாம் இங்கு இறக்குமதி பண்ணிவிட்டு ஆகா! திராவிட இயக்கங்கள் மிகப்பெரிய ஊழல் பண்ணிவிட்டதாக சொல்கிறார்கள். முதலில் உங்கள் முதுகில் எவ்வளவு ஊழல் இருக்கிறது என்பதை எண்ணிப்பார்த்து சொல்லுங்கள்.

ஓடாத குதிரை - பி.ஜே.பி

இந்த தேர்தலில் யாரும் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைக்கவில்லை. ஏன் மற்ற கட்சிகள் கூட்டணி வைக்கவில்லை என்றால் அவர்கள் சீனிலே இல்லை. ஃபீல்டிலே இல்லை. ஓடாத குதிரை மீது யாராவது பந்தயம் கட்டிக்கொண்டு இருப்பாரா?

பக்கத்து கர்நாடகாவிலே எடியூரப்பா ஊழல் வாதியானரே! திராவிட இயக்கத்தினரை ஊழல் வாதி என்று கூறுவதா? ஊழலில் சிக்கி கொண்டு சிறை சென்றாரே எடியூரப்பா! உங்களுக்கு முதுகெலும்பு உண்டா? வாய் உண்டா? எங்களைப் பற்றி பேச? தேர்தல் முடியட்டும், நாங்கள் ஒரு ரவுண்டு வருகிறோம்! உங்களைப் பற்றி மக்களிடம் விவரிக்கிறோம்.

‘மிஸ்டுகால்’ கட்சி!

இந்த தேர்தலில் பா.ஜ.க என்ற கட்சிப்பக்கம் யாரும் கிட்டே நெருங்கவில்லையே! ஏனென்றால் அது மிஸ்டுகால் கட்சி! மிஸ்டுகால் கட்சி எங்காவது ஆட்சிக்கு வருமா? மிஸ்டுகாலிலே வேட்பாளரை தேடி பிடிக்கும் கட்சி அது! அது ஒரு விசித்திரமான கட்சி! ஆகவே நாம் அவர்களைப் பற்றியே கவலைப்பட வேண்டியதில்லை; ஊழலைப் பற்றி பேசுவோர் எடியூரப்பாவை வைத்துக்கொண்டு, மத்திய பிரதேசம் வியாபம் ஊழல் போன்றவற்றை வைத்துக்கொண்டு பொதுவாக திராவிட இயக்கம் ஊழல் பண்ணியது என்று சொன்னால், வெண்ணையும், சுண்ணாம்பும் ஒன்றா? அதிமுக வும், திமுக வும் ஒன்றா? தராசு தட்டில் ஒன்றாக போடலாமா?

திமுக ஆட்சியில் சேவை உரிமைச்சட்டம்

பொதுமக்களிடம் அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஜாதிச் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஓய்வூதிய பணியாளர்கள், பொது விநியோக திட்டங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் இதில் தானே லஞ்சம் பெருகுகிறது. இதில்தானே ஊழல் அதிகமாக இருக்கிறது. ஆகவே இவை முறையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சேவை உரிமைச்சட்டம் (Right to service Act) நிறைவேற்றப்படும் என திமுக கூறியிருக்கிறதே! அதை யாராவது முதலில் நினைத்தார்களா? இதன் பொருள் என்ன தெரியுமா?

விடைகொடுங்கள் அதிமுகவிற்கு

அரசுக்கு முறையாக வந்து சேரவேண்டிய வரிவசூல் பல வகைகளிலும் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றி புதிய ஆட்சி அமைக்கப்படும். கலைஞர் இப்பொழுது ஆட்சி அமைத்தாலும் மிகப்பெரிய தொல்லை அவருக்கு இருக்கிறது. பழைய ஆட்சியில் உள்ள கடனை போக்க 5 ஆண்டு, 10 ஆண்டுகள் கூட ஆகலாம்.

இந்த நிலைமை மாற்றி முறையாக அரசு கருவூலத்திற்கும், தற்போதைய அரசின் தேவையற்ற செலவுகளை நிதி இழப்புகளை தடுத்திடவும் அரசின் திட்டங்கள் உரிய கால வரையறைக்குள் முழுவதும் நிறைவேற்றுவதை கண்காணிக்கவும் முதல் அமைச்சருக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கின்ற தனி அதிகாரம் பெற்ற பொருளாதார நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்.

எவ்வளவு சிறப்பான  திட்டம்!

டாக்டர் கலைஞர் அவர்கள், ஏற்கெனவே முதலமைச்சராக இருந்தபொழுது அவருக்கு என்று புகழ் ஒன்று உண்டு. என்னவென்றால் உடனே முடிவு எடுக்கும் துணிச்சல் மிக்கவர் என்ற வரலாறும் உண்டு. செய்தியாளர்கள் கலைஞர் அவர்கள் ஆங்கிலத்தில் Your Decision always It hasty decision என்று கேட்ட பொழுது கலைஞர் சொன்னார், கலைஞர் கல்லூரியில் படித்தவர் அல்ல. ஆனால் பெரியாரின் குருகுலத்தில் படித்தவர் என்ற காரணத்தினால், உடனே ஆங்கிலத்தில் பதில் சொன்னார். My decisions are not hasty decision. But quick decision என்று பதில் சொன்னார். என்னுடைய முடிவுகள் அவசர முடிவுகள் கிடையாது, விரைந்த முடிவு என்றார். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான தலைவர் கலைஞர் தலைமையில் நல்லாட்சி அமைந்திட, அதிமுக ஆட்சிக்கு விடைகொடுக்க வேண்டும், விடுமுறை அளிக்க வேண்டும். ஆற்றல் மிகுந்த கலைஞர் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும்.

சுதந்திர காற்றை சுவாசிக்க

நமது வேட்பாளர் இராமச்சந்திரன் ஓட்டுக்கேட்கச் சென்று இருக்கின்ற காரணத்தால் இங்கு வரவில்லை. அவர் இங்கு வரவேண்டும் என்று அவசியமில்லை. எம்.ஆர். என்று உங்களால் அன்போடு அழைக்கக்கூடியவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டியதில்லை. அவரை உங்களுக்குத் தெரியும். அவர் எல்லா இடத்திற்கு புல்லட்டில்தான் செல்வார். அவர் பெயரே புல்லட் ராமசந்திரன் என்பதுதான். அவர் புல்லட்டுக்குப் பதிலாக பேலட் (Ballot) கேட்கிறார்.

பேலட் என்றால் வாக்குச்சீட்டு என்று பொருள். எனவே டாக்டர் கலைஞர் அவர்கள் இந்த தொகுதியில் எம்.ஆர்.என்ற உங்கள் இராமச்சந்திரன் அவர்களை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார். அவரை வெற்றிப்பெற வைப்பதன் மூலம் திமுகவை வெற்றி பெற வைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் சுதந்திரமான காற்றை ஜனநாயக காற்றை நாம் சுவாசிக்க முடியும். நாட்டில் நல்ல காற்று வீச உதயசூரியனை வெற்றிப்பெறச் செய்யுங்கள் என்று கூறி தமிழர் தலைவர் தனது உரையை நிறைவு செய்தார்.

---------------------

மக்கள் கோபத்திற்குக் காரணம் - அம்மையாரின் கொடுங்கோல் ஆட்சியே!

நூறு எம்.எல்.ஏ.க்கள் இரண்டாவதாக வாய்ப்பு தரப்படாதவர்கள். அப்படி என்றால், எந்த பணியும் செய்ய முடியவில்லை. காரணம் என்னவென்று சொல்லும்போது, கடந்த அய்ந்தாண்டு காலத்தில் என்ன வகையான ஆட்சி நடந்திருக்கும்? வெறும் ஒப்புக்கு உட்கார்ந்து கொண்டு அமைச்சர்களின் மாதாந்திர கமிஷன்களிள் வண்டியை ஒட்டியிருக்கிறார்கள் - இந்த எம்.எல்.ஏ.க்கள் என்ற முடிவுக்கு தானே வர வேண்டி இருக்கும். குறிப்பிட்ட தொகுதியில் சொந்த செல்வாக்கு இருந்திருந்தால், ஜெயலலிதா சீட்டு தர மறுத்து இருக்க முடியுமா? என்று முதல் கேள்வி எழுகிறது. ஒரு முறை ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதா என்ன ஆண்டு இருக்கிறார். அய்ந்துவருட ஆட்சியில் என்ன கண்டோம்? ஜனநாயகம் துளிர்த்ததா? மக்களாட்சி மாண்புகள் காப்பாற்றப்பட்டதா?

ஜனநாயகத்தில் சர்வாதிகாரிக்கு ஏது இடம். எல்லாம் நான் தான், “நான் - நான்” நான்தான். ‘நாம்‘ என்ற வார்த்தைக்கு அங்கு இடம் கிடையாது. அம்மையாரை அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்புண்டா? முதல்வர் வீட்டுக்குப் போய் சரிசமமாக உட்கார்ந்து யாராவது பேசியதுண்டா? அதிகாரிகள் விரும்பியவுடன் சந்திக்கும் வாய்ப்பு உண்டா? நீங்கள் சென்ற 5 ஆண்டு காலத்தில் வாக்களித்துப் போன எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், முதலமைச்சர், அரசு எப்படி நடந்தது என்பதை ஆனந்தவிகடன் பத்திரிகையில் பலரின் குரலாக ஒலிக்கிறதே! ஆட்சியின்மீது வெறுப்பு இருக்கிறதே! ஜெயலலிதா ஆட்சியை மாற்றுவதற்கு ஆறு முனைப் போட்டி, பத்து முனைப் போட்டி என்று மற்றவர்கள் சொல்லலாம், உண்மையில் போட்டி என்பது அதிமுகவுக்கும், திமுகவிற்குமே தவிர வேறு யாருக்கும் கிடையாது. ஒருத்தர் இலவசங்களை நம்பலாம் என நினைக்கிறார். மற்றவர் மக்களை நம்பிக் கொண்டு இருக்கிறார். அவர்கள் இலவசம் கொடுத்து ஏமாற்ற நினைக்கிறார்கள். அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டாது.

மக்களின் தேவை, விருப்பத்தின் அடிப்படையில் உருவானதுதான் திமுக தேர்தல் அறிக்கை. இந்த அறிக்கையில் தஞ்சை மாவட்டத்திற்கென பல நல்ல திட்டங்களை வகுத்துள்ளார்கள் - அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும் என்ற நோக்கோடு.

