மதுரை, ஜன.30 மதுரை புறவழிச் சாலையில் இருந்த கருப்பணசாமி கோயில், அதன் எதிரே இருந்த வழக்குரைஞர் அலுவ லகத்தை நேற்றுமுன்தினம் (28.1.2017) காவல்துறையினரின்பாதுகாப்புடன் சென்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இடித்தனர்.
மதுரைநகரில்போக்குவரத்துமுக்கி யத்துவம் வாய்ந்த சாலைகளில் காள வாசல் -பழங்காநத்தம் புறவழிச் சாலை முதன்மையானது. இந்த சாலை, ஆரம்பத்தில் வாரணாசி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையாக இருந்தது. நான்கு வழி சாலை புதிதாக அமைக்கப்பட்டதும், இந்தச் சாலை மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின், இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. குறிப்பாக பழங்காநத்தம்- காளவாசல் இடையே சாலை அகலமாகியும் சர்வீஸ் சாலைக்கும், பைபாஸ் சாலைக்கும் இடையே கோயில், தனியார் நிறுவன கட்டடங்கள்அதிகரிப்பால்சர்வீஸ் சாலைகளை மக்களால் பயன்படுத்த முடியவில்லை. சர்வீஸ் சாலை அமைந் துள்ள பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், வணிக அடுக்ககங்கள் உள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள், வாகனங்களை சாலையிலேயே நிறுத்துகின்றனர்.
இந்த சர்வீஸ் சாலையில் கட்டப்பட்ட கருப்பணசாமி கோயிலும், ஒரு வழக் குரைஞர் அலுவலகமும் முக்கிய ஆக்கிர மிப்பாக இருந்தன. இந்த கோயிலில் வாரந்தோறும் பூஜைகள், நேர்த்திக்கடன் என்று ஏராளமான பக்தர்கள் வருவர். விரதமிருந்து கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், வெளியூர் செல்பவர்கள் இந்த கருப்பணசாமி கோயிலில் தேங்காய், பூச ணிக்காய் உடைத்துவிட்டுச் செல்வதால் அப்பகுதியில் சாலை முழுவதும் தேங் காய் சிதறல்களும், பூசணிக்காய்களும் உடைபட்டுக் கிடக்கும். இதில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் காயமடைந்தனர். இதையடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றம் ஆணை
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆண்டு நவ. 9- ஆம் தேதி புற வழிச் சாலையில் நெரிசல் ஏற்பட காரண மான கருப்பணசாமி கோயிலையும், வழக் குரைஞர் அலுவலகத்தையும் இடித்து அப் புறப்படுத்தநெடுஞ்சாலைத்துறைக்குஉத் தரவிட்டது.இதையடுத்துகோயில்நிர்வா கத்துக்கும், வழக்குரைஞர் அலுவலகத் துக்கும் அவர்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளநெடுஞ்சாலைத்துறை தாக்கீதுஅனுப்பியது.ஆனால்,அதன் பிறகும் ஆக்கிரமிப்பாளர்கள் கோயிலை யும்,அலுவலகத்தையும்அகற்றமுன்வர வில்லை. அதிருப்தி அடைந்த உயர்நீதி மன்றம் நெடுஞ்சாலைத் துறைக்குக் கண் டனம் தெரிவித்தது.
இந்நிலையில்,நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அரசப்பன், உதவி கோட் டப்பொறியாளர்பாக்கியலட்சுமி,உதவி பொறியாளர் ரோகிணி மற்றும் அதிகாரி கள் நேற்றுமுன்தினம் (28.1.2017) காவல் துறையினரின் பாதுகாப்புடன் கருப்பணசாமி கோயிலையும், அலுவலகத்தையும் அகற்றச் சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் திரண்டனர்.
இதையடுத்து,காவல்துறையினர்,அவர் களை அப்புறப்படுத்தி ஜேசிபி இயந்திரங் களைக் கொண்டு கோயிலை இடித்து அகற்றினர். அதிகாலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை கோயில், வழக்குரைஞர் அலுவலகம் இடித்து அகற்றப்பட்டன. கோயிலில் இருந்த கருப்பணசாமி சிலை, உண்டியல், மணியை அப்புறப்படுத்தி, மாவட்டகருவூலத்தில்அதிகாரிகள்ஒப் படைத்தனர். அதனால், கடந்த 30 ஆண்டு களுக்கு பிறகு புறவழிச் சாலைக்கு தற்போது நல்ல வழி கிடைத்துள்ளது.
ஆக்கிரமிப்புஅகற்றப்பட்டதால்பழங் காநத்தம் ரயில்வே மேம்பாலத்தின் இரு பக்கமும் அகலமான சர்வீஸ் சாலை அமைக்க முடியும். இதனால், விபத்துகளும், நெரிசலும் குறையும். பழங்காநத்தம், நேரு நகர், எல்லீஸ் நகர் உள்ளிட்ட புறவழிச் சாலையின் இருபுறமும் வசிக்கும் மக்கள் பயன் பெறுவர். அதனால், உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலை அமைத்து ஏற்கெனவே இருக்கும் சாலையுடன் இணைக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மூன்று முறை தள்ளிப்போன ஆக்கிரமிப்பு அகற்றம்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஒரு மாதமாகவே நெருக்கடியில் இருந்தோம். அவர்களே ஆக்கிரமிப்புகளை அகற்ற பல வாய்ப்புகளை கொடுத்தோம். ஆனால், நேற்று முன்தினமும் அவர்கள் ஒருநாள் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தள்ளிப்போடுங்கள் என்றனர். இதேபோல, அவர்கள் ஏற்கெனவே கூறியதால் 3 முறை ஆக்கிரமிப்புஅகற்றும்நடவடிக்கைதள்ளி வைக்கப்பட்டது. ஆனால், நேற்றுமுன்தினம் காவல்துறையிரனின் பாதுகாப்புடன் சென்று அகற்றினோம். இந்த நடவடிக்கையை அவசர கோலத்தில் எடுக்கவில்லை. நிதான மாக போதிய கால அவகாசம் கொடுத்துதான் மேற்கொண்டோம் என்றார்.