Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்- உள்ளே இருப்பது ஈரும், பேனாம்!'

$
0
0

மத்திய பட்ஜெட் பற்றி தமிழர் தலைவர் ‘வருணனை'

ஜெயங்கொண்டம், பிப்.3      மத்திய நிதிநிலை அறிக்கையைப்பற்றி சொல்லுகையில் ‘‘ஒய் யாரக்  கொண்டையாம் தாழம்பூவாம் - அதன் உள்ளே இருப்பது ஈரும் பேனாம்'' என்ற கிராமத்துப் பழமொழியை நினைவூட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடம் கூறினார்.

அறிஞர் அண்ணா   நினைவு நாளான இன்று  (3.2.2020) ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த  திராவிடர் கழகத்  தலைவர்  ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்  செய்தியாளர் களுக்குப்   பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

அண்ணாவின் போர்க்குரல் இன்றைக்கும்

நமக்கு வழிகாட்டி நெறிகளாகும்!

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவு நாள் இன்றைய நாள்.  அண்ணா அவர்கள் -  உண்மையான திராவிட இயக்கத் தைப் பொறுத்தவரை வெறும் படமல்ல; நமக்குப் பாடம். என்றென்றைக்கும் சமூகத் துறையிலும், அரசியல் துறையிலும் மாநில உரிமைகள் துறையிலும்,  அண்ணா அவர் களுடைய போர்க் குரல் இன்றைக்கும் நமக்குத் தேவைப்படக்கூடிய மிக முக்கிய மான வழிகாட்டி நெறிகளாகும்.

நாளொரு மேனியும் -

பொழுதொரு வண்ணமும்...

எனவே, அண்ணா அவர்களுடைய நினைவு நாளில்,  நாம் சிந்திக்கவேண்டும்; மத்தியில் இருக்கக்கூடிய பா.ஜ.க. ஆட்சி என்பது, ஆர்.எஸ்.எஸினுடைய ஒரு வடிவ மாகும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்  அவர்கள்   மாநில உரிமை களையும், மக்களின் உரிமைகளையும் பறித்த வண்ணமே இருக்கிறார்கள்.

அதற்கு அடையாளம்தான் ‘நீட்' தேர்வு

அதற்கு அடையாளம்தான் புதிய கல்விக் கொள்கை

அதற்கு அடையாளம்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயராலே சிறு பான்மை சமுதாயம், மற்றவர்கள் என்று இஸ்லாமியர்களை தனியே பிரித்து, தங் களுடைய நிரந்தர கொள்கையாக இருக்கக் கூடிய மற்றவர்களையெல்லாம் விரட்டுவது அல்லது இந்துத் தேசமாக இந்தியாவை ஆக்குவது என்ற  அந்தப் பணியில் அவர்கள் ஈடுபட்டு, மிகப்பெரிய அளவிற்கு மக்கள் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘மக்கள் சக்திக்கு முன்னால்

எந்த சக்தியும் நிலைத்துவிட முடியாது!''

அண்ணா அவர்கள் சொன்னார்கள், ‘‘மக்கள் சக்திக்கு முன்னால் எந்த சக்தியும் நிலைத்துவிட முடியாது'' என்று. அதுதான் இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது.

ஆகவே, மக்கள் இந்தக் கொடுங்கோல் அரசுகளை எதிர்த்து நடைபெறக்கூடிய போராட்டம் மிக விரைவிலே வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. காரணம், நியாயம் அதன் பக்கத்தில் இருக்கிறது; நீதியும், நேர்மையும் அதற்கு அரணாக அமைந் திருக்கின்றன என்பதுதான் மிக முக்கியம்.

ஆகவே, அண்ணா நினைவு நாளில் மீண்டும் நாம், நம்முடைய அடிப்படை கொள்கைகளான பகுத்தறிவு, சமூகநீதி, மாநில உரிமைகள், மனித உரிமைகள் இவைகளைப் பாதுகாப்பதற்குத் தொடர்ந்து பாடுபடுவோம் என்று சூளுரைப்போம்.

தந்தை பெரியார் அவர்கள், அண்ணாவை தன்னுடைய தலைமகனாகக் கருதினார்கள்.

தந்தை பெரியார் அவர்களிடம் இருந்த காலம்தான், அண்ணா வாழ்வில் ‘‘வசந்த காலம்''

தந்தை பெரியார் அவர்களிடம் இருந்த காலம்தான், தன்னுடைய வாழ்வில் ‘‘வசந்த காலம்'' என்று அண்ணா நினைத்தார்கள். அதை மீண்டும் நாம் நினைத்து, நாம் ஒவ்வொருவருமே அந்த வசந்தத் தைப் பகிர்ந்துகொள்வோம்.

