கழிப்பறை வசதிகள் கொண்ட முதல் நாடு இந்தியா - பிரதமர் நரேந்திர மோடி
நாட்டில் 80 ஆயிரம் மருத்துவமனைகளில் கழிப்பறை வசதியில்லை - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்த்தன்
புதுடில்லி, நவ.28 கழிப்பறை வசதிகள் கொண்ட முதல் நாடு இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார். 80 ஆயிரம் மருத்துவமனைகளிலேயேகூட கழிப்பறை வசதியில்லை என்கிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன். இதில் யார் கூறுவது உண்மை என்ற பிரச்சினை வெடித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர் சவர்த்தன் இந்தியாவில் சுமார் 80,000 அரசு மருத்துவமனைகளில் கழிப்பறை வசதி இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்த புள்ளிவிவ ரங்களையும் வெளியிட்டார். மத்திய அரசே கூறிய இந்த புள்ளிவிவரத்தால் இந்தியா கழிப் பறை வசதிகள்கொண்ட முதல் நாடு என்று காந்தி பிறந்த நாள் அன்று பொய் பேசிய மோடியின் பொய்முகம் வெளுத்து விட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கழிப்பறை வசதிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் பதிலளித்துப் பேசினார்.
அப்போது, நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கழிப்பறை மோசமாக சுகாதாரமின்றி இருப்பதாகவும், சில மருத்துவமனைகளில் கழிப்பறை வசதிகள் இல்லை என்றும், குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் போன்ற கிராம அரசு மருத்துவமனைகளில்கூட கழிப் பறை வசதிகள் இல்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
அதே போன்று, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 72,000 மருத்து வமனை கழிப்பறை வசதிகள் இல்லாமல் செயல்படுவதாகவும், 1,15,000 அரசு மருத்துவ மனைகளில் ஆண் -_ பெண் நோயாளிகளுக்கு என தனித்தனி கழிப்பறை வசதிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சத்திஸ்கர், குஜராத், மகாராட் டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தான் கழிப்பறை வசதி மிகவும் குறைவான எண் ணிக்கையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காந்தியார் பிறந்த நாளின் போது பேசிய மோடி "எனது பல சமூக நல திட்டங்களில் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்ததில் முக்கியமானதாக 'தூய்மை இந்தியா திட்டம்" இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்த சமயத்தில் கழிப்பறை உள்ள வீடுகளின் சதவீதம் வெறும் 38.7 சதவீதமாகவே இருந்தது. இப்பொழுது 97.26 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனது அரசு பதவியேற்ற பிறகு நான் கொண்டுவந்த தூய்மை இந்தியா திட்டத்தால் இந்த சாதனை ஏற்பட்டது" என்று கூறினார்.
இதை அய்க்கிய நாடுகள் குறிப்பிட்டு அவையிலும் தன்னைத்தானே புகழ்ந்து பேசிக்கொண்டார். "எனது ஆட்சியின் கீழ் இந்தியாவின் அனைத்து பகுதியிலும் கழிப் பறை கட்டப்பட்டுள்ளது, கழிப்பறை வச திகள் இல்லாத பகுதியை எங்குமே பார்க்க முடியாது, உலகத்திற்கே இந்தியா எடுத்துக் காட்டாக திகழ்கிறது" என்று கூறியிருந்தார்.
ஆனால் 80000 த்திற்கும்மேற்பட்ட பெரிய அரசு மருத்துவமனைகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற மருத்துவமனை, சிறுநகர மருத் துவமனை என்று லட்சக்கணக்கில் எங்குமே கழிப்பறை வசதியில்லை என்று மத்திய அமைச்சரே நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும் திறந்தவெளி கழிப்பிடங்கள் இன்றும் பழைய நிலையில் தான் இருக்கின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் கங்கையை தூய்மை செய்வதாக கோடிக்கணக்கான ரூபாய் எல்லா நிதிநிலை அறிக்கையின் போதும் ஒதுக்கப்படுகிறது. அனைத்து திட்டங்களிலும் பணம் பார்க்கும் நோக்கத்தில் தான் இந்த திட்டமும் உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட விதத்தில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியிருக்கிறது. மோடி உட்பட பலரும் விளம்பரத்திற்காக மட்டுமே இந்த திட்டத்தை கையில் வைத்துள்ளதாக தெரிகிறது, கடந்த 6 ஆண்டுகளாக, மோடி தலைமையிலான மத்திய அரசு 'தூய்மை இந்தியா' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறிவருகிறது. ஆனால் அதில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதை மத்திய அமைச்சரின் இந்தத் தகவல் தெளிவுப்படுத்துகிறது.