கார்ப்பரேட்டுகளால் உருவாக்கப்பட்ட மோடி பிம்பம் கரைகிறது
புதுடில்லி, செப்.2 மோடியை மய்யமாக வைத்து அவிழ்த்து விடப்படும் புளுகுகளுக்கு அளவே யில்லை. அதில் இன்னொரு அண்டப் புளுகு இங்கே தரப்படுகிறது.
கடந்த சில நாள்களாக ஆங்கில மற்றும் இந்தி தொலைக்காட்சிகளில் மோடி பற்றிய ஒரு செய்தி பரபரப்பாக சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அது “பிரதமர் அலுவலக அதிகாரி இரவு 10 மணிக்கு திரிபுரா மாவட்ட ஆட்சியாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு மோடி உங்களிடம் பேச அழைக்கிறார் என்று கூறினாராம் சில வினாடிகளில் மோடியின் குரல் அடுத்த பக்கத்தில் கேட்டதாம். இரவு பத்து மணிக்கு மேல் அழைத்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட மோடி, வேறு வழியில்லாததால் அழைக்க நேர்ந்தது என குறிப்பிட்டாராம். பழுதான தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீர்படுத்த வேண்டும் எனவும், இது தொடர்பாக அசாம் மற்றும் திரிபுரா மாநில அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக வும் தெரிவித்துள்ளார்.
மறுநாள் காலை மாவட்ட ஆட்சியருக்கு 15 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையை செப்பனிட அசாம் மாநில அரசும் இந்திய அரசும் நிதி ஒதுக்கியுள்ள விவரம் தெரிய வந்தது. அவர் உடனடியாக நேரில் சென்ற போது ஆறு ஜே.சி.பி இயந்திரங்கள் தயாராக நின்று கொண்டிருந்தன. அடுத்த நான்கு நாட்களில் சுமார் 300 லாரிகளில் கட்டுமானப் பொருள்கள் வந்து குவிந்தன. சில நாட்களில் சேதமடைந்த சாலை செப்பனிடப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் திரிபுராவிற்கு தங்குதடையின்றி வரத் துவங்கின.’’
மேலேகூறப்பட்ட இந்த பச்சைக் கட்டுக்கதையை, செய்தி வலைத்தளமான கோரா (ஹீuஷீக்ஷீணீ.நீஷீனீ) கடந்த சில நாள்களில் பரப்பியுள்ளது. சுமார் 2.5 லட்சம் பேரால் வாசிக்கப்பட்டு, 12,500 பேர்களால் விரும்பப்பட்ட இந்தக் கதை நடந்ததாக சொல்லப்படும் இடம் திரிபுரா மாநிலம்.
வலைத்தளத்தில் வெளியானது!
பெங்களூருவில் உள்ள சிக்கிம் மணிப்பால் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புஷ்பக் சக்ரபர்த்தி என்பவர் தன்னை பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் அடையாளப்படுத்திக் கொள்பவர். சமீபத்தில் இவரது தந்தையின் நண்பரான திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு நேர்ந்த அனு பவம் என்பதாக மேற்கண்ட கதையை அந்த வலைதளத்திற்கு இப்படி பகிர்ந்துள்ளார்.
உண்மையில் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் தரமிழந்து பருவ மழைக்காலங்களில் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதியோடு துண்டித்துவிடும். சாலையை சீர்படுத்து என்று போராடுவதே வடகிழக்கு மாநிலமக்களின் வாழ்க் கையாகிவிட்டது.
கடந்த சில நாள்களாக பெய்த பருவமழையைத் தொடர்ந்து திரிபுராவின் மிக முக்கியமான நெடுஞ்சாலை எண்- 8 முற்றாக சேதமடைந்தது. இதன் காரணமாக தொடர்ந்து சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொருள்களின் வரத்து குறைய வும், மாநிலம் முழுவதும் அத்தியாவசிய பொருட் களுக்கும், வாகன எரிபொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு எழுந்தது. பொருட்கள் தட்டுப்பாட்டை அடுத்து விலைவாசிகளும் அதிகரித்துள்ளன. இதைத் தொடர்ந்து கொந்தளித்துப் போன மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இறுதியில் ஜூலை மாத இறுதியில் தற்காலிகமாக சுமார் 20 கிலோ மீட்டர் நீள பாதை ஒன்றை அமைத்து அதன் வழி யாக எரிபொருட்களையும் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இன்றைய தினம் வரை திரிபுராவின் முக்கிய நெடுஞ்சாலை பழுதுபட்டு முடங்கியுள்ளதோடு, தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையின் வழியாக அத்தியாவசியப் பொருட்கள் மாத்திரமே எடுத்துச் செல்லப்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த நிலையிலேயே தொடர்கின்றன.
புறக்கணிக்கப்படும் திரிபுரா
திரிபுராவின் மேல் மத்திய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள திட்டமிட்ட புறக்கணிப்பையும், சித்திரவதைகளையும் பிரபல ஊடகங்கள் கண்டு கொள்ளாத நிலையில், உண்மை நிலையை விளக்க டில்லியில் பேரணி நடத்தப் போவதாக திரிபுரா மக்கள் அமைப்பு அறிவித்த நிலையில், இந்த மோடி ஆட்சியாளருடன் பேசினார் என்ற ஒரு பொய்ச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மோடி என்கிற மாயப் பிம்பம் போலியாக கார்ப்பரேட்டுகளால் உருவாக்கப்பட்டதாகும், இது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால், மோடியும், அவரது கையாட்களும் செய்யும் விளம் பரக் கூத்துக்கள் மூலம் ஏழை எளிய மக்களின் இன்னல்களை வெகுஜன மக்களிடையே கொண்டு சென்று விடாமல் இருக்க இப்படி போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
நேற்று காலை மோடியே தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளத்தில் எழுதிய ஒரு செய்தி:
போலிக் கையெழுத்து - நம்பவேண்டாம்:
பிரதமர் மோடி விளக்கம்
தமது கையெழுத்தைப் போன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள ஆவணங்கள் உண்மையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சமூக வலைதளங்களில் மக்களுக்கு தான் கோரிக்கை விடுப்பது போன்ற தகவல்களை தனது கையெழுத்துப் போன்று கையெழுத்திட்டு பரவவிடுவதாக கூறியுள்ளார். அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்றும், அதனை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.