---------------------

மூன்று வித ‘சி’க்கள்

உங்களுக்கு ஜாதிச் சான்றிதழ் அல்லது இறப்பு சான்றிதழ் அல்லது பிறப்பு சான்றிதழ் வேண்டுமென விண்ணப்பம் போட்டால் 24 மணி நேரத்தில் அந்த அதிகாரி உடனே பதில் எழுதி கொடுக்க வேண்டும். கொடுக்கவில்லையென்றால் இந்த சட்டப்படி, நிறைவேற்றவில்லை என்றால் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் போடுவார்கள் அந்த அதிகாரிக்கு அபராதம் போடப்படும். முதலில் ஏன் பதில் தரவில்லையென்று விசாரித்துவிட்டு அப்புறம் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இது என்ன சாதாரணமானதா? எவ்வளவு பெரிய நிருவாகப் புரட்சி! இதுவே திமுக ஒரு செம்மையான ஆட்சியை தருவதற்கான அடையாளம். அதிமுக அரசின் மோசமான நிதி நிர்வாகத்தின் விளைவாக மிகப்பெரிய அளவிற்கு தமிழக அரசின் கடன் சுமையால் ஏறத்தாழ ரூபாய் 4 லட்சம் கோடியால் தமிழ அரசு சிக்கித் தவிக்கிறது. நம்ம ஆளுக்கு கோடிக்கு பூஜ்ஜியம் போட தெரியாது. எத்தனைப் பூஜ்ஜியம் என்று எழுதச் சொன்னால் கூட தெரியாது. ஆனால் நிறைய பணம் வைத்து இருக்கிறார்கள். கோடிக் கணக்கிலே பணம் நகர்கிறது. ஆம்புலன்ஸில் போகிறது. டாக்டர் கலைஞர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பல இதய நோயாளிகளைக் காப்பாற்றினார்.

இந்த ஆட்சியில் அதுமாதிரி உண்டா? ஆம்புலன்ஸ் போகும்போது பார்த்தால், கலைஞர் ஆட்சியில் நோயாளி தான் படுத்துக் கொண்டு போனான், அம்மையார் ஆட்சியில் பணம் அல்லவா படுத்துக்கொண்டு போகிறது? ஆம்புலன்சுக்கு அர்த்தமே வேறாக இருக்கிறது. எவ்வளவு பெரிய விஞ்ஞான ஊழல்! அதுபோன்று யாரும் இப்போது லட்சத்தில் பேசுவது கிடையாது. லட்சம் என்பது பிச்சைக்காரர்களுக்குப் போடுகிற மாதிரி இருக்கிறது. எல்லாம் கோடி, கோடி என்கிறான்.

அதைவேற ஆங்கிலத்தில் ‘C’ என குறிப்பிடுகிறார்கள். நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்கள், இந்த ‘C’ ’ யைத்தான் C-Corruption, C-Collection, C-Commission என குறிப்பிட்டார்.

திட்டங்கள் எல்லாம் அம்மா பெயரில்தானா? உங்கள் எம்.ஜி.ஆர். பெயரில்கூட வைக்காதது ஏன்?

$
0
0


திருவெறும்பூர் தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் தொடுத்த வினா


திருவெறும்பூர் மே 14- அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் பெயரளவிற்கு வைக்கும் திட்டங்கள்கூட அம்மா பெயரில்தான் - அவர்கள் போற்றும் எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்ட மறுப்பது ஏன் என்ற வினாவைத் தொடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டம் 13.5.2016 அன்று மாலை 6 மணியளவில் மேலகல்கண்டார்கோட்டை பெரியார் திடலில் சிறப்பாக நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் என்ற மூன்று பேருக்கும் உரியவர். சர்வகட்சி பிரமுகர் என்று கலைஞரால் அழைக்கப்பட்டவர். நம்முடைய அன்பில் அவர்கள்; பெரியாருக்கு அவர் செல்லப்பிள்ளை. இங்கு நிற்கின்ற வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொள்ளுப் பேரன், தளபதி ஸ்டாலினுக்கு பிள்ளை, தளபதி சொன்னார்; எங்கள் வீட்டுப் பிள்ளையை உங்களிடம் விட்டுவிட்டு செல்கிறேன் என்றார். நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் ஒரு சுறுசுறுப்பான நல்ல இளைஞர்; அவர் உங்கள் வீட்டுப்பிள்ளை பெரியாருக்கு அன்பில் செல்லப்பிள்ளை, உங்களுக்கும், எங்களுக்கும் இவர்தான் செல்லப்பிள்ளை. இவர் வெல்லப்பிள்ளை. அதுமட்டுமல்ல, வெல்லும் பிள்ளை! டாக்டர் கலைஞர், தளபதி ஸ்டாலின் உங்கள் முன் உங்கள் தொகுதியில் நிறுத்தியிருக்கிறார். நீங்கள் அவரை வெல்ல வைக்க வேண்டும். அன்பில் பெயரை சொல்ல வைக்க வேண்டும்.


பத்திரிகைகாரர்கள் சேகரன் அப்படி இருக்கிறார், இப்படி இருக்கிறார் என்று கதை விட்டுப் பார்த்தார்கள் எடுபடவில்லை. நீங்கள் எங்கள் ஆட்கள் இரண்டு பேராக, மூன்று பேராக இருக்கிறார்கள் என்று நினைத்து ஏமாந்து போகாதீர்கள். கத்தரிகோல் இரண்டு பிளவாகத் தான் இருக்கும். ஆனால் சேர்ந்துதான் நறுக்கும் இரண்டும் சேர்ந்துதான் இருக்கிறது. சேர்ந்தால் நீங்கள் தப்ப மாட்டீர்கள். அதுவரும் 16ஆம் தேதி வாக்கு அளித்து 19ஆம் தேதி தேர்தல் முடிவு வரும்போது தெரியும்.

கலைஞர் கனவு முதலமைச்சரல்ல,
நனவு நடைமுறை முதலமைச்சர்

அதே போன்று திருச்சி என்பது, தந்தை பெரியார் அவர்களின்  தலைமையிடம், பெரியாரின் கோட்டை; இந்த மலைக்கோட்டை மாநகரிலே, திருச்சி மேற்கு தொகுதியிலே நம்முடைய கே.என் நேரு அவர்கள் நிற்கிறார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தளபதிகளில் ஒருவர்; நீங்கள் வரும் 19ஆம் தேதி கே.என்.நேரு அவர்களுக்கு இந்த மலைக் கோட்டையிலே கொடுக்கும் நல்ல தீர்ப்பு, டாக்டர் கலைஞர் அவர்களை கோட்டைக்கு அனுப்பும் தீர்ப்பாக அமையும்.

இன்றைக்கு நிறைய பேருக்கு முதலமைச்சர் கனவு இருக்கிறது. ஆனால் நனவு முதலமைச்சர், நடைமுறை முதலமைச்சர் டாக்டர் கலைஞரை தவிர, வேறு யாருமில்லை. அவர் அய்ந்தாவது முறையாக முதல்வராக ஆனவுடன் பல செயல் திட்டங்களை, சாதனைகளை செய்தார். மீண்டும் ஆறாவது முறையாக முதலமைச்சராக வந்து இருண்ட தமிழகத்தை மீட்டெடுத்து ஒளி மிகுந்த தமிழ் நாடாக ஆக்கக்கூடிய மகத்தான பொறுப்பை திமுக ஏற்க இருக்கிறது.
கலைஞரிடம் ஆட்சியை எடுக்கலாம்,

பேனாவை எடுக்க முடியாது

தமிழ்நாட்டிலே முதல்வராக வந்து தற்போது முதல் கையெழுத்து போட போட்டி வந்துவிட்டது. நிறைய பேர் முதல் கையெழுத்திற்கு பேனாவையே தயார் செய்து வைத்து இருக்கிறார்கள். அது வேறு செய்தி, ஆனால் டாக்டர் கலைஞருக்கு யாரும் பேனா கொடுக்கத் தேவையில்லை. அவரிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்று உண்டென்றால் அது பேனாதான். ஆட்சியைக்கூட அவரிடமிருந்து எடுக்கலாம். ஆனால் அந்த பேனாவை அவரிடமிருந்து எடுக்க முடியாது. அந்த எழுதுகோல் மை இருக்கிறதே! அது வற்றாத மை! உழைப்பின் மை! அது ஈரோட்டுக் குருகுலத்தினில் போடப்பட்ட மை. அதை யாரும் அழிக்க முடியாது.

அம்மையார் வேலையே மந்திரியை எந்திரிக்க வைப்பது தான்!

கலைஞர் அவர்கள் மந்திரி குமாரி என்ற ஒரு படத்திற்கு கதை எழுதியிருப்பார். அரசியலுக்கு அவர் வராத நேரம் அது. 1950களில் அப்பொழுதெல்லாம் திமுக தேர்தலில் நிற்கும் என்ற நிலை இல்லை. நான் அப்போது மாணவர் பருவத்தில் சினிமா பார்ப்பேன். இப்போது அந்த வாய்ப்பு கிடையாது. மந்திரி குமாரி படத்தில், போக்குவரத்தில் சிவசூரியன் ஒருவர் இருந்தார். இரண்டு, மூன்று பேர் உட்கார்ந்து மந்திரி சபையை உருவாக்குவார்கள். சாமியார் எல்லாம் சேர்ந்து மந்திரி சபை போடுவார்கள். இதில் நான் மந்திரி என்று ஒருத்தர் சொல்வார். இன்னொருத்தர் எந்திரி என்பார். மந்திரியாக இருப்பது எப்போ! எந்திரி என்று எப்போ சொல்வார்கள் என்று தெரியாது. யாருக்கும் தெரியாது. அதேபோன்றுதான் அம்மையாரின் ஆட்சியில் மந்திரிசபை எந்திரி சபையாக எப்பொழுது எம்.எல்.ஏக்களை மந்திரியாக ஆக்குவார். இறக்குவார் என்று யாருக்கும் தெரியாது. அதில் ஒருவர் அடிக்கடி  பேசுவதால் அவருக்கு என்று ஒரு பதவி கொடுப்பார்கள். உனக்கு இந்த இலாகா என கொடுப்பார்கள். ஒருவர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார். அவருக்கு உணவு இலாகா என்று ஒவ்வொருவருக்கும் ஒதுக்குவார்கள். கடைசியாக ஒருவர் நடந்து நடந்து வந்து எனக்கு என்ன இலாகா என்று கேட்பார். நீ போயிட்டு போயிட்டு வருகிறதால் உனக்கு போக்குவரத்து இலாகா என்பார்கள். இந்த மாதிரிதான் கூட்டணியில் இப்பொழுது இருக்கிறார்கள்.

