செய்தி தொலைக்காட்சிகளுக்குத் தடை
சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதா மோடி அரசு?
என்.டி.டி.வி.யைத் தொடர்ந்து அசாமில் இரண்டு தொலைக்காட்சிகளுக்குத் தடை
டில்லி, நவ. 7 என்.டி.டி.வி. இந்தியா என்னும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தனது ஒளிபரப்பை 9ஆம் தேதி ஒரு நாள் முழுவதும் நிறுத்த வேண்டும் என்று மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தடைக்கு காரணமாகக் கூறும் போது, ஜனவரி 2-இல் பதான் கோட் விமான படைத்தளத்தில் தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலின்போது நேரடி ஒளிபரப்பை மேற்கொண்ட இந்த தொலைக்காட்சி நிறுவனம் தேசப் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் செய்திகள் வெளியிட்டது என்பதுதான்.
தாக்குதல் நடைபெற்றுக் கொண் டிருக்கும் போதே இந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள் விமானபடைத் தளத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், ஆயுத தளவாடங்களை சேமித்து வைத்திருக்கும் இடங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றியெல்லாம் செய்திகளை நேரடியாக ஒளிபரப் பினார்கள் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இந்த காட்சிகளை அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின என்பது இங்கே குறிப் பிடத்தக்கது.
இது தொடர்பாக மத்திய தகவல் - ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கூட்டு அமைச்சரவைக் குழு அனுப் பிய இரண்டு அறிக்கைகளுக்கு உரிய பதிலும் என்.டி.டி.வி. தரப்பில் கொடுக்கப்பட்டுவிட்டது. அதில் "எந்தவிதமான சட்ட மற்றும் நடத்தை விதிமுறைகளையும் நாங் கள் மீறவில்லை. மேலும் நாங்கள் ஒளிபரப்பிய அதே கோணத்தில் அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பியுள்ளன. ஆனால் நாங்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள் ளோம்" என்று கூறியுள்ளது.
ஆனால் அமைச்சரவை இந்த பதில்களை ஏற்றுக்கொள்ளாமல் நவம்பர் 9ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 10ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை என்.டி.டி.வி. தொலைக் காட்சி தன்னுடைய ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. எங்களால் 25 நாட்கள் வரையிலும் தடை விதிக்க முடியும் என்றும் மத்திய அரசு அடுத்த மிரட் டலையும் சேர்த்தே விடுத்துள்ளது.
இந்த தடை குறித்து சட்ட நட வடிக்கைகள் உட்பட அனைத்தும் ஆராயப்பட்டு வருவதாக என்.டி. டி.வி. தரப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு நாடு முழுவதிலும் அனைத்து ஊடக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளிடமும் கடுமையான கண்ட னத்தையும், எதிர்ப்பையும் உண்டாக் கியுள்ளது. ஒட்டுமொத்த எதிர்கட்சி களும் இந்த தடையை கண்டித் திருக்கின்றன.
பத்திரிகை ஆசிரியர்களின் கூட்ட மைப்பான "எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா" இந்த தடை 'பட்ட வர்த்தனமான சென்சார்ஷிப்" என் றும், "அரசியல் சாசனம் வழங்கியிருக் கும் பேச்சுரிமைக்கு எதிரானது" என்றும் கூறியிருக்கிறது. 'மோடி அரசுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான செய்திகளைத் தொடர்ந்து கொடுத்து வருவதாலும், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து செய்திகளை தருவ தாலும், என்.டி.டி.வி. இந்தி சேனலை தனிப்பட்ட முறையில் மத்திய அரசு குறிவைப்பது நியாயமற்றது. இந்த நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும்' என்று மும்பை பிரஸ் கிளப் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
2014 மே மாதம் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து பா.ஜ.க., ஆட் சிக்கு எதிராக மோடிக்கு எதிராக எந்த ஒரு செய்தியையோ, கருத்து விவாதங்களையோ வெளியிட்டால் அதன் மீது தடை நடவடிக்கை ஏவப் படுகிறது. முதலில் மிரட்டல் வரு கிறது. அதற்கும் பணியாவிட்டால் தடை உத்தரவு வந்துவிடுகிறது.
1993 மார்ச் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்தான் யாக்கூப் மேனன். அவர் தூக்கிலிடப்பட்ட பின்னர் இந்திய குடியரசுத் தலை வரையும், இந்திய நீதித் துறையையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் செய் திகளை வெளியிட்டதாகச் சொல்லி மூன்று செய்தித் தொலைக்காட்சி சேனல்களுக்கு - ஏ.பி.பி. நியூஸ், என்.டி.டி.வி. 24ஜ்7 மற்றும் ஆஜ் தக் ஆகிய சேனல்களுக்கு மத்திய அரசு, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக் கக் கூடாதென்று விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியது.
