புதுடில்லி, ஜூலை 21 கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மக்களவை யில் மத்திய அரசு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், 2016ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள் ளதாக தெரிவித்துள்ளார். விவசாயிகளின் தற் கொலையை தடுப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிரதித்யா ஸ்கிண்டியா குற்றம்சாட்டி பேசியதற்கு பதி லளித்து பேசிய ராதாமோகன் சிங், இந்த தக வலை வெளியிட்டார். மேலும், விவசாயிக ளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை 1.5 மடங்கு உயர்த்தி தருவதாக 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டி அவர் பேசினார். பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு ரூ.3,560 கோடி பிரிமியம் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் ராதாமோகன் தெரிவித்தார்.
பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் காப்பீட்டு நிறுவனங்களே அதிகம் பயன் பெறு வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்த ராதாமோகன்சிங், பயிர்களை காப் பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இதனை பயன்படுத்தி பலனடைய வேண்டாம் என நினைக்கும் மாநில அரசுகள் இதற்கென தனி நிறுவனங்களை தொடங்கிக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
ஜவுளித் துறைக்கு ஜிஎஸ்டி வரி:
கடும் எதிர்ப்பு
ஜவுளித்துறைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை எதிர்த்து மாநிலங்களவையில் எம்பி.க்கள் போர்க்கொடி தூக்கினர். ஜவுளித்துறைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடக் கிறது. இந்த பிரச்சினை நேற்று மாநிலங்கள வையிலும் எழுப்பப்பட்டது. காங்கிரசு எம்பி ஆனந்த் பாஸ்கர் ராபோலு பேசுகையில், கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, வரியை நீக்க வேண்டும். நெசவுத்துறைக்கும் நீக்க வேண்டும் என்றார். திரிணாமுல் காங்கிரசு எம்.பி.க்கள் அகமது உசேன், சுகேந்து சேகர் ராய் ஆகியோர் பேசுகையில், ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன என்றனர். காங்கிரசு எம்.பி. அகமது படேல் பேசுகையில், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர் களுக்கு இதுவரை வரி விதிக்கப்படவில்லை. தற்போது அனைவரும் வரி வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள் ளனர். துணி வியாபாரிகள் தங்கள் ஊழியர் களுடன் வீதியில் வந்து போராடுகிறார்கள். சூரத்தில் கூட இந்த போராட்டம் நடக்கிறது என்றார். காங்கிரசு எம்.பி ராஜீவ் சுக்லா கூறுகையில், ஜிஎஸ்டியை அமல்படுத்து வதில் மத்திய, மாநில அரசுகள் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார்.