ஆனால் டாக்டர் கலைஞர் ஆட்சியிலே இதுபோன்ற நிலை இல்லை. அம்மையார் ஆட்சியில் தான் அடிக்கடி மந்திரிசபை எந்திரிக்க வைத்து விடுவார்கள். பிறகு உட்கார வைப்பார்கள். நம்முடைய கே.என்.நேரு அவர்கள் கலைஞர் ஆட்சியில் போக்கு வரத்து துறை அமைச்சராக இருந்தபோது பல சாதனைகளை, திட்டங்களை செய்தவர். இவருக்கு நீங்கள் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும்.

ஜெயலலிதா மக்களை சந்தித்ததுண்டா?

கடந்த அய்ந்தாண்டு அம்மையாரின் ஆட்சியில் கல்விபட்ட பாட்டை சொல்லி விவரிக்க முடியாத அளவிற்கு உள்ளது. அவர்கள் கல்வியைப் பற்றி கவலைப்பட்டதே கிடையாது. ஒரு வெட்கக்கேடு! கட்சியில் அண்ணா பெயரை வைத்துக் கொண்டு எவ்வளவு அடாவடி அட்டூழியம் செய்தார்கள். அவர்களின் ஆட்சியிலே ஆரம்பப்பள்ளிக் கூடங்கள் 300க்கும் மேற்பட்டவை மூடப்பட்டு இருக்கின்றன. எவ்வளவு பெரிய கொடுமை!

பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காம ராசரை, தந்தை பெரியார் அவர்கள் ஆதரித்தார். காமராசரை கிராமங்கள் தோறும் பரப்பினார், காமராசர் அவர்கள் குலக்கல்வி திட்டத்தை ஒழித்தார்கள். கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களை திறந்தார்கள். இராஜாஜி கொண்டுவந்த அரைநேரம் மாணவர்கள் படிக்க வேண்டும். மீதிநேரம் அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும் என்று வைத்தார்கள். அதை எதிர்த்து தந்தை பெரியார், திராவிடர் இயக்கம் குரல் கொடுத்த நேரத்திலே, காமராசர் ஆட்சிக்கு வந்தவுடன் குலக்கல்வி திட்டத்தை ஒழித்தார்கள். அதன் மூலம் நம் பிள்ளைகள் படித்தார்கள். அன்றைக்கு மட்டும் அந்த குலக்கல்வி திட்டத்தை ஒழிக்காமல் இருந்திருந்தால் நம்முடைய நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். நம் பிள்ளைகள் பொறியியல், கணினி படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்க முடியுமா? இதெல்லாம் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்ததன் விளைவுத £னே! டாக்டர் கலைஞர் அவர்கள் அதேபோன்று சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். ஆனால் அம்மையார் ஆரம்ப பள்ளிக் கூடங்களை மூடினார். யார் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கியது? கலைஞர் தானே!

காவிரித்தாய் கேட்கலாமா?

அம்மையார் சொல்கிறார், கருணாநிதி விவசாயிகளுக்கு என்ன பண்ணினார்? யார் சொல்வது காவிரித்தாய். தமிழ்நாட்டில் உள்ளது போலாவது வேறு எந்த ஆட்சியிலாவது 2709 விவசாயிகள் தற்கொலைகள் செய்ததுண்டா? தற்கொலைகள் பெருகியது உண்டா? இந்த தற்கொலைக்கு முடிவு கட்ட வேண்டாமா?

விவசாயிகள் மட்டுமா?  தற்கொலை, பொதுப்பணித்துறை அதிகாரி தற்கொலை, ஏன் தற்கொலை செய்து கொண்டார்? மந்திரி லஞ்சம் கேட்டார், கேட்கச் சொன்னார் என்பதற்காகவே. அரசு ஊழியர்கள் எத்தனை பேர் செத்து இருக்கிறார்கள்? 84 ஆணவக் கொலைகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கூலிப்படையால் தற்கொலை, கொலை, கொள்ளை இதற்கு முடிவு கட்ட வேண்டுமானால், டாக்டர் கலைஞரால் நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளர்களை வெற்றிப் பெறச்செய்ய வேண்டும். மக்களிடம் என்றும் தொடர்பில் இருக்கக்கூடிய கலைஞரை ஆதரிக்க வேண்டும். கடந்த அய்ந்தாண்டு காலம் அவர் ஆட்சிக்குப் போகவில்லை. போனமுறை நீங்கள் கொஞ்சம் அலட்சியமாக இருந்தீர்கள். அதனால் ஏமாந்தீர்கள். அதனால் யாருக்கு நட்டம் உங்களுக்குத் தான் இந்த முறையும் ஏமாந்து விடாதீர்கள்!

மிகப் பெரிய சாதனை!

தளபதி ஸ்டாலின் அவர்கள், நமக்கு நாமே “சுற்றுப் பயணத்தின் போது பொது மக்கள் தங்கள் தேவைகளை குறைகளை, உணர்வுகளை தங்களுக்கு தேவைகள் வேண்டும் என்று இதுவரை இந்தியாவில் எந்த முதலமைச்சரிடமும், ஏன் பிரதமரிடம்கூட கொடுக்காத அளவிற்கு மனுக்கள், (4லு லட்சம் மனுக்கள்) தளபதி ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்கள். மிகப் பெரிய சாதனை அல்லவா! யாரிடமாவது கொடுத்துள்ளார்களா?

அம்மையார் இலவசம் சாத்தியமாகுமா?

அம்மையார் இலவசங்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களுக்கு கல்தா கொடுக்க நினைக்கிறார். ஏமாற்ற நினைக்கிறார். அதில் 100 மெகாவாட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது சாத்தியமா? கொடுக்க முடியுமா? கடந்த தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றப்படும் என்றாரே! மாற்றினாரா? இன்று அறிவிக்கப்படாத மின்வெட்டு இல்லையா? எல்லாவற்றிலும் இவர்களின் ஆட்சி புதிய உத்தியை கண்டுபிடித்துள்ளார்கள். அது என்ன? உத்தி என்றால், பவர்கட் நாம் ஏதோ மின்சாரம் தடை ஏற்பட்டு இருக்கிறது என்று நினைப்போம். திடீர் என்று அடுத்த நாள் காலையில் பார்த்தால் அந்த மின்வெட்டு நேரத்திலே பணத்தை விநியோகம் செய்திருப்பார்கள். நாளிதழில் வரும் இந்த ஆட்சியில்தான் மின்சார வேகத்தில் பணத்தை விநியோகம் பண்ணுகிறார்கள். மின்சாரத்தையும், பணத்தையும் இணைத்த ஒரே ஆட்சி அம்மையாரின் ஆட்சிதான்.
அண்ணா பெயரிலா திட்டம் கேட்கிறோம்! உங்கள் அரசியல் ஆசான் பெயரில் திட்டம் உண்டா?

அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம் எல்லாம் அம்மாதான். அப்ப! அம்மா டாஸ்மாக் இல்லையா? அதிமுக கட்சியின் பணத்தில் திட்டம் வைத்தால் அம்மா பெயரை வைக்கலாம். யாருக்கும் ஆட்சேபனையில்லை, மக்கள் கொடுக்கும் வரிப் பணத்தில் செய்யலாமா?

இவர்களின் கட்சியில் பெயரில் மட்டும்தான் அண்ணா இருக்கிறார். கொடியில் மட்டும்தான் அண்ணா நிற்கிறார். இவர்கள் வைத்த எந்த திட்டத்திலாவது அண்ணா பெயர் உண்டா? ஏன் எம்.ஜி.ஆர். என்ன பாவம் செய்தார்? அண்ணாவிற்கு நாமம் போட்டதுபோல், எம்.ஜி.ஆருக்கும் நாமம் போடுகிறார். எம்.ஜி.ஆர். பெயரில் ஒரு திட்டம் இருக்கிறதா? கலைஞர் பெயரிலா கேட்கிறோம், பெரியார் பெயரிலா கேட் கிறோம். அண்ணா பெயரிலா கேட்கிறோம், இவர்கள் பெயரில்கூட திட்டம் வேண்டாம் - வைக்க மாட்டீர்கள்.

எம்.ஜி.ஆர். பெயரில் திட்டம் இருக்கிறதா? என்னுடைய அரசியல் ஆசான், இதய தெய்வம், புரட்சித் தலைவர் அதிமுகவின் நிறுவனர் என்று வசனங்களில் மட்டும்தான் கூறுவதா? வசனம் மட்டும்தான் மிஞ்சுகிறது. எம்.ஜி.ஆர். பெயரில் ஒரு உப்பு திட்டமாவது ஒப்புக்கு வைத்திருக்க வேண்டாமா?
அம்மா திட்டமல்ல;

அண்ணா திட்டம் மாற்றம் உறுதி!

அம்மையார் சொல்கிறார். கலைஞர் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் திட்டத்தையும் மூடி விடுவார்களாம். அவர் அது மாதிரி செய்கிறவர் அல்ல. அவர் மூட மாட்டார். ஆட்சிக்கு வந்தவுடன், என்ன ஒரு சிறு மாற்றம் செய்வார்? “அம்மா திட்டம்“ என்பதை “அண்ணா” திட்டம் என்று மாற்றுவார் வேறு எதுவும் செய்ய மாட்டார்.

செல்லாத - வெல்லாத ஓட்டு போடாதீர்! செல்லும் - வெல்லும் ஒட்டு போடுங்கள்!

தேர்தலில் போட்டி என்பது ஆளுங் கட்சி அதிமுகவுக்கும் எதிர்க்கட்சியாக இருந்து மீண்டும் ஆளப் போகிற திமுகவுக்கும் தான் மற்றவர்களுக்கு இங்கு வேலையே கிடையாது. போட்டியே கிடையாது. மற்றவர்கள் எல்லாம் நாங்கள் இருக்கிறோம் என்பார்கள். அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காகத் தான். வேறு எதற்குமில்லை. நீங்கள் மாற்றம் வேண்டும் என்று எண்ணி, தவறிப் போய் மற்றவர்களுக்கு ஓட்டுப் போட்டீர்களானால் அது செல்லாத ஓட்டு போட்டதற்கு சமம். அது செல்லாத ஓட்டாகப் போகும். வெல்லாத ஒட்டாகப் போகும். செல்லாத ஓட்டும் போடாதீர்கள். வெல்லாத ஓட்டும் போடாதீர்கள். வெல்லும் ஓட்டுப் போடுங்கள்.

தமிழ்நாட்டிற்கு விடியல் ஏற்பட, வெளிச்சம் கிடைக்க ஆதரிக்க வேண்டியது உதயசூரியனை! அது உங்கள் சூரியன்! மறவாதீர் என தமிழர் தலைவர் தனது உரையை நிறைவு செய்தார்.

----------------

மக்கள் முதல்வர் யார்?

ஓமந்தூரார் காலம் முதல் குறிப்பிடத்தகுந்த முதல்வர்களாக பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர் செய்த சாதனைகள் சாதாரணமானவை அல்ல. எல்லோருக்கும் கல்விக் கண்ணை திறந்தவர், கல்வி கொடுத்த பெருமான் காமராசர் ஆவார்கள். அப்படிப்பட்ட முதல்வர்களை எல்லாம் நாடு பார்த்து இருக்கிறது. இவர்கள் எல்லாம் காட்சிக்கு எளியவர்கள், கடுஞ் சொல்லர் அல்லர். மக்களோடு மக்களாக இருந்தவர்கள், மக்களையும், அவர்களையும் பிரிக்க முடியாது. அவ்வளவு சிறப்பாக ஆட்சி நடத்தியவர்கள். அண்ணாவிற்குப் பிறகு, டாக்டர் கலைஞர் 92 வயதிலும் உழைத்துக் கொண்டு இருக்கிறார். உழைப்பால் உயர்ந்த பெருமகன் ஆவார். உழைப்பில் யாரும் அவரிடம் போட்டி போட முடியாது. எழுத்திலே அவரிடம் போட்டி போட முடியாது. பேச்சிலே அவரிடம் போட்டி போட முடியாது. இந்த தள்ளாத வயதிலும், உடல் தளர்ந்த நிலையிலும் அவர் மக்களுக்கு மீண்டும் உழைப்பதற்கு உறுதியாக இருக்கிறார். அவர் அன்றாடம் மக்களை சந்திக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் மக்களை சந்தித்தார். ஏன்? எம்.ஜி.ஆர். கூட பல நேரங்களில் மக்களை சந்தித்து கொண்டுதான் இருந்தார். அவர் சினிமா துறையில் இருந்ததனால் மற்றவர்களைப்போல் சந்திக்காமல் விட்டாலும் சந்தித்து இருக்கிறார். இவர்கள் எல்லாம் மக்களை சந்திக்கின்ற முதல்வர்கள். கடந்த அய்ந்தாண்டு காலங்களில் அம்மையார் யாரையாவது சந்தித்ததுண்டா? மக்களை சந்தித்ததுண்டா? தனக்கு ஓட்டுப்போட்ட தொகுதி மக்களை எத்தனைமுறை போய் பார்த்திருக்கிறார்? இவரா மக்களின் முதல்வர்?

-----------------




மக்களைப் பற்றி சிந்தித்தவர் - ஸ்டாலின்


திமுக தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்துள்ளார்கள். மக்களுக்காக செய்து உள்ளார்கள். எந்த அரசியல் கட்சியாவது மக்களைப் பற்றி கவலைப்பட்டதுண்டா? தளபதி ஸ்டாலின் அவர்கள், தனது பிரச்சாரத்தில் தெளிவாக ஒன்றை குறிப்பிட்டுள்ளாரே, நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்ல இடையில் உங்களை மக்களை சந்திக்க வேண்டும், சந்தித்தே ஆக வேண்டும் என்று தலைமையிடத்திலிருந்து கட்டளை போடுவோம் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். ஜனநாயகம் என்றால், மக்களை சந்திப்பது, அவர்களின் குறைகளை கேட்பதுதானே! அதைத்தான் தளபதி ஸ்டாலின் செய்து இருக்கிறார். மக்களின் உணர்வுகளைப் புரிந்து வைத்திருக்கிறார். இந்த திருச்சி மாவட்டத்திற்கு திமுக தேர்தல் அறிக்கையில் 19 திட்டங்களை கூறியிருக்கிறார்கள். அதில் திருச்சியில் மலர் சந்தை அமைக்கப்படும். திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில், துவாக்குடி சுங்கச்சாவடியிலிருந்து வாழவந்தான் கோட்டை சர்க்கார் பாலம் வழியாக, திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என 19 திட்டங்களை வகுத்தார்கள்.

தமிழ்நாட்டைக் காப்பாற்ற புஜம் தூக்கிப் புறப்படுவீர்!

$
0
0

திராவிடர் கழகமும், தி.மு.க.வும் நாட்டை வாழ வைக்கும் இயக்கங்களாகும்

திமுக ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழி வாங்க மாட்டோம்!

தமிழ்நாட்டைக் காப்பாற்ற புஜம் தூக்கிப் புறப்படுவீர்!

தி.மு.க.வையும், கூட்டணிக் கட்சிகளையும் ஆதரித்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் சங்கநாதம்!

சென்னை மே 15- தமிழ்நாட்டைக் காப்பாற்றிட, கொடிய ஆட்சி அகல தி.மு.க.வையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் ஆதரிக்கக் கோரி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை தேர்தல் பரப்புரையை முடித்து வைத்து நேற்று மாலை ஆற்றிய முத்தாய்ப்பான உரை:

சேப்பாக்கத்தில் நடைபெறும்  இந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் தலைவர்,  அருமைத் தம்பி, ஜெ. அன்பழகன் அவர்களே, மேடையிலே வீற்றிருக்கும் என்னுடைய அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே,  

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே,

பல  நாட்களாக, என்னுடைய தொகுதியிலும், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளிலும் சுற்றியலைந்து  இன்று வழக்கம் போல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை இதே இடத்திலே நிறைவு செய்வது என்ற அந்த முடிவோடு உங்களையெல்லாம் காண வந்திருக்கிறேன்.  ஒவ்வொரு  தேர்தலின்போது, நான்  தேர்தல் பிரச்சாரத்தை, இந்த இடத்திலே தான் நிறைவு செய்வது வழக்கம்.   அந்த வழக்கம் மாறாமல்,  உங்களையெல்லாம் இப்போது சந்திக்க வந்திருக்கிறேன்.            

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி
சுவரில் எழுதப்பட்ட ஒன்று!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி சுவரில் எழுதப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது (பலத்த கைதட்டல்) என்பதை நீங்கள் அறிந்து, பெருவாரியாக நீங்கள் இங்கே குழுமியிருக்கிறீர்கள்.  உங்களுக்கெல்லாம் சொல்லப் போகிற  நற்செய்தி, வெகு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவை உருவாகும் என்பது தான்!

திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?  நல்லாட்சி நடக்கும்.   எது நடக்காது?  இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கொடிய, குரூரமான ஆட்சி தொடராது.   நல்லாட்சி நடப்பதற்கு நீங்கள் எல்லாம் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத் தான் நான் வந்திருக்கின்றேன்.

சாத்திரங்கள் சொல்கிறபடி,  இந்த இடத்திற்கு நான் இப்போது வந்து பேசுவதற்குக் காரணம்,  இது தான் நமக்கு  “ராசியான”  இடம் என்று  பலர் சொன்னார்கள்.   இது ராசியான இடம் தான்!   நீங்கள் எல்லாம் எனக்கு ராசியானவர்கள்.  (கைதட்டல்)  யாரும் எனக்கு விரோதி அல்ல, ராசியானவர்கள்.  அந்த ராசியானவர்கள் இருக்கின்ற இடத்திற்கு  நான் வந்து பேசினால், ஏற்கனவே இருக்கின்ற ராசி மேலும் பலம் பெற்று  இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்று சொன்னாலும் கூட, அது இந்த நாளில்  நான் உங்களைச் சந்திப்பதால், அது உறுதிப்பட்டு விட்ட ஒன்றாக ஆகி விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படிப்பட்ட ராசியான இடத்தில் இன்று உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், பெருமை அடைகிறேன்.     

திராவிட முன்னேற்றக் கழகத்தை எப்படியும் வீழ்த்திட வேண்டுமென்று “திராவிட”  என்ற  வார்த்தையே  கூடாது,   திராவிடர் கழகமோ,  திராவிட முன்னேற்றக் கழகமோ தமிழ்நாட்டு மக்களை வாழ வைக்காது என்கின்ற ஒரு செய்தியை சிலபேர் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள்.  அந்தப் பரப்புரையை நீங்கள் யாரும் நம்ப வில்லை என்பதற்கு அடையாளமாகத் தான் இந்த இடத்திலே இவ்வளவு பேர் குழுமியிருக்கிறீர்கள்.      

தி.மு.கழகம் அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்கிற மகிழ்வான செய்தி!

நான் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக  பல தொகுதிகளிலே சுற்றுப் பயணம் செய்து விட்டு, சென்னைக்கு வந்தேன்.   சென்னைக்கு வந்த போது இங்கே கிடைக்கின்ற தகவல்கள், செய்திகள்,  தி.மு.க. அதிகமான இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் (பலத்த கைதட்டல்)  என்ற செய்திகளைத் தான் ஏடுகள் எல்லாம் தாங்கி வருகின்றன.  எனக்குள்ள மகிழ்ச்சி, என்னுடைய சேப்பாக்கம்  தொகுதியில், இந்தச் செய்தியை மீண்டும்  கேட்கின்ற வாய்ப்பு ஏற்பட்டதே என்பதற்காக, இந்த வாய்ப்பை வழங்கிய சேப்பாக்கம் தொகுதி தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை, வணக்கத்தை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சேப்பாக்கம் தொகுதி,  இன்று நேற்றல்ல,  திராவிடர் இயக்கம் தோன்றியதே இந்தப் பகுதியிலே தான்.   திராவிடர் இயக்கத்தைத் தோற்றுவித்த நம்முடைய நாயகர்கள், திராவிட இயக்கத்தின் பிதாமகர்கள், இந்தப் பகுதியிலே  தான் வாழ்ந்தார்கள்.  இந்தப் பகுதியிலே தான் திராவிடர் இயக்கத்திற்கான கால்கோள் விழா நடத்தப்பட்டது.  அப்படி நடத்தப்பட்ட கால்கோள் விழாவை மேலும் பலப்படுத்துகின்ற வகையில் தான் இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது என்று சொன்னால்,  தமிழ்நாட்டு மக்களின் ஆர்வத்தை நான்

என்னவென்று சொல்வது?   எவ்வளவு  ஆர்வம் உள்ளவர்கள், எவ்வளவு அக்கறை உள்ளவர்கள் இந்த இயக்கத்தை நாம் வளர்த்தே ஆக வேண்டும் என்று எண்ணுகின்ற எண்ணம் உள்ளவர்கள், சென்னையில்  குறிப்பாக இந்தப் பகுதியில் இவ்வளவு பேர் வாழ்கிறீர்கள் என்கிற போது, நான் ஒவ்வொரு வரையும் வணங்க, ஒவ்வொருவருக்கும் கை கொடுக்க, ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக் கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.

என்னை நீங்கள் கடந்த காலத்திலே சென்னை மாநகரிலும் ஆதரித்திருக்கிறீர்கள்;  வேறு பகுதிகளிலும் தமிழ் நாட்டில்  ஆதரித்திருக் கிறீர்கள்.  எல்லா இடங்களிலும் அபரிமிதமான வாக்குகளை வழங்கி என்னை வெற்றி பெறச் செய்திருக்கிறீர்கள்.    நான் இப்போது வந்திருப்பது, எனக்காக வாக்கு கேட்க மாத்திரமல்ல;  எங்களுக்காக வாக்கு கேட்க வந்திருக்கிறோம்.   திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தோழமைக் கட்சிகளின் சார்பிலும்,  காங்கிரஸ் பேரியக்கம்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,  மனித நேய மக்கள் கட்சி,  புதிய தமிழகம், மக்கள் தே.மு.தி.க.,  உள்ளிட்ட மற்ற தோழமைக் கட்சிகளின் சார்பிலும்  நிற்கின்ற வேட்பாளர்கள் அனைவருக்கும்,  அவரவர்களுடைய  தேர்தல் சின்னத்தில் நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்,  செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு (கைதட்டல்) தான் நான் வந்திருக்கிறேன்.   

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் யாரையும்
பழி வாங்க மாட்டோம்!

தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் - நான் சொல்லுகிறேன்  - ஜெயலலிதா அம்மையார் பயப்படத் தேவையில்லை.  ஏனென்றால் இந்தக் கருணாநிதி, நம்மை பழி வாங்கி விடுவானோ என்று அம்மையார் கருதத் தேவையில்லை.  பழி வாங்கு கின்ற எண்ணத்தை எனக்கு அண்ணா கற்பிக்கவே இல்லை.  (கைதட்டல்)  பழி வாங்குவதென்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது.    பழி வாங்குகின்ற எண்ணத்தை  பேரறிஞர் அண்ணா அவர்கள்,  என் ஆருயிர் அண்ணன் பேரறிஞர் அண்ணா அவர்கள் எனக்கு கற்பிக்காத காரணத்தால்,  யாரையும் தி.மு.க. ஆட்சி வந்தால் பழி வாங்க மாட்டோம் என்ற உறுதியை (கைதட்டல்) இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்.   இதை விட நல்ல செய்தியை வேறு யாரும் உங்களுக்குச் சொல்ல முடியாது.   தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஒரு வேளை நம்மை பழி வாங்கி விடுவார்களோ என்று நினைக்கத் தேவையில்லை.

ஏனென்றால் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பழி வாங்கும் நிகழ்ச்சி ஒன்றை இப்போது நான் உங்களுக்கு ஞாபகப்படுத்தினால், நான் பழி வாங்குவேனா இல்லையா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.  29-.6-.2001 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை நசுக்க வேண்டுமென்று எண்ணிய  - அப்போது தான் ஆட்சிக்கு வந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் போலீசாரை  நள்ளிரவில் எங்கள் வீட்டுக்கு அனுப்பி, என்னைக் கைது செய்யச் சொல்லி, எப்படி கைது செய்யப்பட்டேன் என்பதைக் கவனிப்பதற்காக தொடர்ந்து அதைத் தெரிந்து கொள்வதற்காக  அவர் தன்னுடைய வீட்டிலே இரவு முழுவதும் விழித்துக் கொண்டே இருந்தார்.  இரவு  2 மணி.    29.-6.-2001  அன்று நான் வீட்டிலே துங்கிக் கொண்டிருக்கிறேன்.  “தடதட” வென்று கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.   நானும் என்னுடைய மனைவி ராஜாத்தி அம்மையாரும்,  மகள் கனிமொழியும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவர்கள்,  இப்படி கதவைப் போட்டு இடிக்கிறார் களே என்று, கதவைத் திறந்தால் உள்ளே நுழைந்தார்கள் போலீசார்.  நான் விழித்துக் கொண்டே “என்ன?” என்று கேட்டேன்.    

“உங்களைக் கைது செய்ய வந்திருக்கிறோம்” என்றார்கள்.   “நான் என்ன குற்றம் செய்தேன்?  ஏன் கைது செய்கிறீர்கள்” என்று கேட்டேன்.   “ஒரு குற்றமும் செய்யவில்லை,  முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் உத்தரவு, அதற்காகத் தான் வந்திருக்கிறோம்” என்று சொன்னார்கள்.

என்னைப் பழிவாங்க - என்னைத் தண்டிக்க அ.தி.மு.க. ஆட்சியில் எடுத்த முயற்சி!

என்னைப் பழிவாங்க,  என்னைத் தண்டிக்க அன்றைக்கு அவர்கள் எடுத்த முயற்சி - அந்த முயற்சியின் காரணமாக  - படுக்கையிலே இருந்த என்னை அப்படியே குண்டுகட்டாக வெளியே துக்கிச்  சென்றார்கள்.  அப்போது இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட, என்னுடைய அருமை மருமகன் முரசொலி மாறன் ஓடோடி வந்து என்ன என்று விசாரித்தார்.  “அவரைக் கைது செய்கிறோம், நீங்கள் தடுத்தால் உங்களையும் கைது செய்வோம்” என்று மாறனை மிரட்டினார்கள்.   மாறன் அதற்கு அஞ்சவில்லை,  “கைது செய்வதென்றால், கைது செய்து கொள்ளுங்கள்” என்று  அவரும்  துணிந்து  முற்பட்டார்.  ஆனால் உங்களுக்குச் சொல்கிறேன், அந்த நிகழ்ச்சிகளை!   ஜெயலலிதா அவருடைய வீட்டிலே இருந்து, தொலைபேசியில் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டே இருக்கிறார்.  “என்ன ஆயிற்று?  கைது செய்து விட்டீர்களா?”  இந்தக் கேள்விகளுக்கு போலீஸ்  அதிகாரிகள், இப்போது தான் கைது செய்தோம் என்று சொல்கிறார்கள்.  “விடாதீர்கள் அவனை” என்று  - எனக்கு அந்த அம்மையார் கொடுத்த மரியாதை இது.  உடனே கொண்டு போங்கள்  என்று உத்தர விட்டார்.  அந்த உத்தரவை நிறைவேற்ற அவர்கள் முற்பட்ட போது, நான் அவருடைய உத்தரவு என்ன என்பதை அறிந்து  அதற்கு இணங்க மறுத்தேன்.  அவருடைய உத்தரவுப்படி என்னை எவ்வளவு கொடுமைப்படுத்த வேண்டுமோ, அவ்வளவு கொடுமை அங்கே வந்த போலீஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்டது.

இன்னும் சொல்லப் போனால் ஒரு கட்டத்தில் என்னுடைய உயிர்நிலையையே பிடித்து  கொல்வதற்கான முயற்சி அன்றைக்கு நடைபெற்றது.  இதை  நான் இப்போது  சொல்வதற்குக் காரணம்  பழி வாங்குகிற முயற்சி என்று சொல்கிறார்களே,  அவர்களுக்குச் சொல்கிறேன், எவ்வளவு கொடுமை அன்றைக்கு நடந்தது என்பதற்காகச் சொல்கிறேன்.

பழி வாங்குவது அவர்களது
இயல்பான குணம்!
அவரைப்போல் நான் பழிவாங்க மாட்டேன்

அதற்குப் பிறகு தான்  தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் எல்லாம்  விசாரித்து  கண்டனம்  தெரிவித்த பிறகு, கொஞ்சம் அந்தக் கொடுமை அடங்க ஆரம்பித்தது.  இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம் பழி வாங்குவது அவர்களுக்கு இயல்பு.  பழி வாங்குவது அவர்களுடைய இயல்பான குணம்.  அன்றைக்கு நடந்த இந்த நிகழ்ச்சிகளை நான் சொல்வதற்குக் காரணமே  நான் திரும்ப அவரைப் போல பழி வாங்க மாட்டேன் என்று உறுதி அளிப்பதற்காகத் தான் சொல்கிறேன்.

ஜெயலலிதா அம்மையார் அவர்களே,  நீங்கள் பயப்பட வேண்டாம், ஒருவேளை இந்தத் தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்று, நாளைக்கு முதலமைச்சராக ஆகி விடுவாரேயானால், நம்மைப் பழி வாங்குவாரோ என்று பயப்பட வேண்டாம்.   நிச்சயமாக நான் அண்ணா வழியில் வந்தவன், அண்ணாவைப் பின்பற்றுபவன்,  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணா அவர்களின் இந்த மூன்று பொன்மொழிகளையும் மறவாமல்  இதயத்திலே வைத்திருப்பவன்; யாரையும் பழி வாங்க மாட்டேன்;  நான் எப்படி பழி வாங்குவேன் என்றால்,  நீங்கள் (ஜெயலலிதா)  செய்யாத நன்மைகளை எல்லாம்,  நீங்கள் கை விட்ட நன்மைகளை  எல்லாம்,  கைவிட்ட காரியங்களை எல்லாம், என்னென்ன நாட்டிற்குச் செய்திருக்க வேண்டுமோ, அவைகளை எல்லாம் நான் செய்து காட்டுவேன்.  (பலத்த கைதட்டல்)   அது உங்களுக்குப் பழி வாங்குவதைப் போலத் தெரிந்தால், அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.   நீங்கள் கை விட்ட காரியங்கள், நீங்கள் உறுதியளித்து செய்யாமல் விட்ட காரியங்கள் - அவைகளை யெல்லாம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தால் செய்யும், தொடரும்.  (கைதட்டல்)
நீங்கள் மூட நினைத்த பேரறிஞர் அண்ணா நுற்றாண்டு நினைவு நூலகத்தை,  உலகத்தில் உள்ள எல்லா  பெரிய நுலகங்களோடும் ஒப்பீடு செய்கின்ற அளவுக்கு  சிறப்பாக அதை இயக்குவேன்.  அது உங்களுக்கு பழி வாங்குவதாகத் தெரியலாம். நூலகம் மாத்திரமல்ல.  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே  கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சாதனைகள் அத்தனையும் நிறைவேற்றப்படும்.  அப்படி நிறைவேற்றப்படுவது, உங்களுக்கு பழி வாங்குவதாக தெரியுமே ஆனால், அப்படிப் பழி வாங்குவதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பான் இந்தக் கருணாநிதி (கைதட்டல்) என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழையெளியோர்களுக்கு நன்மை செய்வது, பழி வாங்குவது என்றால்,  நடுத்தர மக்களுக்கு நன்மைகள் செய்வது பழி வாங்குவது என்றால், அந்த பழி வாங்குகின்ற காரியத்தை  நான் தொடர்ந்து  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சார்பில் செய்து கொண்டே இருப்பேன்.