5 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு, 8 ஆம்வகுப்புப் பொதுத் தேர்வு என்பது இருக்கிறதே,  இது மத்திய பா.ஜ.க.வினுடைய புதிய கல்வி கொள்கை என்ற பெயராலே, பழைய குலதர்மக் கல்வியை மீண்டும் புதுப்பிக்கின்ற ஒரு முயற்சியாகும்.

ஒக்கநாடு மேலையூரில்....

இதனை எதிர்த்து, கடந்த 20 ஆம் தேதி குமரி முனையில் தொடங்கிய எங்களுடைய பயணம் இன் னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மாநிலம் தழுவிய அளவில் முழு பிரச்சாரத்தை வேகமாக முடுக்கிவிட்டு, சென்னையில் நிறைவு நிகழ்ச்சி நடத்தினாலும், நேற்றுகூட உரத்தநாடு பக்கத்தில் இருக்கக்கூடிய ஒக்கநாடு மேலையூரில் கிராமப்புற வட்டார ‘நீட்' எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அதேபோல, 5 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கு எதிர்ப்புகளை மிகத் தெளிவாகப் பதிவு செய்தோம்.

நம்முடைய மாணவர்களை

மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாகும்

வருகின்ற 21 ஆம் தேதியன்று, திருச்சியில், திரா விடர் கழகப் பொதுக்குழு நடைபெறவிருக்கிறது. அதற்குள், ‘நீட்' தேர்வையும், புதிய கல்விக் கொள் கையையும் திரும்பப் பெறாவிட்டால், நிச்சயமாக சிறை நிரப்பும் போராட்டத்தை திராவிடர் கழகம் முன்னின்று நடத்தும்; ஒத்தக் கருத்துள்ளவர்கள், பெற்றோர்கள், மற்றவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் அப்போராட்டத்தில் கலந்துகொள் வார்கள். நிறைய ஆதரவு அதற்கு இருக்கிறது.

காரணம் என்னவென்றால், கிராமப்புறத்தில் உள்ள  நம்முடைய பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்கு வருவதே அரிது. தேர்வு, தேர்வு  என்று அவர்களை தேவையில்லாமல் அச்சுறுத்துவது என்பது அவர் களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாகும்.

அதுமட்டுமல்ல, இதனுடைய விளைவு இடை நிற்றல் என்று ஆகக்கூடிய அளவில் இருக்கும்.

மிக முக்கிய செய்தி!

இன்னொரு மிக முக்கியமான செய்தி, நீட் தேர்வுக்கு எதிரான முயற்சியை வேகமாக நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். அதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்லவேண்டுமானால், சீனாவிலிருந்து கரோனா என்று சொல்லக்கூடிய ஒரு வைரஸ் தொற்று பரவி, அங்கே இருக்கக்கூடிய மக்களையே  மிகப்பெரிய அளவிற்கு அச்சுறுத்தி, அவர்கள் கதவை சாத்திக் கொண்டு, உள்ளே இருக்கக்கூடிய அளவில் இருக்கும்பொழுது, அங்கே இருக்கக்கூடிய நம் நாட்டைச் சேர்ந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் நிறைய பேர் சீனாவிற்குச் சென்று படிக்கிறார்கள். அவர்கள் சீனாவிற்குப் படிக்கச் சென்றதற்குக் காரணமே, நீட் தேர்வுதான்.

இங்கே நீட் தேர்வு இல்லாமல் இருந்திருக்குமே யானால்,  இங்கே உள்ள மாணவர்கள் பலர் சீனா விற்குச் சென்றிருக்க மாட்டார்கள்; ஆனால், அப்படி அங்கே போனவர்களும் இப்பொழுது பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற அச்சம் இருக்கிறது.

எனவேதான், நீட் தேர்வினுடைய கொடுங்கரம் என்பது இருக்கிறதே, அது உள்ளூரில் இருப்பவர் களை மட்டும் அச்சுறுத்தவில்லை; வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்றவர்களையும் சேர்த்து, அங்கே நோய் ஏற்பட்ட காரணத்தினால், இங்கே வந்து அவதியுறக் கூடிய அளவிற்குக் கொடுமை ஏற்பட்டு இருக்கிறது.

எனவே, நீட் தேர்வினால் ஏற்படக்கூடிய கேட் டிற்கு,  அவர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள். ஆகவேதான், நீட் தேர்வு எதிர்ப்பிற்குப் புதிதாகக் கிடைத்திருக்கின்ற கூடுதல் தகவல் இது.

