‘‘பாகிஸ்தானுக்குப் போ!'' என்று முஸ்லிம்களை மிரட்டும் காவல்துறை
‘இந்து' ஏட்டில் வெளிவந்துள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
(‘‘உத்தரப்பிரதேச அரசின் சிறுபான்மையினர் வெறுப்பின் உச்சகட்டம்'' எனும் தலைப்பில் ஹார்ஷ் மந்தர் என்பவர் ‘இந்து' ஆங்கில ஏட்டில் (30.12.2019) எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்)
உத்தரப்பிரதேசத்தில், அரசு அதிகாரங்கள் வழியிலான சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளின் கொடூரம் எல்லைகளைக் கடந்துவிட்டது. மேலும் சிறுபான்மையினரை இன்னும் எவ்வளவு சித்திரவதை செய்யலாமென்று அரசு புதிய வழிமுறையைத் தூண்டுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் எதிர்ப்பு மிகவும் தீவிரமாக உள்ளது. மனித குலத்திற்கு எதிரான கடுமையான குற்றம் என்று கூறினால் கூட மிகையாகாது. கேவ லமாக இதில் மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர் போன்றோர்களே தம் மக்கள் மீதே வன்முறையை அவிழ்த்துவிடும் வகை யில் தூண்டிவருகின்றனர்.
சிறுபான்மையினர் மீது மிருகத்தனமான நடவடிக்கைகளை செயல்படுத்த காவல் துறையினரை தூண்டிவருகின்றனர். இது காவல்துறையினரின் மோசமான செயல் பாடுகளுக்கு மேலும் ஊக்கம் கொடுக்கும் நடைமுறை ஆகும்
இனவாத வன்முறையில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அசாதாரண மானது. உலகம் முழுவதும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பெரும்பாலும் பெரும்பான்மை வாதத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. இவை திட்டமிட்ட வகுப்புவாத தாக்குதல் கள் ஆகும்.
காவல்துறையின் அதீதம்
இதில் பெரும்பான்மை இனவாதிகளின் கைகளில் உள்ள அரசுத் துறைகள். காவல் துறை மற்றும் ராணுவம் போன்றவை அதி காரபலத்துடன் சிறுபான்மையினரைக் கொடூரமாகத் தாக்குகின்றனர். காவல்துறை சிறுபான்மையினரைத் தாக்கும் போது வேண்டுமென்றே அதீத வெறியில் செயல் படுமாறு தூண்டப்படுகிறது உத்தரப்பிரதேச காவல்துறையே கலகக்கார கும்பலாக மாறு கிறது. உத்தரப்பிரதேச காவல்துறை புதிய கும்பல் படுகொலை கூட்டமாக மாறிவரு கிறது
1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதி ரான படுகொலையை அதிகாரி ஒருவரே முன்னின்று நடத்தினார். அதன் விளைவு எப்படியாக இருந்தது? இந்தியாவில் இது வரை நடந்த சிறுபான்மையினருக்கு எதி ரான வன்முறைகள் மற்றும் படுகொலை களில் அசாம் மற்றும் பீகார் மாநிலம் பாகல்பூர் கலவரங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து உத்தரப்பிரதேச அரசின் நடவ டிக்கை வேறாக உள்ளது. உத்தரப்பிரதேச அரசைப் போன்ற வன்முறை அரசை இதற்குமுன்பு இந்தியா பார்த்தது இல்லை
வெட்கத்தால் தலைகுனிய வேண்டும்!
உத்தரப்பிரதேசத்தில் கலவரம் நடந்த பகுதிகளைப் பார்வையிட்ட போது கண் களில் நீர் தானாகவே வழிகிறது, இதயம் வெட்கத்தில் கூனிக்குறுகுகிறது. காவல்துறையினரின் முகத்தில் காணப்படும் பெரும் பான்மை திமிர்த்தனம் சிறுபான்மையினர் மீதான வன்மம், சிறுபான்மையினர் பகுதி களில் அவர்களின் சொத்துக்கள் சூறை யாடப்பட்டுள்ளன. வீடுகளின் பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள் ளன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள் ளன. பணம், நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன. நேற்றுவரை செல்வந்தர்களாக இருந்தவர்கள்கூட இன்று ஒன்றுமில்லாத வர்களாக அரச வன்முறையில் அனைத் தையும் இழந்து நிற்கின்றனர். சிறுவர்களின் விளையாட்டு பொம்மைகள் கூட நொறுக் கப்பட்டுள்ளது
1984, 2002 மற்றும் 2013 ஆண்டுகளில் நடந்த வன்முறைக்கும், இந்த வன்முறைக்கும் உள்ள வேறுபாடு, அன்று குண்டர்கள் வன் முறையில் ஈடுபட்டனர்; இன்று காவல்துறையினரே சீருடையில் வன்முறையில் ஈடுபடு கின்றனர்.