தி.மு.க ஆட்சியில் கட்சி மாத்திரமல்ல
சமுதாயக் கட்சி; சமுதாய இயக்கம்!

ஆட்சி வருகிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது.  வந்தாலும் வரா விட்டாலும் பழி வாங்குகின்ற குணம்   திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடையாது  என்பதை அழுத்தந் திருத்தமாக எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.  

தி.மு.க. ஒரு அரசியல் கட்சி மாத்திரமல்ல,  சமுதாயக் கட்சி,  சமுதாய இயக்கம்.  அறிஞர் அண்ணா அவர்களும், அதற்கு முன்பு தந்தை பெரியார் அவர்களும்,  திராவிடர் இயக்கத்தை ஆரம்பிக்கக் காரணமே,  தமிழ்நாட்டு மக்களுக்கு, சமுதாயச் சீர்திருத்தங்களை, பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் மூலம்  நல்ல வழி கிடைக்கின்ற காரியங்கள் இப்படியெல்லாம் செய்வதற்காகத் தான் இந்த இயக்கத்தை தந்தை பெரியார் அவர்களும், அவருடைய வழித் தோன்றல் பேரறிஞர் அண்ணா அவர்களும்,  அவர்கள் வழியிலே நடக்கும் நாங்களும் இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே தி.மு.க. என்பது அரசியல் பழி வாங்கும் கட்சி அல்ல.  இது அரசியலில் பண்பாடு காக்கின்ற கட்சி.  அரசியலில் எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நடக்கின்ற கட்சி.   இதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்திருக்கின்ற காரணத்தால், யாருக்கும் விரோதி அல்ல.  எல்லோரும் திராவிடர்கள்,  பூர்வீகத் திராவிடர்கள் என்று நம்முடைய பழைய சரித்திரத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறதே,  அந்தத் திராவிடர்களுடைய பரம்பரை தான் நாம்.   எனவே அந்த திராவிட மக்களுக்கு, அந்த திராவிட இனத்திலே  உள்ள அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லீம் களானாலும், கிறித்தவர்கள் ஆனாலும், மத வேறுபாடு கருதாமல்,  சாதி வேறுபாடு கருதாமல் எல்லோரையும் மனிதர்கள் என்று கருதி, மனித நேயத்தைப் போற்றுகின்ற கட்சி,  மனித நேயத்தைப் பாராட்டுகின்ற கட்சி,  மனித நேயத்தைக் காப்பாற்றுகின்ற கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.   அப்படிப்பட்ட கட்சிக்கு  உங்களு டைய பேராதரவைத் தர வேண்டுமென்று கேட்டுத் தான்  இருபது  நாட்களாக தமிழகத்தைச் சுற்றி வருகிறேன்.

எனக்கு முன்பே நம்முடைய கழகத்தின் கண்மணிகள், தம்பி ஸ்டாலினைப் போன்றவர்கள், கனிமொழி போன்றவர்கள்  (கைதட்டல்) எல்லோரும் சுற்றுப் பயணம் செய்து, சூழ்ச்சிகளைச் சுக்கானில் மாட்டி, அவர்கள் சுதந்திரமான இயக்கத்தை,  சுதந்திரமான தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்று  பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

இன்றைக்கு இந்த ஆட்சியிலே என்ன நடக்கிறது?  எதைச் செய்கிறார்கள்?  மக்களுடைய  எந்தக்  குறை நீக்கப்பட்டது?  மக்களுடைய  எந்த ஆவல் நிறைவேற்றப்பட்டது?  எதுவும் செய்யவில்லை.  யாருடைய ஆவல் நிறைவேற்றப் பட்டது என்றால், ஜெயலலிதாவின் ஆவல் ஒன்று தான் நிறை வேற்றப்பட்டது.  அவர்கள் சாதாரண பஞ்சாயத்து போர்டிலிருந்து, பாராளுமன்றத்தில் இருக்கின்றவர்கள் வரை -  நீதிமான்கள் வரையிலே அத்தனை பேரையும் கைக்குள் போட்டு அவர்களை யெல்லாம் ஆட்டிப் படைத்து தங்களுடைய எண்ணங்களையும் ஈடேற்றிக் கொள்ளலாம் என்று கருதிக்கொண்டு நாட்டிலே நடைபோடுகிறார்கள். அதற்கு இடம் தரலாமா? அதற்கு நீங்கள் செவி சாய்க்கலாமா? அதற்கு நீங்கள் இடம் கொடுக்கலாமா? என்று தான் உங்களை நான் பார்த்து கேட்க விரும்புகின்றேன்.

நாட்டில் நல்லாட்சி நடக்கின்றது என்றால் ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்றால் ஜனநாயகத்தைப் பற்றி தெரிந்து கொள்பவர் களாலும்  ஜனநாயகத்தைப் பற்றி அறிந்து கொண்டிருப்பவர் களாலும்தான் நடத்த முடியும். ஜனநாயகத்தை மக்கள் ஆட்சி தத்துவம் என்று புரிந்து கொண்டவர்கள்   வேண்டுமானால், ஜனநாயக ஆட்சி நடக்கின்றது என்று சொல்லலாம். வேண்டு மென்றே ஜனநாயகத்தின் பெயரைப் பயன்படுத்தி நாங்கள் ஜனநாயக ஆட்சி நடத்தப்போகிறோம் என்று சொல்கிறவர்களை தயவு செய்து நம்பாதீர்கள் அவர்கள் ஜனநாயகத்தையும் கொலை செய்து நம்மையும், நம்முடைய வருங்காலத்தையும் கொலை செய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு இடம் தராதீர்கள்,  அவர்களுக்கு வழி விடாதீர்கள், அவர்களுக்கு தமிழ்நாட்டிலே இதுபோன்ற தேர்தல்களில் வாய்ப்பு தராமல்  அவர்களைத் துரத்துங்கள்.  அவர்களை விரட்டுங்கள், அவர்களுக்கு தமிழ் நாட்டில் என்ன வேலை என்று கேளுங்கள்.   தமிழ்நாடு தமிழ ருக்கே என்று ஒலித்த காலம் போய் இன்றைக்கு தமிழ்நாடு  எப்படி எப்படியோ சீரழிந்து சிதறிப்போய்  கிடக்கின்ற காட்சியை  பார்த்து,  நம்முடைய உள்ளமெல்லாம் நொந்துபோகிறது.  அப் படிப்பட்ட நிலையிலே தமிழ்நாட்டைக் காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டை காப்பாற்ற அனைவரும்
புஜம் தூக்கிப் பாடுபடுங்கள்!


தமிழ்நாட்டை காப்பாற்றுவது என்றால்,  ,.. இந்த தேர்தலிலே எங்களுக்கு  வெற்றிக் கொடுங்கள் என்று கேட்பது மாத்திரமல்ல;  வெற்றிக் கொடுத்தாலும் சரி, வெற்றிக் கொடுக்காவிட்டாலும் சரி,  தமிழ்நாட்டை காப்பாற்ற அனைவரும் புஜம் தூக்கி; (கைதட்டல்)   அனைவரும் ஒன்று படுங்கள்;  தமிழர்களாக ஒன்று படுங்கள்,  இது சேரன், செங்குட்டுவன் பரம்பரை, பாண்டியன் நெடுஞ்செழியனுடைய  பரம்பரை, கரிகால் பெருவளத்தானுடைய பரம் பரை நாம். அந்தப் பரம்பரையின் பெருமையைக் காப்பாற்றுங்கள் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கின்றேன்.

சேரன் செங்குட்டுவன், இமயமலை வரையில்  படையெ டுத்துச் சென்று அங்குள்ள  மன்னர்களை எதிர்த்து அங்கிருந்து  பல பட்டங்களை, விருதுகளை எல்லாம் பெற்று,  தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தவன் என்ற பெயரைப் பெற்றவன்.  அதைப்போல பாண்டியன் நெடுஞ்செழியன், நீதி வழுவாத  நெறிமுறைப்படி நடந்தவன். அந்த பாண்டியனுக்குப்  பெருமை சேர்க்க நாம் நம்முடைய கரம் தூக்கி, நாம்  கட்கம் ஏந்திப்  போரிட்ட அந்தக் காலத்தை எண்ணி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய  எழுச்சியில்  பாண்டிய நாடானாலும் சரி, பல்லவ நாடானாலும் சரி,  சோழ நாடானாலும் சரி,  சேர நாடானாலும் சரி, நானில மெல்லாம் வளம் பெற்று,  ஏன், ஒரு காலத்திலே கப்பல் ஓட்டினான் தமிழன், அவன் ஓட்டிய கப்பல்,  பல கடல்களையெல்லாம் கடந்து சென்றிருக்கிறது.  அவன் ஓட்டிய கப்பல் எத்தனையோ  கடல் வழிகளை கடந்து, திராவிட இயக்கத்தை பரப்புவதற்கு,  அன்றைக்கே ஒரு பெரிய குழுமமாக சென்றது.  