இதுவரை மூன்றரை கோடி பேர் வேலையை இழந்திருக்கிறார்கள்

செய்தியாளர்: மத்திய நிதிநிலை அறிக்கைபற்றி தங்களுடைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்: நம்முடைய கிராமப்புறங்களில் ஒரு பாட்டுப் பாடுவார்கள்; ‘‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்; உள்ளே இருப்பது ஈரும், பேனாம்'' என்று.

அதுபோல, ஒய்யாரக் கொண்டை; வெளியில் தாழம்பூ அழகாகத் தெரிகிறது. ஆனால், உள்ளே இருப்பது ஈரும், பேனும்தான். இதுதான் மத்திய பட்ஜெட்.

இப்பொழுது மத்திய பட்ஜெட்டிற்கு யாரும் கைகொடுக்கவில்லை என்றவுடன், திருவள்ளுவர் கைகொடுப்பாரா? அல்லது தமிழ் வேஷம் போட லாமா? என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர் களின் ஒப்பனை விரைவில் கலையும்.

அடித்தளம் இல்லாத ஒரு பொருளாதாரத்தை அவர்கள் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடையாது.

உலகம் முழுவதும் நம்முடைய பிரதமர் சுற்றி னாலும், போதிய முதலீடுகள் இங்கே வருவதாகவோ, வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகவோ இல்லை.

ஏழு துறைகளில், இதுவரை மூன்றரை கோடி பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும்,

இருக்கின்ற வேலைகளில், மூன்றரை கோடி பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு துறையாக விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

விதை நெல்லை எடுத்து

விருந்து வைத்ததைப்போல...

விதை நெல்லை எடுத்து விருந்து வைத்த தைப்போல, முழுக்க முழுக்க அவர்கள் அத்துணைப் பேருமே, மிகப்பெரிய அளவிற்குப் பேசுகிறார்கள்.

ஆனால், விவசாயிகளுடைய வேதனை தீர வில்லை; படித்த பட்டதாரிகளின் மத்தியில் வேலை யின்மை என்பது படமெடுத்து ஆடுகிறது.

எந்தப் பிரச்சினைக்கும் அடிப்படையில் ஒரு தீர்வு இல்லை. அதேநேரத்தில், வருமான வரி கட்டுகிறவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள் என்று அவர்கள் தம்மட்டும் அடித்துக் கொள்கிறார்கள். அது இயல்பாக அரசு ஊழியர்கள், மற்றவர்களைப் பொறுத்து ஏற்பட்டு இருக்கின்ற நிலையே தவிர, புதிதான ஒரு சூழல் இல்லை. ஆகவேதான், இந்த சிக்கல் இருக்கிறது.

இன்றைக்கு எந்த அளவிற்குப் பொருளாதார நிதிநிலை இருக்கிறது, அவர்களுடைய நிதி நாட் டாண்மை, ஆளுமை இருக்கின்றது என்பதற்கு உதாரணம், பட்ஜெட்டிற்கு முன்பு ஒரு கூட்டத்தைக் கூட்டினார் பிரதமர், நிதியமைச்சர் இல்லாமல். எனவே, நிதியமைச்சருக்கே தெரியாத ஒரு பட்ஜெட் தயாராகி இருக்கிறது. படித்தது அவருடைய பங்கு. எழுதியது - தயாரித்தது யாருடைய பங்கு என்பது வெளிச்சத்திற்கு வரும்.

மத்திய அரசு வாங்குகிற அரசு அல்ல; விற்பனை அரசு

செய்தியாளர்: எல்.அய்.சி., இரயில்வே, ஏர்

இண்டியா போன்ற துறைகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதுபற்றி...?

தமிழர் தலைவர்: ஒவ்வொன்றாக விற்றுக் கொண்டு வருகிறார்கள். கடைசியாக, இந்தியா வையே  விலை பேசுவார்கள். இது வாங்குகிற அரசு அல்ல; விற்பனை அரசு.

ஆகவே, அரசு சொத்துகளை விற்றுக் கொண்டே இருப்பதுதான் அவர்களுடைய வேலை. நம்முடைய பாட்டனார், அப்பா ஆகியோர் சேர்த்த சொத்துகளை, அவர்களுடைய பிள்ளைகள் விற்றால்,  அதற்கு ‘மைனர்' விளையாட்டு என்று பெயர்.

ஆனால், மத்திய அரசு விளையாடும் விளை யாட்டுக்கு என்ன பெயர்? என்று தெரியவில்லை.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறினார்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles