இன்றோ ரபேல் ஆவணம் காணாமல் போனதாம்!
* உச்சநீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்!
* வழக்கைத் திசை திருப்ப சதியா?
புதுடில்லி, மார்ச் 7 ரபேல் வழக்குக்குத் தொடர்பான முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டு விட்டதாக உச்சநீதி மன்றத்தில் அரசு தரப்பு வழக்குரைஞர் கூறியது & நாட் டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகளும் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பித் திணற அடித்தனர்.
ரபேல் போர் விமானங்களை வாங்குவதே மக்களின் பாதுகாப்புக்குதான். அதில், உண்மைகளை மூடி மறைக் கலாமா? திருடப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்த தாக கூறி, போபர்ஸ் வழக்கையும் ரத்து செய்து விட லாமா? என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி யாக கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படு கின்றன. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்த நடைமுறை அனைத்தை யும் ஆராய்ந்து பார்த்ததில் அவை அனைத்தும் சரியான ஒன்றாகதான் இருக்கிறது என தீர்ப்பு வழங்கியதோடு, அது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும்படி இந்த வழக்குகளை தொடர்ந்த பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணும், பாஜ முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில், ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப் பந்தத்தை அரசின் கொள்கை முடிவாக ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முற்றிலும் தவறான தகவலை அளித்துள்ளது. அதேபோல், இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பும் சரி கிடையாது. அதனால், நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண் டும் என கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் பிரசாந்த் பூஷண் செய்த வாதத்தில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பொய் தகவல்களை கொடுத்து நீதிமன்றத்தையே மத்திய அரசு தவறாக வழி நடத்தி விட்டது. இந்த வழக்கில் உண்மை நிலவரத்தை நீதி மன்றம் கருத்தில் கொள்ளவில்லை. அப்படி செய்திருந் தால் வழக்கின் தீர்ப்பே மாறி இருக்கும் என்றார். மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், இந்த வழக்கில் மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள், பாது காப்பு அமைச்சகத்தில் இருந்து திருடி சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், சமீபத்தில் பாகிஸ்தானின் எப்.16 விமானம் இந்தியாவின் மீது மேற்கொண்ட நடவடிக் கைகள் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது என்பதை பார்த்தோம். இதில், அண்டை நாட்டிடம் சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இருக்கும்போது நாமும் ஏன் அவ்வாறு வாங்கக் கூடாது? அதனால், ராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சியை சிபிஅய் விசாரணை என்ற பெயரில் தாமதம் செய்வது வருத்தம் அளிக்கிறது. மேலும், ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருக் கிறது என்று வைத்துக் கொண்டாலும் கூட, திருடி சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை கணக்கில் கொண்டு நீதிமன்றம் விசாரணையை தொடரக் கூடாது. ரபேல் போர் விமான ஒப்பந்தம் என்பது அரசின் ரகசியம் என்பதால் அதன் விவரங்களை வெளிப்படையாக வெளியிட முடியாது. அதனால், இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
நீதிபதிகள் கண்டிப்பு
பின்னர், நீதிபதிகள் உத்தரவில், நாட்டின் சட்டம் ஒரு ஊழல் நடைமுறையால் உடைந்து விட்டால், நீங்கள் தேசிய பாதுகாப்பின் கீழ் இருக்க முடியுமா? திருடப்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், ஆதாரங்கள் வழக்குடன் சம்பந்தப்பட்டு இருந்தால் நீதிமன்றம் அவற்றை கருத்தில் கொண்டு கண்டிப்பாக பரிசீலிக்கும். ரபேல் போர் விமானம் மக் களுக்காகத்தான் வாங்கப்படுகின்றன. அதனால், அவர் களுக்கு தெரியும்படி ஏன் அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக தரக் கூடாது?. அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்ட ஆவணங்களை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? போபர்ஸ் முறைகேடு தொடர்பான ஆவணங்களும் இவ்வாறுதான் திருடி தாக்கல் செய்யப்பட்டது என்றால், அந்த வழக் கையும் முடித்து விடலாமா? என மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர். பின்னர், வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அன்று காந்தியார் கொலை வழக்கு கோப்பு காணா மல் போனது என்று அப்பொழுது சொல்லப்பட வில்லையா? அதேபோல்தான் இதுவும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.