அப்படிப்பட்ட நிலையில் மீண்டும் திராவிட இயக்கத்தார்,   திராவிட இயக்கம் பெறுகின்ற  வெற்றியெல்லாம்  தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும்  என்பதற்காகத்தான்  நாங்கள்  பாடு படுகிறோமே அல்லாமல் யாருடைய சுய நலத்திற்காகவும்  அல்ல.  எல்லோருடைய சுய நலமும் இருக்கிறது.  கோடிக்கணக்கான தமிழர்களுடைய சுயநலம்,  கோடிக்கணக்கான தமிழர்களுடைய  பொது நலம்.  இவைகளெல்லாம் கலந்ததுதான் இந்தக் கூட்டு கலவைதான் திராவிட முன்னேற்றக் கழகம். அப்படிப்பட்ட கழ கத்திற்கு வெற்றியை தேடித் தர வேண்டிய கடமை,  உங்களு டையது.  

நாளையும், நாளை மறுநாளும், தொடர்ந்தும்  நடைபெறுகின்ற  எந்தத் தேர்தலானாலும்  அதிலே நாம் நிற்பது - களத்திலே நிற்பது அல்ல. யார் மீதும் போர் நடத்துவதற்காக  நிற்பது அல்ல.   நாம் நம்முடைய தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக, நம்முடைய வாழ்வை காப்பாற்றிக் கொள்வதற்காக, நம்முடைய தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக, நாம் பாடுபட்டு வருகிறோம்.   நாம் போராடுகின்றோம். அந்த போராட்டத்தில்  நிச்சயம் வெல்வோம், யார் தடுத்தாலும் (பலத்த கை தட்டல்) வெல்வோம்.

நான் எளிய தமிழில் விளக்கிய
புறநானூற்றுக் கவிதை


நான் எளிய தமிழில் விளக்கிய  ஒரு  புறநானூற்று கவிதையை  உங்களுக்குச் சொல்கின்றேன்.       
குடிசைதான்!  ஒரு புறத்தில்  கூரிய வேல்வாள்

வரிசையாய் அமைத்திருக்கும்-வையத்தைப்            
பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்           
வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்; மிளிரும்!
புலியின் குகையினிலே அழகில்லை-   
புதுமையன்று!
கிலியும் மெய் சிலிர்ப்பும்
கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா
மானத்தின் உறைவிடம்-
மறவன் மாளிகை!
இல்லத்து வாயிலிலே
கிண்ணத்துச் சோற்றோடு
வெல்லத்தைச் சிறிது கலந்து            
வயிற்றுக்குள் வழியனுப்பப்
பொக்கை வாய்தனைத் திறந்து            
பிடியன்னம் எடுத்துப் போட்டாள்
பெருநரைக் கிழவி யொருத்தி.
ஓடி வந்தான் ஒரு வீரன்
ஒரு சேதி பாட்டி! என்றான்.
ஆடிவந்த சிறுமிபோல்
பெருமூச்சு வாங்குகின்றாய்
ஆண் மகனா நீ தம்பி!
மூச்சுக்கு மூச்சு இடைவெளி  ஏற்படட்டும்.   பின்,
பேச்சுக்குத் தொடக்கம் செய் என்றாள்
அந்தக் கிண்டலுக்குப் பேர்போன   
கிழட்டுத் தமிழச்சி!
வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி-உன்
வாடிக்கைக் கேலியை விட்டுவிடு.
‘மடிந்தான் உன் மகன் களத்தில்’
என்றான்-மனம்
ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை!
‘தாயம் ஆடுகையில் காய்களை            
வெட்டுவதுண்டு-களமும் அதுதான்.
காயம் மார்பிலா? முதுகிலா?            
கழறுவாய்”  என்றாள்-முதுகிலென்றான்.
கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்;            
வாளை எடுத்தனள்;
முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்!
கோழைக்குப் பால் கொடுத்தேன்            
குப்புற வீழ்ந்து கிடக்கும்
மோழைக்குப் பெயர்
போர் வீரனாம்! முன்பொருநாள்
பாய்ந்துவந்த ஈட்டிக்குப்
பதில் சொல்ல மார்பைக் காட்டிச்
சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர்.
அவருக்குப்   பிறந்தானா?   
அடடா மானமெங்கே-குட்டிச்
சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.
இமய வரம்பினிலே  வீரம் சிரிக்கும்-இங்கு
வீணை நரம்பினிலே இசை துடிக்கும்.
அதுவும் மானம் மானமென்றே ஒலிக்கும்!            
மதுவும் சுறாவும் உண்டு வாழும்
மானமற்ற வம்சமா நீ-ஏடா            
மறத் தமிழ்க் குடியிலே மாசு தூவி விட்டாய்
மார்பு கொடுத்தேன்            
மகனாய் வளர்த்தேன்-
தின்று கொழுத்துத்
திமிர் பாய்ந்த தோள்களெங்கே?            
தினவெடுக்கவில்லையா? அந்தோ!
வேலுக்கு வழி சொல்ல வகையற்ற            
கோழையே-என் வீரப்
பாலுக்கு வழி சொல்வாய்!!
என்று கதறினாள்            
எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.
சென்றங்குச் செரு முனையில்            
சிதறிக் கிடந்த
செந்தமிழ்க் காளைகளைப்           
புரட்டிப் பார்த்தாள்-அங்கு
நந்தமிழ் நாட்டைக் காக்க  
ஓடிற்று  ரத்த வெள்ளம்!

பிணக்கு வியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்!
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை-மகன்
பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு            
எல்லையுண்டு-அவன்
இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!           
இதைக் கண்டாள்-இதயங் குளிர்ந்தாள்!
எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை            
என் மகன் வீரனாய் இறந்தான் என்றாள்.
அறுத்தெறிய இருந்தேன்            
அவன் குடித்த மார்பை-அடடா!
கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?            
வாளிங்கே! அவன் நாக்கெங்கே?

- என்று முடிகிறது அந்தப் புறநானூற்றுக் கவிதை. அப்படிப் பட்ட புறநானூறுகளை உருவாக்கி புறநானூற்றிலே கதாநாயகர் களாகத் திகழ்ந்த நம்முடைய தாய்மார்கள் நம்முடைய  பெண்  குலத்தினர் இன்றைக்கும்   திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்த பிரச்சாரத்தை கேட்க, ஓடோடி வருவதும், திராவிட முன் னேற்றக் கழகம் சொல்லுகின்ற எண்ணங்களை, கருத்துக்களை,  செவி மடுப்பதும்  எங்களை  மிக அதிகமாக உற்சாகப்படுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்க  பாடுபடுகின்ற  எல் லோருக்கும் என்னுடைய வணக்கத்தை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  (பலத்த கை தட்டல் ஆரவாரம்).

இந்தக் கையொலிக்கும் இந்த வாழ்த்து முழக்கத்துக்கும் உண்மையிலேயே  பொருள் இருக்குமே யானால்  நாளை  நடைபெறுகின்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமான  உதயசூரியனுக்கும், அதன் தோழமைக் கட்சிகளுக்கு அவரவர்கள் சின்னங்களிலும்   உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 91.4 சதவீத தேர்ச்சி

$
0
0


மாணவிகள் 94.4 சதவீதம்  |  மாணவர்கள் 87.9 சதவீதம் தேர்ச்சி


சென்னை, மே 17 பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை இன்று  (17.5.2016) வெளியிட்டது. இதில் மாநில அளவில் 1200 மதிப்பெண்களுக்கு 1195 மதிப்பெண்கள் பெற்று ஆர்த்தி என்ற மாணவியும், ஜஷ்வந்த் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளி மாணவி ஆர்த்தியும், அதே பள் ளியைச் சேர்ந்த மாணவன் ஜஷ்வந்த்தும் 1195 மதிப் பெண்கள் பெற்று முத லிடம் பெற்றுள்ளனர். மாணவி ஆர்த்தி பெற்ற மதிப்பெண்கள் விவரம் ; தமிழ் - 199, ஆங்கிலம் 197, கணிதம் , உயிரியல், வேதியல் - 200, இயற்பியல் - 199.

இரண்டாம் இடம்: 1,194 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் சிறீநிகேதன் பள்ளி மாணவி பவித்ரா இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

மூன்றாம் இடம்: 1,193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4 பேர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இதில் நாமக்கல் பள்ளி மாணவி வேணுபிரீத்தா 1,193  மதிப்பெண்கள் பெற்று 3ஆவது இடம் பிடித் துள்ளார்.

தேர்ச்சி விகிதம்: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.9 சதவீதம் பேரும், மாணவிகள் 94.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

கணிதம்: கணித பாடத்தில் மாநிலம் முழுவதும் 3,361 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத் துள்ளனர்.

வேதியியல்: வேதியியல் பாடத்தில் மாநில அளவில் 1,703 பேர் 200 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.

இயற்பியல்: இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு 5 பேர் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற் றுள்ளனர்.

விலங்கியல்: விலங் கியல் பாடத்தில் மாநில அளவில் 10 பேர் 200 மதிப்பெண்கள் பெற்றுள் ளனர்.

உயிரியல்: உயிரியல் பாடத்தில் மாநில அளவில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தாவரவியல்: தாவர வியல் பாடத்தில் 20 பேர் 200க்கு 200 மதிப் பெண்கள் பெற்றுள் ளனர். வணிக கணிதத்தில் 1,072 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள் ளனர்.
கணினி அறிவியல்: கணினி அறிவியல் பாடத் தில் இந்த ஆண்டு 303 பேர் 200க்கு 200 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வணிகம்: வணிகப் பாடத்தில் 3804 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இதர மொழியில் முதல் 3 இடம் பெற்றவர்கள்: தமிழ் அல்லாத மொழியை முதல் பாடமாக கொண்டு படித்தவர்களில் சத்ரிய கவின் 1195 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மாணவி ஸ்ருதி 1,194 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், மாண வர்கள் சம்ரிதா, நவீன், நிவேதிதா ஆகியோர் 1,193 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தேசிய தகவல் மய்யங்கள், மாவட்ட மய்ய மற்றும் கிளை நூலகங்களிலும் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்0த ஏப்ரல் ஒன்றாம் தேதி பிளஸ் 2 தேர்வு நடந்து முடிந்தது.  இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ, மாணவியர் எழுதினர். பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியவர்களில் 3 லட் சத்து 91  ஆயிரத்து 806 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 பேர் மாணவியர். மாணவர்களைவிட 50,085 மாணவியர் கூடுலாக தேர்வு எழுதியுள்ளனர். பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோர் தவிர தனித் தேர்வர்களாக 42,347 பேர் எழுதியுள்ளனர். இவர்கள் தவிர சிறைக் கைதிகள் 97 பேர் இந்த ஆண்டு தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியதற்காக தேர்வுக் கட்டண சலுகை பெற்றுள்ளனர். இந்நிலையில் 19ஆம் தேதி முதல் பள்ளி மாண வர்கள், தனித் தேர்வர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை இணைய தளத்தில் பிறந்த தேதி, தேர்வுப் பதிவெண் ஆகிய விவரங்களை புகுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிரவும் 21ஆம் தேதி முதல் தாங்கள் படித்த பள்ளி, தேர்வு எழுதிய பள்ளி, தேர்வு மய்யம் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் தற்காலிக சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