காவல்துறையினர் தெளிவாக வசதியான இஸ்லாமியர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். 40,50 காவல்துறையினர் கும்பலாக வீட்டிற் குள் நுழைகின்றனர். அனைவரையும் அடித்து விரட்டுகின்றனர். பின்னர் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை கொள் ளையடிக்கின்றனர். அவர்களின் வன்முறை யில் பெண்கள், வயதானவர்கள், ஏன் குழந் தைகள்கூட தப்பவில்லை. ஒன்றரை வயது குழந்தையின் தலையில் பலத்த காயம். அது தடியடியால் நிகழ்ந்தது என்ற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. முதியவர்களும், குழந்தைகளும் கெஞ்சுகின்றனர். ஆனால் காவல்துறை அவர்களை தாக்குவதிலேயும், பொருட்களை கொள்ளை அடிப்பதிலேயும் குறியாக இருந்தது.
இஸ்லாமியர்களின் பல்கலைக்கழகம் சூறையாடப்படுகிறது, நூல்கள் எரிக்கப்படு கின்றன. வணிக நிறுவனங்கள் சூறையாடப் படுகின்றன. அலிகார் பல்கலைக்கழகம் காவல்துறையினரால் சூறையாடப்படுகிறது. 10,000 மாணவர்கள் மீது வழக்கு பதியப் படுகிறது. அவர்களின் வாழ்நாளை இருளில் கழிக்க அரசு எந்த அளவு மோசமான சட் டங்களை இயற்றவேண்டுமோ அந்த அளவு கடுமையான பிரிவுகளில் மாணவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
‘‘பாகிஸ்தானுக்குப் போ!''
மீரட் நகரில் ஒரு காவல்துறை அதிகாரி, வயதான இஸ்லாமியர் ஒருவரைப் பார்த்து, ''பாகிஸ்தானுக்குப் போ'' என்று கூறுகிறார். அவர் பரிதாபமாக அங்கு நின்றுகொண்டு இருக்கிறார்.
காவலர்களால், வன்முறையாளர்கள் என்று அடைத்து வைக்கப்பட்ட கூட்டத்தி னரில் சிறுகுழந்தைகள், பெண்கள், முதிய வர்கள் என பலர் இருந்தனர். அதில் பலர் கடுமையான காயங்களோடு இருந்தனர்; அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப் படவில்லை
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 20 இஸ் லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கரு நாடகாவில் 2 பேர். பெரும்பாலும் இந்தியா முழுவதுமே அமைதியாக நடந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட் டம் உ.பி. மற்றும் கருநாடகாவில் மட்டும் வன்முறையாக மாறியது ஏன்? இதில் காவல்துறையினரே வன்முறையைத் தூண் டியது தெளிவாக தெரிகிறது. காவல்துறையினர் வன்முறையாளர்கள் என்று குறிப்பிட்டு, பொதுமக்களின்மீது நடத்திய வன்முறை முற்றிலும் மனித குலத்திற்கு எதிரானது ஆகும். கும்பலாக இருக்கும் மக்களைப் பார்த்து சுடுகின்றனர். சீருடை இல்லாமல் ஆயுதங்களை ஏந்தி, சிறுபான்மையினரை தாக்குகின்றனர்.
தங்கள் மீது இழைக்கப்பட்ட கொடூ ரங்களைக் கூட வெளியில் சொல்ல இயலாத நிலையில் இஸ்லாமியர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் கொடுமையான வதைமுகாம்களில் இருப் பது போன்று உணர்ந்திருக்கிறார்கள். கிட் டத்தட்ட அனைத்து வீட்டு ஆண்களுமே காவலர்களின் பிடியில் சிக்கியுள்ளனர்.
காலியாகும்
இஸ்லாமியர்களின் வீடுகள்
பெரும்பாலான இஸ்லாமிய குடியிருப் புகள் காலியாகிவிட்டன. இஸ்லாமியக் குடும்பங்களைத் தேடித்தேடி வீட்டில் நுழைந்து தாக்குகின்றனர். பொதுச்சொத் துக்களை சேதப்படுத்தியதற்கான இழப்பீடு நோட்டீசுகள் கொடுக்கப்படுகின்றன. கண் ணில் பார்த்த அனைத்தையும் அடித்து நொறுக்குகின்றனர். இவ்வளவு நடந்தும் முதல்வர் சாமியார் ஆதித்யநாத் மேலும் மிரட்டும் விதமாக கொக்கரிக்கிறார். இது முதல்வரால் ஏற்படுத்தப்பட்ட வெறுப்புப் பிரச்சாரத்திற்கு கிடைத்த பலன் ஆகும்.
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தை ஆளும் அம்மாநில முதல்வரே வன்முறையைத் தேர்தெடுக்கும் விதமாகப் பேசுகிறார். அவர்மனதில் தாங் கள் செய்வது மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கை என்று பாராமல், கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். மனிதாபிமானமுள்ளவர்கள் அனைவரும் இணைந்து இஸ்லாமியர் களுக்கு ஆதரவாக செயல்படும் நேரம் இதுதான். இதுவே அவர்களின் காயத்தை குணப்படுத்தும்.