இந்துத்துவா அமைப்புகள் முடிவு!
வாரணாசி, நவ. 12 அயோத்தி பிரச்சினை முடி விற்கு வந்த பிறகு மதுரா, காசி மசூதி தொடர்பான விவாதம் வேண்டாம் என்று மறைமுகமாக உச்சநீதிமன்றம் கூறிய பிறகும், இந்து அமைப் புகள் இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் செல்வோம் என்று கூறியுள்ளன.
நூற்றாண்டுகளாக நீடித்துவந்த அயோத்தியா விவகாரம் ஒருவழியாக 9.11.2019 அன்று முடிவிற்கு வந்தது. தீர்ப்பு கூறிய நீதிபதிகள் கொண்ட அமர்வு கருத்து தெரிவித்த போது தற்போது வழிபாட்டுத் தலங்கள்(காசி, மதுரா மசூதிகள்) தொடர்பான விவாதங்களை
முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும், தற்போதுள்ள நிலையிலேயே அது தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
இந்துத்துவ அமைப்புகள் காசியில் உள்ள விசுவநாதர் கோவிலை இடித்து விட்டு கியான் வாபி மசூதி கட்டியதாகவும், அதே போல் மதுராவில் சிவன் கோவிலை இடித்துவிட்டு அதன்மீது மசூதி கட்டியதாகவும் கூறிவருகின் றனர்.
பாபர் மசூதி இடித்துதள்ளப்பட்ட பிறகு காசி மற்றும் மதுராவிலும் கலவரம் மூண்டது அங்குள்ள மசூதிகளைக் குறிவைத்து வன்முறை யாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். ராணுவத்தின் மூலம் வன்முறையாளர்கள் விரட் டப்பட்டனர். இதனை அடுத்து அப்போதைய நரசிம்மராவ் அரசு முக்கியமான சட்டம் ஒன்றை நிறைவேற்றியது.
சட்டம் என்ன சொல்லுகிறது?
இந்த சட்டத்தின்படி 15.8.1947-ஆம் ஆண்டு சுதந்திரத்தின்போது எந்த எந்த இடங்களில் மத வழிபாட்டுத்தலங்கள் இருந்ததோ அது அப்படியே தொடரும், என்று உள்ளது. அதே போல் அந்தச்சட்டம் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதை நீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள லாம் என்று கூறப்பட்டது Places of Worship (Special Provisions) Act 1991,
சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட எந்த வழிபாட்டுத்தலமும் நீதிமன்ற நடவடிக்கையின்கீழ் வராது என்று இருந்தது, இருப்பினும் நரசிம்மாராவ் அரசு கொண்டுவந்த திருத்தம் காரணமாக ராமஜென்ம பூமி பாபர் மசூதி விவகாரம் நீண்ட காலமாக நீதிமன்றங்களில் இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்து அமைப்புகள் காசி மற்றும் மதுரா தொடர்பான விவகாரங்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளன. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பாபர் மசூதி தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார், அப்போது மதுரா காசியில் உள்ள மசூதிகள் தொடர்பாக உங் களின் கருத்து என்ன என்று ஊடகவியலாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் இது குறித்து பொது மக்களே (இந்துக்களே) முடிவு செய்வார்கள். நாங்கள் வரலாற்றை மட்டும் எழுதுகிறோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சில இந்து அமைப்புகள் மீண்டும் காசி மதுரா பிரச்சினையை எழுப்பத் துவங்கியுள்ளன.
மதுராவில் உள்ள ஷா இதாஹா மசூதி, கிருஷ்ணர் பிறந்த இடத்தின் மீது இருந்த கோவிலை அவுரங்கசீப் இடித்துவிட்டு அங்கே ஷா இதாஹா மசூதியைக் கட்டியதாகவும், அதே அவுரங்கசீப் காசி விசுவநாதர் கோவிலின் ஒரு பகுதியில் மசூதியைக் கட்டியதாகவும் மசூதிக்கு அடியில் காசி விசுவநாதர் சிலை இன் றும் உள்ளதாகவும் இந்துத்துவ அமைப்பினர் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
இது தொடர்பாக இந்துத்துவ அமைப்புகள் தீர்ப்பிற்கு பிறகு கருத்து தெரிவிக்கும்போது
“அயோத்தி தீர்ப்பு வெறும் துவக்கம் மட்டும் தான், இனிதான் காசி மதுரா பிரச்சினைகள் உள்ளது (This is just a sneak peek, Varanasi and Mathura are still left) என்று கூறியுள்ளன. காசி மோடியின் தொகுதிக்குள்ளே வருகிறது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் பவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா என்று தெரியவில்லை. இருப்பினும் தேர்தல் ஆதாயத்திற்காக மீண்டும் இப்பிரச்சினைகளுக்கு உயிரோட்டம் கொடுக்க பாஜக பின்னணியில் செயல்படலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.