டாக்டர்களுக்கான இடஒதுக்கீடு - உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது
தமிழக அரசின் நீட் குறித்த சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு
அனுப்பாததற்கு யார் காரணம்? மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்!
தமிழர் தலைவர் பேட்டி
நெமிலி, மே 7 நீட் தேர்வு விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட மசோதா குடியரசுத தலைவர் அலுவல கத்துக்கே செல்லவிடாமல் செய்தவர்கள் யார்? என்று வினா எழுப்பிய தமிழர் தலைவர் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
அரக்கோணம் கழக மாவட்டம் நெமிலியில் பெரி யாரியல் பயிற்சிப்பட்டறை நிறைவு விழாவில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (6.5.2017) மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப் புரையாற்றினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழர் தலைவர் கூறியதாவது:
கிராமப்புறங்களில் பணியாற்றி வந்த டாக்டர் களுக்கு முதுகலைப் படிப்புக்காக இதுவரை அளிக்கப் பட்டிருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடியது.
இந்தத் தீர்ப்பின் விளைவுகளிலிருந்து டாக்டர் களுடைய போராட்டத்தில் இருக்கக்கூடிய நியா யத்தை நிலைநாட்ட வேண்டுமானால், கிராமப்புறங் களில் அந்த டாக்டர்களுடைய பணி மீண்டும் நம் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமானால், உடனடி யாக தமிழக அரசு செய்ய வேண்டியது - தனியே சட்டமன்றத்திலே ஒரு சட்டத்தை அவசரமாக இயற்ற வேண்டும் என்பதே!
சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும். அதிலே இந்த 50 விழுக்காடு அளிக்கின்ற சட்டம் செல்லும் சட்டம் ஒன்று புதிதாக இயற்றினால், புதிதாகவே அந்த வாய்ப்புகளை கொடுக்க முடியும். அதன்மூலம் சமூக நீதி நிலைநாட்டப்படும். உடனடியாக தமிழக அரசு இதைச் செய்ய முன் வர வேண்டும். இது ஒன்று.
இரண்டாவது, திடீரென்று இன்னொரு செய்தி வெளி வந்துள்ளது. ‘நீட்’ தேர்வைப் பொருத்தவரையிலே தமிழக அரசு ஏற்கெனவே நிறைவேற்றிய சட்ட மசோதா குடியரசு தலைவருடைய அலுவலகத் துக்கே போக வில்லை என்பது மிகப்பெரிய அதிர்ச்சிக்குரிய செய்தியாக இருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் யார்? பொறுப்பானவர்கள் யார்? என்ன செய்கிறார்கள்? என்பதை தமிழக அர சிடமிருந்து தெளிவான விளக்கமும், உடனடியான செயல்திட்டமும் தேவை. இல்லையேல் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்!
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.