சண்டிகர் நவ.10 அரியானாவில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வேத மந்திர பயிற்சி எடுக்கவும், பூஜையில் பங்கேற்கவும் மறுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரியானாவில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கட்டாய வேதமந்திர பயிற்சி எடுக்க ஆசிரியர்களுக்கு, அம் மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
'திருவிழாவின்போது, வேத மந்தி ரங்களை உச்சரிக்க வேண்டும், பூஜை யில் ஈடுபடவேண்டும், பொதுமக்களுக் குப் பிரசாதம் வழங்க வேண்டும்' என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது. இது பாஜகவின் கல்வியைக் காவிமயமாக்கும் திட்டம் என எதிர்க் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், கட்டாய வேத மந்திர பயிற்சியில் பங்கேற்க பல ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப் பவர்கள் அதற்கான உரிய காரணத்தை விளக்காவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக் கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூட்டமைப்பு
கடும் எதிர்ப்பு
அரியானா அரசின் இந்த அடி முட்டாள் தனமான கட்டளைக்கு அரி யானா ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடு மையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் கூட்டமைப் பின் செயலாளரான குருமீத் சிங் கூறிய தாவது: "கட்டார் அரசு பதவியேற்ற நாள் முதல் ஆண்டுதோறும் ஆசிரியர் களை தேவையில்லாத பணிகளைச் செய்ய நிர்பந்தம் செய்கிறது, ஆதிபத்ர தேவி, கேதர்நாத் தேவி, மந்திரா தேவி கோவில்களில் மாதம் தோறும் விழாக்கள் பூசைகள் நடைபெறுகின்றன. அப்படி விழா நடைபெறும் நாட்களில் ஆசிரியர்களை அங்கு சென்று மக்களை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபடக் கூறுகின்றனர்.
மேலும் பிரசாதம் கொடுப்பது, பக்தர்களின் உடமைகளுக்கு டோக்கன் வழங்குவது போன்றவற்றுடன் பள்ளி யில் சாதாரண பணியில் உள்ளவர்களுக்கு செருப்புகளை பாதுகாக்கும் பொறுப் பும், கோவில்தளங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பணியும் வழங்கப் படுகின்றன. அதே நேரத்தில் மிகவும் தாமதமாக முடியும் விழாக்காலங்களில் ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் செய்து தருவதில்லை.
ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் பிரதீப்சரின் கூறியதாவது: "ஆசிரியர் களுக்குக் கல்வி தொடர்பான பணிகள் வழங்குவதை விட்டுவிட்டு கோவில் களில் பணிசெய்யும் வேலைகளை இந்த அரசு அதிகம் தருகிறது. தற்போது எங்களை பூசை வழிமுறைகளைக் கற்க வும், வேதமந்திரங்கள் உச்சரிப்பதைக் கற்றுக் கொள்ளவும் கட்டாயப்படுத்து கிறது. இதனால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர், அரசின் இந்த நடவடிக்கை கடும் கண் டனத்திற்கு உரியதாகும்" என்று கூறினார்.
இது தொடர்பாக மாநில முதல்வர் ஆங்கில தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் "நாங்கள் அனை வரையும் கட்டாயப்படுத்தவில்லை, இந்துவாக இருக்கும் ஆசிரியர்கள் அவர்களின் மதக்கடமையை ஆற்ற வேண்டும் என்று தான் வலியுறுத்து கிறோம். ஆசிரியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் போது அவர்கள் பக்திமார்க்கத்தை விட்டு விலகி விடு வார்கள். இதனால் அவர்களிடம் பயிலும் மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகையால் கோவில்களில் ஆசிரியர்கள் சிறிது சிரமதானம் செய்ய வேண்டும் என்று தான் கூறுகிறோம்" என்றார்.
மாநில தலைமைச்செயலாளர் ஜவகர் யாதவ் இது தொடர்பாக கூறும் போது, "ஆசிரியர்களை நாள் முழுவதும் கோவிலுக்குச்சென்று பூசை செய்யக் கூறவில்லை. விழாக்காலங்களில் மக்க ளுக்கு உதவி செய்யும் பணிகளைத் தான் செய்யக்கூறுகிறோம். பள்ளி களுக்கு விடுமுறை அளித்துவிட்டால் ஆசிரியர்களுக்கு விடுமுறை என்று பொருள் அல்ல, அவர்கள் விடுமுறை நாட்களில் கோவில் பணிகளைப் பார்க் கலாம், இதை செய்யமாட்டேன் என்று எந்த ஆசிரியரும் மறுக்க முடியாது" என்று கூறினார்.
ஆகமங்கள்படி தான் அர்ச்சனை நடை பெற வேண்டும், குறிப்பிட்ட பிரிவினர்தான் அதனைச் செய்ய வேண்டும் என்று சொல்லு வதெல்லாம் அரியானாவில் எங்கே
போயிற்றாம்?