Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

அரியானா சட்டமன்றத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் நிர்வாண சாமியார்! சாமியார் காலை கும்பிட்ட முதலமைச்சர்

$
0
0

பா.ஜ.க. ஆட்சி எங்கே போகிறது?

அரியானா சட்டமன்றத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் நிர்வாண சாமியார்!

‘‘பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் பெண்களே!

ஆணுக்குப் பணிவிடை செய்வதுதான் பெண்களின் கடமை!’’

சாமியாரின் இதோபதேசம் - சாமியார் காலை கும்பிட்ட முதலமைச்சர்

சண்டிகர் ஆக.-28  அரியானா மாநிலத் தின் மழைக்கால கூட்டத் தொடர் துவக்கத்தின் போது சிறப்பு விருந் தினராக வரவழைக்கப்பட்ட நிர்வாண சாமியார் தருண் சாகர் சட்டமன்றத்தில் பேசும் போது பெண் களுக்கு அதிக சுதந்திரம் மற்றும் ஆணுக்கு இணையாக பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளால் தான் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றது என்று கூறினார்.   

அரியானா மாநில பாஜக அரசின் முதல்வராக உள்ள மனோகர்லால் கட்டார் தலைமையில் அரியானா சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) துவங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் அரசியலைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நிர்வாண சாமியார் ஒருவரை சிறப்பு விருந்தினராகஅழைத்திருந்தனர்.

சட்ட மன்றத்தில் முதல்வர் மற்றும் ஆளு நருக்கும் மேலே வெள்ளிச் சிம்மாசனம் அமைக்கப்பட்டிருந்தது. காலை கூட்டத் தொடர் துவங்கியதும், அரியானா கல்வி அமைச்சர் ராம்பிலாஷ் சர்மா, முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக மூத்த உறுப்பினர்கள் சூழ நிர்வாண சாமியார் தருண்சாகரை அழைத்து வந்து சட்டமன்றத்தில் உயர்ந்த இருக்கையான வெள்ளிச் சிம்மாசனத்தில் அமர வைத் தனர்.  

சட்டமன்ற கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் ஆளுநர் உரைக்கு முன்பாக விதிமுறைகளை மீறி நிர்வாண சாமியார் தருண் சாகர் பேசத் துவங்கினார்.

அப்போது முதலில் நிர்வாண  சாமியாரின் காலைத் தொட்டு முதல்வர் மனோகர்லால் வணங்கினார். அதன் பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அவரை வணங்கினர். அதன் பிறகு தருண் சாகர் பேச ஆரம்பித்தார். அவர் பேசத் துவங்கும் போது, என்னுடைய பேச்சு ‘கடுவே வசன்’ என்று கூறினார். இதற்கு தமிழில் கசப்பான உண்மை என்று பொருள் ஆகும்.  அவர் பேசும் போது அரசியலில் மதம் அங்குசம் கட்டாயம் தேவைப்படுகிறது, மதம் பிடித்த யானையை அடக்க அங்குசம் மிகவும் அவசியமானது என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மதம் கணவன் என்றால், அரசியல் மனைவி ஆகும். மனைவியின் பணி, தன்னுடைய கணவனுக்குப் பணிவிடை செய்வதே ஆகும். மனைவியின் கடமை என்பது, கணவனின் தேவை அறிந்து அவனது கட்டளைகளைஏற்றுக்கொள்வதே ஆகும். ஆகவே, அரசியலில் மதம் என்பதுமிகவும்தேவையானது ஆகும்.மதத்தை எடுத்துவிட்டு அங்கு அரசியலை வைப்பது, திரியை எடுத்துவிட்டு விளக்கில் எண்ணெய் ஊற்றுவது போலாகும். மதம் என்னும் ஒளியின் மூலம் தான் அரசியல் நடை பெறவேண்டும். ஆனால், தற்போது மதத்துடன் அரசியல் கலப்பதை ஒரு சிலர் அறிவிலித்தனமாக எதிர்க்கின்றனர்.

பெண்களால் சமூக அமைதி குலைகிறது

பெண்கள்தங்களுக்கானகடமை என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதும், பெண்கள் நன்கு படித்து முன்னேறும் போதும், ஆண்களுக்கு சமமான உரிமைகள் பெறும் போதும் நன்கு கவனித்தால் பாலியல் வன் கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கத் துவங்குகின்றன. பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அது அரசுக்கு பெருத்த தலைவலியை உண்டாக்குகிறது. அப்போது சமூகத்தில் அமைதி குலைந்து சமூகத்தில் குழப்பம் அதிகரிக்கிறது.

நான் அரசியல் மட்டத்தில் ஒரு கருத்தைக் கூறுகிறேன்,  எந்த வீட்டில் பெண் குழந்தை இல்லையோ அவர் களை சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவதை தடை செய்யவேண்டும். சமூக மட்டத்தில் எந்த வீட்டில் பெண் குழந்தை இல்லையோ, அந்த வீட்டில் உள்ள திருமண உறவு வைக்ககூடாது. மத ரீதியாக எந்த வீட்டில் பெண் குழந் தைகள் இல்லையோ அந்த வீட்டில் சாதுக்கள் தண்ணீர்கூட அருந்தக் கூடாது.    இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், ஒரு வீட்டில் ஆண் குழந்தைகள் இருப்பார்கள் என்றால், அங்கு பெண் குழந்தைகள் இருக்கவேண்டும். அப் போதுதான் பெண்களுக்கு ஆண்களை மதிக்கும் குணம் இருக்கும்.

ஆண்,பெண்இருவருக்கும் பெரியவேறுபாடுகள்உள்ளன;கட்டுப் பாடு கள் உள்ளன. ஆனால், இன்று என்ன நடக்கிறது? இது 21-ஆம் நூற் றாண்டுபோல் தெரியவில்லை, கற்காலம் போல் தெரிகிறது.

பாகிஸ்தானில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பகாசுரன்

பாகிஸ்தான் நமது எதிரி நாடு; நமக்கு நன்றாக தெரியும், அந்த நாடு தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது, பாகிஸ்தானில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பகாசுரன் உருவாகிறான். நமது நாட்டை சீரழிக்கவே அவர்கள் உரு வாகிறார்கள். ஒருமுறை தவறு செய்தால் அது அகியான் (தெரியாமல் செய்தவர்); இருமுறை தவறு செய்தால் அது  நாதான் (அறிவிலி); மூன்று முறை தவறு செய்தால் அது சைத்தான். பலமுறை தவறு செய்தால், அது பாகிஸ்தான் என்று அடுக்கு மொழியில் கூறினார்.

இவரது இந்தப் பேச்சிற்கு பிறகு அவையில் நீண்ட நேரம் கரவொலி எழுப்பப்பட்டது.ரிஷிகேசில்உள்ள கங்கையைதூய்மைசெய்தால் அதன் பிறகு அரித்துவார் வரும் கங்கை தூய்மையாக இருக்கும். அதுபோல்தான்அரசியலிலும்தலைமை தூய்மையாக இருந்தால், அதன்கீழ் உள்ளவர்கள் தூயவர்களாக இருப் பார்கள், மத்தியில் நரேந்திர மோடி தூய்மையானவர்அவருடைய நண்பராக மனோகர் லால் கட்டார் தூய்மையானவர். மதமே அரசியலைத் தூய்மைப்படுத்தும் மதமன்றி அரசி யல் இல்லை; மதமில்லாமல் அரசிய லைப் பேசுபவர்கள் சமூகத்தில் அமை தியை விரும்பாதவர்களே என்று சட்ட மன்றத்தில் பேசினார்.

நிர்வாண சாமியார்:
கெஜ்ரிவாலின் பரிதாப நிலை

அரியானாசட்டமன்றத்தில்நிர் வாண சாமியார் தருண் சாகர் பேசி யது குறித்து ஆம் ஆத்மி கட்சி தலை வர்களில் ஒருவரான விஷால் தத்லானி அரசியலில் மதம் என்பது கூடாது, நிர்வாண சாமியாரை அரியானா மாநில அரசு சட்டமன்றத்தில் சிறப்பு இருக்கை அமைத்து அமரவைத்து உரையாற்றக்கூறியது இந்திய அரசியல மைப்பிற்கு எதிரானது என்றும் இந் திய மதச்சார்பின்மைக்கு பங்கம் விளை விக்கும் செயல் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.    

விஷால் தத்லானி நிர்வாண சாமியாரை அவமானப்படுத்தி விட்டார் என்று கூறி ஜெயின் மதத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஜெயின் மதத்தவரின் எதிர்ப்பு குறித்து விஷால் தத்லானியிடம் ஆம் ஆத்மி கட்சி தலை வரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் கேட்டி ருந்தார்.  ஆம் ஆத்மி தலைமை விளக்கம் கேட்டுள்ள நிலையில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகப் போவதாக விஷால் தத்லானி அறிவித்துள்ளார்.  


அரசியலிலிருந்து விலகல்


இது குறித்து அவர் சமூக வலைதளம் ஒன்றில் எழுதியுள்ளதாவது:

அரசியலில் மதம் நுழையக்கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். என்னுடைய கருத்தைக் கூறியதால் சிலருக்கு மனச்சங்கடம் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் என்னுடைய கருத்தில் இருந்து நான் பின்வாங்கமாட்டேன். என்னுடைய இந்த கருத்தால் அரசியல் சிக்கல்ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற் காகநான்அரசியலில்இருந்துவிலகு கிறேன்.இனிமேல்எந்தஅரசியல் செயற்பாட்டிலும் நான் ஈடுபடமாட் டேன் என்று எழுதியுள்ளார்.   

அரவிந்த் கெஜ்ரிவாலின் பரிதாபம்

நிர்வாண சாமியார் மீதான தனது கட்சித்தலைவர்களின் ஒருவரின் கருத்து குறித்து நேற்று இரவு டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

நான் ஜெயின் சமூதாயத்தினர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், விஷால்தத்லானியின்கருத்தைஅவரது தனிப்பட்டகருத்துஎன்றுகூறிஎனது கடமையில் இருந்து விலகி விடமாட் டேன். நான் ஜெயின் சமூக மக்களிடம் மனப்பூர்வமான மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.



ஆம் ஆத்மி கெஜ்ரிவால் மன்னிப்புக் கேட்பது ஏன்?

அரியானா சட்டப்பேரவையில் நிர்வாண சாமியாரை அழைத்தது குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் பிரமுகர் விஷால் தத்லானி, இது மதச் சார்பின்மைக்கு அழகல்ல என்று கண்டித்துக் கருத்துத் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முதலமைச்சருமான கெஜ்ரிவால், அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சியை விட்டும் நீக்கியுள்ளார். அவர் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்?

இதற்குக் காரணம் இருக்கிறது - ஆம் ஆத்மி கட்சி
வெளியிட்ட சுவரொட்டி ஒன்றில்,
சீக்கிய குருவின் படத்துக்குப் பக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னமான துடைப்பத்தையும் போட்டிருந் ததால், பெரும் சர்ச்சை ஏற்பட்டு, மன்னிப்புக் கோரியவர்தான் இந்த கெஜ்ரிவால்!

சூடுபட்ட பூனையல்லவா, அதனால்தான் இப்படி!


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles