மோசடி - திரிபு இவைதான் பா.ஜ.க. ஆட்சியா?
நாட்டின் பாதுகாப்பு விவகாரத்திலும் தில்லுமுல்லு வேலை செய்த பாஜக!
புதுடில்லி ஜூன் 30 பாஜக மூன்று ஆண்டு சாதனை என்று கூறி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உள்ள படம் ஸ்பெயின் -- மொராக்கோ எல்லையில் உள்ள படம் என்ற விவரம் தற்போது வெளியாகி யுள்ளது. உள்துறை அமைச்சகம் நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில்கூட போலி யான படங்களைப் பயன்படுத்தி விளம்பரம் தேடுவது மோடி தலைமை யிலான பாஜக அரசு எந்த வகையில் இந்திய மக்களை ஏமாற்றி வருகிறது எனத் தெரிகிறது.
பாஜக மூன்று ஆண்டு சாதனை என்ற பெயரில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பாகிஸ்தான் -- பங்களாதேஷ் எல்லைப் பகுதியை நாங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளோம். எல்லை யில் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள தாகக் கூறி, நவீன சாதனங்கள் மற்றும் முழுமையான மின்வசதிகளை அங்கு தந்து பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளோம் என்று கூறியதுமல்லாமல், இந்தியாவின் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவியின் மூலம் எடுத்த படம் ஒன்றே பாஜகவின் மூன்று ஆண்டு கால சிறப்பை விளக்கும் என்று ஒரு படத்தை வெளியிட்டிருந்தது.
வாழ்த்து அட்டையில் இடம் பெற்ற ஒரு படமாகும்
ஆனால், இந்தப் படம் 2006- ஆம் ஆண்டு அய்ரோப்பிய நாடான ஸ்பெயின் மற்றும் ஆப்பிரிக்க நாடான மொராக் கோவைப் பிரிக்கும் எல்லைப் பகுதி யாகும். இந்தப் படம் ஜோவியர் மயானோ என்பவரால் எடுக்கப்பட்டு வாழ்த்து அட்டையில் இடம் பெற்ற ஒரு படமாகும். இது அப்போது சில பத்திரி கைகளிலும் இடம் பெற்றுள்ளது.
ஆனால், இந்தப் படத்தை உள்துறை அமைச்சரகம் வெளியிட்ட சில நிமிடங் களிலேயே பிபிசி நிறுவனம் இது போலியான செய்தி; இந்தப் படம் 2006- ஆம் ஆண்டு தனிப்பட்ட ஒருவரால் அய்ரோப்பிய நாடு மற்றும் ஆப்பிரிக்க நாட்டின் எல்லையில் எடுத்த படம் என்று முழுமையான தகவலுடன் வெளி யிட்டது. இதை Asian News International - ANI, Agence France Presse -AFP, Alternative News - ALT போன்ற செய்தி நிறுவனங்களும் வெளியிட்டன.
விசாரணைக்கு உத்தரவு
இவ்விவகாரம் வெளியான பிறகு உள்துறை அமைச்சரகம் இந்தப் படம் எப்படி எங்கள் சாதனைவிளக்க நூலில் சேர்ந்தது என தெரியாது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச் சரகம் தெரிவித்துள்ளது. போலியான படத்தை அளித்தது தொடர்பாக அதி காரிகளிடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
போலியான படங்களைப் போட்டு...
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் முன்னாள் பாதுகாப்புத் துறை அதிகாரி உள்பட பல பிரபலங்கள், உள்துறை அமைச்சகத்தின் இந்தச் செயலை விமர்சித்துள்ளனர். ஏற்கெனவே பிரதமர் அலுவலம், நகர நிர்வாகத் துறை அமைச்சரகம் இது போன்று போலியான படங்களைப் போட்டு தங்களின் சாதனை என்று கூறி விளம்பரப்படுத்தியது. அந்த உண்மை வெளிவந்த பிறகு இந்தப் படத்தை கொடுத்த அதிகாரிகளின் மீது விசாரணை நடத்துவதாகவும் கூறி யிருந்தது.