Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

காந்தியார் கொல்லப்பட்ட இந்நாளில்....!

$
0
0

இன்று - ஜனவரி 30 - அண்ணல் காந்தியடிகளை கோட்சே என்ற மதவெறியன் - மராத்திப் பார்ப்பனன் சுட்டுக் கொன்ற கொடூர நாள்!

அந்த மதவெறி நம் மண்ணில், மண்ணோடு புதைக் கப்பட்டிருக்கவேண்டும்!

ஆனால், அம் மதவெறியாளர்களே இன்று புதுப்புது ‘அவதாரங்களை'யெடுத்து, பன்மொழி, பன்மதம், பல கலாச்சாரம் பரவியுள்ள மதச்சார்பற்ற, சமதர்மத்தைக் - கொள்கையைக் குறிக்கோளாகக் கொண்ட அரசியல் சட்ட  அமைப்பையே அடியோடு மாற்றிடும் வண்ணம், இந்துத்துவா ஆட்சி நடத்துவதும், அதே நபர்கள் காந்தி யாரையும் வரித்துக்கொண்டு வக்கணைப் பேசுவதும், காந்தியாருக்குச் செய்யும் துரோகம் மட்டுமல்ல;

கோட்சேவுக்குச் சிலை திறக்கும் அளவுக்கு உள்ள இந்தக் கூட்டத்தின் இரட்டை வேடத்திற்கு முற்றுப் புள்ளி எப்போது....?

அய்ந்து மாநிலத் தேர்தல்களும் இதற்குப் பதிலாக அமையும் என்று நம்புகிறோம்.

இன்றேல், நாடு... கோட்சே நாடுதான்!

புரிந்துகொள்வீர்!


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles