கோவா, ஜூன் 16 ‘‘மாட்டிறைச்சி சாப் பிட்டால் அவர்களை நடுவீதியில் தூக்கிலிட வேண்டும்‘’ என்று இந்து மத மாநாட்டில் வெறிக் கூச்சல் போட் டனர்; அதுவும் அவர் ஒரு பெண் சாமியாராவார்.
இந்துக்கள் தங்களின் பெண் பிள்ளைகளை லவ்-ஜிகாத்தில் இருந்து காப்பாற்றவேண்டும், இந்து கலாச்சாரத்தை சாஸ்திர விதிகளைக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தே ஆகவேண் டும், இல்லையென்றால் இந்துக்கள் அனைவரும் அழிக்கப்பட்டு விடுவார் கள் என்றும் அந்த பெண் சாமியார் சரஸ்வதி இந்து மத மாநாட்டில் பேசியுள்ளார்.
கோவாவில் நடந்துவரும் இந்து மத மாநாட்டில் மத்தியப் பிரதேசம் சிந்துவாராவைச் சேர்ந்த பெண் சாமியார் சரஸ்வதி பேசும்போது, ‘‘நான் மத்திய அரசுக்கு ஒரே ஒரு கோரிக்கையை வலியுறுத்துகிறேன், இதை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், இல்லை என்றால் நாங் களே முடிவெடுக்கும் நிலையை எடுக்கவேண்டியிருக்கும். மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை தூக்கிலிடும் சட்டத்தைக் கொண்டுவாருங்கள், நமது நாடு இந்து சமய விதிகளைப் பின்பற்றும் நாடு ஆகும். இங்கே இறைச்சிக்கு அனுமதியில்லை, அப்படி இருக்கும்போது மாட்டிறைச்சி உண்பது மிகவும் கொடூரமான பழக்கம்.
இங்கே பிறமதத்தவர்களை இந்துக்களாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை சிலர் வைக்கின்றனர். நான் கூறுகிறேன், முதலில் இந்து என்றால் என்னவென்றே தெரியாத இந்துக்களை இந்து மதவழக்கங்களை கடைபிடிக்க பழக்கவேண்டும். சனாதன் சன்ஸ்தா இந்த தெய்வீகக் கோரிக்கையைத் தான் செய்துவருகிறது. இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் சிலர் பேசி வருகின்றனர்; அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இன்று மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள், நான் கேட்கிறேன், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மைபற்றி பேசுகிறவர்கள்தான் இந்துக்களின் மிகப்பெரிய துரோகிகள்! மற்ற வர்களைவிட இந்து மதத்திற்குப் பெரிய ஆபத்து மதச்சார்பின்மை மற்றும் சகிப்புத்தன்மை குறித்துப் பேசுகிறவர்களால் தான் வருகிறது.
மாட்டிறைச்சியை சாப்பிடுபவர் களை நடுவீதியில் தூக்கிலிடவேண்டும். அப்படி தூக்கிலிட்டால்தான் பசுவை பாதுகாப்பது பற்றிய அச்ச உணர்வு வரும், அரசு அவர்களை தூக்கிலிட வேண்டும்.
லவ்ஜிகாத் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் இந்துக்களின் பெண்களை திருமணம் செய்து அவர்களின் வயிற்றில் இஸ் லாமியர்களின் வாரிசுகளை உரு வாக்குகிறார்கள்; இதைத் தடுக்க நாம் ஆயுதம் எடுக்கவேண்டும், வேறு வழியில்லை. அப்படி ஆயுதம் எடுக்கவில்லை என்றால் இந்துக்கள் ஒரு நாள் அழிக்கப்படுவோம்‘’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பிறகு பேசிய அபய் வர்த்தக் ‘‘கோவா, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளாவில் சில பாஜக பிரமுகர்கள், அமைச்சர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரிக்கின்றனர். மோடி இவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதன் பிறகு இந்துக்களே பசுவைக் காப்பாற்ற முன்வருவார்கள்’’ என்று பேசினார்.