---------------



பிளஸ் 2 தேர்வில் 96.92 % பேர் தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடம்

மாவட்ட வாரியாக தேர்வு சதவீதம்


1. கன்னியாகுமரி - 95.7; 2. திருநெல்வேலி - 94.76; 3. தூத்துக்குடி - 95.47; 4. ராமநாதபுரம் - 95.04; 5. சிவகங்கை - 95.07; 6. விருதுநகர் - 95.73; 7. தேனி - 95.11; 8. மதுரை -93.19; 9. திண்டுக்கல் - 90.48; 10. ஊட்டி - 91.29; 11. திருப்பூர் - 95.2; 12. கோவை - 94.15; 13. ஈரோடு - 96.92; 14. சேலம் - 90.9; 15. நாமக்கல் - 94.37; 16. கிருஷ்ணகிரி - 85.99; 17. தர்மபுரி -90.42; 18. புதுக்கோட்டை - 93.01; 19. கரூர் - 93.52; 20. அரியலூர் - 90.53; 21. பெரம்பலூர் - 96.73; 22. திருச்சி - 94.65; 23. நாகப்பட்டினம் - 86.8; 24. திருவாரூர் - 84.18; 25. தஞ்சாவூர் - 90.14; 26. பாண்டிச்சேரி - 87.74; 27. விழுப்புரம் - 89.47; 28. கூடலூர் - 84.63; 29. திருவண்ணாமலை - 90.67; 30. வேலூர் - 83.13; 31. காஞ்சிபுரம் - 90.72; 32. திருவள்ளூர் - 87.44; 33. சென்னை - 91.81.

மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வை ஒன்றுபட்டு எதிர்த்து முறியடிப்போம்!

$
0
0

பிளஸ் டூ தேர்வில் மகத்தான வெற்றி பெற்ற இருபால் மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வை
ஒன்றுபட்டு எதிர்த்து முறியடிப்போம்!

அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர்
வெளியிட்டுள்ள சமூகநீதிக்கான அறிக்கை

நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் பெருவாரியான எண்ணிக்கையில் வெற்றி பெற்ற இருபால் மாணவர் களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்,மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வைக் கொண்டு வரும் ஏற்பாட்டை ஒன்று திரண்டு எதிர்த்து முறியடிப்போம் என்று கூறியுள்ளார். இந்த வகையில் அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வருமாறு மத்திய அரசையும் வலியுறுத்தி யுள்ளார். அறிக்கை வருமாறு:

நேற்று (17.5.2016) வெளியான 12 ஆம் வகுப்பு (பிளஸ் டூ) தேர்வு முடிவுகளின்படி 91.4 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்!

இதில் மாணவிகளின் தேர்ச்சி  94.4 விழுக் காடாகும்! இது ஒரு மகிழத்தக்க அம்சம்; ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்ட பத்தாம் பசலித்தன பழைமை வைதீகத்தின் முதுகெலும்பை முறித்து, பெண்களை முன்னேற வைத்த திராவிடர் இயக்கத்தின் மகத்தான சாதனை இது!

“சூத்திரர்களுக்குக் கல்வியைக் கொடுக்காதே!’’ :

‘எதைக் கொடுத்தாலும் சூத்திரர்களுக்குக் கல்வியைக் கொடுக்காதே’ என்ற மனுதர்மத்தை - ஆரியக் கொடுமை யின் தோலை உரித்து தொங்கவிட்ட நிலை இன்று!

வர்ணதர்மப்படி, சூத்திரனுக்கும் கீழே ‘பஞ்சமன்’ (தாழ்த்தப்பட்டவன்) அவனுக்கும் கீழே, தர வரிசையில்  அனைத்து வர்ணப் பெண்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வர்ண ஜாதி முறை  என்பது ஆறு அடுக்கு முறையாகும்! இதைத்தான் Graded inequality  என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறினார்!

திராவிட இயக்கத்தின் சாதனை! :

திராவிட  இயக்கத்தின் கல்விச் சாதனை - இச்சாதனை என்பது மறுக்க முடியாத ஒன்று.

1901 இல் ஒரு சதவிகிதம்கூட, இந்த ஒடுக்கப்பட்டோரில் கல்வி, எழுத்தறிவுள்ளவர்கள் இல்லை என்பது வரலாற்று உண்மையாகும்! அன்று நீதிக்கட்சி, அதன் தொடர்ச்சியான திராவிட ஆட்சிகள் (காமராசர் ஆட்சியும் திராவிடர் ஆட்சிதானே!) கல்விக் கண்ணைத் தந்தன!

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம்! :

கல்வி நீரோடை நாடெல்லாம் பாய்ந்தது! இடையில் ஆச்சாரியாரின் ‘குலக்கல்வித் திட்டம்’ மூலம் கல்விப் பரவலின் கழுத்தை நெரிக்க முயன்றபோது, தந்தை பெரியார்தம் போராட்டத்தால், தடுத்து நிறுத்தப்பட்டது!

பிறகுதான் மளமளவென்று கல்வி வெள்ளப் பெருக்கு நாடெலாம், வீடெலாம் பாய்ந்து  இருபாலரும் கல்வி கற்கும் நிலையை பரவலாக ஏற்படுத்திவிட்டது!

தமிழ்நாட்டில் கிராமங்களில்கூட பள்ளிகள் - அரண் மனைகளைப் போல் அமைந்து இன்று காட்சியளிக் கின்றன!

தி.மு.க. ஆட்சியில் சமச்சீர் கல்வியும் - அ.தி.மு.க.வின் எதிர்ப்பும்! :

கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் காரணமாக, தேர்வில் நம் பிள்ளைகள் தேர்ச்சி பெருகியுள்ளது. (இதை ஒழிக்க உச்சநீதிமன்றம் வரை அ.தி.மு.க. ஆட்சி சென்று, முயன்று தோற்றது; அதன் காழ்ப்புணர்ச்சிக்கு சரியான அடியை உச்சநீதிமன்றம் வழங்கிய பின்னர்தான் - இத்திட்டத்தை ஏற்றது - வேறு வழியின்றி அ.தி.மு.க. ஆட்சி) தொடர்ந்து தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது!

வெற்றி பெற்ற அனைத்து மாணவக் கண்மணிகளுக்கும் நம் இதயபூர்வமான வாழ்த்துகள்!

தேர்வில் தோல்வியா, கவலைப்படாதீர்!

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும், தோல்வி  அடைந்தவர்களும்கூட மனமுடைந்து, தற்கொலை போன்ற கோழைத்தனத்தின் மடியில் விழுந்து விடக்கூடாது என்று அன்புடன் எச்சரிக்கின்றோம்!

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் தேர்வில் தோல்வி அடைந்தாலும், தட்டிக் கொடுத்து, தக்க சமாதானங்களைக் கூறி, அடுத்த முறை  வெற்றியை, எட்டிப் பிடித் தால் போதும் என்று ஆறுதல் மொழிகளைக் கூறுங்கள்!

மதிப்பெண்களே வாழ்க்கையின் வெற்றிக்கு அடை யாளம் அல்ல!

வாழ்வில் தேர்வு அடைய தோல்விகளையும், வெற்றியைப் போல மனத் துணிவுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெறுவதேயாகும்!

நுழைவுத் தேர்வு - உச்சநீதிமன்றத்தின்
தவறான தீர்ப்பு! :

இவ்வாண்டு மருத்துவக் கல்வி பயிலக் கனவு கண்ட, காணும் மாணவ மணிகள் உச்சநீதிமன்றத்தின் நுழைவுத் தேர்வைத் திணிக்கும் தவறான தீர்ப்பின் கொடுமையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்!

அவசர சட்டம் தேவை! :

நாம் முன்பே பலமுறை எழுதியும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் மத்திய - மாநில அரசுகளுக்குச் சுட்டிக் காட் டியபடி, மத்திய அரசு ஓர் அவசரச் சட்டத்தை (Ordinance) உடனடியாகக் கொண்டு வந்து, மருத்துவப்  படிப்பு படிக்க விழையும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியையும், வேதனையையும் போக்கவேண்டும்!

பொதுத் தேர்தலுக்காக நாம் அமைதியாக இருந் தோம்; இனி அதை வலியுறுத்தி நாடு தழுவிய அறப்போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்!

தேர்தல் அரசியல் முடிந்துவிட்டது; ஒத்த கருத்துள்ள வர்கள் இனி ஓரணியில் திரண்டு ஒரே குரல் கொடுத்து, ஒரே மூச்சில் நுழைவுத் தேர்வை விரட்டவேண்டும்! அதற்கான முயற்சியையும் மேற்கொள்வோம்!

மாநில உரிமைப் பறிப்பு கல்வியில் ஏற்படக்கூடும் என்று  பொதுப் பட்டியலில் கல்வி சென்றபோதே நாம் எச்சரித்தோம்! அதற்கு எடுத்துக்காட்டு இப்போதைய உச்சநீதிமன்றத்தின் தவறான தீர்ப்பு;  மாநிலங்களின் உரிமைகளை நசுக்குவது என்பது அரசியல் சட்டத்தையே கேலிக் கூத்தாக்கும் - வேலியே பயிரை மேயும் கொடுமையாகும்!

நுழைவுத் தேர்வை ஒன்றுபட்டு எதிர்ப்போம்!

எனவே, ஓரணியில் திரளுவோம்!
ஒன்றுபட்டு நிற்போம்!!

மருத்துவக் கல்வி ஓடையில் மீண்டும் “முதலைகள்” நுழையாது தடுத்து கிராமப்புற மாணவர்களை கொன்று தின்று விடும் அபாயத்திலிருந்து காப்போம், வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி  
தலைவர்,    திராவிடர் கழகம்.


சென்னை
18.5.2016

Viewing all 1437 articles
Browse latest View live