Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மத்திய பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு கிடையாதா?

$
0
0


போராட்டம் வெடிக்கும்! லாலு பிரசாத் எச்சரிக்கை!

பாட்னா, ஜூன் 10 மத்திய அரசின் கீழ் இயங்கிவரும்  மத்திய பல் கலைக்கழகங்களில் பேராசிரி யர்கள், உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பின்பற் றப்படவில்லை என்றால், பாஜக தலைமையிலான அரசின் செய லைத் தோலுரித்து காட்டும்வகை யில் நாடு தழுவிய அளவிலான போராட்டம் வெடிக்கும் என்று ராஷ் டிரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரத்தில் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு  யுஜிசி எனும் பல்கலைக்கழக மான்யக்குழு விடுத்துள்ள குறிப்பில், மூத்த பேராசிரியர் களுக்கான பதவியிடங்களில் நடைமுறையில் உள்ள விழுக் காட்டில் இதர பிற்படுத்தப்பட் டவர்களுக்கு விலக்கு அளிக்கப் படுகிறது. பல்கலைக்கழகங் களில் மற்ற அனைத்து உதவிப் பேராசிரியர்களுக்கான பணியிடங்களிலும்   தாழ்த்தப்பட்ட வர்கள் 15 விழுக்காட்டிலும், பழங்குடியினத்தவர்கள் 7.5 விழுக்காட்டிலும் பொருந்தும். ஆனால், உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் பொருந்தக் கூடிய  பிற்படுத்ததப்பட்டவர் களுக்கு 27 விழுக்காடு பேரா சிரியர்கள், இணைப் பேராசிரி யர்கள் பணியிடங்களில் பொருந் தாது என்று யுஜிசி அறிவித் துள்ளது.

3.6.2016 அன்று யுஜிசி சார் பில் பத்திரிகைகளில் வெளி யான தகவலையொட்டி, அவர் செய்தியாளர்களிடையே கூறும் போது, மத்திய பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் நியமனங்களில்  இதர பிற்படுத் தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி நியமனங்கள் செய்யாமல், ஆர்எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாட்டைக் கண் டித்து நாடு தழுவிய அளவி லான போராட்டம் வெடிக்கும் என்று கூறினார்.

பின் தங்கிய மக்களின் உரிமைகளை தட்டிப் பறிக்கும் பாரதீய ஜனதா கட்சி

மேலும் அவர் டிவிட்டர் பதிவில் குறிப்பிடும்போது, “பார்ப்பனீய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குழந்தையே பாரதீய ஜனதா கட்சியாகும். ஆனால், பிற்படுத்தப்பட்டவர் களுக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட வர்களுக்கு எதிராக, பின்தங்கிய மக்களி¢ன் உரிமைகளை பாரதீய ஜனதா கட்சி தட்டிப்பறித்திட எண்ணுகிறது. அதற்கு ஒரு போதும் அனுமதியோம். பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இழிவை நீக்கியே தீருவோம்’’ என்று குறிப்பிட் டுள்ளார்.

மத்தியப் பல்கலைக் கழகங் களில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களுக்கான பணியிடங்களில் இதர பிற்படுத் தப்பட்டவர்களுக்கு இடஒதுக் கீட்டின்படி பணிநியமனம் கிடையாது என்கிற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் அறிவிப்பை ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடுமையாகக் கண்டித் துள்ளார். இதுகுறித்து மேலும் லாலு பிரசாத் கூறுகையில், “இந்தியாவின் மக்கள் தொகை யில் 60 விழுக்காடு உள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்கள்  ஆர். எஸ்.எஸ்., பாஜகவின் இந்த அநீதியை சகித்துக்கொள்ள மாட்டார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த பிரதமர் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்கின்ற பிரதமர் எங்கே போனார்?’’ என்று கேட்டார்.

இதனிடையே லாலு பிர சாத் யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலை தொடர்ந்து, பல்கலைக்கழக மான்யக் குழு வின் சார்பில் மத்தியப் பல் கலைக் கழகங் களின் பதிவாளர் களுக்கு சுற்றறிக்கை 7.6.2016 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

அச்சுற்றறிக்கையில், தாழ்த் தப்பட்டவர்கள், பழங்குடியினத் தவர்கள், பிற்படுத்தப்பட் டவர்கள் ஆகியோர் மத்தியப் பல் கலைக்கழகங்களின் பேரா சிரியர்களுக்கான பணியிடங் களில் 24.1.2007 தேதியிட்ட யுஜிசியின் சுற்றறிக்கையின்படி எவ்வித மாற்றமும் இன்றி, 2006இல் பின்பற்றியபடி, கட் டாயமாக இடஒதுக்கீட்டுக் கொள்கை மத்திய அரசின் பல் கலைக் கழகங்கள், மற்ற பல் கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மான்ய உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மய்யங் களில் பின்பற்றப்படும்’’ என்று சுற்ற றிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles