பக்தியின் பெயரால் நவீன தீண்டாமை
மணவாள மாமுனிகள் சன்னதியில்
பார்ப்பனர் அல்லாதார் நுழைய அனுமதி மறுப்பு
காஞ்சிபுரம், நவ. 6 வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதிக்குள் பார்ப்பனர் அல் லாதார் நுழைய அனுமதிக்காததால், கோவில் வாசலில் அமர்ந்து, ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தில் வர தராஜப் பெருமாள் கோவில் வளாகத்தில், ராமானுஜரின் மறு அவதாரம் என்று கூறிக் கொள்ளும் மணவாள மாமுனிகள் சன்னதி உள்ளது. இந்த சன்னிதிக்குள் அனைத்து வகுப்பினரும் நுழைவது தொடர்பான பிரச்சினை, பல ஆண்டுகளாகவே நீடிக் கிறது. இந்நிலையில், ராமானுஜரின், ஆயி ரமாவது ஆண்டு விழா நடைபெற உள்ள நிலையில், ராமானுஜரின் பிறந்த நாள் வழிபாடு இந்த சன்னதியில் நடைபெற்றது. அந்த வழிபாட்டை, சமத்துவ வழிபாடாக நடத்த, ராமானுஜதாசர்கள் என்ற அமைப் பினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.
மணவாள மாமுனிகள் சன்னதிக்குள் அவர்கள் நுழைய முயன்றுள்ளனர். அப் போது பார்ப்பனர் அல்லாதார் கோவிலுக் குள் நுழையக்கூடாது என, அங்கிருந்த வர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதை எதிர்த்து, எதிர் தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தகவலறிந்த விஷ்ணு காஞ்சி காவல்துறையினர், கோவில் வளா கத்திற்கு விரைந்து, ராமானுஜதாசர்களி டம் பேச்சு நடத்தினர்.
பரபரப்பு
தங்களை கோவிலுக்குள் அனுமதித்து, நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாட அனு மதிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை அவர்கள் காண்பித்தனர். எனினும், இறுதி வரை கோவிலுக்குள் யாரையும் அனுமதிக்காததால், அவர்கள் கோவிலுக்கு வெளியே அமர்ந்து முழக்கங் களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. மாலை 6 மணியளவில் கோயி லில் இருந்து, ராமானுஜதாசர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான சில அமைப்பினர் வெளியேறினர்.