அய்ஸ்வால், ஜூன் 15 மிசோரம் மாநிலத் துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். அவர் வரு கையையொட்டி மிசோரம் மாநிலத்தில் மத்திய அரசை எதிர்த்து மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற்றது.
இறைச்சிக்காக கால்நடைகளை விற்கவோ, வாங்கவோ மத்திய அரசு விதிக்கின்ற தடையால் மேகாலயா மாநிலத்தில் கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள 5.7 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது.
மிசோரம் மாநிலத்தில் அய்ஸ் வால் பகுதியில் 12.6.2017 அன்று மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதிக்கின்ற தடையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாட்டிறைச்சியை சாப்பிட ஊக்கப்படுத்தும் வண்ணம் மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத்சிங் முதல் முறையாக வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் மியான்மாவையொட்டியுள்ள எல்லையோரப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகள்குறித்து ஆய்வு செய்தார்.
சோலைஃப் அமைப்பைச் சேர்ந் தவர்கள் மிசோரம் மாநிலத் தலைநகரில் வனபா அரங்கில் மாட்டுக்கறிக்கு தடையை எதிர்த்து போராட்டத்தை நடத்தினார்கள்.
வடகிழக்கு மாநில மக்களுடன் பின்னிப்பிணைந்துள்ள உணவு மாட்டுக்கறியாகும். போராட்டக் காரர்கள் எவ்வித கட்சி பேதங்களும் இல்லாமல் தாமாகவே முன்வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். மேகா லயா மாநிலத்தில் 81 விழுக்காட்டினர் மாட்டுக்கறி உண்பவர்கள். மத்திய அரசின் அறிவிப்பு மேகாலயா மாநிலத்தின் பொருளாதாரத்திலும், மக்களின் உணவுப்பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று குறிப்பிட்டு, மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானத்தை மேகாலயா மாநில அரசு நிறைவேற்றியுள்ளது.
2017ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு, கால்நடைகள் விற்பனை முறைப்படுத்தல் சட்டத்தை மத்தியில் ஆளும் மோடியின் பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. அச்சட்டத்துக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுவருகிறது. அச்சட்டத்தின்படி, எருமை, பசு, காளை மாடுகள், ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவருவது மற்றும் சந்தையில் இறைச்சிக்காக விலை கொடுத்து வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இறைச்சிக்காக கால்நடைகள் விற்பனைக்குத் தடைபோடும் உத்தரவுக்கு எதிராக மேகாலயா மாநிலம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
மேகாலயா மாநில முதல்வர் முகுல் சங்மா சட்டப்பேரவையில் முன்வைத்த தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரித்து ஒருமனதாக நிறைவேற்றியுள்ளன. அத்தீர்மானத்தில் மத்திய அரசின் மாட்டிறைச்சித் தடைகுறித்து குறிப்பிடும்போது, மாட்டிறைச்சிக்குத் தடை என்பதில் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேகாலயா மாநில மக்களை பாதிக்கச் செய்யும் வகையில் குறிவைத்து கொண்டுவரப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய சட்டத்தை உடனடியாக திரும்பப¢ பெற வேண்டும். குறைபாடுகள் மற்றும் நோயுற்ற மாடுகள் குறித்து இந்த அவை குறிப்பிட விரும்புகிறது. நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில் உள்ள கூட்டாட்சி மற்றும் மதசார் பின்மை தன்மைகளை காத்திட வேண்டும். மாட்டிறைச்சித்தடை என்று சட்டம்போட்டு தடை செய்வதன்மூலம் அன்றாட வாழ்வில் அனைவரும் பின்பற்றிவரும் பழக்க வழக்கங்களை பாதிக்கச் செய்யும். பொருளாதார நிலைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எந்த விலை கொடுத்தேனும் இதை தடுத்திட வேண்டும்.
மேகாலயா பழங்குடியினர் உணவில் பெரும் பகுதி மாட்டுக்கறியே. 2015-- 2016 ஆம் ஆண்டில் மட்டும் 23,634 மெட்ரிக் டன் மாட்டிறைச்சித் தேவை ஏற்பட்டுள்ளது.
சந்தைகளில் கால்நடைகளை விற்பது மற்றும் வாங்குவதற்கு தடை போடுவதன்மூலம் மாநிலத்திற்கு ஆண்டு வருவாய் 79 விழுக்காடு வருகிறது. கால்நடைகளை நம்பி 5.7 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் உள்ளது.
மத்திய அரசின் உத்தரவு மக்களின் அடிப்படை உரிமையான உண்ணும் உரிமையை பாதிக்கும். மக்களுக்கு உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் மதம், கலாச்சாரம், சமூக விழாக்கள் நடத்துவது என்பது நினைவுக்கு எட்டாத பழங்காலம் தொட்டு இருந்து வருவதாகும் என்று சங்மா அவையில் தீர்மானத்தை முன்வைத்தபோது குறிப்பிட்டார்.
உணவுக்கு கட்டுப்பாடுகள், தடைகள் இல்லையாம் கூறுகிறார் ராஜ்நாத்சிங்
மிசோரம் மாநிலத் தலைநகர் அய்ஸ்வாலில் நடைபெற்ற மாட்டுக்கறி விருந்து குறித்து ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘‘உணவைத் தேர்ந்தெடுப்பதில் கட்டுப்பாடுகளை, உணவின்மீதான தடையை மத்திய அரசு விதிக்கவில்லை’’ என்றார்.
மக்கள் எதை உண்பது என்பதில் எவ்விதமான கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு திணிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். ஆனாலும் இந்த சமாதானத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதேபோல் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார். மத்திய அரசின் கால்நடைகள் விற் பனைத்தடையின்மூலம், அடிப்படை உரிமைகளில், மக்களின் உணவில் மத்திய அரசு தலையிடுகிறது என்று பல மாநிலங்களிலும் எதிர்ப்பு வெடித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வருகையின்போது, ஆளுநர் மாளிகையிலிருந்து200 மீட்டர் தொலைவில் வனபா அரங்கில் நடைபெற்ற மாட்டி றைச்சி விருந்தின்போது ஆயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றனர். கடும் மழையிலும் 2000- க்கும் மேற் பட்டவர்கள் கூடினார்கள்.
சோலைஃப் அமைப்பைச் சேர்ந்த ரெம்ருவாதா வார்தே என்பவர் மாட்டுக்கறி விருந்து ஏற்பாடு குறித்து கூறும்போது, நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே நாங்கள் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் மாட்டுக்கறியை சாப்பிட்டு வருகிறோம். ஆனால், இப்போது எங்களின் அடிப்படையான உரிமைகளை பறிக்க சதி செய்வதை நாம் பார்க்க முடிகிறது’’ என்று குறிப்பிட்டார்.
முழக்க வாசகங்கள்
- நாங்கள் சுவையான மாட் டுக்கறியை விரும்புகிறோம். உங் களின் நம்பிக்கைகளை எங்கள்மீது திணிக்காதீர்கள்
- எங்களின் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது எங்க ளிடமிருந்து எதிர்ப்பை எதிர்பாருங்கள்
- மாட்டிறைச்சிக்குத் தடை என் பது மத ஆணவத்தை, வரலாற்று புறக்கணிப்பை, கலாச்சார பாசிசமாகும்
- கடவுளின் பொருட்டே மாட்டுக் கறியை சாப்பிடுவோம்
- உள்ளிட்ட முழக்க வாசகங்களைக் கொண்ட பதாகைகளுடன் போரா டினார்கள்.