Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

வாழும் கலை சிறீசிறீ ரவிசங்கரின் அட்டூழியம்!

$
0
0

யமுனை நதிக்கரையில் நடத்தப்பட்ட விழாவால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு
பிரதமரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்து அதிர்ச்சி தகவல்கள்

புதுடில்லி, ஆக.20 -கார்ப்பரேட் சாமியார் சிறீசிறீ ரவி சங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பாகஉலக கலாச் சார விழா கடந்த மார்ச் 11 முதல் 13 வரை தில்லியிலுள்ள யமுனைநதிக்கரையில் நடத்தப்பட்டது. இந்த கலாச்சாரவிழாவிற்கான ஏற்பாடுகளுக்காக பல் லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் உட்பட யமுனை நதி படுகை கையகப்படுத்தப்பட்டது. காடு கள் அழிக்கப்பட்டு நிலம் சமப்படுத்தப்பட்டன. யமுனை நதியின் குறுக்கே தற்காலிக இரும்புப் பாலங்கள் அமைக்கப்பட்டன. யமுனை நீர்பரப்பு பகுதிகளும், விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டன. இதற்கு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. யமுனை கரையில் இப்படிப்பட்ட விழாவை நடத்துவது விதி மீறல்தான் என பசுமை தீர்ப்பாயம் முதற்கட்டமாக 5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. ஆனாலும், நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தது. அபராதத் தொகை எதுவும் செலுத்த முடியாது என்றும் இந்த நிகழ்ச்சி உலக கலாச்சார ஒலிம்பிக் போன்றது. நூற்றுக்கணக்கான நாடுகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரு கின்றார்கள். பிரதமர் நரேந்திர மோடிதான் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்.

நாங்கள் ஒரு மரத்தை கூட வெட்டவில்லை. கொஞ்சம் கிளைகளை மட்டுமே நறுக்க செய்திருக்கின்றோம் என்றார். சிறீசிறீ ரவிசங்கர். நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக பல்வேறு கேள்விகளை அவர்கள் முன் வைத்தனர்.உலக கலாச்சார விழாவிற்கான கட்டுமானப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது எப்படி என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இது நாடாளுமன்றத்திலும் பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த நிகழ்ச்சியை நடத்து வதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எப்படி அனுமதியளித்தது? டில்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த விழாவை நடத்த அனுமதியளிக்கவில்லை என்றுதெரிவித்திருந்தது. ஆனால் டில்லி பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி யளித்திருந்தது என வாழும் கலை அமைப்பு கூறியது.

பிரதமரே பங்கேற்பு!

இந்நிலையில் திட்டமிட்டபடி விழா நடத்தப் பட்டது. பிரதமர் மோடியும் பங்கேற்றார். லட்சக்கணக் கான மக்கள் கூடிய அந்த பகுதி முழுவதும் நாசப் படுத்தப்பட்டன. விழா முடிந்ததற்கு பின்னால் பல் லாயிரக்கணக்கான டன்கள் குப்பை கழிவுகளும், சிறுநீர் கழிவுகளாலும் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்பட்டது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.இதில் யமுனை நதியின் நீர்பரப்பு பகுதி முழுவதும் நாசப்படுத்தப்பட்டு, நீர்பரப்பில் இருந்த அரிய வகையிலான தாவரங்கள், பூஞ்சைகள் அழிக்கப்பட்டுவிட்டன. பல்லுயிரினங்கள் அழிக்கப்பட்டு இயற்கை சமநிலை சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பெரும் சர்ச்சை எழுந்ததற்கு பின்னால் அபராத தொகை ரூ.5 கோடி முழுமையாக செலுத்தப்பட்டது. இந்நிலையில் பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், கேடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்திட மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சசிசேஷ்கர் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிபுணர்குழு நேரடியாக ஆய்வினை மேற்கொண்டு ஆதாரங்களை திரட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 15 அன்றும் ஜூன் 6 அன்றும் நேரடியான கள ஆய்வினை நடத்தியது. யமுனைநதிக்கரையில் விழா நடந்த அந்த பகுதியில் முன்னர் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை ஒப்பீடு செய்யப்பட்டு அறிவியல்பூர்வமான ஆய்வுநடத்தப்பட்டது. ஆய் வறிக்கை கூறியிருப்பதாவது: யமுனை நதி கரையில் உள்ளதாவரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. நீர்பரப்பில் இருந்த பல்வேறுஅரிய பல்லுயிரினங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

நீர்ப்பரப்பு முழுமையும் குப்பைக் கூளங்கள்!


நீர்பரப்பு முழுவதும் குப்பை கிடங்குகளால், கழிவு நீரால் நாசப்படுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் பெருமளவில் சீர்கெட்டுவிட்டது. விவசாய விளை

நிலங்கள்அழிக்கப்பட்டுவிட்டன.ஏராளமானநுண்உயிரினங்களும்அழிக்கப்பட்டுள்ளன.இந்தசுற்றுச் சூழல்சமநிலைஏற்படபலஆண்டுகாலம்ஆகலாம் எனவும் நிபுணர்குழு கூறியுள்ளது. இயற்கையாகவே பல்லுயிரினங்களுக்கான வாழ்விடம் தரைமட்டமாக்கப் பட்டுவிட்டன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக மரங்கள், புதர்கள், நாணல்கள், உயரமான அரியவகை புற்கள்,நீர்வாழ் உயிரினங்கள் ஒரு வகை பூங்கோரை நுண்ணிய பாசிகள், தாவரங்கள், மண்வளம் என அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. பல்லுயிரினங்களின் வாழ்விடமாக இருந்த இந்த பகுதியில் விலங்குகள், பறவைகள், மீன்கள், தவளைகள், ஆமைகள், பூச்சிகள், மெல்லுடலிகள், மண்புழுக்கள் போன்றவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுவிட்டதால் பல்லுயிர் பெருக்கம் என்பது நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வு அறிக்கை ஆதாரங்களோடு இயற்கை சமநிலை அழிக்கப்பட்டுள்ளதை பட்டியலிட்டுள்ளன.

47 பக்கங்களை கொண்ட அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குழு 120 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என மதிப்பிட்டுள்ளது. இவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் கேட்டினை ஏற்படுத்தியதற்கு பல நூற்றுக்கணக்கான கோடி அபராதம் விதிக்க வேண்டி வரும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles