நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை
என்.எல்.சி. இண்டியா என்று மாற்றுவதா?
இந்திய அரசே தமிழர்களின் உணர்வினைக் கொச்சைப்படுத்தாதே - தார் சட்டி தயார்!
நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கொந்தளிக்கும் ஆர்ப்பாட்டம்!
நெய்வேலி, ஆக. 22- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற பெயரை என்.எல்.சி இண்டியா லிமிடெட் என பெயர் மாற்றம் செய்ததைக் கண்டித்தும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என மீட்டுருவாக்கம் செய்ய வலியுறுத்தியும் இன்று (22.8.2016) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைக்கிணங்க நெய்வேலி தந்தை பெரியார் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற பெயரை என்.எல்.சி. இண்டியா லிமிடெட் என்று மாற்றி தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்.எல்.சி நிர்வாகத்தின் போக்கைக் கண்டித்தும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற பெயரையே மீண்டும் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசினார்.
தோழர்கள் பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்தில் தொமுச முன்னாள் தலைவர் திருமாவளவன், தஞ்சை மண்டல தலைவர் வெ.ஜெய ராமன், புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி, மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், கடலூர் மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், கடலூர் மண்டல செயலாளர் சொ.தண்டபாணி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், அரியலூர் மண்டல தலைவர் சி.காமராசு, விழுப்புரம் மண்டல தலைவர் க.மு.தாஸ், அரியலூர் மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், புதுவை மண்டல தலைவர்
இரா.இராசு, விழுப்புரம் மண்டல செயலாளர் மு.கண்ணன், புதுவை மண்டல செயலாளர் கி.அறிவழகன், விருத்தாசலம் மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், கடலூர் மாவட்ட செயலாளர் நா.தாமோதரன், சிதம்பரம் மாவட்ட தலைவர் பூ.சி.இளங்கோவன்,விருத்தாசலம் மாவட்ட செயலாளர் முத்து.கதிரவன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப் ராயன், சிதம்பரம் மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், திண்டிவனம் மாவட்ட தலைவர் மு.கந்தசாமி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் இரா.கோபண்ணா, கல்லக்குறிச்சி மாவட்ட தலைவர் ம.சுப்புராயன், திண்டிவனம் மாவட்ட செயலாளர் நவா.ஏழுமலை, அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், அரியலூர் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், மகளிரணி பொறுப்பாளர்கள் ரமா பிரபாஜோசப், தமிழ்செல்வி, கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், சிதம்பரம் மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், மாநில ப.க துணைத் தலைவர் மு.நா.நடராசன் உள்பட முன்னூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
தி.மு.க. திராவிட இயக்கத் தமிழர் பேரவை மற்றும் பல்வேறு கலை, இலக்கிய அமைப்பினர், பொதுக்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
தார் சட்டி தயார்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைந்துள்ள இடம் தமிழர்களின் மண். தமிழர்களின் ஊர்ப் பெயரை மாற்றத் துடிப்பதை எதிர்த்து முறியடிப்போம். பெரியாரால், அண்ணாவால், காமராஜரால் ஏற்பட்ட மொழி உணர்ச்சி, இன உணர்ச்சி எங்களிடத்தில் இருக்கிறது.
எங்கள் மண்ணை பறித்தாய், எங்கள் நீரை பறித்திருக்கிறாய். எங்கள் மக்களை ஒப்பந்த கூலிகளாய் மாற்றி இருக்கிறார், விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. மக்கள் நோயாளிகளாய் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
மக்கள் வசிக்கும் இடத்தில் சோலார் பவர் பிளாண்ட் அமைக்கக்கூடாது என்ற நிலை இருக்கக்கூடிய சூழலில், பல்லாயிரக்கணக்கான மரங்களை அழித்து மக்களை நோயாளி ஆக்கியிருக்கிறது என்.எல்.சி. நிர்வாகம்.
இத்தனைக் கொடுமைகளை செய்துவரும் நிர்வாகம், இன்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற பெயரை, என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என மாற்றுவது வடவர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இதை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான் முதலில் பெரியார் கண்ணாடி கொண்டு பார்த்து, போராட்டத்தை அறிவித்திருக்கிறார். என்.எல்.சி. நிர்வாகம் பெயரை மீண்டும் மாற்றாவிட்டால், தமிழர் தலைவரின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். தார் சட்டி ஏந்த என்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார்.