தலித்துகளுக்கு எதிரான குஜராத் தத்தளிக்கிறது!
பொங்கி எழுந்தது காண்
தாழ்த்தப்பட்டோர் மக்கள் வெள்ளம்!
கன்னையாகுமார்,ரோகித் வெமுலா அன்னையார் பங்கேற்பு
அகமதாபாத், ஆக.16 செத்துப் போன பசுவின் தோலை உரித்த தாழ்த்தப்பட்ட தோழர்கள்மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட பி.ஜே.பி. அரசு சங்பரிவார்க் கும்பலை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் பெரு வெள்ளமாய்த் திரண்டு பேரணி நடத்தி குஜராத்தையே திக்கு முக்காடச் செய்தனர்.
குஜராத் மாநிலம் உனா நகரில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி தலித் இளைஞர்கள் 4 பேரை பசு பாதுகாவலர்கள் எனப்படும் கும்பல் அடித்து கொடுமைப் படுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து குஜராத் முழுவதும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அகமதா பாத்திலிருந்து உனா நகரம் நோக்கி பேரணி ஒன்று நடைபெற்றது. இந்தப் பேரணி நேற்று உனா நகரைச் சென்ற டைந்தது. உனா நகரில் அம்பேத்கார் சதுக்கம் முன்பு தேசியக் கொடி ஏற்றி பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது, இந்த பொதுக்கூட்டத்திற்கு பத்திரிகை யாளர் ஜிக்னேஷ் மெவானி தலைமை ஏற்றார்.
அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட ரோகித் வேமுலாவின் தாயார் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பொதுக்கூட்டத்தை துவக் கினார்.
கூட்டத்தில் ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் பேசியதாவது:
குஜராத் மாடலா - எங்கே இருக்கிறது?
நான் இங்கு வந்த பிறகு குஜராத் மாதிரி என்ற பெயரில் நாட்டு மக்களை எப்படி முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மனு தர்ம சித் தாத்தங்கள் ஜனநாயக குரல்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. குஜராத் மாநிலத்திற்கு முதல் முறையாக வருகிறேன். குஜராத் மாநிலத்தில் உனா யாத்திரையில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். பத்திரிக்கை சந்திப்பு நடத்த அனுமதிக்காமல் இருப்பது ஜனநாயகத் தின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர் ஜிக்னேஷ் மெவானி (35) பேசும் போது
இறந்த விலங்குகளின் தோலை உரித்ததற்காக இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஆனால் மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் பெய ருக்கு சிலரைக் கைதுசெய்துவிட்டு அமைதியாக இருக்கிறது.
தலித் விவசாய நிலங்கள் எங்கே எங்கே?
தலித்துகளில் வாழ்க்கை மேம்பாட் டிற்காக விவசாய நிலங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்த நிலங்களை எல்லாம் மோடி முதல்வராக இருந்த போது தனியாருக்குத் தாரைவார்த்து விட்டார், தலித்துகள் பாதிக்கப்பட்டால் அவருக்கு கவலையில்லை. இனி தலித்துகள் மாட்டுத் தோலை உரிப்பதையும் துப்புரவுத் தொழிலையும் நிறுத்திக் கொள்வார்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முன்பு ஒதுக்கிய நிலங்களை மீட்டு மீண்டும் அவர்களுக்கு வழங்கவேண்டும்.
இந்தியா முழுமையும் போராட்டம் வெடிக்கும்!
அடுத்த ஒரு மாதத்தில் இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வில்லை எனில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் குஜராத் அரசு இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால் மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும், இந்தப் போராட்டம் விரைவில் இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லப்படும் என்று கூறினார்.
தலித் அஸ்மிதா யாத்ரா என்ற பெயரில் கடந்த ஜூலை 31ஆ-ம் தேதி அகமதாபாத்தில் பேரணி ஒன்று துவங் கியது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களும், தலித்துகள் தாக்கப்படு வதை எதிர்த்து இந்த யாத்திரை தொடங்கப்பட்டது.
பேராட்டத்திலும் பொதுக்கூட்டத்தி லும் பங்கேற்றவர்கள், "நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நடந்தது எல் லாம் போதும். அநீதிக்கு எதிராக நாங்கள் குரல் எழுப்புவோம். வன் முறையை பாகுபாட்டை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று ஒருமித்த குரலில் கூறினர்.
யாத்திரையில் ஈடுபட்ட தலித்துகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது. சில இடங்களில் கல் வீச்சு சம்பவத்துக்கு உள்ளாக நேர்ந்தது. கடுமையான விமர்சனங்களையும், சில தாக்குதல்களையும் கடந்து உனாவில் பேரணி நிறைவுற்றிருக்கிறது.
பேரணி நிறைவு பெற்றாலும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான பொங்கி எழுந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வு நீறு பூத்த நெருப்பாகவே இருக்கின்றது.