என்.டி.டி.வி. தொலைக்காட்சி யில் சமீபத்தில் நடந்த பாகிஸ்தானின் மீதான ராணுவ நடவடிக்கையான 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' குறித்து மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேட்டியை என்.டி.டி.வி. தொலைக் காட்சி ஒளிபரப்பவில்லை. இந்த பேட்டியில் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' பற்றிய ஆதாரங்கள் என்னவென்று சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். இது போன்ற 'சர்ஜிக்கல் ஸ்டிரைக் குகள்' கடந்த அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகளிலும் நடத்தப்பட் டன என்று ப.சிதம்பரம் ஆதாரப்பூர்வ மாக எடுத்துரைத்தார். ப.சிதம்பரம் உள் துறை அமைச்சராக இருந்த போது இரண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்கு தல்கள் நடந்துள்ளதாக ராணுவ அதி காரிகள் தெரிவித்திருந்ததும் குறிப் பிடத்தக்கது.
ப.சிதம்பரத்தின் இந்த பேட்டி ஒளி பரப்பாகாமல் ரத்து செய்யப்பட்டது. இதற்கு மோடி கொடுத்த நேரடி அழுத்தம்தான் காரணமாகும். இது அனைவருக்கும் தெரிந்ததே. ப.சிதம் பரம் முன்னாள் மத்திய அமைச்சர் மட்டுமல்ல, அவர் ஒரு முன்னணி வழக்குரைஞரும் கூட. தன்னுடைய வார்த்தைகளை அளந்து பேசுபவர். ஆகவே அவரது பேட்டி வெளியா னால் மத்திய அரசுக்கு அவப்பெயர் நேரிடும் என்ற காரணத்தால் அந்த பேட்டியை ஒளிபரப்ப தடை செய் தனர். என்.டி.டி.வி. தொலைக்காட்சி மீதான தடைக்கு நாடு முழுவதிலும் இருந்தும் எதிரான குரல்கள் அதிகரித்து வருகின்றன. நாடு அவசர நிலைக் காலத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண் டிருக்கிறது என்ற கருத்து பரவ லாக பா.ஜ.க. தவிர்த்த அனைத் துக் கட்சிகளிடம் இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த தடைகுறித்து சென் னையில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நாட்டின் பாதுகாப்பு முக்கியமான தாகும். இது போன்ற தடை களுக்கு எதிரான குரல்கள் எங் களை ஒன்றும் பாதிக்காது என்று கூறிவிட்டார். இந்த தடையை நீக்கும், மறுபரி சீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்ட வட்டமாக கூறிவிட்டார்.
மற்ற இரண்டு செய்தி சேனல்களுக்கும் தடை
என்.டி.டி.வி. சேனலுக்கான தடை உத்தரவு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் நேரத்தில் நேற்று மேலும் இரண்டு சேனல்களுக்கு நவம்பர் 9 ஆம் தேதி தடைவிதிக்கப்பட்டுள்ளது. அசாம் மொழியில் செய்திகளை ஒளிபரப்பும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான பிரதி தீன் நியூஸ் (டெய்லி நியூஸ் டைம்) மற்றும் கேர் வேர்ல்ட் என்ற தொலைக்காட்சி கள் இரண்டையும் தடைசெய்ய உத்திர விடப்பட்டுள்ளது.
இதற்கு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு மைனர் தொழிலாளி ஒருவரை துன்புறுத் திய நிகழ்ச்சி தொடர்பாக, அந்த மைனர் தொழிலாளியிடம் பேட்டி எடுத்து நேரடியாக ஒளிபரப் பிய விதம் சட்டவிரோதம் என்று கூறி தடைவிதிக்கப்பட் டுள்ளது.
ஆனால், அசாமில் இருந்து வெளிவரும் 'தைனின் ஜனனம் பூமி' என்ற பத்திரிகையில், தடை விதிக்கப்பட்டுள்ள தொலைக் காட்சியானது கடந்த தேர்தலின் பிரச்சாரத்தின் போது மதவாதம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி, அதில் பா.ஜ.க. கட்சியின் பின்னணி குறித்து குறும்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக அசாமில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி சரிந்தது. இருப்பினும் நூலிழையில் வெற்றிபெற்று கூட்டணி கட்சியான அசாம் கனபரிஷத் மற்றும் போடோ கட்சியுடன் ஆட்சியைப் பிடித் தது. தேர்தல் பிரச்சார காலத்தில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் காரணமாக அந்த தொலைக் காட்சிமீது இருந்த கோபத்தை வேறு ஒரு நிகழ்வுடன் தொடர்புபடுத்தி தடைசெய்துள் ளது" என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது.