குடிமக்களின் உரிமைகளை ஆபத்துக்குள்ளாக்கும்: துணை குடியரசுத் தலைவர் அமீத் அன்சாரி
ஊடகவியலாளர்கள் எண்ணியதை எழுத முடியாத அச்சுறுத்தல்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்
பெங்களூரு, ஜூன் 13 எண்ணுவதை எழுத முடியாத அளவுக்கு ஊடகவியலா ளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது என்றார் காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி.
சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக நேஷனல் ஹெரால்டு இதழ் 5.9.1938 அன்று லக்னோவில் விடுதலைப் போராட்டத்தின்போது பரப்புரைக்கான கருவியாக ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. நேருவே அதன் ஆசிரியராகவும் இருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டில் பொருளாதாரப் பிரச்சி னைகளால் நேஷனல் ஹெரால்டு இதழ் நிறுத்தப்பட்டது. தற்போது, பாஜக தலைமையிலான மோடி அரசின் செயல்பாடுகளை துணிவாக எதிர்த்து வெளியிடும் வண்ணம் நேஷனல் ஹெரால்டு ஏடு மீண்டும் தொடங்கப்படுகிறது.
‘நேஷனல் ஹெரால்டு’ வார இதழின் ‘சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகள்’ எனும் சிறப்பிதழ் வெளியீட்டு விழா பெங்களூருவில் அம்பேத்கர் மாளி கையில் நடைபெற்றது.
துணை குடியரசுத் தலைவர் அமீத் அன்சாரி
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அமீத் அன்சாரி பேசியதாவது:-
இந்தியாபோன்றசுதந்திரசமூகத் தில் பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் அத்தியாவசியத்தேவையாகஉள்ளன. பேச்சுரிமையும், ஊடகமும் ஜனநாயகத் துடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை நினைவில் கொள்ளவேண்டும்.அரசு நிர்வாகங்கள் சீராக செயல்பட பொதுமக்களின் விமர்சனங்கள் அவசி யமாகும். சுதந்திரமான ஊடகம் என்பது பயன்தரக்கூடியது மட்டுமல்ல,சுதந் திர சமுதாயத்துக்கு அவசியத் தேவை யாகும். ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளானால், அது குடிமக்களின் உரி மைகளை ஆபத்துக்குள்ளாக்கும். ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதுதான் நல்ல அரசுக்கு அழகாகும்.
சுதந்திரமான சமுதாயம் அமைந்திட ஊடகங்களுக்கு முழு சுதந்திரத்தை அளிப்பது அரசின் கடமையாகும். தேவையற்ற கட்டுப்பாடுகள், தணிக்கை முறைகள் அனைத்தும் அரசின் தவறு களை மறைப்பதற்கே பயன்படும்.
இந்தியாவின் பத்திரிகை வரலாற் றுக்கும், சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தியப் பத்திரிகையாளர்கள் வெறும் செய்திகளைத் தருபவர்களாக மட்டும் இல்லை. மாறாக, அவர் கள்அனைவரும்சுதந்திரப்போராட்ட வீரர்களாகவும், சமூக சிந்தனையாளர் களாகவும் இருந்தனர். இவர்கள் ஆங் கிலேயர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், நமது சமுதாயத்தைப் பீடித்துள்ள சமூக பாரபட்சங்கள், ஜாதியம், மதவாதம், வேற்றுமை உணர்வுகளை களையவும் பாடுபட்டனர்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டவும், கல்வி புகட்டவும், ஒருங்கிணைக்கவும் பத்திரிகைகள் முக்கியப் பங்காற்றின. தேசிய எழுச்சியை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகித்தன. ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் போன்ற தத்துவங்களை மக்களிடையே கொண்டு செல்லும் கருவியாக ஊட கங்கள் விளங்கின. இந்தியாவை ஒருமைப்படுத்தியதும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நாட்டுப்பற்றை ஊட் டியதும் ஊடகங்கள் தான்.
காந்தியடிகள் 6 இதழ்களோடு தொடர்பில் இருந்ததோடு, இரண்டு வார இதழ்களுக்கு ஆசிரியராகவும் விளங்கினார். அந்த பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்க மாட்டார். அதே நேரம், அந்த பத்திரிகைகள் நட்டத்தில் இயங்கவும் விரும்ப மாட்டார். காந்தி யடிகளின் பத்திரிகைப் பணி என்பது சமூக சேவையாகவே இருந்தது.
சிறந்த மனிதநேயவாதி, பன்னாட்டு வாதி என்று காந்தியடிகளால் புகழப்பட்ட நேரு, தனது பத்திரிகை வாழ்வை காந்தியடிகளின்கொள்கைகளைபிரதி பலிக்கவே பயன்படுத்தினார். ஜனநாய கத்தின் தூணாக ஊடகத்தை கருதிய நேரு, எப்போதும் நடுநிலைமை, அச்ச மின்மை, நேர்மையானதாக இருக்க வேண்டுமென விரும்பினார். நேரு விரும்பியதுபோல ஜனநாயகத்தின் காவலாக ஊடகங்கள் திகழ வேண்டும் என்றார் அவர்.
ராகுல் காந்தி
காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “அதிகாரத்தின் மூலமாக உண்மைக்கு உள்ள ஆற்றல் காணடிக்கப்படுகிறது. உண்மைக்கு ஆதரவாக நிற்கின்ற எவர் ஒருவரையும் புறந்தள்ளும் நிலை ஏற்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்படுகிறார்கள், சிறுபான்மையர் பெரிதும் அச்சுறுத்தப்படுகின்றார்கள். சோவியத் கவிஞர் ஒருவர் அமைதியின் காரணமாக உண்மைக்கு இடமில்லாமல் போனால், அந்த அமைதி பொய்யானது என்றார். அதைத்தான் இன்றைய அரசு செய்து வருகிறது. நேஷனல் ஹெரால்டு வலிமையாக பெரிதும் ஊக்கத்துடன் செயல்படும். அமைதியாக இருக்காது. உண்மையை பேசுகையில் அமைதியாகஇருக்கக்கூடாது.அச்சத் துக்கும் இடம் கிடையாது. ஆயிரக்கணக் கிலானஊடகவியலாளர்கள்அவர்கள் எண்ணுவதை எழுத அனுமதிக்கப் படுவதில்லை’’ என்று ராகுல்காந்தி குறிப்பிட்டார்.
விழாவில், ஆளுநர் வாஜூபாய்வாலா, முதல்வர் சித்தராமையா, காங்கிரசு கட்சியின் கருநாடக மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ், இதழ் ஆசிரியர் நீலப் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேஷனல் ஹெரால்டு அதன் பய ணத்தில் பல்வேறு அறைகூவல்களை சந்தித்துள்ளது. 1938 இல் தொடங்கப்பட்ட பிறகு மூன்று முறை இடைநிறுத்தம் செய்யப்பட்டது-
1942 ஆகஸ்ட் ஒத்துழையாமை இயக்கப்போராட்டத்தின்போதுஅப் போதைய ஆங்கிலேயே அரசு ஊடகங் களை ஒடுக்கியது. 1942 முதல் 1945 வரை அவ்விதழ் நிறுத்தப்பட்டது- 1945இல் மீண்டும் தொடங்கப்பட்டு ஃபெரோஸ் காந்தியின் நிர்வாகத்தில் 1950 ஆம் ஆண்டு வரை அவ்விதழின் நிதிநிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இந்திரா காந்தியின் நெருக்கடி அறிவிப்பால் 1977இல் தோல்விக்குப்பின்னர் இரண்டு ஆண்டுகள் நிறுத்தப்பட்டது.
1986 ஆண்டில் ராஜீவ் காந்தி தலை யீட்டின்பேரில் தொடர்ந்து வெளியான ‘நேஷனல் ஹெரால்டு’ மத்தியில் காங்கிரசு ஆட்சி இருந்தபோதிலும் பொருளாதார காரணங்களால் 2008இல் நிறுத்தப்பட்டது.
மீண்டும் வெளி யாக உள்ள நேஷனல் ஹெரால்டு வார இதழின் அச்சுப்பிரதியை 20.6.2017 அன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட உள்ளார்.